நாளை மார்கழி , மனம் குளிர் மார்கழி.
மனமும், உடலும் குளிரும் , மார்கழி என்றாலே.
அதிகாலை இறைவழிபாடு கோவில்களில் .
வீடுகளில் பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.
மார்கழி மாதம் முழுவதும் இறைவன் நினைவாக இருப்பதே இந்த மாதத்தின் தனிச்சிறப்பு.
மார்கழியின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் மார்கழி மாதம் எழுதிய பதிவுகளை மீண்டும் படித்துப்பார்த்தேன். எவ்வளவு பேர் அந்த பதிவுகளைப் படித்து இருக்கிறார்கள் என்று பார்த்தேன். படித்தவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது.
பாவை நோன்பு படித்தவர்கள் எண்ணிக்கை 515
//தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை :-
1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை,
2. ஆண்டாள் அருளிய திருப்பாவை.
3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு.
சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்கவில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல விருத்தி உரையில் இருக்கிறது. அந்தப்பாடல்:-
“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”//
மார்கழிக் கோலங்கள் படித்தவர்கள் எண்ணிக்கை 16846
//எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. .

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக் கோலம்
கண்ணபிரான், ’மாதங்களில் நான் மார்கழி’ என்று அந்த மாதத்தின் சிறப்பைச் சொல்லி விட்டார். தேவர்களுக்கு இந்த மாதம் அதிகாலை நேரம்.
இறைவனைத் தொழுவதற்காகச் சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.
வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனிமேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும், ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள், திருப்பாவையில்.

நன்றி - கூகுள்
மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டுப் பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார். உலகச் செயல்களைத் தொடங்குவதற்குப் பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியைத் திருவெம்பாவையில் கூறுகிறார்.//

மாணிக்கவாசகர் தன்னை நாயகியாகவும், இறைவனை நாயகராகவும் பாடி இருக்கிறார்.
பழைய கோலங்கள் படித்தவர்கள் எண்ணிக்கை 6031
//மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி? அதற்குள் என்ன இருக்கிறது? என்று நினைக்கிறீர்களா? அந்தக் கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.
பொக்கிஷத்தைப் பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன், நான் சின்ன வயதில் கோலங்கள் போட்ட நோட்டுகளை. தொட்டாலே கிழிவது போல் உள்ளது. வார, மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள் சேகரித்து வைத்து இருக்கிறேன்.
என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள் என்று இருக்கிறது. இப்போது இணையத்தில் கோலங்களைப் பார்த்து, பிடித்த கோலத்தைப் போடுகிறேன்.//
மார்கழி மாத நிகழ்வுகள் படித்தவர்கள் 922
மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள். மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களைச் செய்கிறது.
இசை, வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் , மனதில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
மார்கழி சிறப்புகள் படித்தவர்கள் எண்ணிக்கை 1061
//மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர,குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டுக் கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன்.அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் சிறு வயதில் போன மாதிரி இல்லை. //

எனது கேசட் கையேடு (பாட்டு விவரங்கள்)
மார்கழி வந்து விட்டால் முன்பு வானொலியில் திருப்பாவை, திருவெம்பாவைப்பாடல்கள், பாடல்களுக்கு விளக்கவுரைகள் கேட்பேன், அலைவரிசையை மாற்றி மாற்றி திருச்சி, சென்னை, என்று கேட்பேன், பின் பண்பலையில் காரைக்கால் வானொலியில் கேட்பேன்.
திருப்பாவை, திருவெம்பாவை கேஸட் பாடல்களை டேப்ரிக்காடரில் ஒலிக்கவிட்டு விட்டு வேலைகளைப் பார்ப்பேன். இப்போதும் காலை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
மார்கழிக்குப் புதுப் பதிவு ஒன்றும் எழுதவில்லை பழைய பதிவுகளைப் படிக்க லிங்க் கொடுத்து இருக்கிறேன்.
மார்கழிப் பதிவுகளைப் படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
*********************************************************************************
மனமும், உடலும் குளிரும் , மார்கழி என்றாலே.
அதிகாலை இறைவழிபாடு கோவில்களில் .
வீடுகளில் பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.
மார்கழி மாதம் முழுவதும் இறைவன் நினைவாக இருப்பதே இந்த மாதத்தின் தனிச்சிறப்பு.
மார்கழியின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் மார்கழி மாதம் எழுதிய பதிவுகளை மீண்டும் படித்துப்பார்த்தேன். எவ்வளவு பேர் அந்த பதிவுகளைப் படித்து இருக்கிறார்கள் என்று பார்த்தேன். படித்தவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது.
பாவை நோன்பு படித்தவர்கள் எண்ணிக்கை 515
//தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை :-
1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை,
2. ஆண்டாள் அருளிய திருப்பாவை.
3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு.
சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்கவில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல விருத்தி உரையில் இருக்கிறது. அந்தப்பாடல்:-
“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”//
மார்கழிக் கோலங்கள் படித்தவர்கள் எண்ணிக்கை 16846
//எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. .

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக் கோலம்
![]() |
| நான் வரைந்த கண்ணன் கோலம் |
இறைவனைத் தொழுவதற்காகச் சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.
வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனிமேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும், ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள், திருப்பாவையில்.
நன்றி - கூகுள்
மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டுப் பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார். உலகச் செயல்களைத் தொடங்குவதற்குப் பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியைத் திருவெம்பாவையில் கூறுகிறார்.//

மாணிக்கவாசகர் தன்னை நாயகியாகவும், இறைவனை நாயகராகவும் பாடி இருக்கிறார்.
பழைய கோலங்கள் படித்தவர்கள் எண்ணிக்கை 6031
//மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி? அதற்குள் என்ன இருக்கிறது? என்று நினைக்கிறீர்களா? அந்தக் கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.
பொக்கிஷத்தைப் பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன், நான் சின்ன வயதில் கோலங்கள் போட்ட நோட்டுகளை. தொட்டாலே கிழிவது போல் உள்ளது. வார, மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள் சேகரித்து வைத்து இருக்கிறேன்.
என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள் என்று இருக்கிறது. இப்போது இணையத்தில் கோலங்களைப் பார்த்து, பிடித்த கோலத்தைப் போடுகிறேன்.//
மார்கழி மாத நிகழ்வுகள் படித்தவர்கள் 922
மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள். மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களைச் செய்கிறது.
இசை, வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் , மனதில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
மார்கழி சிறப்புகள் படித்தவர்கள் எண்ணிக்கை 1061
//மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர,குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டுக் கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன்.அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் சிறு வயதில் போன மாதிரி இல்லை. //

மார்கழி மாதம் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு எண்ணெய் எடுத்துப் போய் விளக்கு போட்டு விட்டு வந்து பாட்டு கேட்பது வழக்கம். எத்தனை பாடல்கள் சேகரிப்பு! இப்போது தொலைக்காட்சியில் எல்லாப் பாடல்களும் கேட்பதால் கேசட்டுகள் டப்பாவில் அடைபட்டு இருக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் பாடல்கள் போட்டுக் கேட்டேன்.