கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.
மலையின் அழகைக் காணீரோ!
பாறையில் வேப்பமரம்
சமணப்படுக்கையைக் காணப்போகும் வழி
கிரானைட் வெட்டப்பட்ட மலை- இப்போது தப்பிவிட்டது
பிராமிக் கல்வெட்டு
இது என்ன விளையாட்டு என்று தெரியவில்லை
முரசு போல அமைந்துள்ள பாறை
எங்கள் வீட்டின் பக்கத்தில் சிறிய குன்று இருக்கே!
சமணப்படுக்கை
வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கை என்னும் வெளிச்சக்கீற்று தெரிவது போல பாறையின் நடுவே வெளிச்சக்கீற்று! - நன்றி ஸ்ரீராம்
பாறையில் தான் எங்கள் விளையாட்டு
நான் இங்கு ஒளிந்து இருப்பதை என் நண்பர்களிடம் சொல்லாதீர்கள்
கீழே விழுந்துவிடுமோ என்று கவலையுடன் பார்க்கும் பசுமைநடை அன்பர்
ஏய்! ரொம்ப ஓரம் போகாதே
காலை நேர சூரிய ஒளி ரம்யமானது- நாம் மட்டும் அல்ல ,ஆடும் ரசிக்கிறது
காலை நேர இளம் வெயில் உடம்புக்கு நல்லதாம், சூரிய ஒளிக் குளியல் செய்கிறேன்
நான் வரேன் , மலை அழகை ரசித்தீர்களா?
அடுத்த பதிவில் எங்கள் வீடுகள் எங்களை வளர்ப்பவர்கள் வீடுகள் வருதாம் கோமதி அம்மாவின் அடுத்த பதிவில் மறக்காமல் வந்து விடுங்கள்.
வாழ்க வளமுடன்.
மொட்டைப்பாறை. நடுவே ஒற்றை மரம். திரைப்படத்தில் கதாநாயகன் சோகப்பாட்டு பாட ஒரு சிறந்த இடம்! போகும் வழி வாழ்க்கைப்பாதை போலாகி கரடு முரடாகத்தான் இருக்கிறது! :))) சமணத்துறவிகள் ஏதோ கட்டம் கட்டி அவ்வப்போது விளையாடியிருக்கிறார்கள் போலும். தவமே ஒரு விளையாட்டுதானே!
பதிலளிநீக்குமுரசுப்பாறையின் நடுவே பெரிய துளையிட்டால் நிழல் தரும் இருப்பிடம் / ஓய்விடம்!
பதிலளிநீக்குநம்மவர்கள் சமணப்படுக்கைகளை விட்டு வைப்பதில்லை போலும். தங்கள் பெயர்களை பொறித்து சேதப்படுத்துகிறார்கள் போல. குமார், மூர்த்திகளைக் கேட்பார் இல்லை!!!
பதிலளிநீக்குவாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கை என்னும் வெளிச்சக்கீற்று தெரிவது போல பாறையின் நடுவே வெளிச்சக்கீற்று!
பதிலளிநீக்குஒளிந்திருக்கும் ஆடும், பெரிய பாறை விழாமல் முட்டுக்கொடுத்து காப்பாற்றி வரும் சிறிய பாறையும் அழகு! அங்கே ஒருவர் எங்கே பெரிய பாறை அதையும் மீறிச் சாய்ந்து விடுமோ என்று அஞ்சி ஓடுகிறார்!
பதிலளிநீக்குகாலை நேர சூரிய உதயத்தை ரசிக்கும் ஒரு பாட்டுப் பாடத் தயாராய் நிற்கிறதோ!
பதிலளிநீக்குதம +1
//காலை நேர சூரிய உதயத்தை ரசிக்கும் ஒரு பாட்டுப் பாடத் தயாராய் நிற்கிறதோ!//
பதிலளிநீக்குகாலை நேர சூரிய உதயத்தை ரசிக்கும் அந்த ஆடு ஒரு பாட்டுப் பாடத் தயாராய் நிற்கிறதோ!
* 'அந்த ஆடு' என்கிற வார்த்தை விடுபட்டிருக்கிறது! மன்னிக்கவும்!
:)))
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//மொட்டைப்பாறை. நடுவே ஒற்றை மரம். திரைப்படத்தில் கதாநாயகன் சோகப்பாட்டு பாட ஒரு சிறந்த இடம்! போகும் வழி வாழ்க்கைப்பாதை போலாகி கரடு முரடாகத்தான் இருக்கிறது! :))) சமணத்துறவிகள் ஏதோ கட்டம் கட்டி அவ்வப்போது விளையாடியிருக்கிறார்கள் போலும். தவமே ஒரு விளையாட்டுதானே!//
நீங்கள் சொல்வது சோகப்பாட்டுக்கு ஏற்ற இடம் தான்.
போகும் பாதையை வாழ்க்கை பாதையுடன் இணைத்து சொன்னது நன்றாக இருக்கிறது.
ஆம, நீங்கள் சொல்வது போல் தவ வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான்,(இறைவனின் விளையாட்டு)
முரசுப்பாறையின் நடுவே பெரிய துளையிட்டால் நிழல் தரும் இருப்பிடம் / ஓய்விடம்!//
பதிலளிநீக்குஆஹா! கற்பனை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.
//நம்மவர்கள் சமணப்படுக்கைகளை விட்டு வைப்பதில்லை போலும். தங்கள் பெயர்களை பொறித்து சேதப்படுத்துகிறார்கள் போல. குமார், மூர்த்திகளைக் கேட்பார் இல்லை!!!//
பதிலளிநீக்குஆமாம் , ஸ்ரீராம். நிறைய சமணபடுக்கைகள் எல்லாம் நம்மவர்கள் கையெழுத்துக்கள் தான். சித்தன்னவாசலில் அதனால் கம்பி தடுப்பு போட்டு விட்டார்கள்.
//வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கை என்னும் வெளிச்சக்கீற்று தெரிவது போல பாறையின் நடுவே வெளிச்சக்கீற்று!//
பதிலளிநீக்குபாறை இடுக்கு வழியே சூரிய ஓளி என்று எழுதியது எங்கோ போய் விட்டது.
நீங்கள் அந்த படத்திற்கு கொடுத்த பின்னூட்டம் நன்றாக இருப்பதால் அதையே அங்கு கொடுத்து விட்டேன். நன்றி ஸ்ரீராம்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும் போது நம்பிக்கை என்னும் வெளிச்சக்கீற்று தெரிந்தால் மகிழ்ச்சி தான். எனக்கு இப்போது நம்பிக்கை வெளிச்சக்கீற்று தேவையாக இருக்கிறது.
நன்றி நன்றி ஸ்ரீராம்.
//கிரானைட் வெட்டப்பட்ட மலை- இப்போது தப்பிவிட்டது//
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... அரசியல் நையாண்டி ஸூப்பர் அனைத்து படங்களும் அருமை வாழ்த்துகளுடன் தொடர்கிறேன்.
த.ம.2
//ஒளிந்திருக்கும் ஆடும், பெரிய பாறை விழாமல் முட்டுக்கொடுத்து காப்பாற்றி வரும் சிறிய பாறையும் அழகு! அங்கே ஒருவர் எங்கே பெரிய பாறை அதையும் மீறிச் சாய்ந்து விடுமோ என்று அஞ்சி ஓடுகிறார்!//
பதிலளிநீக்குஒளிந்து இருக்கும் ஆட்டை எல்லோரும் படம் எடுத்தார்கள், எல்லோரையும் கவர்ந்த ஆடு.
பெரிய பாறை விழாமல் முட்டுக் கொடுத்த மாதிரி இருக்கும் பாறைகளுக்கு கீழே தான் சமணப்படுக்கை ஒற்றை படுக்கை உள்ளது அதில் தான் ஏராளமான கையெழுத்துக்களை நம்மவர்கள் போட்டு இருக்கிறார்கள்.
அஞ்சி ஓடுவதாக ரசித்தது மகிழ்ச்சி.
காலை நேர சூரிய உதயத்தை ரசிக்கும் ஒரு பாட்டுப் பாடத் தயாராய் நிற்கிறதோ!
பதிலளிநீக்குதம +1//
சூரிய ஓளி குளியல் படம் பாட்டு பிரியரை பாடத் தயாராய் நிற்பாதாய் கற்பனை செய்ய சொல்கிறது. காலை பாட்டு நிறைய இருக்கே ! நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.
முதலில் வந்து அத்தனை படங்களையும் ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
/காலை நேர சூரிய உதயத்தை ரசிக்கும் ஒரு பாட்டுப் பாடத் தயாராய் நிற்கிறதோ!//
பதிலளிநீக்குகாலை நேர சூரிய உதயத்தை ரசிக்கும் அந்த ஆடு ஒரு பாட்டுப் பாடத் தயாராய் நிற்கிறதோ!
* 'அந்த ஆடு' என்கிற வார்த்தை விடுபட்டிருக்கிறது! மன்னிக்கவும்!
:)))//
அதனால் என்ன புரிந்து கொள்ள முடிந்ததே.
அத்தனை கருத்துக்கும் நன்றி.
//காலை பாட்டு நிறைய இருக்கே ! நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.//
பதிலளிநீக்குநிறைய .இருக்கிறதே....
- அதிகாலை நேரமே.... இனிதான ராகமே...
- அதிகாலை சுபவேளை.. உன் ஓலை வந்தது...
- காலைநேரக் காற்றே... வாழ்த்துச் சொல்லு...
- காலைநேரப் பூங்குயில் கவிதை பாடப் போகுது...
- காலை இளம்பருதியிலே அவளைக் கண்டேன்...
- காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது... (நம்ம முருகன் பாட்டு)
- அதிகாலை நேரக் கனவில் உன்னைப் [ஆர்த்தேன்...
- காலங்கார்த்தாலே... ஒரு வேலை இல்லாம...
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு/கிரானைட் வெட்டப்பட்ட மலை- இப்போது தப்பிவிட்டது//
ஹா... ஹா... ஹா... அரசியல் நையாண்டி ஸூப்பர் அனைத்து படங்களும் அருமை வாழ்த்துகளுடன் தொடர்கிறேன்.
த.ம.2//
பசுமை நடை இயக்கத்தினர்களால் நிறைய பாறைகள் சிதைக்க படுவது தடுக்கப் பட்டது.
சமண துறவிகள் யாரும் தொந்திரவு செய்யாத இடமாய் ஊருக்கு ஒதுக்குபுறமாய் உள்ள மலைகளில் தாங்கள் படுக்க வசிக்க பாறைகளை வெட்டி வழு வழு என்று செய்து படுக்கை அமைத்து கொண்டதால் நிறைய மலைகள் தம்பித்து விட்டது.
உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅதிகாலை நேரமே.... இனிதான ராகமே...
- அதிகாலை சுபவேளை.. உன் ஓலை வந்தது...
- காலைநேரக் காற்றே... வாழ்த்துச் சொல்லு...
- காலைநேரப் பூங்குயில் கவிதை பாடப் போகுது...
- காலை இளம்பருதியிலே அவளைக் கண்டேன்...
- காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது... (நம்ம முருகன் பாட்டு)
- அதிகாலை நேரக் கனவில் உன்னைப் [ஆர்த்தேன்...
- காலங்கார்த்தாலே... ஒரு வேலை இல்லாம...//
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது... (நம்ம முருகன் பாட்டு) இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
பாடல்கள் எல்லாம் அருமையான பாட்டுக்கள்.
பாடல்கள் பகிர்வுக்கு நன்றி , முருகன் பாட்டுக்கு மிகவும் நன்றி.
கலை ரசனை, வரலாற்று ஆர்வம் ஆகியவற்றின் அருமையான வெளிப்பாடு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபோன பதிவு படீத்தீர்களா?
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
சூரியக்குளியல் செய்யும் அந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் மிகவும் அழகு!
பதிலளிநீக்குபடங்களுடன் உங்கள் கமென்ட்களும் புன்னகையுடன் படிக்க வைத்தன. ப்ரமாதம்!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடத்தை ரசித்தமைக்கு நன்றி.
வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்களை புன்னகையுடன் ரசித்தது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.
படங்களும் பொருத்தமான வர்ணனைகளும் மிகவும் அழகோ அழகாக உள்ளன.
பதிலளிநீக்குஆட்டின் (ஆடுகளின்) துணிச்சல் நம்மை ஆடிப்போகவும் ஆட்டிப்படைக்கவும் வைக்கின்றன.
பகிர்வுக்கு நன்றிகள்.
படங்கள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவர்கின்றன சகோதரியாரே
பதிலளிநீக்குஅவசியம் ஒரு முறை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவல் மனதில் எழுகிறது
நன்றி சகோதரியாரே
வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//படங்களும் பொருத்தமான வர்ணனைகளும் மிகவும் அழகோ அழகாக உள்ளன.
ஆட்டின் (ஆடுகளின்) துணிச்சல் நம்மை ஆடிப்போகவும் ஆட்டிப்படைக்கவும் வைக்கின்றன//
ஆம், ஆடுகளின் துணிச்சல் பயமாகத்தான் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி
வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//படங்கள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவர்கின்றன சகோதரியாரே
அவசியம் ஒரு முறை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவல் மனதில் எழுகிறது
நன்றி சகோதரியாரே//
அவசியம் பார்க்க வேண்டிய இடம் தான் நிறைய ந்ணபர்களுடன் சென்று வாருங்கள் . கூட்டமாய் போனால் தான் நன்றாக இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//மலையின் அழகைக் காணீரோ!//
பதிலளிநீக்குஉண்மையில் அழகோ அழகு.. அதிலும் சூரிய ஒளி படும்போது எடுத்திருப்பது மஞ்சள் பூசிய பெண்போல ஜொலிக்குது.. அதுசரி மலை என்பது ஆணா பெண்ணா??:).
ஆடுகளின் அட்டகாசம் கண்கொள்ளாக் காட்சி.
ஆனாலும் பாறைகளூடான நடை பாதை பார்க்கப் பயமாக இருக்கு.. கால் தவறினால் கறணம் தான்ன்ன்ன்:) ஹா ஹா ஹா
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎன் பதிவு மக்கர் செய்யாமல் படிக்க விட்டதா?
//
உண்மையில் அழகோ அழகு.. அதிலும் சூரிய ஒளி படும்போது எடுத்திருப்பது மஞ்சள் பூசிய பெண்போல ஜொலிக்குது.. அதுசரி மலை என்பது ஆணா பெண்ணா??:).//
மஞ்சள் பூசிய பெண் போல ! அருமை.
மலை மஞ்சள் வண்ணத்தில் ஜொலிப்பதை பொன் வண்ணம் என்பார்கள் .
பெண்ணுக்கு இவ்வளவு கடின தன்மை இருக்குமா? பெண் மென்மையானவள் அல்லவா?
அதனால் ஆண் தான் என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
நடைபாதை கொஞ்ச இடம் மட்டும் இப்படி இருக்கிறது.
நீங்கள் முதல் பகுதியில் கேட்ட கேள்விக்கு மூன்றாவது பகுதி வருகிறது அதிரா .
இந்த பகுதியில் கேட்ட கேள்விக்கு இன்னொரு பதிவு எழுதுகிறேன்.
உங்கள் பயணத்தின் இடையில் இங்கு என்பதிவை படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
காணற்கரிய காட்சிகளாக இன்றைய பதிவு..
பதிலளிநீக்குபொன்மாலைப் பொழுதில் புதிய வார்ப்புகளாக அழகிய படங்கள்..
தாங்கள் வரலாறை விருப்பப் பாடமாகத் தெரிவு செய்திருந்ததைக் கூறியிருந்தீர்கள்..
அதற்கேற்றவாறு சுற்றுச்சூழல் அழகுடன் பதிவு ஒளிர்கின்றது..
வாழ்க நலம்!..
இரசித்ததை இரசிக்கும்படி
பதிலளிநீக்குஅழகாகக் கொடுத்தது அருமை
உயரத்தையும் தூரத்தையும்
தொடர்ப் புகைப்படங்களால்
உணர முடிந்தது
வாழ்த்துக்களுடன்...
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமலையும், மலைசார்ந்த பகுதிகளும் மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் இனிய கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தொல்பொருட்களை நாசம் செய்வதில் நமக்கு ஈடு,இணை இல்லை! அது போலத் தான் இங்கேயும் சமணர் படுக்கையில் அவங்க பெயரை எல்லாம் எழுதி இருக்காங்க. எல்லாப் படங்களும் அருமை. அதற்குக் கவிதைநயத்துடன் கொடுத்திருக்கும் கருத்துகள் அதை விட அருமை. பயணம் தொடரக் காத்திருக்கேன். இது ஆனைமலையிலிருந்து கிட்டேயே இருக்கா? அல்லது ஆனைமலைப் பகுதி தானா?
பதிலளிநீக்குவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநிறைய இடங்களில் தொல்பொருட்களை சேதப்படுத்தினால் த்ண்டிக்க படுவதாய் அறிவிப்பு
பலகை வைத்து இருப்பார்கள்.
இங்கு இல்லை.
ஆனைமலை பக்கம் இல்லை. ஆனைமலை மதுரைக்கு கிழக்கு பகுதி. இந்த முத்துப்பட்டி மதுரைக்கு மேற்கு பகுதி.
மதுரை தேனி ரோட்டில் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆனை மலை மதுரைக்கு கிழக்கில் உள்ளது.
பதிலளிநீக்குமுத்துப்பட்டி மதுரைக்கு மேற்கில் தேனி செல்லும் வழியில் உள்ளது.
அழகான காட்சிகள்.....
பதிலளிநீக்குஇரு பகுதிகளையும் சேர்த்து இப்பொழுது தான் படிக்க முடிந்தது...
வணக்கம் வெங்கட் நாகராஜ் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
படங்கள் அருமை. சமணர்கள் கடும் பாறைகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள். மலைகள் எத்தனை சேதிகளை தன்னுள் தாங்கி நிற்கின்றன .
பதிலளிநீக்குபடங்கள் அருமை. சமணர்கள் கடும் பாறைகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள். மலைகள் எத்தனை சேதிகளை தன்னுள் தாங்கி நிற்கின்றன .
பதிலளிநீக்குஆவ் !! இப்போதுதான் பார்த்தேன் இந்த பகுதியை ..ஆடுகள் பயமறியாமல் என்னமா மலைமேலேறுகிறாங்க ..
பதிலளிநீக்குஅது ஏணிப்பாண்டி விளையாட்டாயிருக்குமோ :)
சாதா பாண்டி மற்றும் ஏரோப்பிளேன் பாண்டியில் அதிகபட்ஷம் 8 கட்டம் இருக்கும் இதில் ரெயில் பேட்டி போலிருக்கே !!
படங்கள் எல்லாம் அழகு
மலையரசி என்றுதானே சொல்றாங்க அதனால் மலை பெண் பால் :)
பதிலளிநீக்குவணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமலைகள் நிறைய சேதிகளை தன்னுள் வைத்து இருப்பதும், சமணரகள் தங்கள் முத்திரையை பதித்து வைத்து இருப்பதும் உண்மைதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆடுகள் எவ்வளவு உயரமாக மலை இருந்தாலும் ஏறும்.
ஏணிப்பாண்டியாக தான் இருக்கும்.
அதிராவின் கேள்விக்கு நீங்கள் சொன்ன பதில் சரிதான்.
மலைராணி, மலையரசி என்று தான் சொல்கிறோம்.
அருமையான கருத்து சொன்னதற்கு நன்றி ஏஞ்சலின்.
இந்த ஆடுகள் மிகவும் சாமர்த்தியமானவை அனாயாசமாக மலை ஏறிவிடும் கன்னடத்தில் மேக்கே என்றால் ஆடு. அவை தாண்டும் இடம்தானோ இந்த மேக்கே தாட்டு என்று அழைக்கப்படும் இடம் பதிவுக்கு ஒவ்வாத விஷயம் எனக்கு இந்தபழைய க்கல்வெட்டுகளை பொருள் டெரிந்து படித்துக்காட்ட ஒருவர் வேண்டும் நிறைய இடங்களில் கல்வெட்டுகளைப் பார்க்கும் போது தோன்றுவது
பதிலளிநீக்குபடங்களும் பகிர்வும் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆடு பற்றிய விவரம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் உடன் வந்து சொன்னார். இந்த இடத்திற்கு நான் போய் பல
மாதங்கள் ஆகி விட்டது, எழுதிய குறிப்பையும் எங்கோ தவறவிட்டு விட்டேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
என்றும் தெவிட்டாத...மலை அழகை இங்கும் ரசித்தேன்...
பதிலளிநீக்குவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமலை அழகை ரசித்தமைக்கு நன்றி.
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமலை அழகை ரசித்தமைக்கு நன்றி.
படங்கள் அத்தனையும் அருமை சகோ/அக்கா. சமணர்கள் பெரும்பாலும் குகைகளிலும் பாறைகளிலும் தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது....அருமை...
பதிலளிநீக்குவணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசமணர்கள் குகைகளில் தான் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொண்டார்கள்.
தொடர்ந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.