உலக அமைதிக்காக உலக சமுதாய சேவா சங்கத்தில் நாளை அமாவாசை அன்று "உலக நல வேள்வி" என்ற கூட்டுப்பிரார்த்தனை நடக்க போகிறது. வாழ்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை வேதாத்திரி மகரிஷி சொன்ன "வாழ்த்தும் பயனும்" இடம்பெறுகிறது இந்த பதிவில், போரில்லா உலகம் வேண்டும் என்ற பாடலும் இடம்பெறுகிறது.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
.வாழ்க வளமுடன்:
.
"மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தாலன்றி வாழ்த்தவே முடியாது. அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும்போது ஒரு வலுவு ஒரு தெளிவு அந்த அமைதி நிலை அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுருவி நிறைந்து அந்த உயிர்க்கலப்பு ஏற்படக்கூடிய நிலை இவை எல்லாம் அதிகமாகும்.
அந்த நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது. ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம். இரண்டு தடவை நாலு தடவை செய்யச் செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால், அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக்கொண்டிருக்கும், அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்த தொடர் அறுபடாது இருக்கும்.
அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றிவிட முடியும். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும். எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட முடியும். நல்லவர்களாக மாற்றிவிட முடியும்.
தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். 'வாழ்க வளமுடன்' என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.
தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். 'வாழ்க வளமுடன்' என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.
எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதைக் கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கு கூட வேகம் அதிகம், செயல்படும் வேகம் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம். சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும். நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
.
* * * * * * * * * * * * * * * * * *
"வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது"
.
"வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது"
.
"வாழ்த்து வீண் ஆகாது. வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் என்று சொல்லச் சொல்ல
உடல் மனம் நன்றாக இருக்கும்"
.
"வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான
திருமந்திரமாகும்"
.
வாழ்த்து:
வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க
வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞானம்!
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
.
* * * * * * * * * * * * * * * * * *
"வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது"
.
"வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது"
.
"வாழ்த்து வீண் ஆகாது. வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் என்று சொல்லச் சொல்ல
உடல் மனம் நன்றாக இருக்கும்"
.
"வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான
திருமந்திரமாகும்"
.
வாழ்த்து:
வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க
வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞானம்!
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
போர் நிறுத்த நடவடிக்கை நல்லபடியாக நடந்து அமைதியும்
நல்லிணக்கமும் வர வேண்டும். அமைதியை நிலைநிறுத்த வேண்டும்.
உலல நல வேள்வியாக வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! என்று சொல்லிக் கொண்டே இருக்கும் தொடர் பிரார்த்தனை நடக்க போகிறது. 10 மணி முதல் மதியம் 1.30 வரை காரைக்கால் மனவளக்கலை மன்றத்தில். அவர்கள் அனுப்பி வைத்தார்கள் முடிந்தவர்கள் கண்டிப்பாய் கலந்து கொள்ளுங்கள் என்று.
நாளை உலக சமுதாய சேவா சங்கங்களில் நடைபெற இருக்கிறது. முடிந்தவர்கள் அவர் அவர் ஊரில் இருக்கும் மன்றங்களில் இந்த வேள்வியை நடத்தலாம் நடக்கும் போது கலந்து கொள்ளலாம். முடியாதவர்கள் வீட்டில் ஒரு 108 தடவை சொன்னால் போதும்.
ஒவ்வொருவரும் 108 தடவை சொல்ல முடியவில்லை என்றால் தினம் அதிகாலை எழுந்தவுடன் 10 தடவையாவது சொன்னால் போதும். இந்த வையகம் வாழ்ந்தால் நாமும் வாழலாம்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் முக்கிய நோக்கமே தனி மனித அமைதியின் மூலமாக குடும்பம் மற்றும் உலக சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்துதல் தான்.
போர் நிறுத்தம் ஏற்பட்டு நாடுகளிடையே அமைதி நிலவ முழு மனதாக பிரார்த்தனை செய்வோம்.
மகிழப்பூ கவிதைகள் என்ற இந்த தளத்தில் போரில்லா நல் உலகம் வேண்டும் என்ற இந்த பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது கேட்டுப்பாருங்கள். உஷா ராணி என்பவர் எழுதி இருக்கிறார். பாடியவர் யார் என்று போடவில்லை நன்றாக பாடுகிறார்கள்.
எனது எனது என்றிட எங்கும்
முழங்கும் போர் பறை!
எல்லாம் நமது என்பதே
அமைதி காணும் வழிமுறை
நிலையாமை ஒன்றே நிசமே!
பகைமை கொல்லும் விஷமே!
இந்நிலம் இன்று என் வசம்
நாளை இந்நிலம் யார் வசம்
அறிவியல் கற்று என்ன?
பரிணாமம் பெற்று என்ன?
போரிடும் மனித இனமே!
ஏனோ மிருக குணமே!
எண்ணத்தில் அன்பு கனியட்டும்
மனிதம் மனதில் மலரட்டும்.
போர்கள் எல்லாம் மறையட்டும்
அமைதி எங்கும் நிறையட்டும்
பாடல் வரிகள் , இசை , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சிறிய காணொளிதான் கேட்டுப்பாருங்கள்.
கூட்டுதவத்தின் முடிவில் நாங்கள் சொல்வது:-
நம் மனதில் அமைதி நிலவட்டும்
நம்மை சுற்றிலும் அமைதி நிலவட்டும்
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
அமைதி அமைதி அமைதி
அது போல இந்த பாடலில் நிறைவு வரிகள் அமைதி எங்கும் நிறையட்டும். என்ற வரிகள் எனக்கு பிடித்தது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------------------

ஆச்சர்யம். இன்று நானும் மகரிஷி அருளுரையை பகிர்ந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆச்சர்யம். இன்று நானும் மகரிஷி அருளுரையை பகிர்ந்திருக்கிறேன்.//
நானும் படித்தேன்.
//எண்ண ஆராய்ச்சி, விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்".//
அருமையான பகிர்வு.
அந்த நுண்ணிய நிலையை அடைய நானும் முயன்று கொண்டிருக்கிறேன். சமயங்களில் வசப்படுவது போல தோன்றுகிறது. சமயங்களில் கைநழுவி விடுகிறது!
பதிலளிநீக்கு//அந்த நுண்ணிய நிலையை அடைய நானும் முயன்று கொண்டிருக்கிறேன். சமயங்களில் வசப்படுவது போல தோன்றுகிறது. சமயங்களில் கைநழுவி விடுகிறது!//
நீக்குமுயன்று கொண்டே இருப்போம் ஸ்ரீராம்.
பிறர் நலத்தை நாம் மனதார நினைக்கும்போது, வேண்டும்போது எதிர்ப்புணர்ச்சி குறைகிறது. நல்ல மனமும், நட்புணர்வும் கூடுகிறது.
பதிலளிநீக்கு//பிறர் நலத்தை நாம் மனதார நினைக்கும்போது, வேண்டும்போது எதிர்ப்புணர்ச்சி குறைகிறது. நல்ல மனமும், நட்புணர்வும் கூடுகிறது.//
நீக்குஆமாம், "பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே"
மகரிஷி பகைவருக்கும் அருள சொல்வார்
பாரதியார் போல .
இன்னல் புரிவோர் எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் அவர்களும் மனம் திருந்தி நல்வாழ்வு பெறக் கருணையோடு வாழ்த்துவோம் என்று தவத்தில்.
ஐய்ப்ப கோயில் பிரார்த்தனையில் நமக்காக பிரார்த்தனை செய்து மலை ஏறுவதை விட பிறர் நலத்துக்கு வேண்டி போவது நலம் பயக்கும் என்பார்கள்.
அம்பின் வேகத்தை அன்பின் வேகத்துக்கு காட்டுவது அருமை. நீங்களும் எல்லோருக்கும் பேசும்போதும், எழுதும்போதும் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் சொல்வதை கவனித்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு//அம்பின் வேகத்தை அன்பின் வேகத்துக்கு காட்டுவது அருமை. நீங்களும் எல்லோருக்கும் பேசும்போதும், எழுதும்போதும் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் சொல்வதை கவனித்திருக்கிறேன்.//
நீக்குஇதை எங்கள் கும்பகோண மன்றத்தில் நடந்த ஒரு நிகழ்வில் தென்கச்சி சுவாமிநாதன் பேசினார், அவர் கிணற்றில் விழுந்த ஒருவனை காப்பாற்ற கை கொடுக்கும் போதும் வாழ்க வளமுடன் என்று சொல்லி விட்டுதான் உலக சமுதாய சேவை தொண்டர்கள் காப்பாற்றுவார்கள் என்றார்.
அவர் நகைச்சுவையாக சொன்னாலும் அதுதான் உண்மை. பழக்கமாகி விட்டது.
காணொளி பின்னர்தான் கேட்கவேண்டும்.
பதிலளிநீக்கு//காணொளி பின்னர்தான் கேட்கவேண்டும்.//
நீக்குகேட்டு பாருங்கள் நன்றாக இருக்கிறது.
பாட்டு வரிகள் எப்படி இருந்தது சொல்லவில்லையே!
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றிகள் ஸ்ரீராம்.
வாழ்க வளமுடன் - அதே தான் எனது எண்ணமும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்... தத்துவமும் இது தான் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குசிறப்பான பதிவு. நல்லதே நடக்கட்டும்.
//வாழ்க வளமுடன் - அதே தான் எனது எண்ணமும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்... தத்துவமும் இது தான் என்று தோன்றுகிறது.
நீக்குசிறப்பான பதிவு. நல்லதே நடக்கட்டும்.//
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்...
வேறொன்றறியேன் பராபரமே" என்று தாய்மானவ சுவாமிகள் அருளியது பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. மகரிஷி தாய்மானவரையும், வள்ளலாரையும் தன் குருவாக ஏற்று கொண்டவர்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அட! இன்று எபியிலும் ஸ்ரீராம் மகரிஷியின் உரை ஒன்றைப் பகிர்ந்திருக்கிறாரே!!!
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா,வாழ்க வளமுடன்
நீக்கு//அட! இன்று எபியிலும் ஸ்ரீராம் மகரிஷியின் உரை ஒன்றைப் பகிர்ந்திருக்கிறாரே!!!//
ஆமாம் கீதா , படித்தேன். நான் நேற்று போட்டேன்.
இன்று அவர் மனதிலும் வந்து இருக்கிறது வியப்புதான்.
மகரிஷியின் உரை நல்லதொரு விஷயத்தைச் சொல்லும் உரை.
பதிலளிநீக்குஇந்த ஆஃபா மனம் பற்றி தியானம் பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். செய்யவும் முயற்சி !!
கீதா
//மகரிஷியின் உரை நல்லதொரு விஷயத்தைச் சொல்லும் உரை.//
நீக்குஆமாம்.
//இந்த ஆஃபா மனம் பற்றி தியானம் பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். செய்யவும் முயற்சி !!//
செய்வது மகிழ்ச்சி.
நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம். சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும். நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்."//
பதிலளிநீக்குஆமாம். இதுதான் உளவியலில் சொல்லப்படும் ஒன்று. visualization என்றும்....விஜயல்க்ஷ்மி பந்தையன் அவர்களும் சொல்லிவருகிறார் இது பற்றியும் நம் மனதைப் பற்றியும் ஆல்ஃபா தியானம் பற்றியும் நிறைய...கல்கி ஆன்லைனில் கேட்க முடிகிறது
கீதா
//ஆமாம். இதுதான் உளவியலில் சொல்லப்படும் ஒன்று. visualization என்றும்....விஜயல்க்ஷ்மி பந்தையன் அவர்களும் சொல்லிவருகிறார் இது பற்றியும் நம் மனதைப் பற்றியும் ஆல்ஃபா தியானம் பற்றியும் நிறைய...கல்கி ஆன்லைனில் கேட்க முடிகிறது//
நீக்குநானும் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் பேச்சை கேட்பேன்.
அவர் நமக்கு வேண்டியதை மனகண்ணில் நடந்து விட்டதாக பார்க்க வேண்டும் என்பார். அதுவும் நல்ல தியானம் தான்.
வாழ்க வளமுடன்! அதேதான் அக்கா நாம் இதை நினைக்க நினைக்க நம் மனதில் விதைக்க விதைக்க நல்லதே கண்ணில் படும் நல்லதே செய்ய நினைப்போ...நல்ல விஷயம் செய்துவிட்டால் ஆச்சு!
பதிலளிநீக்குபாடல் நன்றாக இருக்கிறது, அக்கா
கீதா
//வாழ்க வளமுடன்! அதேதான் அக்கா நாம் இதை நினைக்க நினைக்க நம் மனதில் விதைக்க விதைக்க நல்லதே கண்ணில் படும் நல்லதே செய்ய நினைப்போ...நல்ல விஷயம் செய்துவிட்டால் ஆச்சு!
நீக்குபாடல் நன்றாக இருக்கிறது, அக்கா//
பாடலை கேட்டது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இன்றைய பதிவு அருமை.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் என்று சொல்வதும் கேட்பதுமே மகிழ்ச்சி
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களை தமிழ் புத்தாண்டு பதிவில் காணவில்லையே!
//இன்றைய பதிவு அருமை.
வாழ்க வளமுடன் என்று சொல்வதும் கேட்பதுமே மகிழ்ச்சி//
நன்றி.
எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைப்பதையே நம் எண்ணமாகக் கொண்டால், நாம் ஆன்மீகத்தில் முன்னேறுவோம்.
பதிலளிநீக்கு//எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைப்பதையே நம் எண்ணமாகக் கொண்டால், நாம் ஆன்மீகத்தில் முன்னேறுவோம்.//
நீக்குஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.
என்ன ஆச்சர்யம்! நேற்று எ.பி.யில் ஸ்ரீராம் வேதாத்திரி மகரிஷியின் கதை ஒன்றைப் பகிர்ந்திருந்ததை படித்ததிலிருந்து நல்ல எண்ணத்தை எப்படி மனதில் நினைப்பது? என்று ஆலோசித்துக் கொண்டே இருந்தேன். உங்கள் நினைவும் வந்தது. நீங்கள் இதைப்பற்றி எழுதலாமே என்று தோன்றியது. இப்போது விடை கிடைத்து விட்டது.. நன்றி. வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//என்ன ஆச்சர்யம்! நேற்று எ.பி.யில் ஸ்ரீராம் வேதாத்திரி மகரிஷியின் கதை ஒன்றைப் பகிர்ந்திருந்ததை படித்ததிலிருந்து நல்ல எண்ணத்தை எப்படி மனதில் நினைப்பது? என்று ஆலோசித்துக் கொண்டே இருந்தேன்//
நான் வியாழன் அன்று பகிர்ந்தேன், ஸ்ரீராம் வெள்ளி அன்று பகிர்ந்து இருக்கிறார். இருவருக்கும் மகரிஷியின் கருத்துக்களை பகிர வாய்ப்பு வந்தது ஆச்சர்யம் தான்.
//உங்கள் நினைவும் வந்தது. நீங்கள் இதைப்பற்றி எழுதலாமே என்று தோன்றியது. இப்போது விடை கிடைத்து விட்டது.. நன்றி. வாழ்க வளமுடன்!//
உங்கள் மனதிலும் என்னை எழுத சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கிறது.
எல்லாம் அருட்பேராற்றலின் கருணை. எண்ணத்துக்கு வலிவு அதிகம் இனி அடிக்கடி மகரிஷியின் கருத்துக்களை பகிர எண்ணம் வந்து விட்டது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி பானு.