திங்கள், 13 ஜனவரி, 2025

மார்கழி கோலங்கள், பொங்கல் வாழ்த்து


மார்கழி மாதம் நிறைவு பெற்று தை மகள் வரப் போகிறாள் நாளை.
மார்கழி மாதம் சின்ன  கோலங்கள் போட்டேன்.  மார்கழி சிறப்பை காட்ட கொஞ்சம் வண்ணங்கள் கொடுத்தேன். அவை இந்த பதிவில் இடம் பெறுகிறது. 





அனைவருக்கும்  பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் .


 கேட்க முடியவில்லை என்றால் 
இந்த காணொளி நன்றாக கேட்க முடியும்.


https://www.youtube.com/watch?v=xTrNb0PVX-g

சிறு வயதில் பேரன் பாடிய பொங்கல் பாட்டு


இந்த வருடம் புதிதாக வண்ணபொடிகள் வாங்கவில்லை இருக்கும்  பொடிகளை வைத்தே கோலம் போட்டு விட்டேன்.

பழைய மாதிரி கோலங்கள் போட முடியவில்லை, இருந்தாலும் கோலம் போடாமல் இருக்க மனம் இல்லை அதனால் சின்ன சின்ன தாக  போட்டு திருப்தி பட்டு கொண்டேன்.




















                         






இந்த புத்தாண்டில் தம்பியின் மணிவிழாவிற்கு  திருக்கடையூர் சென்று வந்தேன் உறவுகளுடன். அபிராமியை தரிசனம் செய்ய  வாய்ப்பு கிடைத்தது  தம்பியால். 

புதிய யானை அபிராமி

மாயவரம் எங்கள் மன்ற (மனவளக்கலை) அன்பரை அங்கு பார்த்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மலரும் நினைவுகள் வந்து போனது.
அனைவருக்கும் போகி பண்டிகை, தைப்பொங்கல், கனுமாட்டுப்பொங்கல்,  காணும் பொங்கல் வாழ்த்துகள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

8 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மார்கழி கோலங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சின்ன கோலங்களாக இருந்தாலும் அனைத்தையும் மிக அழகாகவும், பொறுமையாகவும் போட்டுள்ளீர்கள். நடுவில் போட்ட இழை கோலங்களும் அழகாக இருக்கிறது.

    திருவாதிரையாகிய இன்று திருக்கடையூர் கோவில் கோபுர தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனை தரிசித்துக் கொண்டேன். உங்கள் தம்பியின் மணிவிழா நன்றாக, சிறப்பாக நடந்திருக்கும் நினைக்கிறேன். இறைவன் அவர்களுக்கு நல்ல உடல்/ மன ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்வையும் தர வேண்டுமென மனதாற பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

    நாங்களும் சென்ற வருட இறுதியிலும், இவ்வருட முதலிலும், இறைவன் அருளால் சில கோவில்களுக்கு சென்று வந்தோம். இவ்வருட ஆரம்பத்தில் ஒரு கோவில் (அன்னபூர்ணேஸ்வரி கோவில்) பற்றி பதிவு எழுதியுள்ளேன். தாங்கள் என் இனிப்பு பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நேற்றும் ஒரு பெருமாள் கோவில் சென்று வந்தோம். அதனால்தான் நேற்று உடனே அனைவருக்கும் பதில் கருத்து தர நேரம் இல்லாமல் போய் விட்டது. இன்று போகிப் பண்டிகை வேலைகள் முடிந்து இப்போதுதான் கைப் பேசியை எடுத்து வைத்துக் கொண்டேன்.

    தங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் என் இனிய போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. மார்கழி கோலங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சின்ன கோலங்களாக இருந்தாலும் அனைத்தையும் மிக அழகாகவும், பொறுமையாகவும் போட்டுள்ளீர்கள். நடுவில் போட்ட இழை கோலங்களும் அழகாக இருக்கிறது.//

      நன்றி கமலா.

      //நாங்களும் சென்ற வருட இறுதியிலும், இவ்வருட முதலிலும், இறைவன் அருளால் சில கோவில்களுக்கு சென்று வந்தோம். இவ்வருட ஆரம்பத்தில் ஒரு கோவில் (அன்னபூர்ணேஸ்வரி கோவில்) பற்றி பதிவு எழுதியுள்ளேன்

      //திருவாதிரையாகிய இன்று திருக்கடையூர் கோவில் கோபுர தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இறைவனை தரிசித்துக் கொண்டேன்.//


      தங்கை இருந்த ஓட்டல் அறை ஜன்னல் வழியாக காலை எடுத்தது கோபுர படம். இரண்டு நாளும் அதிகாலை கோபுர தரிசனம் செய்தேன்.

      //உங்கள் தம்பியின் மணிவிழா நன்றாக, சிறப்பாக நடந்திருக்கும் நினைக்கிறேன். இறைவன் அவர்களுக்கு நல்ல உடல்/ மன ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்வையும் தர வேண்டுமென மனதாற பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.//

      மணிவிழா சிறப்பாக நடந்தது. உங்கள் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      //நாங்களும் சென்ற வருட இறுதியிலும், இவ்வருட முதலிலும், இறைவன் அருளால் சில கோவில்களுக்கு சென்று வந்தோம். இவ்வருட ஆரம்பத்தில் ஒரு கோவில் (அன்னபூர்ணேஸ்வரி கோவில்) பற்றி பதிவு எழுதியுள்ளேன்//

      இறைவன் அருளால் கோவில்கள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

      //தங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் என் இனிய போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் கருத்துக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.





      நீக்கு
  2. கோலங்கள் அழகாக இருக்கிறது.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    கவின் காணொளி கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      கோலங்கள் அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      கவின் காணொளி கேட்டேன்.//

      மகிழ்ச்சி.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. கோலங்கள் அனைத்தும் அழகு. விதவிதமான வண்ணக்கோலங்கள்.

    திருக்கடையூர் அபிராமி தரிசனமும் நன்று. எல்லாம் தெய்வச் செயல்.

    மாயவரம் என்றதும், இந்தத் தடவையாவது காளிகாம்பாள் உணவகத்தில் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //கோலங்கள் அனைத்தும் அழகு. விதவிதமான வண்ணக்கோலங்கள்.//

      நன்றி.

      //திருக்கடையூர் அபிராமி தரிசனமும் நன்று. எல்லாம் தெய்வச் செயல்.//

      ஆமாம், நடக்க முடியவில்லை என்று போகாமல் இருக்க முடியவில்லை, தம்பி, தங்கைகள் , தம்பி மனைவிகள், மாமாபெண் பார்த்து கொண்டார்கள் என்னை. அவர்கள் உதவியில் பத்திரமாக நடந்தேன். எல்லாம் தெய்வச்செயல்தான்.

      மாயவரம் என்றதும், இந்தத் தடவையாவது காளிகாம்பாள் உணவகத்தில் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

      காளியாகுடி ஓட்டல். பேரூந்து நிலையம் அருகில் தான். மாயவரம் மணிக்கூண்டு பக்கம். சாப்பிட்டு பாருங்கள் நன்றாக இருக்கும்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. இரண்டு மூன்று பதிவுகளுக்கு உங்களால் வர முடியவில்லை.

      நீக்கு
  4. உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    தைத்திங்கள் நல்ல சேதிகளைக் கொண்டுவரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

      தைத்திங்கள் நல்ல சேதிகளைக் கொண்டுவரட்டும்.//

      ஆமாம், எல்லோருக்கும் நல்ல சேதிகளை கொண்டு வரட்டும். மகளுக்கு இது தலை பொங்கல் அல்லவா? அவர்களுக்கு வாழ்த்துகள்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு