ஜூன் மாதம் 11 ஆம் தேதி மகன் குடும்பத்தோடு குலதெய்வம் கோயில் போய் வந்தேன்.
அங்கு எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கும் என் சேமிப்பாகவும் இந்த பதிவில் இடம் பெறுகிறது.
ஏரி, வயல்கள், கோவிலின் அருகே ஆலமரங்கள் என்று மிகவும் ரம்மியமாக இருக்கும். அந்த காட்சிகள் எல்லாம் கண்ணுக்கு குளுமையாக இருக்கும் கவின் சிறு வயதில் போன போது உள்ள பதிவு. கோயிலை சுற்றி விளையாடுவான்.
அந்த பதிவில் அதற்கு முன்போன பதிவின் படம் இடம் பெற்றது கோயில் பெயர் காரணம் இருக்கும்.
எங்கள் குலதெய்வத்திற்கு களக்கோடி சாஸ்தா என்று பெயர். அவர் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் வயல் வெளி, அறுவடையின்போது நெற்கதிர்களை அங்கு தான் போட்டு அடித்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள். களத்துமேட்டுக்குக் கடைசியில் உள்ளதால் களக்கோடி சாஸ்தா என்ற பெயர்.
பூர்ணா மற்றும் புஷ்கலா தேவியர்களுடன் ஸ்ரீ களக்கோட்டீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
நெல்லைமாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாப்பான்குளம்- மட்வார் விளாகம் எனும் இடத்தில் இருக்கிறது.
வீர பத்திரர் சாமி. வாசலில் இடது பக்கம் இருக்கும் சன்னதி
களக்கோடி சாஸ்தா என்றுதான் அழைப்போம். இப்போது களக்கோட்டீஸ்வர சாஸ்தா என்று அழைக்கிறார்கள்.
இரண்டுகுடும்பம் வந்து இருந்தார்கள், மொத்தம் 20 பேர் இருப்போம்
அவர்கள் அபிஷேகத்திற்கு கொடுத்து இருந்தார்கள், நாங்கள் பிரசாதம் வெண்பொங்கல்,சர்க்கரை பொங்கல் செய்ய சொல்லி இருந்தோம் குருக்களிடம். .அனைவர் பேரிலும் அர்ச்சனை மட்டும் செய்தோம்.நாங்கள் சென்று வந்த அடுத்த வாரம் எங்கள் குடும்பத்தினர் பொங்கல் வைத்து அனைத்து மூர்த்திகளுக்கும்(பிள்ளையார், முருகன், வீரபத்திரர் மாடசாமி, நாகர்கள், சப்தகன்னியர்கள், பேச்சியம்மன்,பிரம்மராட்சசி, மற்றும் யானை வாகனம்)அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தார்கள்.
மற்ற சாமிகள் உள்ள பதிவு
குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்
இதில் மேலும் படங்கள் இருக்கிறது.
நிற்க முடியாது வெகுநேரம் என்பதால் நாற்காலி போட்டார்கள் அமர.
மகன் எங்கள் குடும்பத்தினர் அனைவர் பேர் நட்சத்திரம் இவற்றை பிரிண்ட்அவுட் எடுத்து வந்து இருந்தான் . அதை சொல்லி அனைவர் பேரிலும் அர்ச்சனை செய்யப்பட்டது.
தீபாராதனை
நல்லபடியாக மன நிறைவாக பூஜை ஆனது. மாலைமரியாதைகள் செய்தார் குருக்கள்.
ஒரு காலத்தில் அந்த கோயிலின் தேரில் சுவாமியை வைக்க உதவும் மண்டபம்.மரங்கள் முளைத்து கிடக்கிறது.
நாங்கள் எப்போது போனாலும் உழவு தொழில் ஏதாவது நடந்து கொண்டு இருக்கும், நாற்று நடுவார்கள் அல்லது பச்சை பசேல் என்ற வயல்களை பார்த்து இருக்கிறோம். அறுவடை செய்து களத்தில் கதிர் அடித்து வண்டிகளில் ஏற்றிக் கொண்டு இருப்பார்கள். இந்த தடவை உழுது போட்ட வயல்களை பார்த்து ஏமாற்றம் ஆகி விட்டது.
ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன, பறவைகள் அமர்ந்து இருக்கப் பார்த்து இருக்கிறேன் படங்களை பகிர்ந்து இருக்கிறேன். இப்போது ஆடுகள் மேய்வதை பார்க்கிறேன்.
கருமேகம் சூழ்ந்து இருட்டி கொண்டு வந்தது .
தூரத்தில் தெரியும் அந்த கோயில் வரை வயல் வெளிதான் இருக்கும்.
பல்வேறு பறவைகளின் ஒலியை வீடியோ செய்து இருந்தான் ஒவ்வொன்றுமொவ்வொரு மாதிரி வித்தியாசமான ஒலி செய்தன ஆனால் இங்கு அது பதிவேற மறுக்கிறது. இயற்கை அழகை அள்ளி தருவதோடு மனதுக்கு ஒரு அமைதி ஆனந்தம் அளிக்கும் கோயில்.
ஏரியில் காற்று அதிகம் வீசியதால் அலை அலையாக நீரின் நடனம் மகன் ஏரியில் இறங்கி எடுத்து வந்த படம்
சாம்பல் , வெள்ளை செந்நிற கொக்குகள்
மேலே இருக்கும் பறவைகள் அனைத்தும் இந்த மாதிரி பறவைகள் தான். இதை மட்டும் பக்கத்தில் எடுக்க முடிந்தது என்றான். மகன் எல்லாம் அலைபேசியில் எடுத்தான் பேரன் தான் காமிராவில் எடுத்தான் .
ஏரியில் இருக்கும் சிறிது நீரையும் ஆகாயத் தாமரை செடி மறைத்து கொண்டு இருக்கிறது.(மரமும் நான் காரிலிருந்து எடுக்க மறைத்து கொண்டு இருக்கு)
கோயில் பக்கம் ஏரி தெரியாது கரை உயர்ந்து இருக்கும் வர வர ஏரி கரை சிறிதாகி ஏரி தெரியும்
மழை காற்று பலமாக வீச ஆரம்பித்து விட்டது. சிறிய காணொளிதான்பாருங்கள். நான் எடுத்த காணொளி
இடுப்பிலே பெலட், காலில் பெலட், கைத்தடி இவற்றுடன் மெதுவாக நடந்து வந்தேன்.
"சீக்கீரம் வாங்க ,பார்த்து வாங்க , மழை வரும் முன் காரில் ஏறிவிடலாம்"
என்று அழைத்து வருகிறான் பேரன்.
மழை வந்து விட்டால் கோயிலிருந்து வெளியே போகும் பாதையில் நடக்க முடியாது கார் சேற்றில் சிக்கி கொள்ளும். வழியில் உள்ள ஆற்றில் நீர் ஓட ஆரம்பித்து விடும் கார் போகாது. நடந்து போக வேண்டும். குருக்கள்" அம்மா உங்களுக்கு நடக்க முடியாது விரைவாக காரில் ஏறி ஆற்றை கடந்து விடுங்கள் என்றார்."
கோயிலிருந்து வரும் பாதை செம்மண் ரோடு மழை வந்து விட்டால் சேறும் சகதியுமாக ஆகி விடும் டயர்கள் மண்ணில் சிக்கி கொள்ளும் அப்புறம் கிளப்ப முடியாது அதனால் அந்த பாதையை, மழைக்கு முன் ஆற்றை கடந்து விட்டால் போதும் பயம் இல்லை.
மகன்,மருமகள், பேரன் ஏரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அதில் இறங்கி அக்கரையில் இருக்கும் பிள்ளையாரை பார்க்க போய் விட்டார்கள் . அவர்களை அழைத்து வந்தார் டிரைவர் அதன் பின் விரைந்து மதுரையை நோக்கி பயணப்பட்டோம்.
பக்கத்தில் போய் பார்த்தது இல்லை, மகன் அருமையாக பக்கத்தில் பார்த்த உணர்வை தருவது போல படம் எடுத்து வந்து காட்டி விட்டான் எனக்கு.
போன ஆண்டு மகனுடன் போன போது ஏரி முழுவதும் நீர் நிறைந்து இருந்தது, இநத் ஆண்டு கொஞ்சம் தான் நீர் இருந்தது பேரன் ஏரியில் இறங்கி
பார்க்கிறான் .
மகன் , மருமகள், பேரன் ஏரிக்குள் இறங்கியவுடன் கொக்குகள் பறந்து கரை யேறி விட்டனவாம்.
காற்று வேகமாய் அடிக்க ஆரம்பித்தவுடன் எல்லா பறவைகளும் பறந்து போய் விட்டன. மகன் எடுத்த படங்கள்.
குழந்தைகள் எல்லாம் இந்த விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவார்கள். பழைய பதிவில் அதை பகிர்ந்து இருக்கிறேன்.
இந்த பாதையை கடந்து வந்து விட்டோம் (ஆறு ஓடும் பகுதி)
கடந்து விட்டோம் மழையும் வலுக்க துவங்கி விட்டது.
கோயில் பிரசாதங்களை ஆற்றை தாண்டி வந்த பின் ஒருக்கும் ஒரு கோயில் மண்டபத்தில் அமர்ந்து இருக்கும் ஆட்களுக்கு கோயில் பிரசாதங்களை கொடுக்க போகிறார் கார் டிரைவர்.
கோயில் மண்டபத்தில் அமர்ந்து இளைப்பாறி கொண்டு இருந்தவர்களுக்கு பிரசாதம் கொடுத்து வந்தார் டிரைவர்.
அங்கு இருக்கும் மாடுகளுக்கு வாழை பழங்களை கொடுத்து வந்தார்.
நல்ல டிரைவராக கிடைத்தார், நிதானமாக ஓட்டி பத்திரமாக அழைத்து போய் வந்தார்.
இந்த கோயில் திரிவிழாக்கள் ஒரு காலத்தில் நன்றாக நடந்து இருக்கும் போல
அப்போது தேர்திருவிழாவில் சாமியை எழுந்தரள செய்ய வைக்கஏற்படுத்திய மண்டபம் இப்போது , செடிகள்,மரங்கள் முளைத்து கிடக்கிறது.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி எங்கள் குலதெய்வம் கோயில்
காட்சி தரும். எல்லோருக்கும் எல்லா நலன்களை அருள வேண்டும் களகோட்டி சாஸ்தா
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக