இன்றைய கோலம்
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை
1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை
2. ஆண்டாள் அருளிய திருப்பாவை.
3.சமணமுனிவர் அருளிய பாவை
4. தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு. சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்க வில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல் விருத்தி உரையில் இருக்கிறது.அந்தப்பாடல்:“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”
திருப்பாவை வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இது பாகவத வரலாற்றை ஒட்டி வருவது. ஆண்டாள் கண்ணனை நாயகனாகப் பெறவேண்டும் என்ற வேட்கையும், நாடு செழிக்க மழை வேண்டும் என்ற விழைவும்,ஆக்கள் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல்.
மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை தோன்பு நோற்றனர். விடியும் முன்பே எழுந்து கன்னியர் அக்கம் , பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்களை அழைத்து கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். அப்போது இப் பாடல் பாடுவார்கள்.
திருவெம்பாவை மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து பாடப்பட்ட பாடல்.
திருவெம்பாவை பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடப்படுகிறது.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியைச் அக்கம் பக்கத்தில் உள்ள எல்லாத் தோழிகளையும் துயில் எழுப்பி மௌஅக்கத்தை தெளிவித்து இறைவன் பால் மனம் செலுத்தி
பாட அழைக்கிறார்.
திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார்.
திருப்வெம்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.
திருவாதவூரர்(மாணிக்கவாசகர்) பாவையர்கள் நீராடப்போவதைக் கண்டார்.அக்காட்சியின் பயனாக விளைந்தது திருவெம்பாவை என்னும் நூல் என்பார்கள்.
பாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.
மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.
நீராடுதல் தவமெனக் கருதப்படும்.புற அழுக்கை நீக்குவது நீர்,நம் அக அழுக்கை நீக்குவது இறைவன் திருநாமம்.
பாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.
மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.
நீராடுதல் தவமெனக் கருதப்படும்.புற அழுக்கை நீக்குவது நீர்,நம் அக அழுக்கை நீக்குவது இறைவன் திருநாமம்.
இளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம்.
உடல் பிறக்கிறது,வளர்கிறது,நோய்வாய்ப்படுகிறது. ஆனால் உள்ளம் எந்நாளும் இளமையாக இருக்கலாம்,உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்தால். தளர்வும் சோர்வும் சலிப்பும் இளமையைப் போக்கி முதுமையைத் தரும். உறுதியும்,ஊக்கமும்,உழைப்பும் இளமையைப் பாதுகாக்கின்றன.
பாவை நோன்பில் காலையில் சுறுசுறுப்பாய் எழுந்து இறைவனைத் தொழுது பின் கடமைகளை
ஆற்றும் போது உள்ளத்திற்குத் தளர்வு,சோர்வு,சலிப்பு இல்லை. உறுதியுடன்,ஊக்கத்துடன் உழைக்கும் போது உயர்வு நிச்சயம். இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.
”சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,”- தாயுமானவர்.
மார்கழி மாதம் திருப்பாவை,திருவெம்பாவை பாடி உயர்வு பெறுவோம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
------------------------------------------------------------------------------------------------
நன்னலத்துடனும் மகிழ்வுடனும் அனைத்து வளங்களுடனும் என்றும் நீங்கள் மகிழ்ந்திருக்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்கு//நன்னலத்துடனும் மகிழ்வுடனும் அனைத்து வளங்களுடனும் என்றும் நீங்கள் மகிழ்ந்திருக்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!//
உங்கள் வாழ்த்து மகிழ்வை தருகிறது.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அருமை அம்மா...
பதிலளிநீக்குஇனிய 2025 புத்தாண்டு வாழ்த்துகள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
நீங்கள் உடல் நலத்தோடு இருக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
நீங்கள் உடல் நலத்தோடு இருக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மார்கழி கோலம் செமையா இருக்கு கோமதிக்கா
பதிலளிநீக்குஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//மார்கழி கோலம் செமையா இருக்கு கோமதிக்கா//
நன்றி கீதா.
//ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!//
வாழ்த்துகளுக்கு நன்றி.
கீதா
பாவை பற்றிய கருத்துகள் எல்லாமே சூப்பர் கோமதிக்கா. நல்லாருக்கு. திருபபவை திருவெம்பாவை தவிர மற்ற இரண்டும் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
//பாவை பற்றிய கருத்துகள் எல்லாமே சூப்பர் கோமதிக்கா. நல்லாருக்கு. திருபபவை திருவெம்பாவை தவிர மற்ற இரண்டும் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.//
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தங்கள் மகன் குடும்பத்திற்கும், மகள் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறுங்கள். இன்றைய உங்களின் பதிவும் அருமையாகத்தான் இருக்கும். பிறகு நிதானமான படித்து விட்டு வருகிறேன் சகோதரி. கொஞ்சம் வேலைகள் வந்து குறுக்கிடுகின்றன . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//தங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். //
நன்றி.
//தங்கள் மகன் குடும்பத்திற்கும், மகள் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறுங்கள்.//
குழந்தைகளுக்கு சொல்கிறேன் மகிழ்ச்சி, நன்றி.
//இன்றைய உங்களின் பதிவும் அருமையாகத்தான் இருக்கும். பிறகு நிதானமான படித்து விட்டு வருகிறேன் சகோதரி. கொஞ்சம் வேலைகள் வந்து குறுக்கிடுகின்றன . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி//
மெதுவா வாங்க குடும்ப கடமைகளை முடித்து விட்டு மெதுவாக படிக்கலாம்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
மார்கழி கோலங்களை பேஸ் புக்கில் பார்த்து வருகிறேன். பாசுரங்கள், பாவை நோன்பு பற்றிய விஷயங்களை அறிந்தேன். அந்தக் காலத்தில் நகரம் கிராமம் என்று எதுவும் தனித்தனியாய் இருந்திருக்காது. பெண்கள் ஐ டி வேலைக்குச் சென்றிருக்க மாட்டார்கள். காலையில் எழுந்து ஏதாவது அருகில் இருக்கும் நீர் நிலை சென்று நீராடி, வாசலில் கோலமிட்டு, கோவில் சென்று வருவார்கள். இப்போதைய நிலையில்தான் எவ்வளவு மாற்றம்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//மார்கழி கோலங்களை பேஸ் புக்கில் பார்த்து வருகிறேன். //
லைக் போட்டு வருகீர்கள் நன்றி.
//அந்தக் காலத்தில் நகரம் கிராமம் என்று எதுவும் தனித்தனியாய் இருந்திருக்காது. பெண்கள் ஐ டி வேலைக்குச் சென்றிருக்க மாட்டார்கள். காலையில் எழுந்து ஏதாவது அருகில் இருக்கும் நீர் நிலை சென்று நீராடி, வாசலில் கோலமிட்டு, கோவில் சென்று வருவார்கள். இப்போதைய நிலையில்தான் எவ்வளவு மாற்றம்!//
ஆமாம் , கால மாற்றம் பெண்களுக்கு பல விதமான அதிகபடியான கடமைகள் இப்போது அதிகமாக இருக்கிறதுதான். இப்போது நீர் நிலைகளும் இல்லை, நீர் நிலைகளில் இப்போது குளிக்கவும் தெரியாதுதான். இப்போதும் காலையில் எழுந்து கோல்மிட்டு கோவிலுக்கு போய் இறைவனை தொழும் பெண்கள் இருக்கிறார்கள். கோவில்களில் கூட்டம் பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். மாற்றங்கள் வந்தாலும் மாறாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி. இங்கு சென்னையில் ஒருமாதிரி விஷப்பனி போல இருக்கிறது போல... சுற்று வீடுகளில் உறவுகளில் யாரைக் கேட்டாலும் ஜுரம், தலைவலி என்கிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி. இங்கு சென்னையில் ஒருமாதிரி விஷப்பனி போல இருக்கிறது போல... சுற்று வீடுகளில் உறவுகளில் யாரைக் கேட்டாலும் ஜுரம், தலைவலி என்கிறார்கள்.//
நீக்குஇப்போது சென்னையில் மழை , குளிர் என்று இருக்கிறது இல்லையா? அதுதான் இப்படி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதி அக்கா, மகிழ்வோடும் நலமோடும் நன்றே இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் வந்தது மகிழ்ச்சி.
உங்கள் வாழ்த்து கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.
புத்தாண்டுக் கோலம் மிக அழகு, மினக்கெட்டுப் போட்டிருக்கிறீங்கள். 5 பாவைகள் அழகாகச் சொல்லியிருக்கிறீங்கள், எனக்கே இப்போதான் தெரியும்...
பதிலளிநீக்குஉடல் நலமில்லையோ?... அது வேறு நாடுகள் ஊர் போய் வந்தால் கொஞ்சம் அப்படித்தான் ஆகும், அனைத்தும் குணமாகிடும், திருஷ்டி சுத்திப் போடுங்கோ.
நேரம் கிடைக்கையில் மீண்டும் வருகிறேன்.
புத்தாண்டுக் கோலம் மிக அழகு, மினக்கெட்டுப் போட்டிருக்கிறீங்கள். //
நீக்குநன்றி அதிரா. சின்ன கோலம் தானே என்று நினைத்தால் வேலை கொடுத்து விட்டது. "பழைய நினைப்புதான் பேராண்டி" என்பது போல
நம் நினைப்புக்கும் நடை முறை வாழ்க்கைக்கும் சில முரண்படுகள் ஏற்படுகிறது. சின்ன கோலங்கள் போட்டு மார்கழி மாதம் மகிழ்ச்சி அடைந்து கொள்கிறேன்.
//5 பாவைகள் அழகாகச் சொல்லியிருக்கிறீங்கள், எனக்கே இப்போதான் தெரியும்...//
பல வருடங்களுக்கு முன் படித்துதான் தெரிந்து கொண்டு போட்டேன், உங்களுக்கு நினைவு இருக்காது என்று மீள் பதிவு போட்டு விட்டேன்.
//உடல் நலமில்லையோ?... அது வேறு நாடுகள் ஊர் போய் வந்தால் கொஞ்சம் அப்படித்தான் ஆகும்,//
நீங்கள் சொன்னது போல ஒரு மாதம் நல்ல அலைச்சல்.
ஏற்கனவே கால்வலி, அலைச்சலில் அதிகம் ஆகி விட்டது.
மருத்துவரிடம் போய் மருந்து மாத்திரைகள், உடற்பயிற்சி, கால் , இடுப்புக்கு மசாஜ் கருவிகள் மகன் வாங்கி கொடுத்து போனான்.
அவற்றின் பயன்பாடுகளால் நலமாகி வருகிறேன்.
//அனைத்தும் குணமாகிடும், திருஷ்டி சுத்திப் போடுங்கோ.
நேரம் கிடைக்கையில் மீண்டும் வருகிறேன்.//
அம்மா சொல்வது போல இருக்கிறது, சுத்திப்போடுகிறேன்.
நேரம் கிடைக்கும் போது வாங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ஏஞ்சல் எப்படி இருக்கிறார்? கேட்டதாக சொல்லுங்க. அவர்களுக்கும் வாழ்த்துகளை சொல்லுங்க.
எனக்கு பின்னூட்டம் போட்ட போது பிலஹரியாக இருந்தவர் அதற்குள் மில்லியனெயார் எப்படி ஆனார் அந்த ரகசியத்தை சொன்னல் எல்லோருக்கும் உபயோகமடுமே! அதிரா.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. இந்தப்புத்தாண்டில் தாங்கள் நல்லபடியாக உடல்நலம் தேறி, கால் வலிகள் எல்லாம் குறைந்து நலமாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். வேறென்ன வேண்டும் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை தவிர...
பாசுரங்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டேன். திருப்பாவை, திருவெம்பாவை எனத் தெரியும். மற்ற இரண்டும் இப்போது தங்கள் பதிவின் வாயிலாக அறிந்து கொண்டேன். நன்றி.
/கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”/
இந்தப் பாடல் நல்ல கருத்துடன் மிக நன்றாக உள்ளது.
/இளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம்./
உண்மை. ஆனால், இளமை முழுவதும் கவனங்கள் பக்திப்பாதையில் ஒன்றி செயல்படாமல் ஒரு நடுத்தர முதுமை நெருங்கும் போதுதான் பக்தியில் பாடம் கற்கும்படி ஆகிறது. எல்லாம் இறைவன் செயல். அடுத்தப் பிறவி என்ற ஒன்றிருந்தால், அதில் ஆரம்ப நிலையிலேயே எனக்கு உன்னருளை தந்து விடு என இப்போதைக்கு தினமும் இறைவனிடம் வேண்டியபடி உள்ளேன். இறைவன் அவ்வாறு அருள்வான் என்ற நம்பிக்கையுடனும் உள்ளேன்.
/மார்கழி மாதம் திருப்பாவை,திருவெம்பாவை பாடி உயர்வு பெறுவோம்./
ஆம். அரங்கனின் அருளோடு, ஆண்டாள் நாச்சியாரின் அருளையும் பெறுவோம். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//பதிவு அருமையாக உள்ளது. இந்தப்புத்தாண்டில் தாங்கள் நல்லபடியாக உடல்நலம் தேறி, கால் வலிகள் எல்லாம் குறைந்து நலமாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். வேறென்ன வேண்டும் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை தவிர...//
நீக்குஆமாம், நோயற்ற வாழ்வே போதும் வேறு என்ன வேண்டும்.
இந்தப் பாடல் நல்ல கருத்துடன் மிக நன்றாக உள்ளது.//
ஆமாம் அதனால் தான் அதை பகிர்ந்தேன் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
//இளமை முழுவதும் கவனங்கள் பக்திப்பாதையில் ஒன்றி செயல்படாமல் ஒரு நடுத்தர முதுமை நெருங்கும் போதுதான் பக்தியில் பாடம் கற்கும்படி ஆகிறது. எல்லாம் இறைவன் செயல். அடுத்தப் பிறவி என்ற ஒன்றிருந்தால், அதில் ஆரம்ப நிலையிலேயே எனக்கு உன்னருளை தந்து விடு என இப்போதைக்கு தினமும் இறைவனிடம் வேண்டியபடி உள்ளேன். இறைவன் அவ்வாறு அருள்வான் என்ற நம்பிக்கையுடனும் உள்ளேன்.//
சிறு வயது முதலே பக்தி பாதையில் இருந்தாலும் அம்மா சொல்வதாலும் வேண்டும் போது சிறுவயதில் நம் ஆசைகளுக்கு ஏற்ப நம் பிரார்த்தனைகள் இருக்கும். இப்போது மனம் ஒரு பக்குவ நிலைக்கு வந்த பின் தான் வேண்டுதல் குறைந்து உள்ளது.
இறைவன் அருளை தந்து கொண்டு தான் இருக்கிறான். எப்போது நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பது அவன் விருப்பம்.
//அரங்கனின் அருளோடு, ஆண்டாள் நாச்சியாரின் அருளையும் பெறுவோம். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
குடும்ப கடமைகளை முடித்து விட்டு மீண்டும் வந்து பதிவை படித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
நலம் வாழ்க..
பதிலளிநீக்குசிறப்பான பதிவு...
அன்பின் நல்வாழ்த்துகள்..
வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குநலம் வாழ்க..
சிறப்பான பதிவு...
அன்பின் நல்வாழ்த்துகள்..//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நல் வாழ்த்துகளுக்கும் நன்றி.
அரங்கனின் அருளோடு, ஆண்டாள் நாச்சியாரின் அருளையும் பெறுவோம்..
பதிலளிநீக்குஓம் ஹரி ஓம்..
//அரங்கனின் அருளோடு, ஆண்டாள் நாச்சியாரின் அருளையும் பெறுவோம்..//
நீக்குஆமாம், எல்லோருக்கும் அருள் கிடைக்கட்டும்.