. "நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றில் கை வைக்கமுடியும். கரும்பு பயிர் செய்தேன் யாரும் வாங்கவில்லை, வாழை நட்டேன் யாரும் வாங்க வில்லை, மஞ்சள் நட்டேன் யாரும் வாங்க வில்லை கஷ்டத்தில் வயலை ப்ளாட் போட்டு விற்றால் வாங்க நான் நீ என்று ஓடி வருகிறார்கள் வயல் எல்லாம் ப்ளாட் ஆனால் நாளை உணவுக்கு எங்கு போவார்கள் என்ற கேள்வி எழுப்பினாள்." போரைவிட சோறுதானே முக்கியம் என்றாள்.
முகம் கை , கால் எல்லாம் சேறு பூசி கொண்டு மண்வெட்டியுடன் வந்து நன்றாக பேசினாள். சின்ன மலரின் அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் நன்றாக பேசினார்கள். பாட்டி கற்க கசடற திருக்குறளுக்கு விளக்கம் அழகாய் கொடுத்தார்கள் , தாத்தா நன்றாக நகைச்சுவையாக பேசினார்.
வட நாட்டு குழந்தைகள் கண்ணன் வேஷம் போட்டு வந்து நான் கண்ணன் வந்து இருக்கிறேன் என்று சொல்லி புல்லாங்ககுழல் ஊதி காட்டினான்.
முதலில் மைக் வைத்து கொண்டு நிற்பவர் புவனா சந்திரசேகரன் எழுத்தாளர் எங்கள்வீட்டு எதிர் வீடு அவர் தான் பொங்கல் விழாவை தொகுத்து வழங்கினார். கோலபோட்டியில்கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் பரிசு அளித்தார்.
கோல போட்டியில் ஒருவர் போட்ட கோலம்
எல்லோரையும் சீட்டு எடுக்க வைத்து அதில் வருவதை பேச சொன்னார்கள்.
சிலருக்கு பாட்டு, சிலருக்கு நடனம், சிலருக்கு ஆண் போல பேசுவது, திருக்குறள் சொல்ல வேண்டும், தாலாட்டு பாட வேண்டும், ரமைஸ் சொல்ல வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்து இருந்தார்கள்.
எனக்கு எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்றார்கள்.நான் முன்பு முதியோர்கள் இளையவர்களை வழி நடத்தி சென்றார்கள். இப்போது இளையவர்கள் முதியவரகளை வழி நடத்தி செல்கிறார்கள் . நான் இளையவர்கள் வழி நடத்துவதில் இப்போது இருக்கிறேன் என்றேன்.
மற்றும் வளாகத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னை நன்கு பார்த்து கொள்கிறார்கள். வளாக பணியாளர்கள் எல்லாம் எப்போது என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்து தருகிறார்கள் இன்முகத்தோடு, அவர்களுக்கும், மற்றும் குடியிருப்பு நிர்வாக பொறுப்பில் இருப்பவரக்ள் எல்லாம் விழாவை சிறப்பாக நடத்தியதற்கும் பாராட்டி எல்லோருக்கும் நன்றி சொல்லி பொங்கல் வாழ்த்து சொன்னேன்.
என்னை கைபிடித்து அழைத்து சென்ற பெண் பேர் கேட்டேன் கோமதி என்றார்
வளாகத்திற்கு புதிதாக வந்து இருக்கிறார்.
பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் நாள் அல்லவா!
பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் திருவிழா முதல் நாள் சூரியனுக்கு
அடுத்த நாள் விவசாயிகளுக்கு , விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கும் உழவு கருவிகளுக்கும் நன்றி சொல்வோம் உழவர் திருநாளில் .
வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல நெறிகளை போதிக்க உலகப்பொதுமறையை கொடுத்த திருவள்ளுவருக்கு நன்றி சொல்லுவோம்.
நம் நலம் விரும்பும் உடன்பிறந்த சகோதர்களுக்கு நன்றி சொல்லி அவர்களுக்காக கனுப்பிடி வைத்து உற்றார், உறவுகள், மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் நாள்.
https://www.youtube.com/watch?v=rIML4bF0EoQ
உறியடி நடந்தது பெண்களுக்கு மூன்று பெண்கள் வெற்றி பெற்றார்கள்.
என் தம்பி பேரன், பேத்தி படிக்கும்பள்ளியில் அறிவியல் பொங்கல் என்று சிறப்பாக நடந்து இருக்கிறது. என் தம்பி மகள் அனுப்பிய படங்கள்.
அந்தக்கால விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் .
2022 ஆம் வருடம் பேரன் எங்கள் வீட்டு வாசலில் பொங்கல் கோலம் வரைந்து வாழ்த்து எழுதுகிறான், ஆங்கிலத்திலும்,தமிழிலும்.
இந்த வருடம் பேரன் போட்ட பொங்கல் கோலம்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
பொங்குக பொங்கல்!
//பொங்குக பொங்குக பூரித்து உள்ளமெலாம்
எங்கும் நிறைந்த நம் ஏகாந்த நிலையறிந்து //
-வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------------------------








.jpg)
.jpg)



சூரியன் படமும் காணொளியும் அருமை
பதிலளிநீக்குதினமுமே 7 மணிக்குள் சூரியனைப் பார்த்தால் கண்களுக்கு நல்லதாம். அல்லது குளிர்கால ஊர்களில் சூரியன் எழும் போது பார்த்தால் நல்லது. கண்களின் Retinal Ganglion Cells க்கு நல்லது.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குசூரியன் படமும் காணொளியும் அருமை
//தினமுமே 7 மணிக்குள் சூரியனைப் பார்த்தால் கண்களுக்கு நல்லதாம். அல்லது குளிர்கால ஊர்களில் சூரியன் எழும் போது பார்த்தால் நல்லது. கண்களின் Retinal Ganglion Cells க்கு நல்லது.//
ஆமாம், சூரியனை பார்த்தல் நல்லது. வட நாட்டில் ஒருவர் சூரிய குளியல் மட்டுமே செய்கிறார். அவர் நீண்ட நாட்கள் வாழ்வதாக செய்தி.
நீங்கள் சொல்வது போல சூரிய ஒளி கண்களுக்கு , உடலுக்கு நல்லது தான்.
கூடியிருந்து என்பதன் அர்த்தமே அருமையான அர்த்தம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை இவற்றைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். குழுவாகச் செய்தல் நல்ல காரியங்கள் செய்தல்.
பதிலளிநீக்குகீதா
//கூடியிருந்து என்பதன் அர்த்தமே அருமையான அர்த்தம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை இவற்றைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். குழுவாகச் செய்தல் நல்ல காரியங்கள் செய்தல்.//
நீக்குஆமாம்,இன்று பாட்டல் உண்டு வாழ்வுதான்.
கூட்டுப்பிரார்த்தனை நல்லது. ஒன்று கூடுதல் நல்லதுதான்.
உங்கள் காலனி படங்கள் எல்லாம் சூப்பர்
பதிலளிநீக்குபுவனாசந்திரசேகரன் அவங்க எபி யிலும் அவங்க கதை வந்திருக்கு இல்லையா...வெங்கட்ஜி ஆதிக்கும் பழக்கம் என்று நினைவு.
எல்லோரும் பானையில் அரிசி போட்டது எல்லாம் அழகான நிகழ்வு
ஆஹா கும்மி அடித்தல் எல்லாமே சூப்பர்
கீதா
எல்லா மதத்தவர்களும் கலந்து கொண்டதும் சிறப்பு!
பதிலளிநீக்குகுழந்தைகள் மனதைக் கவர்கின்றனர்
சின்னப் பையன் மழலைக்குரல் ஆஹா!!!
வட நாட்டு குழந்தைகள் கண்ணன் வேஷம் போட்டு வந்து நான் கண்ணன் வந்து இருக்கிறேன் என்று சொல்லி புல்லாங்ககுழல் ஊதி காட்டினான்.//
சிறப்பான விஷயம்
உங்கள் பேச்சும் அருமை கோமதிக்கா பாசிட்டிவ்!!!
//என் தம்பி பேரன், பேத்தி படிக்கும்பள்ளியில் அறிவியல் பொங்கல் என்று சிறப்பாக நடந்து இருக்கிறது. என் தம்பி மகள் அனுப்பிய படங்கள்.//
வித்தியாசம்!
பள்ளி நிகழ்வுகளும் ஆஹா போட வைத்தன
பின்னர் வருகிறேன் அக்கா
கீதா
//எல்லா மதத்தவர்களும் கலந்து கொண்டதும் சிறப்பு!//
நீக்குஆமாம்.
//குழந்தைகள் மனதைக் கவர்கின்றனர்
சின்னப் பையன் மழலைக்குரல் ஆஹா!!!//
ஆமாம்.
//வட நாட்டு குழந்தைகள் கண்ணன் வேஷம் போட்டு வந்து நான் கண்ணன் வந்து இருக்கிறேன் என்று சொல்லி புல்லாங்ககுழல் ஊதி காட்டினான்.
சிறப்பான விஷயம்//
ஆமாம், நன்றாக பேசினான்
//உங்கள் பேச்சும் அருமை கோமதிக்கா பாசிட்டிவ்!!!//
நன்றி கீதா
/
//வித்தியாசம்!
பள்ளி நிகழ்வுகளும் ஆஹா போட வைத்தன
பின்னர் வருகிறேன் அக்கா//
பள்ளி நிகழ்வுகள் பிடித்து இருந்ததுமகிழ்ச்சி.
மெதுவாக வாங்க இன்று பொங்கல் விழா சிறப்பாக நடந்து இருக்கும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தி மு க வா? உதயசூரியன் காணொளி? சும்மா ஒரு கலாய்ப்பு தான்.
பதிலளிநீக்குவளாகத்து பொங்கல் விழா பற்றிய விவரணம், காணொளிகள் சிறப்பு. ஒற்றுமை வேண்டும் என்பதே நம் விருப்பம்.
வளாக வீடுகள் அரசு குடியிருப்பு போல் உள்ளனவே? அப்படித்தானா?
Jayakumar
பள்ளிக்கூடத்தில் பாரம்பரிய விளையாட்டுகள் ரொம்ப ரசித்து வாசித்தேன், அக்கா.
பதிலளிநீக்குபேரன் கோலம் வரைந்து வாழ்த்து எழுதுவது எல்லாம் பாட்டியாகிய உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இல்லையா? பொக்கிஷமான நினைவுகள்.
பொங்கல் பதிவுகள் படங்கள் காணொளி எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா....
கீதா
//பள்ளிக்கூடத்தில் பாரம்பரிய விளையாட்டுகள் ரொம்ப ரசித்து வாசித்தேன், அக்கா.//
நீக்குநன்றி கீதா
//பேரன் கோலம் வரைந்து வாழ்த்து எழுதுவது எல்லாம் பாட்டியாகிய உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இல்லையா? பொக்கிஷமான நினைவுகள்//
பொக்கிஷமான நினைவும் இந்த ஆண்டு வரைந்த படமும் அனுப்பி இருந்தேன் பார்த்தீர்களா?.
//பொங்கல் பதிவுகள் படங்கள் காணொளி எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா..//
ரசித்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
வணக்கம்ஜெய்க்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//தி மு க வா? உதயசூரியன் காணொளி? சும்மா ஒரு கலாய்ப்பு தான்.//
நான் நிறைய சூரிய காணொளிகள் போட்டு இருக்கிறேனே!
//வளாகத்து பொங்கல் விழா பற்றிய விவரணம், காணொளிகள் சிறப்பு. ஒற்றுமை வேண்டும் என்பதே நம் விருப்பம்.//
எல்லோரும் விரும்புவது ஒற்றுமையே!
//வளாக வீடுகள் அரசு குடியிருப்பு போல் உள்ளனவே? அப்படித்தானா?//
அரசு குடியிருப்பு இல்லை. தனியார் கட்டி விற்றதுதான்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
சூரியன் உதிக்கும் காணொலியில் இசை / பாட்டு எதிர்பார்த்து ஏமாந்தேன்! போட்டோ சூப்பர்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//சூரியன் உதிக்கும் காணொலியில் இசை / பாட்டு எதிர்பார்த்து ஏமாந்தேன்! போட்டோ சூப்பர்.//
காலை நேர பறவைகளின் ஒலி, காற்றின் ஓசை சில் வண்டுகளின் சத்தம் கேட்கவில்லையா? ஸ்ரீராம். முழுவதும் கேளுங்கள். பின்னனி இசை போட்டு விட்டால் இயற்கையின் ஒலி கிடைக்காமல் போய் விடும்.
கூடி இருந்துவில் ம் விட்டுப் போயிருக்கிறது! இன்று பொங்கல் சாப்பிட்டு இருக்காவிடில், நாவில் சுவைநீர் கூடி இருக்கும் படம் பார்த்ததும்!
பதிலளிநீக்கு//கூடி இருந்துவில் ம் விட்டுப் போயிருக்கிறது! இன்று பொங்கல் சாப்பிட்டு இருக்காவிடில், நாவில் சுவைநீர் கூடி இருக்கும் படம் பார்த்ததும்!//
நீக்கும் வந்து விட்டது ஸ்ரீராம்.
பொங்கல் திகட்டி விட்டதா?
எல்லோரும் பொங்கல் வைக்கக் கூடி நிற்கும் படத்தில் முதலில் என்னுடன் பணிபுரிந்த மாலதி சிஸ்டர் போல இருக்கிறார். கரும்புக்கு நடுவில் நிற்பவர் அபப்டியே எனக்குத் தெரிந்த பானு மாமி போல இருக்கிறார்.
பதிலளிநீக்கு//எல்லோரும் பொங்கல் வைக்கக் கூடி நிற்கும் படத்தில் முதலில் என்னுடன் பணிபுரிந்த மாலதி சிஸ்டர் போல இருக்கிறார். கரும்புக்கு நடுவில் நிற்பவர் அபப்டியே எனக்குத் தெரிந்த பானு மாமி போல இருக்கிறார்.//
நீக்குகூடி இருக்கும் படத்தில் தெரிந்தவர்கள் கண் முன்னே வந்து விட்டார்களா?
ஒருவரை போல 7 பேர் இருப்பார்கள் என்பது உண்மைதான் போல
எல்லோர் கையாலும் அரிசி போட்டுப் பொங்கல் அருமை. ஆனால் வீட்டின் கீழேயே நடக்கும் உள் விழாவுக்கு கூட ஹேண்ட்பேக்குடன் வரவேண்டுமா!!
பதிலளிநீக்கு//எல்லோர் கையாலும் அரிசி போட்டுப் பொங்கல் அருமை. ஆனால் வீட்டின் கீழேயே நடக்கும் உள் விழாவுக்கு கூட ஹேண்ட்பேக்குடன் வரவேண்டுமா!!//
நீக்குஇப்போது கைபேசி , தண்ணீர் இல்லாமல் போவது இல்லையே ! 140 வீட்டில் அவர் அந்த கோடியில் இருக்கலாம் விழா காலை ஆரம்பித்து மதியம் வரை நீடித்தது, அந்த நேரம் வீட்டில் இருந்து அழைப்பு வந்தால் போக வேன்டுமே அதனால் கைபை அவசியம் ஆகிறது ஸ்ரீராம்.
உற்சாகக்கும்மி.. சுவாரஸ்யம்தான். ஓ.. எழுத்தாளர் புவனா சந்திரசேகரைப் பார்த்தால்தான் எனக்குத் தெரிந்த பானு மாமி போல இருந்திருக்கிறது போல...
பதிலளிநீக்கு//உற்சாகக்கும்மி.. சுவாரஸ்யம்தான். ஓ.. எழுத்தாளர் புவனா சந்திரசேகரைப் பார்த்தால்தான் எனக்குத் தெரிந்த பானு மாமி போல இருந்திருக்கிறது போல...//
நீக்குபுவனாவை பார்த்தவுடன் உங்களுக்கு பானுமாமி போல இருந்ததா?
உற்சாக கும்மி பார்க்க மகிழ்வாய் இருந்தது.
விளையாட்டுகளும், போட்டிகளுமாய் விழா நடந்தது உங்களுக்கெல்லாம் நிஜமாகவே உற்சாகமாய் பொழுது போயிருக்கும். நல்ல முன்னெடுப்பு.
பதிலளிநீக்கு//விளையாட்டுகளும், போட்டிகளுமாய் விழா நடந்தது உங்களுக்கெல்லாம் நிஜமாகவே உற்சாகமாய் பொழுது போயிருக்கும். நல்ல முன்னெடுப்பு.//
நீக்குஅனைவருக்கும் பிடித்து இருந்தது. அனைத்து குடியிருப்பு மக்களும் கலந்து கொள்ளவில்லை என்று விழாவை ஏற்பாடு செய்த நிர்வாக குழுவிற்கு வருத்தம். ஒருவருடன் ஒருவர் கலந்து பேச இந்த மாதிரி விழாக்களில் கலந்து கொள்ள வேன்டும் அக்கம், பக்கம் இருப்பவரக்ளை தெரிந்து கொள்ள வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.
எனக்கும் முடியவில்லைதான் இருந்தாலும் என்னை உற்சாகப்படுத்தி கொள்ள போய் வந்தேன். வீடு வரை நட்புகள் கொண்டு விட்டு சென்றார்கள்.
இன்று காலை குழந்தைகள் பார்க்க பொங்கல் செய்து வழிபட்டு விட்டேன் அதன் பின் கால் வலி அதிகம் ஓய்வு எடுத்து பின் அடுத்த வேலைகளை பார்த்தேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பொங்கல் கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பு.
பதிலளிநீக்குதில்லியில் இருந்த போது பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்தியிருக்கிறோம் என்றாலும் அங்கே பொங்கல் வைத்ததில்லை. மூன்று வருடங்கள் தொடர்ந்து நடத்தினோம். அதன் பிறகு சந்தர்ப்ப சூழல்கள் சரிவர அமையவில்லை.
உங்கள் குடியிருப்பு கொண்டாட்டங்கள் அனைத்தும் நன்று.
தொடரட்டும் விழாக்களும் கொண்டாட்டங்களும்.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
நீக்கு//பொங்கல் கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பு.
தில்லியில் இருந்த போது பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்தியிருக்கிறோம் என்றாலும் அங்கே பொங்கல் வைத்ததில்லை. மூன்று வருடங்கள் தொடர்ந்து நடத்தினோம். அதன் பிறகு சந்தர்ப்ப சூழல்கள் சரிவர அமையவில்லை.//
உங்கள் பதிவில் படித்தேன் நீங்கள் சொன்னதை.
//உங்கள் குடியிருப்பு கொண்டாட்டங்கள் அனைத்தும் நன்று.
தொடரட்டும் விழாக்களும் கொண்டாட்டங்களும்.//
உற்சாகமாக எடுத்து நடத்தியவர் வேறு வீட்டுக்கு போகிறார். அது வேறு இடத்தில் இருக்கிறது. அடுத்த வருடம் இப்படி நடக்குமா என்று தெரியவில்லை.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அருமையான பொங்கல் பதிவு.
பதிலளிநீக்குஎல்லாமே கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//அருமையான பொங்கல் பதிவு.
எல்லாமே கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன//
நன்றி நெல்லைத்தமிழன்
சின்னப் பசங்களுக்கு நம் பாரம்பர்ய விளையாட்டுகளான கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்(னு சொல்வோம்), பரமபதம், பல்லாங்குழி எல்லாமே ரொம்பவே மனதை நெகிழ்த்தியது.
பதிலளிநீக்குஇதனைச் செய்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பர்யத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.
//சின்னப் பசங்களுக்கு நம் பாரம்பர்ய விளையாட்டுகளான கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்(னு சொல்வோம்),,,
நீக்குஆமாம், நாம் அப்படித்தான் சொல்வோம்.
அவர்கள் பள்ளியில் வீளையாட்டை தொகுத்தவர்கள் தாம்பூலம் என்று தான் போட்டு இருக்கிறார்கள்.
//பரமபதம், பல்லாங்குழி எல்லாமே ரொம்பவே மனதை நெகிழ்த்தியது.
இதனைச் செய்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பர்யத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.//
ஆமாம், நம் பாரம்பர்யத்தை அறிமுகப்படுத்துவது நல்லதுதான்.
பரமபதம், பல்லாங்குழி எல்லாமே ரொம்பவே மனதை நெகிழ்த்தியது.
இதனைச் செய்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பர்யத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.
வளாகத்தின் பொங்கல் விழாச் செய்திகள் மிக நன்று.
பதிலளிநீக்குஎல்லோரும் கூடியிருந்து கொண்டாடியிருக்கிறீர்கள். மிகவும் ரசிக்கும்படி இருந்தது
//வளாகத்தின் பொங்கல் விழாச் செய்திகள் மிக நன்று.
நீக்குஎல்லோரும் கூடியிருந்து கொண்டாடியிருக்கிறீர்கள். மிகவும் ரசிக்கும்படி இருந்தது//
ஆமாம், நன்றாக இருந்தது அந்த இரண்டு , மூன்று மணி நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் கலந்து கூடி பேசி மகிழ்ந்தோம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.