வியாழன், 25 ஆகஸ்ட், 2022

லூரே கேவர்னஸ்





லுர்சி குகைகள் அல்லது லூரே கேவர்ன்ஸ் , லூரே குகை என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு மகன் அழைத்து போனான்.
அமெரிக்காவில் வர்ஜீனியாவில் உள்ள லூரேக்கு மேற்கே அமைந்து உள்ள  இயற்கையாக அமைந்த குகை. 1878 ஆம் ஆண்டில்   பூமிக்கு அடியில் அமைந்து இருக்கும் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது.

1893 ல், பால்டிமோர் ஜே. கெம்ப் பார்ட்லெட்டிற்குச் சொந்தமான இடம் லூரே கேவர்ன்ஸ் நிறுவனத்தால்  வாங்கப்பட்டது.
500 வருடங்களுக்கு முற்பட்டது என்று நம்பபடும் குகை.

மகன் நியூஜெர்சியில் இருந்த போது பார்த்த இடம். முதன் முதலில் பேரனை பார்க்க போன போது   சில இடங்கள் போனோம்.   8 மாத  குழந்தையை தூக்கி கொண்டு எங்களுடன் மருமகளும் வந்து  எல்லா இடங்களையும் சுற்றி காட்டினாள். போகும் இடங்களில் தங்கும் ஓட்டலில் அறைகளை முன் பதிவு செய்வது  என்று அனைத்தையும் உற்சாகமாக செய்தாள்.

பழைய நினைவுகளை மீட்ட  படங்களை பார்த்து கொண்டு இருந்தேன்.  இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் சேமிப்பாக  என் தளத்தில் இருக்கும்.

                                         நான், மகன், மருமகள் 
அவர்கள் முன்பே பார்த்து விட்டார்கள், தாங்கள் பார்த்த இடத்தை நாங்களும் பார்க்க அழைத்து போனார்கள்.
அனுமதி சீட்டு வாங்கி உள்ளே போனால் அடையாள அட்டை மற்றும் ஹெட் போன் கொடுத்தார்கள். குகையை பற்றிய விவரம் சொல்கிறார்கள். கேட்டுக் கொண்டே சுற்றி பார்த்தோம்.  ஏறுவதற்கு, இறங்குவதற்கு  எல்லாம் வசதியாக கைபிடியுடன் படிகள்  இருக்கிறது. 

என் கணவரும் மகனும்

 கணவர் மகிழ்ச்சியாக ரசித்துப்பார்த்தார்கள்

நானும் என் மகனும்

பேரன் தாத்தாவின் கைகளில் தூங்குகிறான்



சில இடங்களில் தண்ணீர் இருக்கிறது, அதில் குகையின் பிரிதிபலிப்பு தெரிகிறது 

நம் கண்களுக்கு ஒவ்வொரு மாதிரி தோற்றம் தரும் ஆலம் விழுதுகள் போல தெரியும் சுண்ணாம்பு படிம கற்கள்


ஜடா முடியுடன் முனிவர்கள் தவம் செய்து கொண்டு இருப்பது போலவும்,புற்று வடிவமாகவும் காட்சி அளிக்கிறது



குகைகுள்   பாறையில் தெரியும் இந்த தோற்றத்தை "வறுத்த முட்டைகள்" என்று சொல்கிறார்கள்


இது போல இருக்கிறது என்று மகன் சொன்னான்.

நான் பத்திரமாக பார்த்து வருகிறேனா என்று  திரும்பி ஒரு  பார்வை

 மக்கள் தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளி வழங்க  வாழ்த்தி இந்த கிணற்றில் காசு, பணத்தை   போடுகிறார்கள்.


அந்த பணம் ஒவ்வொரு ஆண்டும்  நன்கொடையாக வழங்க படுகிறது

இசை தூண்களும் இருக்கிறது


நான் எடுத்த படத்தை தேடினேன் கிடைக்கவில்லை அதனால் இசைக்கருவி படம் பட்டும் விக்கிமீடியாவில் போய் படம் எடுத்து போட்டு இருக்கிறேன். (நன்றி விக்கிமீடியா)

ஒருவர்  இந்த இசை  கருவியை வாசித்தார்  அந்த தூண்கள் எல்லாம் அதன் இசையை திரும்ப ஒலித்தது.

"மனிதனின் மேதைமை தன்மையும், கடவுளின் கரமும் பூரணமாக இணைந்து இருக்கிறது"  என்று சொல்கிறார்கள்.
இசையை மெய்மறந்து கேட்ட மக்கள்
.


வளர்ப்பு செல்லத்தை தோளில் சுமந்து வந்து குகையை பார்வை , அதுவும் பார்க்கிறது

இன்னும் வரும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

28 கருத்துகள்:

  1. படங்கள் அருமை .இந்தியாவில் இருந்து வரு உறவுகளை நான் அழைத்து சென்று காண்பிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      படங்கள் அருமை//
      நன்றி.

      இந்தியாவிலிருந்து வரும் உறவுகளை அழைத்து சென்று காட்டியது மகிழ்ச்சி. அவர்களுக்கு இந்த இடம் பிடித்து இருக்கும்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. இளைய வயதினராக நீங்களும் ஸாரும் படத்தில்.   ஸார் கையில் சுருள்முடி சுந்தரன் நிம்மதியாக தூங்கி கொண்டே வருகிறார்!  படங்கள் அழகு.  மிகவும் சுவாரஸ்யமான இடமாக இருக்கும் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      // ஸார் கையில் சுருள்முடி சுந்தரன் நிம்மதியாக தூங்கி கொண்டே வருகிறார்!//

      ஆமாம். அப்போது அவனுக்கு நல்ல சுருள் முடி.நிறைய இடங்கள் ஒரே நாளில் சுற்றிப்பார்த்த அலுப்பு பேரனுக்கு .
      படங்கள் அழகு.//

      நன்றி.

      //மிகவும் சுவாரஸ்யமான இடமாக இருக்கும் என்று தெரிகிறது.//

      மிகவும் சுவாரஸ்யமான இடம் தான். நான் அப்போது பதிவு போட்டு இருந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் பகிர்ந்து இருப்பேன்.
      நினைவில் உள்ளதை மட்டுமே இப்போது பகிர முடிகிறது.

      நீக்கு
  3. அவர்கள் ஊர் இசையை அங்கு வாசித்திருப்பார்கள்.  நம்மூர் அழகிய ராகம் ஒன்றை  அங்கு இசைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்..  ஸார் பின்தங்கி வரும் உங்களைக் காணோமே என்று திரும்பி காத்திருக்கும் அக்கறை ரசிக்க வைக்கிறது.  உங்கள் மகனின் கண்களில் விரிந்த வியப்பு தெரிகிறது!  அல்லது அப்பா அம்மாவை அழைத்துப்போய் இதை எல்லாம் காட்டும் குழந்தையின் உற்சாகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசை நன்றாக இருந்தது. நம்மூர் இசையை இசைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.
      நான் அப்போது கீழே விழுந்து கொண்டு இருந்த நேரம் அதனல் "கவனமாக வா "என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
      மகன் அப்பா ரசித்து எங்களை படம் எடுப்பதை வியந்து மகிழ்ச்சியாக பார்க்கிறான்.

      அவன் பார்த்தவைகளை எங்களை பார்க்க வைப்பதிலும் அவனுக்கு மகிழ்ச்சி. ஆமாம். இப்போதும் எங்கு போனாலும் படங்களை உற்சாகமாக எங்களுக்கு அனுப்பி வைப்பான்(இப்போது எனக்கு)

      முதல் தடவை வெகு நாட்கள் இருக்கவில்லை கொஞ்சநாட்கள்தான் இருந்தோம். அதற்குள் நிறைய இடங்களை மகனும், மருமகளும் பிளான் செய்து அழைத்து போய் காட்டினார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. படங்கள் அழகு, தெளிவு. நேரில் பார்த்தது போன்ற ஓர் உணர்வு. இதுபோன்ற குகையினை, மலேசியா, பத்துமலையில் பார்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு, தெளிவு. நேரில் பார்த்தது போன்ற ஓர் உணர்வு.//
      நன்றி.

      // இதுபோன்ற குகையினை, மலேசியா, பத்துமலையில் பார்த்திருக்கிறேன்//

      பத்துமலை முருகன் இருப்பதே குகை போன்ற் மலையில்தான் இல்லையா?

      நான் தொலைக்காட்சியில் அங்குள்ள குகைகளை பார்த்து இருக்கிறேன். நீங்கள் நேரில் பார்த்து வந்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  5. அழகான படங்கள்... மனதிற்கு வேதனை தந்தாலும் ஒருவிதத்தில் ஆறுதல் தரும் (என்று எண்ணுகிறேன் அம்மா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல நினைவுகள் வேதனை அளித்தாலும் படங்கள் ஆறுதல் தருகிறது.
      அவர்கள் அழைத்து போன கோவில்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது நினைவுகள் பேசிய உரையாடல்கள் எல்லாம் நினைவுக்கு வரும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. படங்கள் மிகவும் அழகாக பிரமிப்பாக இருக்கிறது.

    தொடர்ந்து படங்கள் வரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கும், பதிவை தொடர வாழ்த்தியதற்கும் நன்றி.
      தொட ர்ந்து போட எண்ணம். இறைஅருள் நடத்தி வைக்க வேண்டும்.

      நீக்கு
  7. கோமதிக்கா வாவ்! படங்கள் செமையாக இருக்கின்றன.

    உங்கள் மகன், மாமாவின் ஜாடையில் இருக்கிறார். அவர்கள் இருவரும் இருக்கும் படத்தில் அண்ணன் தம்பி என்று சொல்லலாம் போல இருக்கிறார்கள்!! மாமா அத்தனை இளமை!! அகத்தின் அழகுதானே முகத்தில்! இருவரது முகங்களும், உங்கள் முகமும் அத்தனை ரசனையாக இருக்கின்றன அக்கா. மனதைச் சொல்லும் முகங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன் வாழ்க வளமுடன்

      //உங்கள் மகன், மாமாவின் ஜாடையில் இருக்கிறார். அவர்கள் இருவரும் இருக்கும் படத்தில் அண்ணன் தம்பி என்று சொல்லலாம் போல இருக்கிறார்கள்!! //

      அப்பாவும், மகனும் ஒரே மாதிரி உடை அணிவார்கள் முன்பு பக்கத்து வீட்டினர் நீங்கள் சொல்வது போலதான் சொல்வார்கள்.
      மகள் கல்லூரிக்கு போன போது உன் அண்ணாவா என்று எல்லோரும் கேட்டார்களாம். மாமா வந்து என்னிடம் பெருமையாக சொன்னார்கள்.

      அப்போது மகிழ்ச்சியான தருணம். அதுதான் மகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது. பேரன் அங்கு பிறந்தான் அவனை பார்க்க போய் இருந்தோம்.

      நீக்கு
  8. அரக்குப் பள்ளத்தாக்கு போரா குகைகள் போலவே இருக்கின்றன, கோமதிக்கா. ஆனால் அங்கு வெளிச்சம் நன்றாகப் போட்டிருக்கிறார்கள், படங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. அதனால் பாறை வடிவங்கள் மிக அழகாகத் தெரிகின்றன.

    அங்கும் நம்மூர் போல பைச்கா போடுகிறார்கள் இல்லையா...

    இங்கு வண்ண வண்ண விளக்குகள் அதுவும் வண்ணங்கள் மாறிக் கொண்டே இருப்பதாகப் போட்டிருக்கிறார்கள். கேமராவில் எடுப்பது அதுவும் என் கேமராவில் பிரச்சனையும் இருந்ததால் படங்கள் ரொம்பத் தெளிவாக வரவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அரக்குப் பள்ளத்தாக்கு போரா குகைகள் போலவே இருக்கின்றன, கோமதிக்கா. ஆனால் அங்கு வெளிச்சம் நன்றாகப் போட்டிருக்கிறார்கள், படங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. அதனால் பாறை வடிவங்கள் மிக அழகாகத் தெரிகின்றன.//

      ஆமாம், நீங்கள் சொல்வது போல குகைகள் அழகுதான். நிறைய இடங்களில் இன்னும் வியக்க வைக்கும் குகைகள் இருக்கிறதாம். படங்கள் பார்த்தேன். சிலைடங்களில் இருட்டும் இருக்கிறது கீதா. சில இடங்களில் வித்தியாசமாக இருக்கும் இடத்திற்கு மட்டும் வெளிச்சம கொடுத்து இருந்தார்கள்.

      //அங்கும் நம்மூர் போல பைச்கா போடுகிறார்கள் இல்லையா...//

      ஆமாம், அந்த பணம் நல்ல விஷயங்களுக்கு பயன் ஆகிறது.
      நீங்கள் பார்த்த குகையில் வண்ண வண்ண விளக்குகள் மாறி மாறி வந்தால் படம் எடுப்பது சிரமம் தான்.
      இருந்தாலும் நீங்கள் பகிர்ந்த குகை தெரிகிறது.

      //அக்கா, நீங்களும் அந்த குகைப்படங்களைப் போடுங்கள் பழசாக இருந்தால் என்ன? போடுங்கள்//

      நீங்கள் போடுங்க அக்கா பதிவு என்றதால்தான் டிராப்பிட்டில் சேமித்தது விரைவில் வெளி வந்து இருக்கிறது. உங்களுக்கு நன்றி கீதா.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. குழந்தை கவின் செம க்யூட். சுருட்டை முடி, வளர்ந்த பிறகும் கூட சுருட்டை முடி சில படங்களில் தெரிந்தது கோமதிக்கா.
    உங்கள் மருமகள் உற்சாகமாகக் கூட்டிச் சென்றது மகிழ்வான விஷயம். மாமா இப்படியான இடங்களை மிகவும் ஆர்வமாகப் பார்த்திருப்பார்.

    நீங்கள் பாதுகாப்பாக வருகிறீர்களாஎ என்று நின்று பார்க்கும் மாமாவுக்கு ஆகா போட வைத்தது. நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மாமாவின் கைகளில் கவின்!! அழகான படம்.

    அருமையான பயணம். படங்கள் மிக அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அவனுக்கு இப்போதும் முடி வெட்டாமல் இருந்தால் சுருட்டை முடி தெரியும்
    குழந்தை பிறந்து எட்டு மாதம் ஆன போதும் உற்சாகமாக எங்களுடன் வந்தாள், கவினும் தொந்திரவு செய்யாமல் வந்தான்.
    மாமா அனைத்தையும் ரசித்தார்கள். ஆர்வமாக பார்த்தார்கள் கீதா.
    எப்போது போனாலும் கவனம், கீழே பார்த்துவா என்று சொல்லாமல் இருக்க மாட்டார்கள். இப்போதும் எங்காவது போனால் அவர்கள் சொல்லுவது காதில் ஒலிக்கும்." படியில் பார்த்து ஏறு, இறங்கும் போது கவனமாய் இறங்கு" என்பார்கள்.

    படங்களை பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  11. இதைப் போன்ற குகைகள் டெனிசிக்கும் அட்லான்டாவிற்கும் இடையிலும் ஒரு இடத்தில் உள்ளன. அதைப் போலவே ஹூஸ்டனில் இருந்து செயின்ட் அன்டானியோ என்னும் இடத்திற்குப் போனப்போ அங்கேயும் அதே போன்ற குகைகள் இருக்கின்றன. நாங்களும் போயிட்டு வந்து செயின்ட் அன்டானியோவில் பார்த்ததை எழுதி இருந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் , வாழ்க வளமுடன்
      இப்போது உடம்பு தேவலையா?
      துர்கா இன்னும் வரலையா?
      அன்டானியோவில் உள்ள குகையை பார்த்து வந்து பதிவு போட்டு இருக்கிறீர்களா மகிழ்ச்சி.
      நிறைய குகைகள் இருக்கிறது.
      வாய்ப்பு கிடைத்து இந்த குகையைப்பார்க்க.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. துர்கா வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டனவே!திங்களன்று திரும்பிச் செல்கின்றனர். புதன் அன்று சென்னையில் இருந்து நைஜீரியாவுக்குக் கிளம்புகின்றனர். உடம்பு இரண்டு நாட்களாகக் கொஞ்சம் பரவாயில்லை.

      நீக்கு
  12. துர்கா குலதெய்வம் கோவிலுக்கு போய் இருப்பதாய் சொன்னீர்கள் எங்கள் ப்ளாக்கில், .கோவிலுக்கு போய் விட்டு வந்து விட்டாளா குழந்தை என்று கேட்டேன்.

    அதற்குள் ஊருக்கு போகும் நாள் நெருங்கி விட்டதே! அதுதான் உங்களுக்கு வேலை ஒன்று ஓடவில்லை. குழந்தைகள் வந்து விட்டு திரும்பினால் மனதும், வீடும் வெறுமையாக இருக்கும்.
    உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
    உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. குகைகள் மிக அழகான படங்கள். நல்ல அன்பான குடும்பம். கணவைன் அன்பான கவனிப்பு. எல்லோரது மகிழ்ச்சியும் தெரிகிறது.

    அருமையான படங்கள் தெளிவாகவும் இருக்கின்றன. ரசித்துப் பார்த்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //குகைகள் மிக அழகான படங்கள். நல்ல அன்பான குடும்பம். கணவைன் அன்பான கவனிப்பு. எல்லோரது மகிழ்ச்சியும் தெரிகிறது.//

      நன்றி.

      படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ

      நீக்கு
  14. அக்கா காலையில் இங்கு போட்டும் நிற்கும் கருத்து....அந்த வாசிக்கப்பட்ட இசை..தூண்களில் திரும்ப ஒலித்தது இல்லையா? இங்கு.எனக்கு சுதீந்திரம் கோயில் தூண்களில் நேரடியாகத் தட்டினால் சரிகம வரும் என்று சொல்வார்கள் அது போல வேறு ஒரு கோயிலிலும் நானே தட்டிக் கேட்டிருக்கிறேன் அது டக்கென்று மறந்துவிட்டது.

    இங்கு குஜராத்தில் இப்படிப் பாறையில் நாதம் எழும்பும் என்று சொல்லி ஒருவர் தட்டிக் காட்டும் வீடியோ ஒன்று பார்த்திருக்கிறேன்...இதோ அதன் சுட்டி

    https://www.facebook.com/MotionPictureSoundEditors/videos/ringing-rocks-in-indiathere-has-been-a-great-deal-of-controversy-concerning-the-/1272299376132276/

    அழகான நாதம் கேட்கிறது.

    அப்புறம் அந்தப் படத்தில் முனிவர்கள் ஆமாம் ஜடாமுடிதரித்து தவம் செய்வது போலத்தான் இருக்கிறது எனக்கும் அப்படித்தான் தோன்றியது கோமதிக்கா...மற்றும் நிறையப்பேர் வரிசையாக உட்கார்ந்து தவம் செய்வது போல் ...ரொம்ப அழகானபடம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இசைக்கருவி கல்லில் தட்டினால் ஒலி எழும்பும் வகையில் தயார் செய்யப்பட்டு உள்ளது. குகையில் பேசினால் எதிரொலிக்கும் இல்லையா ! அது போல அந்த கருவியில் இசைக்கும் போது அந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு தூண் பக்கம் இருந்தும் அருமையான எதிரொலி வருகிறது.
      சுதீந்திரம், திருநெல்வேலியில் எல்லாம் இசை தூண் உண்டு.
      மதுரை ஆயிரம் கால் மண்டபத்தில் இசை தூண் இருக்கிறது.
      தரங்கம்பாடியில் படிகள் சரிகம வரும்.
      நீங்கள் அனுப்பிய முகநூல் பதிவு பார்த்தேன் இசைக்கும் கல் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

      //அப்புறம் அந்தப் படத்தில் முனிவர்கள் ஆமாம் ஜடாமுடிதரித்து தவம் செய்வது போலத்தான் இருக்கிறது எனக்கும் அப்படித்தான் தோன்றியது கோமதிக்கா...மற்றும் நிறையப்பேர் வரிசையாக உட்கார்ந்து தவம் செய்வது போல் ...ரொம்ப அழகானபடம்//

      உங்களுக்கும் அப்படி காட்சி அளித்தது மகிழ்ச்சி.
      உங்களுக்கு தோன்றிய காட்சியும் அருமை.
      அடுத்த பதிவு போட்டு விட்டேன்.
      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.

      நீக்கு
  15. உங்கள் இனிய நினைவுகளை மீட்டிப் பார்த்தது ஒரு விதத்தில் கொஞ்சம் இதமாக இருந்திருக்கும். முன்பெல்லாம் யாரும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. உங்கள் சேமிப்பாக வந்திருக்கும் இப்பதிவு எங்களையும் அங்கே கூட்டிச் சென்றது. தகவல்கள், படங்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் யாவும் அருமை.

    பதிலளிநீக்கு