செவ்வாய், 13 ஜூன், 2017

முத்துப்பட்டிக் கல்வெட்டுகள்- முதல் பகுதி









கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.

இம் மலையில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் , கற்படுக்கைகளும் , மகாவீரர் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் அமைந்துள்ளன.

இங்கு வாழ்ந்து வந்த சமணத் துறவிகளுக்காக மலைக்குகையில்
இருபதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு படுக்கையும் வழுவழுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

குகைத்தள முகப்பில் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள், தென்பகுதியில் மகாவீரர் சிற்பங்கள் அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளன.  அருகில் இயற்கையாக அமைந்த மற்றொரு குகையினுள் உள்ள  படுக்கைக்கு மேல் கல்வெட்டொன்று உள்ளது.


"சைஅளன்  வுந்தையூர் கவிய் " என்னும் கல்வெட்டு , மலையிலுள்ள பெரிய குகைத்தளத்தின் முகப்புப் பகுதியில் மூன்று பகுதிகளைக் கொண்ட வார்த்தைகளாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி
முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.  விந்தையூரைச் சேர்ந்த சையளன்  என்பவர் இக்குகைத்தளத்தை அமைத்துத் தந்திருப்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.


"திடிக்காத்தான் (ம) ...னம் எய்..." -என்று  குகைத்தளத்தின்  கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டும் கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்துத் தந்த கற்படுக்கையாக
இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.

" நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்" என்றமைந்துள்ளது ஒரு கல்வெட்டு. சிறுகுகைத்தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாகக் காணப்படும் இக்கல்வெட்டு  கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தாகும் . நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி  என்பது சேரர்களின் துறைமுகப்பட்டினத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள  முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும் ,  நாகபேரூரின் தலைவரும்  செய்துகொடுத்த   கொடை எனப் பொருள் கொள்ளலாம்.

குகைத்தளத்தில் தெற்கு நோக்கிக் காணப்படும் இரண்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன.  அரசமரக் கிளைகளின் கீழ் முக்குடைக்கு அடியில்  அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில்   உள்ள தீர்த்தங்கரர்  சிற்பம் உள்ளது. இருபுறமும் இருவர் கவரி வீச அழகாக தீர்த்தங்கரர்  அமர்ந்திருக்கிறார்.  அதன் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை  :-

முதல் கல்வெட்டு:-

"ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர்  மாணக்கர் மகாணந்தி   பெரியார் நாட்டாற்றுப்புறத்து  நாட்டார்பேரால்  செய்விச்ச திருமேனி"

.
பராந்தக  பருவதமாயின ஸ்ரீ வல்லவப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரரின் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரரின்   மாணக்கர்  மகாணந்திப் பெரியார் என்பவர்   நாட்டாற்றுப்புறத்து நாட்டாரின்  பெயரால்  செய்வித்துள்ளார்

அந்தக்காலத்தில்   ஆவியூர்க்கருகிலுள்ள குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்துள்ளது. அப்பள்ளியில் நிறைய மாணவர்கள்  பயின்று உள்ளனர். குரண்டிமலைக்கு அக்காலப் பெயர்தான் பராந்தக பர்வதம்

 இரண்டாவது கல்வெட்டு:-

"ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாசி படாரர்  மாணக்கர் குணசேனதேவர் மாணக்கர் கனகவீரப் பெரியடிகள்  நாட்டாற்றுப்புறத்து அமிர்தபராக்கிரம  நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி  பள்ளிச் சிவிகையார் ரக்ஷ."


இரண்டாவது  கல்வெட்டில் கீழக்குயில்குடி ஊராரின் பெயரால் கனகவீரப் பெரியடிகள் செய்வித்துள்ளார்.  இவர்  குணசேனதேவரின்  மாணக்கர் ஆவார்.  முதல்மாடத்திலிருந்த சிற்பத்தினைச் செய்வித்த மகாணந்திப்பெரியாரின் ஆசிரியர் குறண்டி அஷ்டோபவாசிப் படாரரின் மாணாக்கர் ஆவார்.

அந்தக்காலத்தில் சமணத்தைப் பின்பற்றிய மக்கள் இதை நேர்த்திக்கடன் போல் செய்திருக்கலாம்.


மேலே உள்ளவை பசுமை நடைக் குழுவினருடன் 18. 12. 2016 ல் முத்துப்பட்டி என்ற சமணகுடவறை கோவிலுக்குப் போனபோது  அவர்கள் கொடுத்த கோவிலைப்பற்றிய விவரங்கள் அடங்கிய கையேட்டில் உள்ளதை இதில் கொடுத்து இருக்கிறேன்.

பசுமைநடை அமைப்பாளர்களுக்கு நன்றி.

மலைகளை, இடங்களை, கல்வெட்டுகளை, படுக்கைகளை ,வட்டெழுத்துக்களை, பாறை ஓவியங்களை நாம் அறிந்து கொள்ள இது போன்ற  பயணம் தொடர்கிறது நமக்கு பயணம். எல்லா நேரமும்  நாம் இதில் கொள்ள முடியவில்லை.

இங்கிருந்து பசுமை நடைக் குழுவினர் பெருமாள் மலை நோக்கிப் பயணம்
பசுமைநடை  வெளியிடும் புத்தங்கங்கள்  விற்பனைக்கு -

 மலைகள், சிலைகள், ஓவியங்கள் இடையேயான வரலாற்றை அறிய பயணங்களின் தொகுப்பு 
போகும் பாதை 
ஒற்றையடிப் பாதையாகத் தொடர்கிறது

பெருமாள் மலை

சமணச்சின்னம்  அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள்

பசுமைநடை அமைப்பாளர் திரு. முத்துகிருஷ்ணன்  பேசுகிறார்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விளக்குகிறார்
இவர் கிராமிய   பழம் பாடல்களை சேகரித்து வருகிறார் 
சமணக்குகை ஆய்வுச் சொற்பொழிவைக் கேட்கும் பசுமை நடைக் குழுவினர்

சமணப்படுக்கை உள்ள இடம்

சமணப்படுக்கையில் குழந்தை அமர்ந்து எழுத்துக்களை ரசிக்கிறது


பாறைகளுக்கு இடையே குனிந்து வெளி வருதல்


இதற்குள் சமணப்படுக்கையில் உள்ள எழுத்துக்களைப் பற்றி ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

சமணப்படுக்கையில் பக்கவாட்டில் சமணர்கள் வட்டெழுத்துக்கள் இருக்கிறது.
நடுவில் நம்  இளைய தலைமுறைகள் கல்வெட்டில் தங்கள் பெயர்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.




முக்குடைக்கு அடியில் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்.


இன்னும் படங்கள்  இருக்கிறது. மலையின் அழகு. போகும் பாதையில் கண்ட காட்சிகள் எல்லாம் அழகு.

 சமணப்படுக்கையை கண்டு களித்தபின் காலை டிபன் இட்லி, சட்னி, சாம்பார்  அடங்கிய   பொட்டலங்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து மலைக் காட்சிகளை படம் எடுத்து வந்தோம்.

அழகிய  முத்துப்பட்டி ஊரின் காட்சிகள் அடுத்த பதிவில்.
                                                             

வாழ்க வளமுடன்.


38 கருத்துகள்:

  1. வணக்கம்
    அம்மா

    அறியாத தகவல் தங்களின் பதிவழி அறியத்தந்தமைக்கு நன்றி அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பழமையான அபூர்வமான பல தகவல்களுடன், ஆச்சர்யமான படங்களாகக் கொடுத்துள்ளீர்கள்.

    முத்துப்பட்டிக் கல்வெட்டுகள், மிகப்பெரிய பாறைகள், சமணப்படுக்கைகள், மகாவீரர் சிற்பம்,
    சமணர்களின் வட்டெழுத்துக்கள், பசுமை நடைக்குழுவினர், ஒத்தயடிப்பாதை, என ஒன்றையும் விடாமல் எத்தனை எத்தனைத் தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.

    தொடரட்டும். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. அறியாத தகவல்கள் சகோ புகைப்படங்களும் அருமை.

    அடுத்த பதிவில் மேலும் படங்கள் வரட்டும் பகிர்வுக்கு நன்றி
    த.ம.பிறகு கணினியில்.

    பதிலளிநீக்கு
  4. உடன் பயணித்த திருப்தி
    படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
    அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்து
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  5. புகைப்படங்கள், விபரங்கள் யாவும் அருமை! மிகவும் அரிதான தகவல்கள்! இந்த முத்துப்பட்டி, பெருமாள் மலை எங்கிருக்கிறது?

    பதிலளிநீக்கு
  6. படங்களெல்லாம் அருமையும் அழகும்க்கா ..

    பதிலளிநீக்கு
  7. ஆகா.. அழகிய படங்களுடன் அருமையான பதிவு..

    இயற்கையை - வரலாற்றை ஆழ்ந்து ரசிப்பவர்களுக்கு பெருமாள் மலை கல்வெட்டுகள் அரிய விருந்து..

    பதிவினில் வழங்கிய தங்களுக்கு நன்றி..

    அடுத்த பதிவிற்காக ஆவல்!..

    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  8. கல்வெட்டுக்களைப் படம் எடுத்துப் பகிர்ந்து கொண்டிருக்கலாமோதமிழ் எழுத்துகளின் பரிணாமம் பற்றி புரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன் சென்னை மயிலாப்பூர் கோவிலி உள்ளே நுழையும் இடத்ட்க்ஹின் இரு பக்கங்களிலும் கல்வெட்டுப்பதாகைகள் பார்த்திருக்கிறேன் ஓரளவு வாசித்துபுரிந்து கொள்ள முடியும் அவை சுமார் நூறாண்டு காலதையது என்று நினைக்கிறேன் பல கோவில்களில் நிறையவே கற்களில் எழுதி இருப்பதைக் காண முடிகிறது வாசித்து தெரிந்து கொள்ள முடிவதில்லை

    பதிலளிநீக்கு
  9. தம +1

    இந்த இடம் பற்றி நான்கைந்து வருடங்களுக்குமுன் ஒரு நண்பர் பதிவில் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான பதிவு. ஆனால் இந்த வெயிலில் எப்படிச் சமாளித்தீர்கள்? படங்கள் இடத்தின் அழகைச் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ரூபன் வாழ்க வளமுடன்.
    நலமா? வெகு நாட்கள் ஆகி விட்டதே!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    //முத்துப்பட்டிக் கல்வெட்டுகள், மிகப்பெரிய பாறைகள், சமணப்படுக்கைகள், மகாவீரர் சிற்பம்,
    சமணர்களின் வட்டெழுத்துக்கள், பசுமை நடைக்குழுவினர், ஒத்தயடிப்பாதை, என ஒன்றையும் விடாமல் எத்தனை எத்தனைத் தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்//

    நீங்களும் ஒன்றையும் விடாமல் படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
    பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ரமணிசார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    அடுத்தபதிவு எதிர்ப்பார்ப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
    மதுரையிலிருந்து தேனி செல்லும் சாலையில் இருக்கிறது பெருமாள் மலை.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    அடுத்த பதிவில் கிராமத்தின் வீடுகள் , கிராமத்து மக்கள் வருவார்கள்
    உங்களுக்கு பிடிக்கும் வாருங்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    //இயற்கையை - வரலாற்றை ஆழ்ந்து ரசிப்பவர்களுக்கு பெருமாள் மலை கல்வெட்டுகள் அரிய விருந்து..//

    உண்மைதான், பள்ளியில் வரலாறு பாடத்தை சிறப்பு பாடமாய் எடுத்தவள் , இயற்கையை ரசிக்க பிடிக்கும்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    //கல்வெட்டுக்களைப் படம் எடுத்துப் பகிர்ந்து கொண்டிருக்கலாமோ//

    பகிர்ந்து இருக்கிறேன் சார், பார்க்கவில்லையா?
    தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள். சம்ணபடுக்கையிலும் இருக்கிறது. நம் மக்கள் பழைய எழுத்துக்கள் மேல் அவர்கள் பெயர்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஸ்ரீராம் , வாழ்க வளமுடன்.

    //இந்த இடம் பற்றி நான்கைந்து வருடங்களுக்குமுன் ஒரு நண்பர் பதிவில் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான பதிவு. ஆனால் இந்த வெயிலில் எப்படிச் சமாளித்தீர்கள்? படங்கள் இடத்தின் அழகைச் சொல்கின்றன.//

    18.12. 2016 இல் டிசம்பர் மாதம் போனதை இப்போதுதான் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். நாங்கள் போன போது நன்றாக இருந்தது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. இப்போதுதான் இப்பதிவு பார்த்தேன்ன்.. முத்துப்பட்டி பெயரே ரொம்ப அழகாக இருக்கு. பெருமாள்மலை போகும் நடைபாதை நல்ல அழகாகவும் ஆசையாகவும் இருக்கு, ஆனா இது குரூப் ஆகத்தானே போகமுடியும்.. தனிக்குடும்பமாக போகப் பயமென நினைக்கிறேன்.

    அங்கும் மக்கள் இருக்கிறார்களோ... தண்ணிக்கு கஸ்டமாக இருக்குமே...

    பதிலளிநீக்கு
  20. ஏதோ பிரச்சனை எனக்கும் உங்கள் புளொக்குக்கும் கோமதி அக்கா, போஸ்ட் ஆறுதலாகப் படிக்க முடிவதேயில்லை.. ஆடிக்கொண்டே இருக்கு.. மிகவும் கஸ்டப்பட்டு, திருப்பிப்திருப்பி ஓபின் பண்ணியே படிக்கிறேன். ஆனா கொமெண்ட் பொக்ஸ் தனி விண்டோவில் ஓபின் ஆவதால் கொமெண்ட் போட ஈசியாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //இப்போதுதான் இப்பதிவு பார்த்தேன்ன்.. முத்துப்பட்டி பெயரே ரொம்ப அழகாக இருக்கு. பெருமாள்மலை போகும் நடைபாதை நல்ல அழகாகவும் ஆசையாகவும் இருக்கு, ஆனா இது குரூப் ஆகத்தானே போகமுடியும்.. தனிக்குடும்பமாக போகப் பயமென நினைக்கிறேன்.

    அங்கும் மக்கள் இருக்கிறார்களோ... தண்ணிக்கு கஸ்டமாக இருக்குமே...//

    ஆமாம் அதிரா , குரூப்பாகத்தான் போக முடியும். தனிக்குடும்பாக போவது கஷ்டம் தான்.
    அங்கும் மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஆடு, மாடு, கோழிகள், நாய்கள் வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்தும் மக்கள் இருக்கிறார்கள். தண்ணீர் அரசாங்கம் அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.

    //ஏதோ பிரச்சனை எனக்கும் உங்கள் புளொக்குக்கும் கோமதி அக்கா, போஸ்ட் ஆறுதலாகப் படிக்க முடிவதேயில்லை.. ஆடிக்கொண்டே இருக்கு.. மிகவும் கஸ்டப்பட்டு, திருப்பிப்திருப்பி ஓபின் பண்ணியே படிக்கிறேன். ஆனா கொமெண்ட் பொக்ஸ் தனி விண்டோவில் ஓபின் ஆவதால் கொமெண்ட் போட ஈசியாக இருக்கு.//

    ஏன் என்று தெரியவில்லயே திண்டுக்கல்தன்பாலன் அவர்களைதான் கேட்க வேண்டும்.
    கஷ்டப்பட்டு படித்து பின்னூட்டம் போடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    அடுத்த பதிவில் அங்கு வாழும் மக்கள் தான்.


    பதிலளிநீக்கு
  22. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    போட்டோக்களை பாராட்டியது மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதவி.

    பதிலளிநீக்கு
  23. அழகியப் படங்களுடன் அருமையான பதிவு சகோதரியாரே
    ஒரு முறை அவசியம் சென்று காண வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    அழகான ரம்மியமான இடம் சென்று வாருங்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அற்புதமான இடம். தகவல்களுக்கு நன்றி. படங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    அற்புதமான அமைதியான இடம்.
    சமணர்கள் அமைதியான இடம் தேடிதானே வசித்து இருக்கிறார்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. எவ்வளவு தகவல்கள். பெருமாள் மலை. பிரயாணம் ஸுலபமானது இல்லை. உங்கள் கட்டுரை மூலமும்,படங்கள் மூலமும் அரிய வாய்ப்பு கிடைத்தது. தொகுத்து எழுதுவதும் சுலபமான காரியமில்லை. எவ்வளவு அக்கரை இருந்தால் இம்மாதிரி இடங்களுக்குப் போவதும்,அதைக்குறித்து எழுதுவதும். இப்படியே எண்ணங்கள் எனக்குள்ளே போய்க்கொண்டே இருந்தது. படங்களையும் பார்த்து மிகவும் ரஸித்தேன். நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    நிறைய இது போன்ற இடங்கள் நிறைய இருக்கிறது தமிழ் நாட்டில்
    போவதற்கு காலமும் நேரமும் தான் வேண்டும். போன வருடம் போனது இப்போது தான் எழுத நேரம் கிடைத்தது.
    அடுத்த பகுதியும் போட்டு விட்டேன் , ந்றம் இருக்கும் போது படித்து பாருங்கள்.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. கடந்த 10 நாள்களாக சொந்த மற்றும் ஆய்வு காரணமாக வெளியூர்ப் பயணம். இப்போதுதான் பதிவினைப் பார்த்தேன். பாராட்டுகள். நேரடி அனுபவங்கள் என்றுமே அதிக பயனைத் தரும் என்பதை 25 வருட களப்பணியில் உணர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    வெளியூர்ப் பயணம் முடித்து வந்து பதிவினைப் படித்து
    பாராட்டியது மகிழ்ச்சி சார்.
    நேரடி அனுபவம் என்றுமே பயனைத்தரும் என்பது உண்மைதான் சார், உங்கள் 25 வருட களப்பணி அனுபவங்கள் அருமை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. இம்மாதிரியான சுற்றுலாவுக்குப் போக ஆசைதான். உடலும், நேரமும் இடம் கொடுப்பதில்லை! கீழக்குயில்குடி பற்றி ஏற்கெனவே என் நண்பர் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். படங்களுடன் அங்கேயும் பார்த்தேன். இங்கேயும் பார்த்து ரசித்தேன். கல்வெட்டுக்களை உங்களால் படிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி! அருமையான பயனுள்ள சுற்றுலா.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    அதிக சிரமம் இல்லை , நம்மைவிட வயதானவர்கள் வருகிறார்கள்.
    கல்வெட்டு படிக்க தெரிந்த முனைவர் வந்து படித்து சொன்னார்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. அழகான வரலாறு கூறும் ...அரிய பொக்கிசங்கள்...அனைத்தும் அருமை..

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. அறியாத பல இடங்களைப் பற்றி அறிய முடிகிறது. அழகான படங்களுடன் தகவல்களுடன். இது போன்ற பயண ஆசை உண்டுதான். அதுவும் பல கல்வெட்டுகள் குகைகள் பற்றி நேரில் பார்த்து அறிந்து கொள்ள...பார்ப்போம் முடிகிறதா என்று. கல்வெட்டு எழுத்துகளை வாசிக்க முடிந்தது அட போட வைத்தது. மிக அருமையான பதிவு அக்கா...இதோ அடுத்த பகுதிக்கும் செல்கிறோம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    மதுரையில் நிறைய சமணபடுக்கைகள் இருக்கின்றன.
    முடிந்தவரை பார்க்கலாம். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் படித்து சொன்னார்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் கண்டு கொண்டோம். விபரங்கள் அருமை நன்றி.

    பதிலளிநீக்கு