திங்கள், 26 மே, 2025

வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா நகரம் நிறைவு பகுதி








மக்களால் அதிகம் விரும்பபடும் சுற்றுலா தளமாகும் தாய்லாந்து அயுத்தியா என்ற பெயர் ராமாயணத்தில்  வரும் அயோத்தியின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டது.


                                                             

இடிபாடுகளுடன்  மிச்சம் இருக்கும் பகுதிகளும்  பார்க்க அழகு



படிகள் இருக்கிறது இங்கு எப்படி இருந்து இருக்குமோ 







படிகளில் ஏறி கோபுரத்தை சுற்றி வரக்கூடாது என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.








வளர்ப்பு பூனை போல கழுத்தில் பட்டை கட்டி இருக்கிறது. நல்ல தூக்கம்

அமெரிக்கா போல சுற்றுலாவிற்கு இங்கு வந்தவர்கள் 

நாய்களை அழைத்து வரவில்லை, தெருவில் சுற்றும் நாய் போல  இருக்கிறது

வரைபடம் எப்படி போய் எப்படி வர வேண்டும், என்ன இருக்கிறது இங்கு என்று  எல்லா குறிப்புகளும்  இருக்கும்  பலகையை படம் எடுத்து கொண்டு இருக்கிறான் பேரன்


அடிபாகம் மட்டும் இப்போது இங்கு நிறைய இருக்கிறது, மேலே கோபுர அமைப்பு உடைந்து இருக்கிறது

அங்கு இந்த ஒரு கடை மட்டும் இருந்தது, பரிசுப்பொருட்கள் மருமகள் உறவினர், நண்பர்களுக்கு கொடுக்க சிறு சிறு பரிசுப் பொருடகள் வாங்கினாள். வீட்டு கொலுவிற்கு அழகாய்

படுத்து கொண்டு இருக்கும் புத்தர்(சயன புத்தர்) வாங்கினாள்.

 சயன கோலத்தில்  இருக்கும்  (பெரிதாக இருக்கும் ) புத்தர் கோயில் போனோம். பின்னர் வரும்.

 அயுத்தாவை பார்த்து விட்டு வெளியே வந்து  காரில் போய் கொண்டு இருக்கும் போது வழியில் நான்கு யானைகளில் நகர் வலம் போய் கொண்டு இருந்தார்கள் சுற்றுலா வந்தவர்கள். அதைப்பார்த்தவுடன் காரிலிருந்து படம் எடுத்தேன்.

 தூரத்திலிருந்து எடுத்ததால் அவ்வளவு தெளிவாக இல்லை. காமிராவில் ஜூம் செய்து அவசரமாக எடுத்தது சரியாக வரவில்லை.

யானை வேகமாக போனது

மரங்களில் மூங்கில் கூடை விளக்குகள் தொங்கின



அடுத்து நாங்கள்  போன புத்தர் கோயில் பார்க்கலாம் அடுத்த பதிவில்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------------------

39 கருத்துகள்:

  1. உலகெங்கிலும் சிதைந்த நகரங்கள், கோட்டைகள் வரலாற்றுச் சின்னங்களாகக் காலம் கடந்து நிற்கின்றன. அருமையான கோணங்களில் படங்களும் பகிர்வும் அருமை. அயுத்தியா, அயோத்தி போல் ஒலிக்கிறதே என நினைத்தேன், நீங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள். யானைகளை நகர் வலத்திற்குப் பயன்படுத்துவதை அறிய முடிகிறது. புத்தர் கோயிலை தரிசிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //உலகெங்கிலும் சிதைந்த நகரங்கள், கோட்டைகள் வரலாற்றுச் சின்னங்களாகக் காலம் கடந்து நிற்கின்றன.//

      ஆமாம் ராமலக்ஷ்மி , காலம் கடந்தும் வரலாற்று சின்னங்கள் தன் பெருமையை பறைசாற்றி கொண்டு இருக்கின்றன.

      //அருமையான கோணங்களில் படங்களும் பகிர்வும் அருமை. //

      நன்றி. பெரும்பாலும் அலைபேசியில் தான் எடுத்தேன் நீங்கள் உங்கள் காமிராவில் இன்னும் அழகான கோணங்களில் எடுத்து இருப்பீர்கள்.

      //அயுத்தியா, அயோத்தி போல் ஒலிக்கிறதே என நினைத்தேன், நீங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள். //

      ராமாயணம் சம்பந்த பட்ட இடங்களாக நிறைய இடங்களுக்கு பேர் வைத்து இருக்கிறார்கள். கட்டிடங்களுக்கு ராமர், சீதை பேர் வைத்து இருக்கிறார்கள்.

      மன்னர்கள் பேர் ராமா என்று தான் முடிகிறது.

      வஜிரலோங்கோர்ன் (ராம பத்தாம்)


      வால்மீகி இராமாயணத்தில் வரும் பேர்களை சில இடங்களில் காணலாம்.

      //யானைகளை நகர் வலத்திற்குப் பயன்படுத்துவதை அறிய முடிகிறது. புத்தர் கோயிலை தரிசிக்கக் காத்திருக்கிறோம்.//

      யானை பாகன் மன்னர் போல அழகாய் அலங்கரித்து கொண்டு யானை வழி நடத்துகிறார்.

      உங்கள் கருத்துக்கும் அடுத்த பதிவை பார்க்க ஆவலாக இருப்பதற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
    2. அயுத்தயா என்ற இப்போதைய இடம் முன்பு
      அயுதயா இராச்சியம் என்று தான் அழைக்கப்பட்டு இருக்கிறது.

      நீக்கு
  2. இடிபாடுகளுடன் பழமையைச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த இடங்கள் அழகு என்பதை விட மனதை என்னவோ செய்கிறது.  கடந்த காலத்துக்கு இட்டுச் செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இடிபாடுகளுடன் பழமையைச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த இடங்கள் அழகு என்பதை விட மனதை என்னவோ செய்கிறது. கடந்த காலத்துக்கு இட்டுச் செல்கிறது.//

      ஆமாம், கடந்த காலத்தை நினைத்தால் .
      அங்கு எப்படி மகிழ்ச்சியாக இருந்து இருப்பார்கள் ! இப்படி காலத்தின் கோலத்தை நினைத்தால் மனம் சங்கடப்படும்

      நீக்கு
  3. படிக்கட்டுகளையும் மேலே ஏறிப்போனால் தெரியும் ஹால் போன்ற அமைப்புகளையும், கதவுகளையும் பார்த்தால் முன்னர் இந்த இடங்கள் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படிக்கட்டுகளையும் மேலே ஏறிப்போனால் தெரியும் ஹால் போன்ற அமைப்புகளையும், கதவுகளையும் பார்த்தால் முன்னர் இந்த இடங்கள் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை ஓடுகிறது.//

      ஆமாம், கற்பனையில் நம் விருப்பம் போல கண்டு களிக்கலாம்

      நீக்கு
  4. இரண்டு செல்லங்களும் அழகு.  இந்த  இடங்களை மொத்தமாகப் பார்க்க எவ்வளவு நேரம் பிடித்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டு செல்லங்களும் அழகு. இந்த இடங்களை மொத்தமாகப் பார்க்க எவ்வளவு நேரம் பிடித்தது?//

      மதியம் சாப்பாட்டுக்கு பின் இங்கு போனோம், மாலை நேரம் வந்து விட்டது வெளியே வர மேலும் சில இடங்கள் மகன், மருமகள் மட்டும் போனார்கள் நாங்கள் காரில் அமர்ந்து இருந்தோம்.(நானும், மருமகளின் அம்மாவும்)

      இரண்டு ,மூன்று மணிகள் நடந்த களைப்பு எங்களுக்கு.

      மதில் மேல், மரத்தில் வைத்த இளநீர்களை குடிக்கும் அணில்களை இங்கு தான் பார்த்தோம், அவைகளே நேரத்தை எடுத்து கொண்டது .

      செல்லங்களை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. இடிபாடுகளில் முன்னால் செங்கல் செங்கல்லாக தேய்வதைப் பார்த்தால் இன்னும் நூறாண்டுகளில் இதிலும் பாதிதான் மிஞ்சுமோ, அல்லது காப்பாற்றி வைப்பார்களோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இடிபாடுகளில் முன்னால் செங்கல் செங்கல்லாக தேய்வதைப் பார்த்தால் இன்னும் நூறாண்டுகளில் இதிலும் பாதிதான் மிஞ்சுமோ, அல்லது காப்பாற்றி வைப்பார்களோ...//

      யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் காப்பாற்றி வைப்பார்கள் என்று நம்புவோம்.
      இருந்தாலும் காலத்தை வென்று நிற்குமா என்பது கேள்வி குறிதான்.

      நீக்கு
  6. ஓய்வு பெறப்போகும் நண்பர் ஒருவர் அவருடைய ஓய்வு விழாவிற்கு என்னையும் அழைப்பார் என்று நான் ஒரு பரிசுப்பொருள் வாங்கியிருந்தேன். 

    சயன புத்தா. 

    அவர் என்னை அழைக்கவில்லை.  ஏப்ரலில் ஓய்வு பெற்று விட்டார்.  எனவே புத்தா எங்கள் இல்லத்தில்தான் பீரோவில் சயனித்திருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  7. இடிபாடுகளுடன் பார்க்க ஒரு மாதிரி இருக்கிறது இல்லையா அக்கா. அழகு ஒரு புறம் இருந்தாலும்....ஒரு சோகமும் அந்த அழகுடன்...களை இழந்த முகம் போன்று, பின்னணியில்.

    இவை எல்லாம் அப்போது எப்படி இருந்திருக்கும் நகரமாக என்று ஒரு கற்பனை ஓடியது கூடவே.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அங்கு ஏறி சுற்றி வரக் கூடாது என்று ஒரு கோபுரம்...ஒரு வேளை மக்கள் கோவிலில் திருச்சுற்றில் சுற்றுவது என்று நினைத்துச் செய்துவிடுவாங்கன்னு அப்படி எழுதியிருக்காங்களோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அங்கு ஏறி சுற்றி வரக் கூடாது என்று ஒரு கோபுரம்...ஒரு வேளை மக்கள் கோவிலில் திருச்சுற்றில் சுற்றுவது என்று நினைத்துச் செய்துவிடுவாங்கன்னு அப்படி எழுதியிருக்காங்களோ!//

      அப்படி இல்லை, எல்லோரும் ஏறினால் அது மேலும் பழுது பட்டு விடும் அதன் காரணமாக அப்படி எழுதி வைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  9. சிந்துவெளி, மொஹஞ்சதாரோ நினைவுக்கு வந்தன தோன்றியது படங்களைப் பார்த்ததும்...ஆனால் அவை தெற்கு பாகிஸ்தானில் இருக்கின்றன. நம்மூரில் இருந்திருந்தால் நாமும் போய்ப்பாத்துவிட்டு வந்திருக்கலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிந்துவெளி, மொஹஞ்சதாரோ நினைவுக்கு வந்தன தோன்றியது படங்களைப் பார்த்ததும்...ஆனால் அவை தெற்கு பாகிஸ்தானில் இருக்கின்றன. நம்மூரில் இருந்திருந்தால் நாமும் போய்ப்பாத்துவிட்டு வந்திருக்கலாம்...//

      ஆமாம்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //தங்க புத்தர் படம் அழகு.//

      தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. படிகள் அங்கு இருந்த அடையாளமே தெரியலைக்கா கூர்ந்து பார்த்தால்தான் தெரியுது கொஞ்சமா.

    கீழ உள்ள படத்தில் தெரிகிறது. சைடில் பிடித்துக் கொண்டு ஏறுவதற்கு அழகான திண்டுமுடியும் இடத்தில் சின்ன கோபுரம் போன்ற வடிவம் அப்போ எவ்வளவு அழகா இருந்திருக்கும் என்று தோன்ற வைக்கிறது.

    கீழே - ஒரு ஒற்றை ஸ்தூபி போன்ற கோபுரம் முதலில் படிகள் சுற்றி ஒரு மேடை அதன் பின் மீண்டும் படிகள் குறுகியதாய் அப்புறம் ஒரு குறுகிய இடைவெளி நுழைவு வாயில் போன்று உள்ளே என்ன இருந்திருக்கும்? அல்லது இப்போது இருக்கும்? அதன் பின் கோபுரம் இந்த வடிவத்தை மிகவும் ரசித்தேன் அசாத்தியமான வடிவமாக இருக்கிறது.

    படம் எடுத்த விதமும் நல்லா இருக்கு கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படிகள் அங்கு இருந்த அடையாளமே தெரியலைக்கா கூர்ந்து பார்த்தால்தான் தெரியுது கொஞ்சமா.

      கீழ உள்ள படத்தில் தெரிகிறது. சைடில் பிடித்துக் கொண்டு ஏறுவதற்கு அழகான திண்டுமுடியும் இடத்தில் சின்ன கோபுரம் போன்ற வடிவம் அப்போ எவ்வளவு அழகா இருந்திருக்கும் என்று தோன்ற வைக்கிறது.//

      ஆமாம் கைபிடிகள் முடியும் இடத்தில் சின்ன கோபுர வட்ட வடிவம் தெரிகிறதா? மகிழ்ச்சி.

      //கீழே - ஒரு ஒற்றை ஸ்தூபி போன்ற கோபுரம் முதலில் படிகள் சுற்றி ஒரு மேடை அதன் பின் மீண்டும் படிகள் குறுகியதாய் அப்புறம் ஒரு குறுகிய இடைவெளி நுழைவு வாயில் போன்று உள்ளே என்ன இருந்திருக்கும்? அல்லது இப்போது இருக்கும்? அதன் பின் கோபுரம் இந்த வடிவத்தை மிகவும் ரசித்தேன் அசாத்தியமான வடிவமாக இருக்கிறது.//

      ஆமாம், புத்தர் சிலைதான் இருந்து இருக்கும்

      //படம் எடுத்த விதமும் நல்லா இருக்கு கோமதிக்கா//

      நன்றி

      நீக்கு
  12. இந்தப் படம் தான் காலையில் சொல்லியிருந்தேன் படிகளில் ஏறி சுற்றி வரக் கூடாது என்று அப்ப கோவில் அமைப்போ? உள்ளே புத்தர் உருவச்சிலை இருக்குமோ? அதான் சுத்தி வரக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க போல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தப் படம் தான் காலையில் சொல்லியிருந்தேன் படிகளில் ஏறி சுற்றி வரக் கூடாது என்று அப்ப கோவில் அமைப்போ? உள்ளே புத்தர் உருவச்சிலை இருக்குமோ? அதான் சுத்தி வரக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க போல//

      மேலும் பழுது பட்டு விடும் என்பதால் தான் ஏற கூடாது என்று சொல்லி இருப்பார்கள். உள்ளே புத்தர் சிலை இருந்து இருக்கலாம்.

      நீக்கு
  13. மூங்கில் கூடை விளக்குகள் அழகாய்ருக்கு.....பேரன் இருக்கும் ப்டங்கள் செல்லங்கள் படங்களும் நல்லாருக்கு. பேரன் இருக்கும் படத்தின் கீழ் கோபுரம்...நல்ல கிளிக்ஸ்!

    "Patrimoine mondial" என்றாலே வேர்ல்ட் ஹெரிட்டேஜ் என்று பொருள் என்று படித்த நினைவு.

    படங்கள் எல்லாம் சூப்பர் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூங்கில் கூடை விளக்குகள் அழகாய்ருக்கு.....பேரன் இருக்கும் ப்டங்கள் செல்லங்கள் படங்களும் நல்லாருக்கு. பேரன் இருக்கும் படத்தின் கீழ் கோபுரம்...நல்ல கிளிக்ஸ்!//

      நன்றி கீதா

      //"Patrimoine mondial" என்றாலே வேர்ல்ட் ஹெரிட்டேஜ் என்று பொருள் என்று படித்த நினைவு.//

      வேர்ல்ட் ஹெரிட்டேஜ் என்று முதல் படத்தில் நன்கு தெரியும் பாருங்கள் கீதா.

      //படங்கள் எல்லாம் சூப்பர் கோமதிக்கா//

      அனைத்தையும் ஒன்று விடாமல் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா

      நீக்கு
  14. இடிபாடுகளோடு இருக்கும் இத்தகைய இடங்கள் முன்பு எப்படி இருந்திருக்கும் என அறிவது கஷ்டம்

    படங்கள் மிகழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைததமிழன், வாழ்க வளமுடன்

      //இடிபாடுகளோடு இருக்கும் இத்தகைய இடங்கள் முன்பு எப்படி இருந்திருக்கும் என அறிவது கஷ்டம்//

      ஆமாம், சிதம்பரம் கோயிலில் நிறைய வாயில்கள் சிமெண்ட் வைத்து பூசி இருப்பார்கள், அதில் என்ன இருந்து இருக்கும் என்று கேட்டால் என் கணவர் அதெல்லாம் சொல்லமுடியாது சிதம்பர ரகசியம் என்று கிண்டல் செய்வார்கள்.
      சிதம்பர ரகசியம் தெரியும் தானே! திரையை விலக்கி பூஜை செய்து காட்டுவார்கள் வில்வ தளம் போல தொங்கும். வெற்றிடம் ஆகாயம் தான் இறைவன் வாழும் இடம் என்பார்கள்.

      //படங்கள் மிகழகு//

      நன்றி.

      நீக்கு
  15. யானையில் நகர்வலமா?

    ஆசைக்கு சில இடங்களில் யானைச் சவாரி செய்திருக்கிறேன்.

    அதைப்போல கஷ்டம் எதுவுமில்லை. சரியாக உட்கார இருக்கையைக் கட்டியிருந்தாலொழிய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யானையில் நகர்வலமா?

      ஆசைக்கு சில இடங்களில் யானைச் சவாரி செய்திருக்கிறேன்.

      அதைப்போல கஷ்டம் எதுவுமில்லை. சரியாக உட்கார இருக்கையைக் கட்டியிருந்தாலொழிய//

      ஆமாம். நல்ல தார் சாலை அவ்வளவு கஷ்டமில்லை என்று நினைக்கிறேன், காட்டில் போகும் போது தான் மிகவும் கஷ்டம்.
      யானை ஓடும் ஓட்டத்துக்கு நம் உடல் ஆடித்தான் போகும்.
      இருக்கை வசதியும் நன்றாக இருக்க வேண்டும்.

      நீக்கு
  16. மூங்கில் கூடை விளக்கு மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மூங்கில் கூடை விளக்கு மிக அழகு.//

      மணி ரத்தனம் படத்தில் இந்த மூங்கில் கூடு விளக்குகள் இடம் பெறும்.
      கடைகள், தெருக்கள், ஓட்டல்களில் இப்படி அழகான மூங்கில் கூடு விளக்கு தொங்குகிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் தங்களின் கை வண்ணத்தில், வழக்கம் போல துல்லியமாக இருக்கிறது.

    முதலில் நான் இந்தப்பதிவுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். பதிவை பார்த்த அன்று மதியம் வாக்கில் படித்து வரலாமென்றிருந்தேன். அன்று நம் சகோதரி கீதா சாம்பசிவம் பற்றி அவர் கணவர் மறைந்த செய்தி கேள்விப்பட்டதும் மனதிற்கு கஸ்டமாகி விட்டது. அதன் பின் அன்று எதிலும் மனது செல்லவில்லை.

    பின் வந்த நாட்களில் எனக்கும் உடல்நல குறைவு, வீட்டின் சில பிரச்சனைகள் என சற்று உங்கள் பதிவுக்கு வர இயலாமல் செய்து விட்டன. வெள்ளியும், சனியும் பதிவுலகத்திற்கு நான் வர இயலவில்லை. நேற்றும் நெ. த. பயணப் பதிவுக்கு வந்து படித்து விட்டு உங்கள் பதிவுக்கும் வர நினைத்தேன். ஆனால் ஏதேதோ வேலைகள் என பொழுது நகர்ந்து விட்டது. ஆனால், உங்கள் பதிவை இத்தனை நாள் படிக்காது தவறவிட்டமைக்கு மன்னிக்கவும் சகோதரி.

    கூம்பு போன்ற படங்கள் மிகவும் வருகின்றன. அங்கு சிதைந்து போன கட்டிடங்களை முழுதுமாக சரி செய்யாவிட்டாலும், மீதியை நினைவு பொக்கிஷமாக வைத்து காப்பாற்ற வேண்டும். (மாமல்ல புரத்தைப் போல)

    என் மகன் குடும்பத்துடன் ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை சென்று விட்டு வியாழன்றுதான் திரும்பி வந்தனர். (அவர்களும் அங்கு மாமல்லபுரம் சென்று வந்ததாக கூறினார்கள். ) அவர்கள் வந்ததும் கொஞ்சம் வேலைகள் சரியாக இருந்தது.

    படிகளில் ஏன் ஏறக்கூடாதென எழுதி போட்டுள்ளார்கள். சுற்றிப் பார்க்க வரும் அனைவரும் அப்படி ஏறினால், அந்த கோபுரத்திற்கு ஏதேனும் விளைவுகள் உண்டாகி விடுமென்றுதான் இருக்குமென நினைக்கிறேன்

    நடைபாதை படங்கள், யானை சவாரி படம் அனைத்தும் அழகு. பூனை நாய் செல்வங்கள் படத்தையும் ரசித்தேன். அங்கு மழை பெய்கிறது போலும். மகன், மற்றும் பேரன் குடையுடன் காணப்படுகிறாரே ..! புத்த சயனம் சிலைகள் வாங்கியதற்கு மகிழ்ச்சி. அமைதியான புத்தரின் முகத்தை பார்த்துக் கொண்டேயிருந்தால், நம் மனதிற்கும் சற்று அமைதி நிச்சயமாக கிடைக்கும்.

    மூங்கில் கூடை விளக்குகள் படம் அழகாக உள்ளது. அவைகளை மரத்தில் தொங்க விட்டிருப்பதால் அந்த இடமே அழகாக உள்ளது. சயன புத்தர் கோவிலுக்கு சென்று வந்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நேற்று இரவுதான் தங்களின் அழைப்பை என் பதிவில் கண்டேன். ஊரிலிருந்து தங்கள் மகள் வந்திருப்பதை படித்து மிக மகிழ்ச்சியடைந்தேன். மகளுடன் தங்கள் பொழுதுகளை மகிழ்வுடன் கழியுங்கள். மகள் நலமாக உள்ளாரா? அவரை நான் மிகவும் கேட்டதாக கூறவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்கள் அனைத்தும் தங்களின் கை வண்ணத்தில், வழக்கம் போல துல்லியமாக இருக்கிறது.//

      நன்றி.


      //நம் சகோதரி கீதா சாம்பசிவம் பற்றி அவர் கணவர் மறைந்த செய்தி கேள்விப்பட்டதும் மனதிற்கு கஸ்டமாகி விட்டது. அதன் பின் அன்று எதிலும் மனது செல்லவில்லை.//

      ஆமாம், எல்லோருக்கும் அப்படித்தான்.மனம் முழுவதும் கீதா சாம்பசிவம் அவர்களின் நினைவாக இருந்தது.


      //பின் வந்த நாட்களில் எனக்கும் உடல்நல குறைவு, வீட்டின் சில பிரச்சனைகள் என சற்று உங்கள் பதிவுக்கு வர இயலாமல் செய்து விட்டன. வெள்ளியும், சனியும் பதிவுலகத்திற்கு நான் வர இயலவில்லை. நேற்றும் நெ. த. பயணப் பதிவுக்கு வந்து படித்து விட்டு உங்கள் பதிவுக்கும் வர நினைத்தேன். ஆனால் ஏதேதோ வேலைகள் என பொழுது நகர்ந்து விட்டது. ஆனால், உங்கள் பதிவை இத்தனை நாள் படிக்காது தவறவிட்டமைக்கு மன்னிக்கவும் சகோதரி.

      நேற்று இரவுதான் தங்களின் அழைப்பை என் பதிவில் கண்டேன். ஊரிலிருந்து தங்கள் மகள் வந்திருப்பதை படித்து மிக மகிழ்ச்சியடைந்தேன். மகளுடன் தங்கள் பொழுதுகளை மகிழ்வுடன் கழியுங்கள். மகள் நலமாக உள்ளாரா? அவரை நான் மிகவும் கேட்டதாக கூறவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது? பூரண நலமா?
      இங்கும் எனக்கு, மகளுக்கு உடல் நலம் இல்லை.
      பிசியோதெரபி எடுத்து கொண்டோம்.
      பின் இருமல் ஜலதோஷம் , மேல், கால்வலி என்று நாட்கள் ஓடுகிறது.
      வந்த பிள்ளைக்கு சரியாக ஒன்று செய்யமுடியவில்லை ஏதோ வெளி சாப்பாடு , நான் செய்வது என்று ஓடியது.

      உறவினர் இல்லத் திருமணத்திற்கு சென்று இருக்கிறாள், என்னால் உடன் போக முடியவில்லை.

      உங்கள் விசாரிப்பை தெரிவிக்கிறேன், நன்றி.

      //கூம்பு போன்ற படங்கள் மிகவும் வருகின்றன. அங்கு சிதைந்து போன கட்டிடங்களை முழுதுமாக சரி செய்யாவிட்டாலும், மீதியை நினைவு பொக்கிஷமாக வைத்து காப்பாற்ற வேண்டும். (மாமல்ல புரத்தைப் போல)//

      பாதுகாப்பார்கள்.

      //என் மகன் குடும்பத்துடன் ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை சென்று விட்டு வியாழன்றுதான் திரும்பி வந்தனர். (அவர்களும் அங்கு மாமல்லபுரம் சென்று வந்ததாக கூறினார்கள். ) அவர்கள் வந்ததும் கொஞ்சம் வேலைகள் சரியாக இருந்தது.//

      கோடை விடுமுறையில் குழந்தைகளை மாமல்லபுரம் அழைத்து சென்று காட்டி வந்தது மகிழ்ச்சி.

      //படிகளில் ஏன் ஏறக்கூடாதென எழுதி போட்டுள்ளார்கள். சுற்றிப் பார்க்க வரும் அனைவரும் அப்படி ஏறினால், அந்த கோபுரத்திற்கு ஏதேனும் விளைவுகள் உண்டாகி விடுமென்றுதான் இருக்குமென நினைக்கிறேன்//

      ஆமாம்.

      //அமைதியான புத்தரின் முகத்தை பார்த்துக் கொண்டேயிருந்தால், நம் மனதிற்கும் சற்று அமைதி நிச்சயமாக கிடைக்கும்.//

      ஆமாம்.

      //மூங்கில் கூடை விளக்குகள் படம் அழகாக உள்ளது. அவைகளை மரத்தில் தொங்க விட்டிருப்பதால் அந்த இடமே அழகாக உள்ளது. சயன புத்தர் கோவிலுக்கு சென்று வந்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

      இனி அடுத்த மாதம் தான் பதிவுகள் போட வேன்டும், மகனும் வர போகிறார். நேரங்கள் ஓடிவிடும்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.




      நீக்கு
  18. அழகான படங்கள், குறைவான விளக்கங்கள்,சுவையான பதிவு. இங்கே கனடாவில் நாங்களும் ஒரு புத்தர் கோவிலுக்குச் சென்றோம், அதைப்பற்றி எழுத நினைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //அழகான படங்கள், குறைவான விளக்கங்கள்,சுவையான பதிவு. இங்கே கனடாவில் நாங்களும் ஒரு புத்தர் கோவிலுக்குச் சென்றோம், அதைப்பற்றி எழுத நினைத்திருக்கிறேன்.//

      நன்றி. நீங்கள் சென்று வந்த புத்தர் கோயில் பற்றி பதிவு போடுங்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. கமெண்ட் மாடரேஷன் இருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமெண்ட் மாடரேஷன் இருக்கிறதோ?//

      ஆமாம்.
      இன்று தான் பதிவுக்கு பின்னூட்டங்கள் இருக்கா என்று பார்த்து வெளியிட்டேன்.

      நீக்கு
  20. அயுத்தயா படங்கள் எமதுநாட்டு பழைய பொலநறுவை இராச்சியத்தை நினைவூட்டியது. பொலநறுவையில் சோழர்கால இராச்சியம் இருந்ததில் பல சைவ கோவில்களும் இடம் பிடித்திருந்ததை காணலாம்.

    அழகிய படங்களுடன் தந்துள்ளீர்கள் கண்டுகொண்டோம்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
    உங்கள் ஊரில் இருக்கும் கோவிலை நினைவு படுத்துவது போல இருக்கா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு