புதன், 24 டிசம்பர், 2025

அமைதியான இரவு பாலன் பிறந்த இரவு




நள்ளிரவில் மாட்டுதொழுவமதில் பிறந்த பாலகனை கொண்டாடும்  பண்டிகை

பேரன் கிறிஸ்தும்ஸூக்கு தயார் செய்த அற்புத நகரம்

உலகம் முழுவதும் உள்ள கிறித்துவ மக்கள்  அனைவருக்கும்  கிறிஸ்துமஸ் பண்டிகை நல் வாழ்த்துகள்.


ஏழை எளிய மக்களுக்கு,  குழந்தைகளுக்கு மற்றும் உற்றார் உறவுகள், நட்புகளுக்கு   பரிசு பொருட்களை வழங்கி  மகிழ்ச்சி படுத்தும்  நாளாக, சாண்டாகிளாஸ்  வருகையை எதிர்பார்க்கும் நாளாக  கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
  
 ஏசு பாலனை  வரவேற்க வீடுகளில் வண்ணவிளக்கு ,மற்றும் நட்சத்திரம் 
தொங்கவிடுவது  ,  குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்காரம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை.  மதசார்பற்ற பண்டிகையாக இப்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் மகன், மகள்  வீட்டில் அலங்கரிக்கப்பட்ட  கிறிஸ்துமஸ்மரம் மற்றும் பாடல்கள் இடம் பெறுகிறது. 



அமைதியான இரவு" (Silent Night) என்பது உலகப் புகழ்பெற்ற ஒரு கிறிஸ்துமஸ் கீதம், இது 1818-ல் ஆஸ்திரியாவில் ஜோசப் மோஹர் (Joseph Mohr) எழுதிய கவிதைக்கு ஃபிரான்ஸ் க்ரூபர் (Franz Xaver Gruber) இசையமைத்தார்; தேவாலய ஆர்கன் பழுதடைந்ததால், guitar வாசித்து முதல்முறை பாடப்பட்டது, இதுவே உலகின் மிகவும் அன்பான கிறிஸ்துமஸ் பாடல்களில் ஒன்றாகும், இதன் தமிழ் வடிவமும் உள்ளது. 


கீதத்தின் பின்னணி:
  • படைப்பு: 1818-ல், ஆஸ்திரியாவின் ஓபர்ன்டார்ஃப் (Oberndorf) நகரத்தில் உள்ள புனித நிக்கோலஸ் தேவாலயத்தில் (St. Nicholas Church) பணியாற்றிக்கொண்டிருந்த ஜோசப் மோஹர், தேவாலயத்தின் ஆர்கன் பழுதடைந்ததால், அவரது கவிதைக்கு ஃபிரான்ஸ் க்ரூபர் இசையமைத்தார்.
  • முதல் இசை நிகழ்ச்சி: அந்த கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, மோஹர் guitar வாசிக்க, க்ரூபர் பாஸ் (bass) குரல் கொடுக்க, இருவரும் சேர்ந்து இந்தப் பாடலைப் பாடினர். மோஹர் பாடல் வரிகளை எழுத, க்ரூபர் இசையமைத்தார், மேலும் இருவரும் சேர்ந்து பாடினர், இதில் மோஹர் guitar வாசித்தார்.
  • பரவல்: இந்த எளிய பாடல், மெதுவாக ஐரோப்பா முழுவதும் பரவி, பின்னர் அமெரிக்காவிற்கும் சென்று, உலகெங்கிலும் உள்ள அன்பான கிறிஸ்துமஸ் கீதமாக மாறியது. 
நன்றி - கூகுள்


ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பிடித்த கிறிஸ்துவ பாடல்களை பகிர்வேன். 
இந்த முறை  அமைதியான இரவு என்ற உலகபுகழ் பெற்ற  ஆங்கில பாடலின்
 தமிழ்  மொழிபெயர்ப்பு பாடல்  பகிர்ந்து இருக்கிறேன் கேட்டுப்பாருங்கள்.

சிறிய காணொளி விரைவாக போய் விடும் பாருங்கள்


மகன் வீட்டில் கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்யும் போது என்னையும், மகளையும் 
அழைத்து இருந்தான் மகன் நேரலையில் பார்த்து நானும், மகளும்
கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்காரம் செய்ய பொம்மைகள் எடுத்து கொடுத்தோம்.






பேரன் அமைத்த அற்புத  நகரம்அதில் உள்ள பொம்மைகள் கீழே வருகிறது





சின்ன காணொளிதான் பாருங்கள் பேரன் அமைத்த   அற்புத  நகரம்
 எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.


மாதா கோயில், கோயில் முன் கிறிஸ்துமஸ் மரம், பாதிரியார்

பண்ணை வீட்டுக்கு கிறிஸ்துமஸ் மரம்  வாங்கி போகிறார்கள் காரில்.






சாண்டா கிளாஸ் வருகை




நட்சத்திர அலங்காரம், மரம் முழுவதும் பனித்துளிகள்

தாத்தா பரிசு பொருட்களுடன் வருகிறார்.










 வருடா வருடம் கிறிஸ்துமஸ் தாத்தா ஒவ்வொரு  இடத்திற்கும் வருவார், அவரை எல்லோரும் போய் பார்ப்பார்கள்.  இந்த ஆண்டு அவர் தன் மனைவியுடன் வந்து இருக்கிறார், பேரன் அவர்களுடன் படம் எடுத்து கொண்டான்.



தாத்தா வந்த வண்டி அதில் அமர்ந்து இருக்கிறான் பேரன். பெரிய கிறிஸ்துமஸ் மரம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மரம்




உறவினர் வீட்டுக்கு போய் விட்டு வரும் வழியில் பார்த்த  ஒளி விளக்கு  அலங்காரங்கள்  மிகவும் அழகாய் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் அலங்கரித்து இருப்பது பார்க்க பார்க்க அருமையாக இருக்கிறது. சிறந்த அலங்காரங்களுக்கு   பரிசுகள்  உண்டாம்.

மகன் கார் ஓட்டிக் கொண்டே மெதுவாக  போக மருமகள் படம் எடுத்து   நான் பார்க்க அனுப்பி வைத்த காணொளி, நீங்களும் பார்க்க  பகிர்ந்து விட்டேன் பார்த்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள் சிறிய காணொளிதான்.


மகள் அனுப்பிய  படம் - பெரிய   கிறிஸ்துமஸ் மரம்.

 
அவள் வீட்டில் வைத்த    கிறிஸ்துமஸ் அலங்காரம் பென்குயின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறது


                                          மகள் வீட்டு கிறிஸ்துமஸ் மரம்.




"நட்டநடு ராத்திரியிலே மொட்டு போல பூத்தாரே !" பாடல் எளிமையாக  இருக்கிறது. அந்தோணி சாமி பாடியது கேட்டுப்பாருங்களேன்.

அன்பான நட்புகளுக்கும் நம் வலைத்தள நட்புகள் ஏஞ்சல், பிரியசகி, மற்றும் அதிராவுக்கு   கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள். 

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ்  நல் வாழ்த்துகள் .

அன்பு ,அமைதி, ஒற்றுமை எங்கும் நிலவட்டும்.


  

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 

----------------------------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. மாலை வணக்கம்.

    படங்கள், காணொளிகள் என அனைத்தும் சிறப்பு. கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //மாலை வணக்கம்.

      படங்கள், காணொளிகள் என அனைத்தும் சிறப்பு. கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்

      நீக்கு
  2. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    நேற்று கீழ்வீட்டிலிருந்து தம்பதியராக வந்த இளம் ஜோடி இரண்டு பை ஸ்வீட், கேக் கொடுத்து அழைத்துச் சென்றார்கள்.  பொதுவாக அவர்கள் யாருடனும் பேசுவதில்லை.  ஆனால் நேற்று ஒவ்வொரு வீட்டையும் கண்டு கொண்டார்கள்.  நாங்களும் வாழ்த்து சொன்னோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.//

      நன்றி

      //நேற்று கீழ்வீட்டிலிருந்து தம்பதியராக வந்த இளம் ஜோடி இரண்டு பை ஸ்வீட், கேக் கொடுத்து அழைத்துச் சென்றார்கள். பொதுவாக அவர்கள் யாருடனும் பேசுவதில்லை. ஆனால் நேற்று ஒவ்வொரு வீட்டையும் கண்டு கொண்டார்கள். நாங்களும் வாழ்த்து சொன்னோம்.//

      ஆமாம், அவர்கள் மகிழ்ச்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
      நீங்கள் அவர்களுக்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி. அவர்கள் விட்டில் குடில் பார்க்க அழைத்து இருப்பார்கள், போய் பார்த்தீர்களா?

      நீக்கு
  3. கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகளை வேகமான முன்னேற்றத்தில் (!!  ஹிஹிஹி..  அதுதான் Fast Forward _) காண்பித்திருப்பது ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகளை வேகமான முன்னேற்றத்தில் (!! ஹிஹிஹி.. அதுதான் Fast Forward _) காண்பித்திருப்பது ரசித்தேன்.//

      உங்கள் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  4. கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மகன் வீட்டில் அழகாக அமைக்கிறார்கள்.  எதையும் வீட்டுக் கொடுப்பதில்லை இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மகன் வீட்டில் அழகாக அமைக்கிறார்கள். எதையும் வீட்டுக் கொடுப்பதில்லை இல்லையா?//

      மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் , புத்துண்ர்ச்சி கொடுக்கும் .
      மருமகள், மகன், பேரன் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது .

      நீக்கு
  5. கவினின் அற்புத நகரம் காணொளி பார்த்து ரசித்தேன்.  அதில் ஒரு பாடல் இணைத்திருக்கலாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவினின் அற்புத நகரம் காணொளி பார்த்து ரசித்தேன். அதில் ஒரு பாடல் இணைத்திருக்கலாமோ...//

      ஹேப்பி கிறிஸ்துமஸ் பாடலை இணைத்து இருக்கிறான் , எனக்கு பாடல் இணைப்புக்கு முன் அனுப்பியது.

      நீக்கு
  6. கூகுள் மேப் போட்டுக்கொண்டு செல்லும் காணொளியில் நகரத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அலங்காரம் கண்டு ரசித்தேன்.  எவ்வளவு விதமான அலங்காரங்கள்..  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கூகுள் மேப் போட்டுக்கொண்டு செல்லும் காணொளியில் நகரத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அலங்காரம் கண்டு ரசித்தேன். எவ்வளவு விதமான அலங்காரங்கள்.. //

      ஆமாம், அலங்காரங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது இல்லையா? அதுதான் நீங்கள் எல்லோரும் ரசிப்பீர்கள் என்று பகிர்ந்தேன்.

      நீக்கு
  7. சகோதரர் அந்தோணிசாமி பாடல் அட்டகாசம்.  நாதஸ்வர ஓசையுடன் களைகட்டுகிறது.  எழுந்து ஆடும் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பின்னூட்டம் டைப் செய்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சகோதரர் அந்தோணிசாமி பாடல் அட்டகாசம். நாதஸ்வர ஓசையுடன் களைகட்டுகிறது. எழுந்து ஆடும் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பின்னூட்டம் டைப் செய்கிறேன்!//

      ஆமாம், நீங்கள் ரப்பீர்கள் என்று தெரியும். பின்னூட்டம் டைப் செய்து முடித்தவுடன் எழுந்து ஆடினீர்களா? . உற்சாகம் தரும் பாடல் இல்லையா?

      அனைத்தையும் ரசித்து பார்த்து, கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.
      அனைத்தையும் ரசித்து

      நீக்கு
  8. கோமதிக்கா தாமதமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

    பேரன் செய்திருப்பது மனதைக் கவர்கிறது. ரொம்ப அழகாகச் செய்திருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா தாமதமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!//

      நன்றி.


      //பேரன் செய்திருப்பது மனதைக் கவர்கிறது. ரொம்ப அழகாகச் செய்திருக்கிறார்.//

      மகிழ்ச்சி கீதா

      நீக்கு
  9. கிறிஸ்துமஸ் கீதத்தின் பின்னணித் தகவல்கள் சிறப்பு.

    அனைதியான இரவு அப்பாடல் கேட்டிருக்கிறேன், அக்கா. படித்தது கிறித்தவப் பள்ளி, கல்லூரிகளில் இதை ஆங்கிலத்தில் பாடிக் கேட்டிருக்கிறேன், அக்கா.

    தமிழிலும் இப்ப கேட்டுக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிறிஸ்துமஸ் கீதத்தின் பின்னணித் தகவல்கள் சிறப்பு.

      அனைதியான இரவு அப்பாடல் கேட்டிருக்கிறேன், அக்கா. படித்தது கிறித்தவப் பள்ளி, கல்லூரிகளில் இதை ஆங்கிலத்தில் பாடிக் கேட்டிருக்கிறேன், அக்கா.

      தமிழிலும் இப்ப கேட்டுக் கொண்டேன்.//

      நீங்கள் இந்த பாடலை ஆங்கிலத்தில் கேட்டு இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  10. விரைவான காணொளியைக் கண்டு ரசித்தேன் கோமதிக்கா...ரொம்ப அழகான அலங்காரம்.

    நீங்களும் எடுத்துக் கொடுத்தது சிறப்பு அதுவும் நேரலையில்!!

    அலங்காரப் படங்கள் எல்லாமே ரொம்ப ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விரைவான காணொளியைக் கண்டு ரசித்தேன் கோமதிக்கா...ரொம்ப அழகான அலங்காரம்.

      நீங்களும் எடுத்துக் கொடுத்தது சிறப்பு அதுவும் நேரலையில்!!

      அலங்காரப் படங்கள் எல்லாமே ரொம்ப ரசித்தேன்.//

      ஆமாம், தனித்திருந்தாலும் இப்படி அவர்களுடன் தினம் உரையாடி கொண்டும், நேரலையில் விழாக்களில் பங்கு கொண்டும் இருப்பதால்தான் அவர்களுடன் இருப்பது போலவே உணர்கிறேன்.

      நீக்கு
  11. பேரம் அமைத்த அற்புத நகரம் காணொளி பிரமாதம். பொறுமையாக மிக அழகாகச் செய்திருக்கிறார். ரொம்ப ரசித்துப் பார்த்தேன்னு சொல்லிடுங்கக்கா கவினிடம்.

    நல்ல திறமைகள் எல்லோரிடமுமே...மொத்தக் குடுமப்த்துக்குமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரம் அமைத்த அற்புத நகரம் காணொளி பிரமாதம். பொறுமையாக மிக அழகாகச் செய்திருக்கிறார். ரொம்ப ரசித்துப் பார்த்தேன்னு சொல்லிடுங்கக்கா கவினிடம்.

      நல்ல திறமைகள் எல்லோரிடமுமே...மொத்தக் குடுமப்த்துக்குமே!//

      பேரனிடம் சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  12. கிறிஸ்துமஸிற்கும் கொலு பொம்மைகள் போன்று அங்கு நிறைய விற்பாங்க...சிலர் க்ராஃப்ட் வொர்க்கும் பண்ணுவாங்க...சாண்டாக்ளாஸ் வருகை படம் க்ளோஸப் வாவ் போட வைத்தது.

    பொம்மைகள் எல்லாமே அழகு.

    கிறிஸ்துமஸ் தாத்தா மனைவியுடன் கவின் படம் சூப்பர். பேரன் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வண்டியில், அப்புறம் ஒவ்வொரு வீட்டின் முன்னிலும் அலங்காரம் எல்லாமே ரசிக்க வைக்கின்றன.

    மகள் அனுப்பிய படமும் பிரமிக்க வைக்கிறது.

    மகள் வீட்டு கிறிஸ்துமஸ் அலங்காரம் பெங்க்வின் எட்டிப்ப் பார்ப்பது போன்ற அலங்காரம் அழகு!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிறிஸ்துமஸிற்கும் கொலு பொம்மைகள் போன்று அங்கு நிறைய விற்பாங்க...சிலர் க்ராஃப்ட் வொர்க்கும் பண்ணுவாங்க...சாண்டாக்ளாஸ் வருகை படம் க்ளோஸப் வாவ் போட வைத்தது.

      பொம்மைகள் எல்லாமே அழகு.//

      பார்த்துப்பார்த்து அலங்கரிக்க வாங்குவார்கள். கடைகளில் கொட்டி கிடக்கும் அனைத்தையும் வாங்கும் ஆசையும் வரும்.

      //கிறிஸ்துமஸ் தாத்தா மனைவியுடன் கவின் படம் சூப்பர். பேரன் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வண்டியில், அப்புறம் ஒவ்வொரு வீட்டின் முன்னிலும் அலங்காரம் எல்லாமே ரசிக்க வைக்கின்றன.

      மகள் அனுப்பிய படமும் பிரமிக்க வைக்கிறது.

      மகள் வீட்டு கிறிஸ்துமஸ் அலங்காரம் பெங்க்வின் எட்டிப்ப் பார்ப்பது போன்ற அலங்காரம் அழகு!//

      ஒவ்வொன்றையும் ரசித்து கருத்துக்கள் அளித்தமைக்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. அந்தோணி தாஸ் அவர்களின் நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடல் நல்லாருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தோணி தாஸ் அவர்களின் நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடல் நல்லாருக்கு...//

      ஆமாம் கீதா.
      ரசித்து கேட்டதற்கு கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. கிறிஸ்துமஸ் படங்கள் சிறப்பு. மகளும் அலங்காரங்கள் செய்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      /கிறிஸ்துமஸ் படங்கள் சிறப்பு. மகளும் அலங்காரங்கள் செய்தாள்.//

      ஆமாம், உங்கள் பெண்ணும் வெளிநாட்டில் தானே இருக்கிறார்கள்
      வெளி நாட்டில் எல்லோரும் கிறிஸ்துமஸ் மரம் வைப்பார்கள், வண்ணவிளக்குகள் வைப்பார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கிறிஸ்துமஸ் கொண்டால் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன.

    /இந்த எளிய பாடல், மெதுவாக ஐரோப்பா முழுவதும் பரவி, பின்னர் அமெரிக்காவிற்கும் சென்று, உலகெங்கிலும் உள்ள அன்பான கிறிஸ்துமஸ் கீதமாக மாறியது. /

    கூகுளின் செய்திகளின் மூலம் பண்டிகையின் பரவல்களைப்பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. கிறிஸ்துமஸ் கொண்டால் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன.//

      நன்றி கமலா, உங்களை காணவில்லை என்றதும் பிள்ளைகள் விடுமுறைக்கு வந்து இருப்பார்கள் அவர்களுடன் வெளியில் போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

      //கூகுளின் செய்திகளின் மூலம் பண்டிகையின் பரவல்களைப்பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ,பாடல்களுக்கு தேடிய போது கிடைத்த செய்தி . நானும் புதிதாக தெரிந்து கொண்டதுதான்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. உங்களுக்கும் என் அன்பான ஆனால் தாமதமான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

    தங்கள் பேரன் அமைத்த அற்புத நகரம் மிக நன்றாக உள்ளது. காணொளியும் பார்த்து மகிழ்ந்தேன். அழகான பொம்மைகள் கொண்டு அந்த அற்புத நகரத்தை சிறப்பான முறையில் வடிவமைத்த பேரன் கவினுக்கு என் வாழ்த்துகள்.

    மகன் மெதுவாக கார் ஓட்டும் போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அலங்காரமான செய்திருந்த காட்சிகளை (அழகான ஒளி உமிழும் படங்களை) படம் எடுத்த தங்கள் மருமகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றாக ஒரு சிறு அசைவுகள் வராதபடிக்கு எடுத்துள்ளார். சூப்பராக இருக்கிறது.பேரன் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவும், அங்கு செய்திருந்த அலங்காரங்கள் எல்லாமே ரசனை மிக்கதாய் உள்ளது.

    மகள் வீட்டின் கிறிஸ்துமஸ் மரங்கள், மகன் வீட்டில் செய்த கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் என அனைத்தையும் பார்த்து ரசித்தேன்.

    காணொளியில் திரு. அந்தோணிசாமி அவர்கள் பாடிய நாட்டுப்புற பாடலும் மிக நன்றாக உள்ளது. கேட்டு ரசித்தேன். எல்லா பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வணக்கம் சகோதரி

      பதிவு அருமை. உங்களுக்கும் என் அன்பான ஆனால் தாமதமான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்//


      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      //தங்கள் பேரன் அமைத்த அற்புத நகரம் மிக நன்றாக உள்ளது. காணொளியும் பார்த்து மகிழ்ந்தேன். அழகான பொம்மைகள் கொண்டு அந்த அற்புத நகரத்தை சிறப்பான முறையில் வடிவமைத்த பேரன் கவினுக்கு என் வாழ்த்துகள்.//

      கவினுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

      //மகன் மெதுவாக கார் ஓட்டும் போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அலங்காரமான செய்திருந்த காட்சிகளை (அழகான ஒளி உமிழும் படங்களை) படம் எடுத்த தங்கள் மருமகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றாக ஒரு சிறு அசைவுகள் வராதபடிக்கு எடுத்துள்ளார். சூப்பராக இருக்கிறது.பேரன் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவும், அங்கு செய்திருந்த அலங்காரங்கள் எல்லாமே ரசனை மிக்கதாய் உள்ளது.//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து மருமகளை பாராட்டியதற்கு நன்றி.

      //மகள் வீட்டின் கிறிஸ்துமஸ் மரங்கள், மகன் வீட்டில் செய்த கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் என அனைத்தையும் பார்த்து ரசித்தேன்.

      காணொளியில் திரு. அந்தோணிசாமி அவர்கள் பாடிய நாட்டுப்புற பாடலும் மிக நன்றாக உள்ளது. கேட்டு ரசித்தேன். எல்லா பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.//

      காணொளி பார்த்து படங்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.



      நீக்கு
  17. கவின் அமைத்திருக்கும் கிருஸ்துமஸ் மரமும், நகரமும் அழகாக கண்ணைக் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //கவின் அமைத்திருக்கும் கிருஸ்துமஸ் மரமும், நகரமும் அழகாக கண்ணைக் கவர்கிறது.//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. பேரனின் கிறிஸ்மஸ்ட் அலங்காரங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

    நீங்களும் அலங்கரிக்க நேரலையில் பங்கு கொண்டது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    இங்கும் எமது வீட்டில் பேரன் அலங்கரித்தார்.

    ஊர்சென்றோம் அங்கும் வீட்டில் கிறிஸ்மஸ்ட் அலங்காரம் செய்தார்.
    குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ்ட் என்றாலே கொண்டாட்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //பேரனின் கிறிஸ்மஸ்ட் அலங்காரங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

      நீங்களும் அலங்கரிக்க நேரலையில் பங்கு கொண்டது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.//

      ஆமாம், பேரனின் கிறிஸ்மஸ் அலங்காரம் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னதை கவினிடம் கூறுகிறேன்.

      //இங்கும் எமது வீட்டில் பேரன் அலங்கரித்தார்.//

      நீங்களும் பேரனின் அலங்கரிப்பை பதிவு போடுங்கள் மாதேவி.
      பல ஆண்டு ஆகி விட்ட்டதே உங்கள் பதிவு வந்து.

      //ஊர்சென்றோம் அங்கும் வீட்டில் கிறிஸ்மஸ்ட் அலங்காரம் செய்தார்.
      குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ்ட் என்றாலே கொண்டாட்டம்தான்.//

      பண்டிகை எல்லாம் அவர்களே அலங்காரம் செய்வது அவர்களுக்கு மனநிறைவை தரும். கிறிஸ்மஸ் என்றாலே கொண்டாட்டம் தான் .

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

      /

      நீக்கு