ஞாயிறு, 1 நவம்பர், 2026

ஹாலோவீனும் மழையும்



பேரன் கவின் குழந்தை பருவத்தில் 


இன்று

ஹாலீவீன்  அக்டோபர் 31 ஆம் தேதி மேற்கத்திய நாடுகளில் கொண்டாடாப்படும்  ஒரு பண்டிகை.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். '"பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா" என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//



வீட்டுக்கு முன் வைத்த அலங்காரங்கள்.ஹாரி பாட்டர் எட்டிப்பார்க்கிறார்


பக்கத்தில் போனால் ஹேப்பி ஹாலோவீன் சொல்லும்  சின்ன விடீயோ தான் வலை ஏற மறுக்கிறது.


ஹாலோவீன்  நிகழ்ச்சியாக வாங்கியது  என் அறைக்கு வந்து குசலம் விசாரித்து போனது.அப்புறம் முன் பக்கம் தொங்கவிடபட்டது.

மருமகள் ஆபீஸ்க்கு போன போது

நல்ல மழையில் ஆனந்தமாக   நனைகிறது 


ஹாலோவீன் அலங்காரங்கள் எல்லாம் கீழே விழுந்து கிடக்கிறது



மழையை ரசிக்கும் பேரன்



ஹாலோவீன் எலும்பு கூடு மழையில் ஆனந்தமாக குளிக்கிறது.
அருவியில் குளிப்பது போல மகிழ்ச்சியாக குளிக்கிறது.

முத்துச்சரம் போல சரம் சரமாக மழை.

 
இடி இடிக்கும் மேகங்கள், இறங்கி வரும்  தாளங்கள்


இன்று காலை முதலே மழை


வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலோடு நாட்டியம்
மேடையான மண்டபம்
தூறலோடு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திசைக் காற்றிலே
ஏகவெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார்முழுதும் வீட்டிலே
பறவை கூடக் கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே.'

சிறுவயதில் என் மகள் பாடுவாள்.  பழைய "மழை மழை"பதிவில் இந்த பாடலை பகிர்ந்து இருப்பேன்.

 தமிழ்நாட்டில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இங்கும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. போனில் எச்சரிக்கை வந்து கொண்டு இருக்கிறது. 


இலவச மற்றும் கட்டணமில்லா ஹாலோவீன் விழாக்களை பீனிக்ஸ் நகர  பூங்காக்கள் மற்றும்  மற்றும் பொழுது போக்குத் துறையும் சேர்ந்து  நடத்துகிறார்கள் குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் வித விதமான  ஆடைகள்  அணிந்து வருவார்கள்.  குழந்தைகளுக்கு விளையாட்டுகள், போட்டோ எடுத்து கொள்ள போட்டோ பூத்கள்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  (Trick-or-Treat) என்று கேட்கும் குழந்தைகளுக்கு இலவச மிட்டாய்கள் உண்டு.
நாங்களும் வேட மிட்டு போனோம் நானும் பேரனும்

நானும் , சம்பந்தியும்  முன்பு கொள்ளைக்காரிகள் இப்போது மக்களின் அன்பு மனதை கொள்ளை அடிக்க வந்தவர்கள். குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களுடன் வந்தவர்கள்.

பையில் சின்ன சின்ன கார்கள், பென்சில், பேனா, பந்துகள் வைத்து இருக்கிறோம். எங்களிடம் வரும் குழந்தைகளுக்கு கொடுத்தோம்.


பேரன் வெளவால் எலும்பு கூடு , கையில்  பறக்கும் வெளவால்  இது ஹாலோவீன்  பாரம்பரியம்.  வாசலில் ஹாலோவீன் அலங்காரத்தில் வெளவால் நிறைய இடம்பெறும்

மகனின் நண்பர்கள் வந்து இருந்தார்கள்.
பேரன் கையில் வ்வால் தெரிகிறதா? தொங்க விட்டு இருக்கிறான்.   கடைசியில் மகன் 

மிட்டாய் வாங்க  வந்த தேவதை   குழந்தை


பன்றி  முகத்தோடு குடும்பத்தோடு வந்தவர்  மெகா சைஸ் பாப்கார்ன் வைத்து இருக்கிறார்


தந்தையின் தோளில்  மகிழ்ச்சியாக வந்த மகன்

சம்பந்தி , பேரன், மருமகள், மகன்

டைனோஸர்கள்




 ஹாலோவீன் விழாவில்  போட்டோ பூத்தில் படம் எடுக்க நின்ற போது பேரன்  கவினுடன் படம் எடுக்க விரும்பிய   குழந்தை. நன்றாக தமிழ் பேசினான்

காரில் வந்த போது முன் பக்கம் இருந்து மருமகள் எடுத்த படம்




தங்கபற்களுடன்  மகன் மிரட்டுகிறான்,  அழகான முகத்தோற்றம் ஆனால் கண்கள் மூலம் மிரட்டுகிறாள் மருமகள்.
 


வீட்டின் முன் பக்கம் வைத்த பொம்மைகள்








வரும் குழந்தைகளுக்கு கொடுக்க மிட்டாய் பானை

சாக்லேட்கள்

சிறு குழந்தைகளுக்கு கார்கள்

இருள்விலக்கும் பண்டிகை இன்று  இரவுடன் நிறைவு பெறும் குழந்தைகள் வருவார்கள் வித விதமாக உடை அணிந்து மழை  விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது வருவார்களா என நினைத்தோம்  வந்து விட்டார்கள்.

 6 முதல் 8 வரை குடையை பிடித்து கொண்டு எல்லோரும் வந்து விட்டார்கள் அடாதுமழை பெய்தாலும் விடாது கொண்டாட்டம் நடந்தது.









அடுத்து நம் தீபாவளி  திருநாள்  இருள் நீங்கி ஒளி பரவும் திருநாள் வரும்.

வாழ்கவையகம்! வாழ்கவையகம் ! வாழ்க வளமுடன்


-----------------------------------------------------------------------------------------------------------------------
 

18 கருத்துகள்:

  1. நவராத்திரியில் கிருஷ்ணன் எட்டிப் பார்த்த படத்திலிருந்து இன்ஸ்பிரேஷனா?   ஹாரி பாட்டர் அது போலவே எட்டிப்பார்க்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்,வாழ்க வளமுடன்

      //நவராத்திரியில் கிருஷ்ணன் எட்டிப் பார்த்த படத்திலிருந்து இன்ஸ்பிரேஷனா? ஹாரி பாட்டர் அது போலவே எட்டிப்பார்க்கிறார்!//

      ஆமாம், அது போலவே கவின் அமைத்தான் .

      நீக்கு
  2. உங்கள் அறைக்கு வந்து குசலம் விசாரித்துப் போனதா?  எதனால் செய்யப்படுவது அது?  பிளாஸ்டிக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் அறைக்கு வந்து குசலம் விசாரித்துப் போனதா? எதனால் செய்யப்படுவது அது? பிளாஸ்டிக்கா?//

      ஆமாம், பிளாஸ்டிக் என்று தான் நினைக்கிறேன் நான் தொட்டுப்பார்க்கவில்லை.

      நீக்கு
  3. மழையில் குளிக்கும் எலும்புக்கூடார் படம் பேஸ்புக்கில் பார்த்தேனோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மழையில் குளிக்கும் எலும்புக்கூடார் படம் பேஸ்புக்கில் பார்த்தேனோ//

      ஆமாம் , காலை பெய்த மழையை போட்டு இருந்தேன்.

      நீக்கு
  4. மழை என்றுமே ரசனைதான்.  என்ன..  முன்மாதிரி மழையில் நனைய முடியவில்லையே என்கிற வருத்தம்தான்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மழை என்றுமே ரசனைதான். என்ன.. முன்மாதிரி மழையில் நனைய முடியவில்லையே என்கிற வருத்தம்தான்,//

      ஆமாம், எனக்கும் மழையில் நனைய பிடிக்கும் . ஆனால் இப்போது முடிவது இல்லை. சாரல் மழையில் நடக்க பிடிக்கும்.

      நீக்கு
  5. // இடி இடிக்கும் மேகங்கள், இறங்கி வரும்  தாளங்கள்  //

    அருமை.

     மழை வந்து ஹாலோவீன் கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டதோ...   அலங்காரங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டதோ...   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //// இடி இடிக்கும் மேகங்கள், இறங்கி வரும் தாளங்கள் //

      அருமை.//

      இந்த பாடலும், பாரதியின் மழை பாடலும் மழை பெய்யும் போது எல்லாம் என் வாய் முனு முனுக்கும்.


      //மழை வந்து ஹாலோவீன் கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டதோ... அலங்காரங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டதோ... //

      ஆமாம், மாலையில் மறுபடியும் வைத்து விட்டோம்.

      நீக்கு
  6. மழைப் பாடலை ரசித்தேன்.  நாங்கள் இருக்கும் ஏரியாவில் அல்லது சென்னையில் பெரிய மழை எதுவும் சமீபத்தில் இல்லை.  வறண்ட வானிலைதான்.  ஏஸி தேவையாய் இருக்கும் நிலைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மழைப் பாடலை ரசித்தேன். நாங்கள் இருக்கும் ஏரியாவில் அல்லது சென்னையில் பெரிய மழை எதுவும் சமீபத்தில் இல்லை. வறண்ட வானிலைதான். ஏஸி தேவையாய் இருக்கும் நிலைதான்!//

      சென்னையில் மழை பெய்கிறது, என்று செய்தியில் சொல்கிறார்களே!

      இங்கு காலநிலை மாறப்போகிறது, வெப்பத்திலிருந்து குளிர போகிறது
      அதனால் இந்த மழை.

      நீக்கு
  7. அடடே..  நீங்களும் வேடமிட்டு சென்றிருக்கிறீர்கள்...  வேடிக்கைதான்.  கவினின் உயரம் உங்களுக்கு அருகில் சட்டென தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடடே.. நீங்களும் வேடமிட்டு சென்றிருக்கிறீர்கள்... வேடிக்கைதான். கவினின் உயரம் உங்களுக்கு அருகில் சட்டென தெரிகிறது!//

      ஆமாம், அவன் உயரம். நான் வேண்டாம் என்றால் கேட்க மாட்டார் மருமகள் எங்கள் இருவரையும் வேடமிட வைத்து விட்டார்.
      விழா நடக்கும் இடத்திற்கு போனால் எங்களை விட வயது ஆனவர்கள் வேடமிட்டு வந்து இருந்தார்கள்.பேட்டரி வண்டியை இயக்கி கொண்டு அவர்கள் எல்லா இடங்களிலும் வலம் வந்தார்கள். பாட்டுக்கு ஆடினார்கள்.

      நீக்கு
  8. படங்கள் யாவும் அருமை.  கொண்டாட்டங்களை தெரிவிக்கினறது படங்கள்.  நானே நினைத்தேன், ஏதாவது ஒரு குழந்தை பரிசு வாங்கும்போது ஒரு படம் எடுத்திருக்கலாமே என்று.  அதுபோலவே ஒரு படம் பார்த்ததும் சந்தோஷம்.  மிட்டாய் பானை பிரம்மாண்டம்.  படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் யாவும் அருமை. கொண்டாட்டங்களை தெரிவிக்கினறது படங்கள். நானே நினைத்தேன், ஏதாவது ஒரு குழந்தை பரிசு வாங்கும்போது ஒரு படம் எடுத்திருக்கலாமே என்று. அதுபோலவே ஒரு படம் பார்த்ததும் சந்தோஷம். மிட்டாய் பானை பிரம்மாண்டம். படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன்//

      வீட்டுக்கு வந்து மிட்டாய், விளையாட்டு பொருட்கள் எடுத்து சென்ற படங்கள் சேர்த்து விட்டேன். நேரம் இருந்தால் பாருங்கள்.
      உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஹாலோவின் கொண்டாட்ங்கள் குறித்து நன்றாக சொல்லியதுடன் அழகான படங்களையும் எடுத்து ஹாலோவீன் பதிவை வழக்கப்படி சிறப்பித்து விட்டீர்கள். இது போலவே உங்களின் ஹாலோவீன் தின பழைய பதிவுகளையும் படித்திருக்கிறேன்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஹாலோவீன் தின வாழ்த்துகள்.

    நேற்று அங்கு பெய்த மழையை படங்கள் வீடியோ எடுத்தாக கருத்தில் கூறியிருந்தீர்கள். இன்று அவையும் ஹாலோவீன் பதிவோடு இணைந்து வந்து விட்டது. மழையைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது பூமி செழிப்பதற்காக வேண்டிய அளவு மழை பெய்யட்டும் என மனம் பிரார்த்திக்கிறது.

    நேற்று இரவு இங்கும் மழை பெய்தது. ஆனால், ஒரு அரைமணி நேரந்தான் பெய்தது. இப்போதும் வானம் மேக மூட்டமாக லேசான குளிருடன் உள்ளது.

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பதிவின் ஆரம்பத்திலுள்ள குழந்தை கவின் படம் மிக அழகாக உள்ளது. இப்போது மழையை குடையுடன் ரசித்து ஹாலோவீன் முகமுடி அணிந்து நம்மை மிரட்டும் கவினும் அழகுதான். கவினுக்கு என் அன்பான பாராட்டுக்களை, வாழ்த்துகளைக் கூறுங்கள்.

    தாங்கள், மற்றும் தங்கள் சம்பந்தி, மகன் மருமகள் ஆகியோரின் ஹாலோவீன் உடைகள் நன்றாக உள்ளது. மருமகளின் அழகான அந்த முகத்தை ரசித்தேன். அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    இங்கும் எங்கள் பேரன் ஹாலோவீன் முகமூடி அணிந்து தன் நண்பர்களுடன் அப்பார்ட்மெண்டில் மிரட்டி விட்டு வந்துள்ளான். எனக்கு படங்கள் அனுப்பியிருந்தான் . இங்கும் அந்த கொண்டாட்டங்கள் அங்கு போல அதிக அளவில் இல்லையென்றாலும் மக்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இங்கு அதை பல வருடங்களாகவே நானும் பார்த்து வருகிறேன். உங்கள் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. ஹாலோவின் கொண்டாட்ங்கள் குறித்து நன்றாக சொல்லியதுடன் அழகான படங்களையும் எடுத்து ஹாலோவீன் பதிவை வழக்கப்படி சிறப்பித்து விட்டீர்கள். இது போலவே உங்களின் ஹாலோவீன் தின பழைய பதிவுகளையும் படித்திருக்கிறேன்.//

      நன்றி கமலா .ஆமாம், நீங்கள் பழைய பதிவுகளை படித்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள்.

      உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஹாலோவீன் தின வாழ்த்துகள்.

      //நேற்று அங்கு பெய்த மழையை படங்கள் வீடியோ எடுத்தாக கருத்தில் கூறியிருந்தீர்கள். இன்று அவையும் ஹாலோவீன் பதிவோடு இணைந்து வந்து விட்டது. மழையைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது பூமி செழிப்பதற்காக வேண்டிய அளவு மழை பெய்யட்டும் என மனம் பிரார்த்திக்கிறது//

      நேற்றும் இன்றும் மழை இருந்தது, நேற்று எடுத்த படம், இன்று எடுத்த மழை படமும் வந்து இருக்கிறது. ஹாலோவீன் சமயத்தில் இப்படி மழை பெய்ததே இல்லை என்று சொன்னார்கள் மகன், மருமகள் இருவரும்.

      //நேற்று இரவு இங்கும் மழை பெய்தது. ஆனால், ஒரு அரைமணி நேரந்தான் பெய்தது. இப்போதும் வானம் மேக மூட்டமாக லேசான குளிருடன் உள்ளது.//
      அதற்கென்று வாங்கிய உடைகளை போட்டுக் கொண்டு வீட்டில் இருப்பதா என்று குடையை பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள் ஆலோவீன் அலங்காரம், சாக்கேல்ட் வாங்க. மேலும் படங்கள் சேர்த்து இருக்கிறேன், முடிந்தால் மீண்டும் வந்து பாருங்கள்.

      //படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பதிவின் ஆரம்பத்திலுள்ள குழந்தை கவின் படம் மிக அழகாக உள்ளது. இப்போது மழையை குடையுடன் ரசித்து ஹாலோவீன் முகமுடி அணிந்து நம்மை மிரட்டும் கவினும் அழகுதான். கவினுக்கு என் அன்பான பாராட்டுக்களை, வாழ்த்துகளைக் கூறுங்கள்.//

      இப்போது வெவ்வால் பறப்பதை போல படம் ஒன்று சேர்த்து இருக்கிறேன் முதலில். இன்று மாலை வந்த குழந்தைகளை மிரட்ட கொஞ்சம் நடித்தான்.

      //தாங்கள், மற்றும் தங்கள் சம்பந்தி, மகன் மருமகள் ஆகியோரின் ஹாலோவீன் உடைகள் நன்றாக உள்ளது. மருமகளின் அழகான அந்த முகத்தை ரசித்தேன். அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.//

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      //இங்கும் எங்கள் பேரன் ஹாலோவீன் முகமூடி அணிந்து தன் நண்பர்களுடன் அப்பார்ட்மெண்டில் மிரட்டி விட்டு வந்துள்ளான். எனக்கு படங்கள் அனுப்பியிருந்தான் . இங்கும் அந்த கொண்டாட்டங்கள் அங்கு போல அதிக அளவில் இல்லையென்றாலும் மக்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இங்கு அதை பல வருடங்களாகவே நானும் பார்த்து வருகிறேன். உங்கள் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      பேரனின் படத்தை பதிவில் போடலாம் என்றால் போடுங்கள் நாங்களும் பார்க்கிறோம். இப்போது மதுரையில் எங்கள் குடியிருப்பிலும் இப்போது நடக்கிறது.

      உங்கள் வரவுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.

      நீக்கு