கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.
மலையின் அழகைக் காணீரோ!
பாறையில் வேப்பமரம்
சமணப்படுக்கையைக் காணப்போகும் வழி
கிரானைட் வெட்டப்பட்ட மலை- இப்போது தப்பிவிட்டது
பிராமிக் கல்வெட்டு
இது என்ன விளையாட்டு என்று தெரியவில்லை
முரசு போல அமைந்துள்ள பாறை
எங்கள் வீட்டின் பக்கத்தில் சிறிய குன்று இருக்கே!
சமணப்படுக்கை
வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கை என்னும் வெளிச்சக்கீற்று தெரிவது போல பாறையின் நடுவே வெளிச்சக்கீற்று! - நன்றி ஸ்ரீராம்
பாறையில் தான் எங்கள் விளையாட்டு
நான் இங்கு ஒளிந்து இருப்பதை என் நண்பர்களிடம் சொல்லாதீர்கள்
கீழே விழுந்துவிடுமோ என்று கவலையுடன் பார்க்கும் பசுமைநடை அன்பர்
ஏய்! ரொம்ப ஓரம் போகாதே
காலை நேர சூரிய ஒளி ரம்யமானது- நாம் மட்டும் அல்ல ,ஆடும் ரசிக்கிறது
காலை நேர இளம் வெயில் உடம்புக்கு நல்லதாம், சூரிய ஒளிக் குளியல் செய்கிறேன்
நான் வரேன் , மலை அழகை ரசித்தீர்களா?
அடுத்த பதிவில் எங்கள் வீடுகள் எங்களை வளர்ப்பவர்கள் வீடுகள் வருதாம் கோமதி அம்மாவின் அடுத்த பதிவில் மறக்காமல் வந்து விடுங்கள்.
வாழ்க வளமுடன்.