தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை 1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை, 2. ஆண்டாள் அருளிய திருப்பாவை. 3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு. சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்க வில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல் விருத்தி உரையில் இருக்கிறது.அந்தப்பாடல்:
“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”
திருப்பாவை வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இது பாகவத வரலாற்றை ஒட்டி வருவது. கண்ணனை நாயகனாகப் பெறவேண்டும் என்ற வேட்கையும், நாடு செழிக்க மழை வேண்டும் என்ற விழைவும்,ஆக்கள் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.
திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார். திருவாதவூரர் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.
திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார்.
திருவாதவூரர் நீராடப்போவதைக் கண்டார்.அக்காட்சியின் பயனாக விளைந்தது திருவெம்பாவை என்னும் நூல் என்பார்கள்.
பாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.
மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.
நீராடுதல் தவமெனக் கருதப்படும்.புற அழுக்கை நீக்குவது நீர்,நம் அக அழுக்கை நீக்குவது
இறைவன் திருநாமம்.
இளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம்.
உடல் பிறக்கிறது,வளர்கிறது,நோய்வாய்ப்படுகிறது. ஆனால் உள்ளம் எந்நாளும் இளமையாக இருக்கலாம்,உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்தால். தளர்வும் சோர்வும் சலிப்பும் இளமையைப் போக்கி முதுமையைத் தரும்.உறுதியும்,ஊக்கமும்,உழைப்பும் இளமையைப் பாதுகாக்கின்றன.
பாவை நோன்பில் காலையில் சுறுசுறுப்பாய் எழுந்து இறைவனைத் தொழுது பின் கடமைகளை
ஆற்றும் போது உள்ளத்திற்குத் தளர்வு,சோர்வு,சலிப்பு இல்லை. உறுதியுடன்,ஊக்கத்துடன் உழைக்கும் போது உயர்வு நிச்சயம். இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.
”சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,”- தாயுமானவர்.
மார்கழி மாதம் திருப்பாவை,திருவெம்பாவை பாடி உயர்வு பெறுவோம்.
வாழ்க வளமுடன்.
============
மார்கழியில் திருப்பாவை, பாவை நோன்பு ஆகியவற்றை பற்றிய விளக்கங்கள் அருமை அம்மா. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குகுளிர்காலத்தில் காலையில் எழுந்துப்பதும் குளிச்சுட்டம்ன்னா நல்லா சுறுசுறுப்பா இருக்கறதும் நிஜம் தான்..:) தைரியம் தான் வேணும்..
பதிலளிநீக்குஇந்த முறை மகளுடைய நடனநிகழ்ச்சியில் தோழிகளை அழைத்துக்கொண்டு ஆண்டாள் குளக்கரை செல்வதை எல்லாம் நடித்துக்காண்பித்தார்கள்.
அன்பு கோமதி,காலை நேரச் சுறுசுறுப்பு வேறேந்தப் போதும் கிடைப்பதில்லை.
பதிலளிநீக்குநமக்குக் கிடைத்த இந்த இனிய அனுபவங்கள் இந்த தலைமுறைக்குக் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
மீண்டும் வரலாம்.
நல்ல பகிர்வும்மா. மார்கழி மாதத்தின் இளங்குளிரில் காலை நேரத்து பஜன் கேட்கக் கேட்க தெவிட்டாத சுவை – முடிவில் கிடைக்கும் நெய் சொட்டும் பொங்கல் பிரசாதம் – ஆனந்தம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குமிக நல்ல பகிர்வும்மா ;)
பதிலளிநீக்குதிருப்பாவை விளக்கங்கள் அருமை..
பதிலளிநீக்குமார்கழி குளிர் சார்ஜால கூட வாட்டுதும்மா :) நல்ல பகிர்வுகள்
பதிலளிநீக்குமனம் வெளுக்க மார்க்கம் சொல்லியிருக்கிறீர்கள். பெரும்பாலும் தெரிந்திருக்கிற திருப்பாவையையும் திருவெம்பாவையும் தவிர்த்து இருக்கின்ற பாவைப் பாடல்களைப் பற்றிய குறிப்பு அவை யாவை என்றறிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குநல்ல பதிவு. மிக்க நன்றி.
டெல்லிக் குளிரில் காலையில் எழுவது கஷ்டம் தான்.
பதிலளிநீக்குமாதினி திருப்பாவை பாடலுக்கு நடனம் ஆடியது மகிழ்ச்சி.
வாங்க வல்லி அக்கா, நமக்கு கிடைத்த இனிய அனுபவங்கள் இந்த தலைமுறைக்கும் கிடைக்கும்.மீண்டும் அந்தக் காலம் வரும். நீங்களே சொல்லிவிட்டீர்கள் மீண்டும் வரலாம் என்று.
பதிலளிநீக்குகாலை கோவிலுக்குப் போய் பஜனை கேட்டு பொங்கல் பிரசாதம் பெற்று! அந்தநாளும் வந்திடாதோ என்றுப் பாடத் தோன்றுகிறது வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி கோபிநாத்.
பதிலளிநீக்குநன்றி அமைதிச்சாரல்.
சார்ஜால குளிர் அதிகமா வாட்டுதா?
குளிர் தாக்காமல் கவனமாய் இருங்கள்
ஆதவன்.
வாங்க ஜீவி சார், முதல் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்கு//இளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம்.
உடல் பிறக்கிறது,வளர்கிறது,நோய்வாய்ப்படுகிறது. ஆனால் உள்ளம் எந்நாளும் இளமையாக இருக்கலாம்,உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்தால். தளர்வும் சோர்வும் சலிப்பும் இளமையைப் போக்கி முதுமையைத் தரும்.உறுதியும்,ஊக்கமும்,உழைப்பும் இளமையைப் பாதுகாக்கின்றன.//
மனதில் நிறுத்த வேண்டியவை. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றிம்மா.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!