சனி, 10 மே, 2025

பழைய நகரத்தில் சிங்கர் தையல் இயந்திரம் சாப்பாட்டு மேஜை ஆனது


தாய்லாந்தில் ஒரு பழைய காலத்து உணவு விடுதிக்கு போனோம், விடுதி பேர்  "காப்பி பழைய நகரம்" . 
அங்கு பார்த்த காட்சிகள் இந்த பதிவில் வருகிறது.



உள்ளே நுழைந்தவுடன் பிள்ளையார்  நம்மை வரவேற்பார்


நம்மை வியக்க வைக்கும் சாப்பாட்டு மேஜை உபயோகம் இல்லாத தையல்  இயந்திரத்தை இப்படி அழகிய சாப்பாட்டு மேஜையாக்கி இருக்கிறார்கள்.

மரதுண்டுகளில் செய்த நாற்காலி


புதிய  மாடல் நாற்காலியும் பழைமையான  மேஜையும்



மரங்களை வெட்டாமல் அதை வைத்து கொண்டே கூரை போட்டு இருக்கிறார்கள் முன்பக்கம். வெளிபக்கமும் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு சாப்பிடலாம். வெளி பக்கமும் நிறைய கலைப்பொருட்கள் வைத்து இருக்கிறார்கள்.


மரங்களுக்கு மத்தியில் புத்தர் முகம்.  இந்த இடத்திற்கு மருமகளும், மகனும் மட்டும் போய் வந்தார்கள் இந்த மரத்தை பார்க்க வெகு தூரம் போக நடந்து போக வேண்டும்.


பழைய காலத்து கண்ணாடி அலமாரி அதில் அழகிய பீங்கான்ப்பொருட்கள்

இங்கும் அழகான குட்டி பிள்ளையார் இருக்கிறார்


இங்கும் ஒரு பிள்ளையார்

வித விதமான பழைய காலத்து  ஷோபாக்கள்

அழகு சாதனங்கள் வைத்து இருக்கும் அழகிய அலங்கார கண்ணாடி மேஜை கோர்ஸா தையலில் சிறிய விரிப்பு மேஜை மேல் இருந்தது. நானும்  தெரிகிறேன் கண்ணாடியில்

அழகிய புத்தர்கள் இருக்கிறார்கள்


அழகிய யானை  பட்டுத்துணியில்  பின்னியது கண்ணாடி பிரேம் போட்டு சுவற்றில் மாட்டி இருக்கிறார்கள்.



அலமாரி மேல் அந்தக்கால பிரம்பு கூடை, உலோக வண்ணத்துப்பூச்சி, அழகிய உலோக பூத்தொட்டி
கண்ணாடி அலமாரிக்குள் பழைய காலத்து பீங்கான் பாத்திரங்கள்

வாத்தியங்கள் வாசிக்கும் தாய்லாந்து குழந்தைகள்






ஜாடியிலிருந்து வெளி வரும் அழகிய நாகதேவன்







தொங்கும் காதணியும் தலை கொண்டையும், முடி அலங்காரம் அதில் அணிந்து இருக்கும்  வட்ட நகையும் மற்றும்    கை வங்கியும், கழுத்தணியும்  கவர்ந்தது.

நிறைய வேலைப்பாடு செய்து இருக்கும் கண்ணாடி அலமாரி  அதன் அருகில் இருக்கும் அழகிய பெண்மணி

தலையில்  கூடை மாதிரி வைத்து இருக்கும் பிரம்மா


வியாபாரம் செய்யும் பெண்மணிகள், ஆண்கள்

படகில் போய் வியாபாரம் செய்பவர்கள், மரத்தடியில் வியாபாரம், வீட்டுக்கு அருகில் வியாபாரம் என்று  அழகாய் வரைந்த   ஓவியங்கள் பிரேம் செய்யப்பட்டு  சுவரை அலங்கரித்து இருந்தது.

எலுமிச்சை ஜூஸ் உப்பும் சர்க்கரையும்  போட்டு இருந்தது

நான் சாப்பிட்ட உணவு

இனிப்பு சுவையோடு தாய் நூடுல்ஸ் மற்றும் பச்சை மிளகு,  பேபி கார்ன்,  காரட் , பீட்ரூட் சில  கீரைகள் 


உணவு விடுதியில் சாப்பிட்ட பின்  போன இடம்   அடுத்து வரும்.

கோடைக்கு இதமாய் இளநீர் சாப்பிடுங்கள்

  இனிய அன்னையர் தின வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


-------------------------------------------------------------------------------------

44 கருத்துகள்:

  1. பழைய பொருட்களை மேசைகளாக, மரத்துண்டுகளை நாற்காலிகளாக மாற்றியிருக்கும் விதம் அருமை. விடுதியில் ரசனையுடன் சேகரித்து பார்வைக்கு வைத்துள்ள கலைப்பொருட்கள் அனைத்தும் அருமை. நீங்கள் ரசித்தவற்றை எங்களுக்கும் ரசிக்கத் தந்துள்ளீர்கள். /வாத்தியங்கள் வாசிக்கும் தாய்லாந்து குழந்தைகள்/... அழகு. அடுத்த சென்ற இடத்தின் முன்னோட்டமாக வந்துள்ள படம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      அன்னையர் தின வாழ்த்துகள்

      //பழைய பொருட்களை மேசைகளாக, மரத்துண்டுகளை நாற்காலிகளாக மாற்றியிருக்கும் விதம் அருமை. விடுதியில் ரசனையுடன் சேகரித்து பார்வைக்கு வைத்துள்ள கலைப்பொருட்கள் அனைத்தும் அருமை.//

      அந்த கடையை நடத்தும் பெண்களிடம் யாருக்கு இந்த ரசனையான யோசனை என்ற போது என் அப்பாவுக்குதான் இந்த யோசனை ரசனை என்று சொன்னார்கள்.

      //நீங்கள் ரசித்தவற்றை எங்களுக்கும் ரசிக்கத் தந்துள்ளீர்கள். /வாத்தியங்கள் வாசிக்கும் தாய்லாந்து குழந்தைகள்/... அழகு. அடுத்த சென்ற இடத்தின் முன்னோட்டமாக வந்துள்ள படம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பதிவுக்குக் காத்திருக்கிறோம்.//

      ஆமாம் ராமலக்ஷ்மி, நான் ரசித்ததை பகிர்ந்தால் நீங்களும் ரப்பீர்கள் என்று தான் இந்த பதிவு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. காஃபி என்றால் ஹிந்தியில் போதுமான என்று கூட சொல்லலாம். போதுமான அளவு பழமையான ஆங்காரம் என்று சொல்லலாம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //காஃபி என்றால் ஹிந்தியில் போதுமான என்று கூட சொல்லலாம். போதுமான அளவு பழமையான ஆங்காரம் என்று சொல்லலாம்!!!//

      காஃபி என்றால் ஹிந்தியில் போதுமானதா !
      போதுமான அளவு பழமையான அலங்காரம் என்று சொல்லலாமா?
      அலங்காரம் தட்டச்சும் போது ஆங்காரம் ஆனதோ ஸ்ரீராம்?

      நீக்கு
  3. அதன் உபயோகமில்லாத பொருட்களை வேறு உபயோகத்துக்கு மாற்றுவது சிறப்பு. ஒரு மேஜையின் கீழ் கசகசவென்று இரும்பு சிக்கல்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதன் உபயோகமில்லாத பொருட்களை வேறு உபயோகத்துக்கு மாற்றுவது சிறப்பு. //

      ஆமாம்.


      //ஒரு மேஜையின் கீழ் கசகசவென்று இரும்பு சிக்கல்கள்!//

      பக்கவாட்டில் எடுத்த படம் என்பதால் இருபுறமும் உள்ள சக்கரம் தெரிகிறது .

      நீக்கு
  4. ஆங்காங்கே பிள்ளையார் குட்டிகள்! ஒரு குட்டியை தெடிக் கண்டுபிடித்தேன்! மரங்களை வெட்டாமல் அதற்கு கீழேயே கூரை அமைத்து பார்க்கும் இடங்களை உருவாக்கி இருப்பது நிறைவைத் தருகிறது. நம்மூரில் அப்படி செய்ய மாட்டார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆங்காங்கே பிள்ளையார் குட்டிகள்! ஒரு குட்டியை தெடிக் கண்டுபிடித்தேன்!//

      குட்டி பிள்ளையாரை தேடி பார்த்து விட்டீர்களா நல்லது.

      //மரங்களை வெட்டாமல் அதற்கு கீழேயே கூரை அமைத்து பார்க்கும் இடங்களை உருவாக்கி இருப்பது நிறைவைத் தருகிறது. நம்மூரில் அப்படி செய்ய மாட்டார்கள்!//

      நம் ஊரிலும் சில இடங்களில் இருக்கிறது ஸ்ரீராம். உணவு விடுதியில் இல்லாமல் இருக்கலாம். ரயில்வே காலனியில் (மதுரையில் ) உள்ள கோயிலில் , மரத்தை வெட்டாமல் கட்டிடம் அமைத்து இருப்பதை ,இன்னும் இரண்டு மூன்று கோயில்களில் அப்படி கட்டி இருப்பதை நான் பதிவு போட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கண்ணாடியில் நீங்கள் தெரிவதைப் பார்த்தேன். எத்தனை கலைப்பொருட்கள் வைத்திருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கண்ணாடியில் நீங்கள் தெரிவதைப் பார்த்தேன். எத்தனை கலைப்பொருட்கள் வைத்திருக்கிறார்கள்!//

      கலைக்கூடம் போல அழகாய் கலைப்பொருடகள் சேமிப்பு இருக்கிறது.

      நீக்கு
  6. எல்லாவற்றிலும் கலைநயம் தெரிகிறது. உங்கள் உணவு சிம்பிள். அடுத்ததாக செல்லப்போகும் இடம் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லாவற்றிலும் கலைநயம் தெரிகிறது. உங்கள் உணவு சிம்பிள். அடுத்ததாக செல்லப்போகும் இடம் கவர்கிறது.//

      என் உணவு சிம்பிள் ஆனால் சத்துள்ளது.
      அந்த ஊர் முழுவதும் பழைமையான புத்தர் கோயில்கள் தான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. சிங்கர் தையல் மெஷின் பழைய நினைவைக் கொண்டுவந்துவிட்டது. தூரப்போடாமல் மேசையாக உபயோகப்படுத்துகிறார்களே என்று பாராட்டத் தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //சிங்கர் தையல் மெஷின் பழைய நினைவைக் கொண்டுவந்துவிட்டது. தூரப்போடாமல் மேசையாக உபயோகப்படுத்துகிறார்களே என்று பாராட்டத் தோன்றியது//

      ஆமாம், பாராட்டினேன் நான். பாராட்டியது அவர்களுக்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  8. முதல் படம், வைஃபை பாஸ்வேர்ட் என்று நினைக்கிறேன்.

    படங்கள் எல்லாமே மிக அழகு. கலைப்பொருட்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. படமெடுத்துப் பகிர்ந்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதல் படம், வைஃபை பாஸ்வேர்ட் என்று நினைக்கிறேன்.//

      ஆமாம் .

      //படங்கள் எல்லாமே மிக அழகு. கலைப்பொருட்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன.//

      ஆமாம், பல ஆண்டுகளாய் சேகரித்த பொருட்கள் என நினைக்கிறேன்.

      //படமெடுத்துப் பகிர்ந்ததற்கு நன்றி//

      ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. பிரம்மாவின் தலையில் கிரீடமா இல்லை அவரது முடியை அப்படிக் கட்டியிருப்பதாக சிலை வடித்திருக்கிறார்களா?

    நீங்கள் சாப்பிட்ட உணவு அழகாக இருக்கிறது. ருசி பற்றித் தெரியவில்லை. எனக்கு சாலட் மற்றும் வேறுபட்ட உணவு பிடிக்காது. இந்த மாதிரி சமயங்களில் ப்ரெட் மற்றும் பழங்களை வைத்துச் சமாளித்துக்கொள்வேன். என் வீட்டில் எல்லோரும் புது உணவுகளைச் சாப்பிட்டுப்பார்ப்பார்கள். என்னைப் போல, சாப்பிடாமலேயே, நல்லா இருக்காது என்று இருக்கமாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிரம்மாவின் தலையில் கிரீடமா இல்லை அவரது முடியை அப்படிக் கட்டியிருப்பதாக சிலை வடித்திருக்கிறார்களா?//

      பிரம்மாவின் தலையில் கிரீடம் இருக்கிறது, கிரீடத்திற்கு நடுவில் மூங்கில் பிரம்பு கூடை அமைப்பில் இருக்கிறது.

      //நீங்கள் சாப்பிட்ட உணவு அழகாக இருக்கிறது. ருசி பற்றித் தெரியவில்லை. எனக்கு சாலட் மற்றும் வேறுபட்ட உணவு பிடிக்காது.//

      எனக்கும் சாலட் சாப்பிட முடியாது. காரம் இல்லாமல் இருந்தது இந்த உணவு காய்கள் அரைவேக்காடாய் இருந்தாலும் என்னால் சாப்பிட முடியாது. சாதம் மட்டுமே சாப்பிட்டேன். இலை, தளைகளை ஓரம் கட்டி விட்டேன்.

      //இந்த மாதிரி சமயங்களில் ப்ரெட் மற்றும் பழங்களை வைத்துச் சமாளித்துக்கொள்வேன். என் வீட்டில் எல்லோரும் புது உணவுகளைச் சாப்பிட்டுப்பார்ப்பார்கள். என்னைப் போல, சாப்பிடாமலேயே, நல்லா இருக்காது என்று இருக்கமாட்டார்கள்//

      எனக்கு எது வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளும் என்று போகும் உணவு விடுதியில் பார்த்து ஆர்டர் செய்வார்கள் மகனும், மருமகளும்.
      சில உனவுகளை உங்களை போல சாப்பிட்டுப்பார்க்காமல் வேண்டாம் என மறுப்பேன் சாப்பிட்டு பாருங்கள் நன்றாக இருக்கும் என சொல்வார்கள். காரம் குறைவாய் போட்டு தர சொல்வார்கள்.

      நீக்கு
  10. மிகப் பழைமையான புத்தர் கோயிலைப் பற்றிய பதிவு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மிகப் பழைமையான புத்தர் கோயிலைப் பற்றிய பதிவு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்//

      உணவுக்கு பின் தான் பழைய புத்தர் கோயில் போனோம் அதனால் பின்னால் வரும் புத்தர் கோயில். விரைவில் பதிவிடுகிறேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் பார்க்க மிக அழகாக இருக்குது கோமதி அக்கா, ஒரு குட்டி மியூசியம் பார்த்த பீலிங்ஸ்.

    தையல் மெசின் மேசை நல்லாயிருக்கு.

    எலிமேல் பிள்ளையார் இருப்பது அழகு.

    உங்கட சாப்பாடு பார்க்க சூப்பராக இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அன்னபூரணி அதிரா, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் பார்க்க மிக அழகாக இருக்குது கோமதி அக்கா, ஒரு குட்டி மியூசியம் பார்த்த பீலிங்ஸ்.//

      ஆமாம், குட்டி மியூசியம் தான் அதிரா.

      //தையல் மெசின் மேசை நல்லாயிருக்கு.

      எலிமேல் பிள்ளையார் இருப்பது அழகு.

      உங்கட சாப்பாடு பார்க்க சூப்பராக இருக்குது.//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. காஃபி ஓல்ட் சிட்டி....அந்த மேசையில் வைத்திருக்கும் வரிகள் பாஸ்வேர்ட் - தாங்க்யு என்பது கவர்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //காஃபி ஓல்ட் சிட்டி....அந்த மேசையில் வைத்திருக்கும் வரிகள் பாஸ்வேர்ட் - தாங்க்யு என்பது கவர்கிறது!//

      ஆமாம், பாஸ்வேர்ட் வரும் அனைவரையும் கவரும்.

      நீக்கு
  13. மூஷிக வாஹனன் அழகா இருக்கிறார்! இப்படிப் பழம் பொருட்களை வைத்து அலங்கரிப்பது பல நாடுகளிலும் செய்யறாங்க என்று தோன்றுகிறது.

    இங்கு சில வருடங்களுக்கு முன்னமே கிழக்குக் கடற்கரைச் சாலையில் தஞ்சாவூர் உணவகம் என்று நினைக்கிறேன் அது முற்றத்தோடு கூடிய ஒரு வீட்டில் தான் உணவகம் ...அங்கும் இப்படிப் பல பழைய பொருட்களை வைத்திருப்பாங்க...சின்ன ஜாடிகள், கற்சட்டிகள் பித்தளைப் பாத்திரங்கள் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மூஷிக வாஹனன் அழகா இருக்கிறார்! இப்படிப் பழம் பொருட்களை வைத்து அலங்கரிப்பது பல நாடுகளிலும் செய்யறாங்க என்று தோன்றுகிறது.//

      ஆமாம் கீதா பழம்பொருடகளை காட்சி படுத்துவது இளைய தலைமுறைக்கு காட்ட அவர்கள் எடுக்கும் முயற்சி.

      //இங்கு சில வருடங்களுக்கு முன்னமே கிழக்குக் கடற்கரைச் சாலையில் தஞ்சாவூர் உணவகம் என்று நினைக்கிறேன் அது முற்றத்தோடு கூடிய ஒரு வீட்டில் தான் உணவகம் ...அங்கும் இப்படிப் பல பழைய பொருட்களை வைத்திருப்பாங்க...சின்ன ஜாடிகள், கற்சட்டிகள் பித்தளைப் பாத்திரங்கள் என்று.//

      மாயவரத்திலிருந்து கும்பகோணம் போகும் பாதையில் ஒரு உணவு விடுதியில் பழைய சாமான்கள் கூஜா, தூக்கு, விளக்குகள் எல்லாம் அழகாய் வைத்து இருந்தார்கள்.

      TOMBSTON மகன் கூட்டி போன இடத்தில் இப்படி பழைய பொருட்கள் உள்ள வீட்டில் தங்கினோம் அந்த வீட்டைப்பற்றி பதிவு போட்டேன் உங்களுக்கு நினைவு இருக்கும்.
      நம் நாட்டிலும் அப்படி உள்ள வீடுகள் இருக்கிறது. குடும்பதோடு தங்கி பக்கத்தில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வரலாம்.



      நீக்கு
  14. தையல் இயந்திரம் சாப்பாட்டு மேசையானது நல்ல ஐடியா. சூப்பரா செஞ்சிருக்காங்க...மாற்றி யோசிக்கும் திறன் படைத்தவர்கள்.

    நான் பி ஏ படித்த போது எங்கள் கல்லூரியில், wealth from waste அப்படினு போட்டி வைப்பாங்க. குறிப்பா எங்க துறையான பொருளாதாரத் துறையில். அப்படி எனக்குப் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. எங்க வீட்டில் இருக்கும் சில பொருட்களை இப்படி நான் உருப்படியா செய்ய நினைத்து எடுத்தும் வைப்பதுண்டு. ஆனா அதைச் செய்ய சில சமயம் சில நுட்பங்கள் தெரிந்தவரின் உதவி தேவைப்படும். வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்காததால் பல ஐடியாக்கள் என் மூளைப் பரணில் கிடக்கின்றன!!!!!!! சின்ன சின்ன விஷயங்களைச் செய்வதுண்டு...நான் சேர்த்து வைத்தப் பொருட்கள் எல்லாம் வீட்டில் அடைசல் என்று தூக்கிப் போட்டாச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தையல் இயந்திரம் சாப்பாட்டு மேசையானது நல்ல ஐடியா. சூப்பரா செஞ்சிருக்காங்க...மாற்றி யோசிக்கும் திறன் படைத்தவர்கள்.//

      ஆமாம் மாற்றி யோசித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது ஒரு கலைதான்.

      //நான் பி ஏ படித்த போது எங்கள் கல்லூரியில், wealth from waste அப்படினு போட்டி வைப்பாங்க. குறிப்பா எங்க துறையான பொருளாதாரத் துறையில். அப்படி எனக்குப் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.//

      நானும் பி.ஏ பொருளாதாரம் தான் எடுத்தேன். முடிக்கவில்லை.


      //எங்க வீட்டில் இருக்கும் சில பொருட்களை இப்படி நான் உருப்படியா செய்ய நினைத்து எடுத்தும் வைப்பதுண்டு. ஆனா அதைச் செய்ய சில சமயம் சில நுட்பங்கள் தெரிந்தவரின் உதவி தேவைப்படும். வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்காததால் பல ஐடியாக்கள் என் மூளைப் பரணில் கிடக்கின்றன!!!!!!! சின்ன சின்ன விஷயங்களைச் செய்வதுண்டு...நான் சேர்த்து வைத்தப் பொருட்கள் எல்லாம் வீட்டில் அடைசல் என்று தூக்கிப் போட்டாச்சு.//

      வீட்டினர் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லை என்றால் நாம் மட்டும் நினைத்த மாற்றத்தை கொண்டு வர முடியாது.

      நீக்கு
  15. சாப்பாட்டு மேசை ரொம்பக் கவர்ச்சியாக வியக்கும் படி அழகா இருக்கு மரத் துண்டுகளில் செய்த நாற்காலியும்

    மரங்களை வெட்டாமல் இப்படிக் கூரை போடுவது நல்ல விஷயம்தான்.

    இங்கும் பார்க்கிறேன் அக்கா. அது போல நடைபாதையில் இருக்கும் மரங்களைச் சுற்றி திண்ணை போன்று அமைத்திருக்காங்க. ஆனா எனக்குத் தோன்றியது என்னனா, என்னதான் மரங்களைச் சுற்றி கொஞ்சம் மண் இருந்தாலும், தண்ணீர் மரத்திற்கு இறங்க அது எப்படிப் போதும் இயற்கையாக நிறைய இடம் இருப்பதுதானே நல்லது என்றும் தோன்றியது. ஒரு சில கிராமங்களில் மரங்களைச் சுற்றி கல் பெஞ்சுகள் போலப் போட்டிருப்பாங்க ஆனா அது மரத்தின் வேர்களின் வெளிப்பகுதியில் அதுவும் கல் பெஞ்சுகளின் அடியில் இடைவெளி இருக்கும் தாங்கிப் பிடிக்கும் இருபக்கம் தவிர.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாப்பாட்டு மேசை ரொம்பக் கவர்ச்சியாக வியக்கும் படி அழகா இருக்கு மரத் துண்டுகளில் செய்த நாற்காலியும்//

      ஆமாம்.

      //மரங்களை வெட்டாமல் இப்படிக் கூரை போடுவது நல்ல விஷயம்தான்.

      இங்கும் பார்க்கிறேன் அக்கா. அது போல நடைபாதையில் இருக்கும் மரங்களைச் சுற்றி திண்ணை போன்று அமைத்திருக்காங்க. ஆனா எனக்குத் தோன்றியது என்னனா, என்னதான் மரங்களைச் சுற்றி கொஞ்சம் மண் இருந்தாலும், தண்ணீர் மரத்திற்கு இறங்க அது எப்படிப் போதும் இயற்கையாக நிறைய இடம் இருப்பதுதானே நல்லது என்றும் தோன்றியது. ஒரு சில கிராமங்களில் மரங்களைச் சுற்றி கல் பெஞ்சுகள் போலப் போட்டிருப்பாங்க ஆனா அது மரத்தின் வேர்களின் வெளிப்பகுதியில் அதுவும் கல் பெஞ்சுகளின் அடியில் இடைவெளி இருக்கும் தாங்கிப் பிடிக்கும் இருபக்கம் தவிர.//

      நம் கிராமங்களில் மரத்தை சுற்றி மேடை அமைத்து இருப்பார்கள், அதில் அமர்ந்து அந்த ஊர் நாட்டாமை தீர்ப்பு சொல்வார். சினிமாக்களில் பார்த்தது.

      அடிமரத்தை ஆசனம் போல பயன்படுத்துவதும் உண்டுதான்.

      நீக்கு
  16. பழையகாலத்து கண்ணாடி அலமாரி, பீங்கான் பொருட்கள் எல்லாம் அழகா இருக்கு. இதைப் பார்த்ததும் நீங்க முன்ன அமெரிக்காவில் ஒரு பழைய நகரம், போர்க்காட்சிகள் எல்லாம் காட்டுவாங்க, கௌபாய், அங்கு ஒரு வீட்டில் இப்படிப் பழைய பொருட்கள் படங்கள் போட்டிருந்த நினைவு. இடம் பெயர்தான் டக்குனு வர மாட்டேங்குது யோசித்துக் கொண்டிருக்கிறேன். நினைவு வந்ததும் சொல்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழையகாலத்து கண்ணாடி அலமாரி, பீங்கான் பொருட்கள் எல்லாம் அழகா இருக்கு. இதைப் பார்த்ததும் நீங்க முன்ன அமெரிக்காவில் ஒரு பழைய நகரம், போர்க்காட்சிகள் எல்லாம் காட்டுவாங்க, கௌபாய், அங்கு ஒரு வீட்டில் இப்படிப் பழைய பொருட்கள் படங்கள் போட்டிருந்த நினைவு. இடம் பெயர்தான் டக்குனு வர மாட்டேங்குது யோசித்துக் கொண்டிருக்கிறேன். நினைவு வந்ததும் சொல்கிறேன்.//

      ஆமாம், நல்ல நினைவாற்றல் கீதா.கெளபாய்கள் வசித்த நகரம் தான்.

      TOMBSTON என்ர பழைய நகரம் தான்.

      நீக்கு
  17. பழங்காலத்துப் பொருட்கள் அத்தனையும் மிக அழகு. என்பதோடு அந்தத் தாய்லாந்து குழந்தைகள் வாத்தியம் வாசிப்பது வெகு அழகு ரசித்துப் பார்த்தேன்.

    நிறைய பிள்ளையார்கள்!

    நாகதேவன் ஜாடி! வித்தியாசம்.

    தொங்கும் காதணியும் தலை கொண்டையும், முடி அலங்காரமு அதில் அணிந்து இருக்கும் வட்ட நகையும் மற்றும் கை வங்கியும், கழுத்தணியும் கவர்ந்தது.//

    ஆமாம் கவர்ந்திருக்கின்றது

    தலையில் கூடை போல வைத்திருக்கும் பிரம்மா - இதுக்குள்ளதான் என் படைப்பின் ரகசியம் இருக்குன்னு சொல்றாரோ!!!!! வித்தியாசமான வடிவம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழங்காலத்துப் பொருட்கள் அத்தனையும் மிக அழகு. என்பதோடு அந்தத் தாய்லாந்து குழந்தைகள் வாத்தியம் வாசிப்பது வெகு அழகு ரசித்துப் பார்த்தேன்.//

      ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //நிறைய பிள்ளையார்கள்!

      நாகதேவன் ஜாடி! வித்தியாசம்.

      தொங்கும் காதணியும் தலை கொண்டையும், முடி அலங்காரமு அதில் அணிந்து இருக்கும் வட்ட நகையும் மற்றும் கை வங்கியும், கழுத்தணியும் கவர்ந்தது.//

      ஆமாம் கவர்ந்திருக்கின்றது//

      உங்களையும் கவர்ந்து விட்டதா மகிழ்ச்சி.

      //தலையில் கூடை போல வைத்திருக்கும் பிரம்மா - இதுக்குள்ளதான் என் படைப்பின் ரகசியம் இருக்குன்னு சொல்றாரோ!!!!! வித்தியாசமான வடிவம்//

      நம்மை படைக்க மண் பிசைந்து கூடையில் வைத்து கொண்டு வருகிறார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  18. அக்கா நீங்க சாப்பிட்ட உணவு பார்க்க நல்லா இருக்கே காய் சாதம், கூடவே லெட்யூஸ் சாலாட் என்று நினைக்கிறேன்.

    சாப்பிட்ட பின் போன இடம் அழகா இருக்கு. ரொம்ப பழைய இடம் போல இருக்கிறதே. கொஞ்சம் சிதைந்திருப்பதும் தெரிகிறது....

    இந்த இடம் அடுத்த பதிவை எதிர்பார்க்க வைத்துள்ளது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா நீங்க சாப்பிட்ட உணவு பார்க்க நல்லா இருக்கே காய் சாதம், கூடவே லெட்யூஸ் சாலாட் என்று நினைக்கிறேன்.//

      காரமே இல்லாத உணவு. சாலட் என்பதால் பல் நன்றாக இருப்பவர்களுக்கு நல்லது.

      //சாப்பிட்ட பின் போன இடம் அழகா இருக்கு. ரொம்ப பழைய இடம் போல இருக்கிறதே. கொஞ்சம் சிதைந்திருப்பதும் தெரிகிறது....//

      ஆமாம், மிக பழைய இடம் சிதைந்திருக்கிறது.
      வேலை நடக்கிறது.

      //இந்த இடம் அடுத்த பதிவை எதிர்பார்க்க வைத்துள்ளது.//

      குடிய விரைவில் போட பார்க்கிறேன், கால் வலி இருப்பதால் நீண்ட நேரம் காலை தொங்க விட்டுக் கொண்டு அமர முடிவது இல்லை.

      கொஞ்சம் கொஞ்சமாக படங்களை வலையேற்றி பின் எழுதி என்று பதிவு போடுகிறேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  19. தாய்லாந்து படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.

    கலைப்பொருட்கள் பொக்கிசம்தான்.

    அடுத்து காண வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      மாதேவியை நினைத்து கொண்டே இருந்தேன் , இரண்டு மூன்று பதிவுகளாய் உங்களை காணவில்லையே! என்று
      என் நினைப்பு உங்களை வரவழைத்து விட்டது.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. என்னை நினைத்திருப்பதற்கு முதலில் நன்றி கூறுகின்றேன்.

      பேரனுக்கு சென்றமாதம் லீவு வந்ததில் ஊர் சென்று வந்தோம். அதனால் உங்கள் பகிர்வுகள் பார்க்கவில்லை.

      நீக்கு
    3. வணக்கம் மாதேவி, வாழ்க வள்மௌடன்
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.
      ஊருக்கு போய் வந்த இடங்களின் படங்கள் போட்டு பழைய மாதிரி அழகான பதிவுகள் போடலாம் நீங்கள்.

      நீக்கு
  20. ஒரு ம்யூஸியத்தை உணவு விடுதியாக மாற்றியது போல் உள்ளது, படங்களும் துல்லியம். இரண்டு பதிவுகளாக வெளியிட்டிருக்கலாம். உணவு பார்க்க அழகு. சுவை எப்படியோ?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்

      //ஒரு ம்யூஸியத்தை உணவு விடுதியாக மாற்றியது போல் உள்ளது, படங்களும் துல்லியம். இரண்டு பதிவுகளாக வெளியிட்டிருக்கலாம். உணவு பார்க்க அழகு. சுவை எப்படியோ?//

      உணவு சுவையாக இருந்தது காரம் இல்லாமல்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரி

    நலமா? தங்கள் பதிவு அருமையாக உள்ளது.
    எனக்கு சென்ற வாரம் முழுவதும் உடல்நலமில்லாமல் போய் விட்டது. அதனால் பதிவுகளுக்கு வர இயலவில்லை.

    இந்தப் பதிவில் தாங்கள் தாய்லாந்தில் சென்ற உணவகத்தில் பாதுகாப்புடன் அவர்கள் சேகரித்து வைத்துள்ள கலைப்பொருட்கள் யாவும் மிகவும் ரசிக்கதக்கதாக உள்ளது.

    பிள்ளையாரை எத்தனை வடிவத்தில் பார்த்தாலும் ரசனைதான். அலமாரிக்குள் இருக்கும் பீங்கான்கள். பித்தளை சாமான்கள், உலோக பட்டாம்பூச்சி என அனைத்தையும் ரசித்தேன்.

    கூடையையே தலையில் கீரீடமாக அணிந்திருக்கும் பிரம்மா உருவமும் அழகு. அதன் அருகிலுள்ள அலமாரியின் கண்ணாடியில் நீங்கள் படங்கள் எடுப்பதும் தெரிகிறது.

    மரங்கள் நடுவே புத்தர் வடிவமும், நிறைய விதவிதமான புத்தர் வடிவமைப்புக்களும் கண்டு ரசித்தேன்.அங்குள்ள எல்லா கலைப்பொருட்களும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன்.

    தாங்கள் சாப்பிட்ட உணவு நல்லதுதான். ஆனால் பச்சைகாய்கறிகள் சாப்பிடவும் நம் பற்களும், உடம்பும் திடமாக இருக்க வேண்டும். என் இளைய மகனும், மருமகளும் இந்த காய்கறிகளைத்தான் நிறைய சாப்பிடுவார்கள். மருமகள் சாதம் தினமும் இரண்டு ஸ்பூன் தான் எடுத்துக் கொள்வார்.

    தாங்கள் அடுத்துச் சென்ற புத்தர் ஆலயத்தைக் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதற்கே தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //நலமா? தங்கள் பதிவு அருமையாக உள்ளது.
      எனக்கு சென்ற வாரம் முழுவதும் உடல்நலமில்லாமல் போய் விட்டது. அதனால் பதிவுகளுக்கு வர இயலவில்லை.//

      நான் கால்வலிக்கு பிஸியோதெரபி எடுத்து கொண்டு இருக்கிறேன்.
      வீட்டுக்கு வந்து செய்து தருகிறார்கள். உறவினர் வருகை, திருமணம். அதனால் நானும் இரண்டு மூன்று நாள் கழித்து தான் வலை பக்கம் வருவேன்.

      உங்கள் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது? உங்கள் உடல் நலம் குன்றினால் அனைவருக்கும் கஷ்டமாக இருக்குமே வீட்டில்.

      உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.

      //இந்தப் பதிவில் தாங்கள் தாய்லாந்தில் சென்ற உணவகத்தில் பாதுகாப்புடன் அவர்கள் சேகரித்து வைத்துள்ள கலைப்பொருட்கள் யாவும் மிகவும் ரசிக்கதக்கதாக உள்ளது.

      பிள்ளையாரை எத்தனை வடிவத்தில் பார்த்தாலும் ரசனைதான். அலமாரிக்குள் இருக்கும் பீங்கான்கள். பித்தளை சாமான்கள், உலோக பட்டாம்பூச்சி என அனைத்தையும் ரசித்தேன்.//


      ஆமாம் நான் ரசித்த காட்சிகளை நீங்களும் ரப்பீர்கள் என்று தான் பதிவு போட்டேன். ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //தாங்கள் சாப்பிட்ட உணவு நல்லதுதான். ஆனால் பச்சைகாய்கறிகள் சாப்பிடவும் நம் பற்களும், உடம்பும் திடமாக இருக்க வேண்டும்.//

      ஆமாம்.

      //என் இளைய மகனும், மருமகளும் இந்த காய்கறிகளைத்தான் நிறைய சாப்பிடுவார்கள். மருமகள் சாதம் தினமும் இரண்டு ஸ்பூன் தான் எடுத்துக் கொள்வார்.//

      என் மகனும், மருமகளும் சில மாதங்களாக இப்படித்தான் சாலட் மட்டும் சாப்பிடுகிறார்கள் சாதம் சாப்பிடுவதே இல்லை.

      //தாங்கள் அடுத்துச் சென்ற புத்தர் ஆலயத்தைக் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதற்கே தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
      மன்னிப்பு வேண்டியது இல்லை கமலா. நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொன்னால் போதும்.

      உங்கள் வரவுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.


      நீக்கு