திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை
சேர்ந்த்து. திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,
(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக
கொண்டது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த போது
வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர்
இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம்.
அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால்
இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.
அமிர்தகுடத்தை மறைத்தவிநாயகர் கள்ளவாரண பிள்ளையார் என்று
அழைக்கப்படுகிறார். இவர் மீது அபிராபி பட்டர் பாடல் பாடி இருக்கிறார்.
மஹாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மை.
சிவபக்திக்காக தனது பக்தன் மார்க்கண்டனுக்கு என்றும்
16 வயது சிரஞ்சீவி வரம் அளித்து தனது இடது பாதத்தினால்
எமனை உதைத்து சமஹ்காரம் செய்தார், பின் பூமாதேவிக்காக
எமனை அனுக்ரஹம் செய்த சிறப்பு ஸ்தலம்.
காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால், மிருத்யுஞ்ஜெயமூர்த்தியாக விளங்கும்இந்த சுவாமியை தன் 59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பமான
காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால், மிருத்யுஞ்ஜெயமூர்த்தியாக விளங்கும்இந்த சுவாமியை தன் 59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பமான
“உக்ரரத சாந்திக்கும் “60 வய்து பூர்த்தி 61 வயது
ஆரம்பமான “சஷ்டியப்தபூர்த்தி” வைபவத்திற்கும்
69 வயது பூர்த்தி 70 வயது ஆரம்பமான “பீமரதசாந்தி” வைபவத்திற்கும் ,
80 வயது ஆரம்பமன “சதாபிஷேகம் “மற்றும் “ஆயிஷ்ய ஹோமம்”
ஜாதகரீதியான மிருத்யுஞ்ஜெய ஹோமங்களுக்கு கலசங்களில்
பூஜை செய்து ஹோமங்கள் செய்து நலம் பெறுவது சிறப்புடையது.
சரபோஜி அரசர் காலத்தில் தனது பக்தனுக்கு தை அமாவாசை அன்று முழு
பெளர்ணமியாக்கி “அபிராமி அந்தாதி “ அருளச் செய்த சிறப்புடையது.
63 நாயன் மார்களில் குங்கிலிய நாயனார் காரிநாயனார்
சரபோஜி அரசர் காலத்தில் தனது பக்தனுக்கு தை அமாவாசை அன்று முழு
பெளர்ணமியாக்கி “அபிராமி அந்தாதி “ அருளச் செய்த சிறப்புடையது.
63 நாயன் மார்களில் குங்கிலிய நாயனார் காரிநாயனார்
சிவத்தொண்டு ஆற்றி அருள் பெற்ற ஸ்தலம்.
கார்த்திகை மாதத்தில் வரும் (திங்கள்கிழமை) சோமவாரத்தில் 1008
சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது மிகச்சிறப்புடையது.
சித்திரை மாதம் மகநட்சத்திரத்தில் கால் சம்ஹார பெருவிழாவும், சித்ரா
பெளணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் நடைபெறும்.
ஒருமுறை சரபோஜி அரசர் கோவிலுக்கு வந்தாராம், அபிராமி அம்மனை
சித்திரை மாதம் மகநட்சத்திரத்தில் கால் சம்ஹார பெருவிழாவும், சித்ரா
பெளணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் நடைபெறும்.
ஒருமுறை சரபோஜி அரசர் கோவிலுக்கு வந்தாராம், அபிராமி அம்மனை
தரிசிக்க. அப்போது அம்மன் கோவிலில் இருந்த அம்மன் மேல் மிக பிரியம்
உள்ள அபிராமி பட்டர் என்பவர் இந்த உலகை மறந்து அம்மன் நினைவில்
கண்மூடி இருந்தார். அப்போது ராஜா தான் வந்ததுகூட தெரியாமல் இப்படி இருக்கிறாரே என்று கோபப்பட அங்குள்ளவர்கள் அவர் அம்மன் நினைவில் தியானத்தில் இருக்கிறார் என்று சொல்ல, இன்று என்ன திதி என்று அரசர்
கேட்க, அதற்கு அவர் மெய் மறந்த நிலையில் பெளர்ணமி என்று சொல்ல,
அவர் இன்று அமாவாசை அல்லவா இவர் பெளர்ணமி என்கிறரே இன்று பெளர்ணமியைக் காட்டவில்லை என்றால் தண்டனை
என்ற போது அபிராமி பட்டர் தன்னை சொல்லவைத்தது
அன்னைதான் அவளே கதி என்று அபிராமி
அந்தாதி பாட, தாய் காட்சி கொடுத்து தன் காது தோட்டை எடுத்து
வானத்தில் வீசி அமாவாசையை பெளர்ணமி ஆக்கினார் என்பது வரலாறு.
என் கணவர் வரைந்த ஓவியம்
தன் குழந்தைக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னை இறங்கி வருவாள்
இல்லையா? வந்தாள் அருளும் தந்தாள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை நாளன்று அனனை அற்புதம் செய்த அந்த நாள் இங்கு கொண்டாடப்படுகிறது.
நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.
அந்த விழாவில் 1000 குடத்திற்கு மேல் மக்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்தார்கள். விளக்கு பூஜை நடந்தது. நவசக்தி அர்ச்சனை, இரவு
நடைபெறும் என்றார்கள். அம்மன் சன்னதியில் மலர் விதானம் அமைக்க பட்டது.நேற்று அற்புத காட்சியாக அபிராமிஅம்மைக்கு நவரத்தின அங்கி புதிதாக செய்திருந்தார்கள். அம்மன் போன்ற உருவம் செய்து அதற்கு அந்த நவரத்தின அங்கியை அணிவித்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.
என் கணவர் வரைந்த ஓவியம்
தன் குழந்தைக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னை இறங்கி வருவாள்
இல்லையா? வந்தாள் அருளும் தந்தாள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை நாளன்று அனனை அற்புதம் செய்த அந்த நாள் இங்கு கொண்டாடப்படுகிறது.
அன்னையின் நந்தவனம் |
அன்னையின் நந்தவனம் |
நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.
அபிராமி சந்நிதியில் மலர் விதானம் அமைக்கும் பணி |
அந்த விழாவில் 1000 குடத்திற்கு மேல் மக்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்தார்கள். விளக்கு பூஜை நடந்தது. நவசக்தி அர்ச்சனை, இரவு
நடைபெறும் என்றார்கள். அம்மன் சன்னதியில் மலர் விதானம் அமைக்க பட்டது.நேற்று அற்புத காட்சியாக அபிராமிஅம்மைக்கு நவரத்தின அங்கி புதிதாக செய்திருந்தார்கள். அம்மன் போன்ற உருவம் செய்து அதற்கு அந்த நவரத்தின அங்கியை அணிவித்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நவரத்தின அங்கி அலங்காரம்-புறப்படுமுன் |
நவரத்தின அங்கியுடன் புறப்பாடு |
கண்கொள்ளாக் காட்சி |
பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.
பங்குனி மாதம் 13 ம் தேதி திருக்கடையூரில் மகா கும்பாபிஷேகம் நடக்க
இருப்பதாக தருமை ஆதீனம் அவர்கள் சொன்ன செய்தியை
படித்தவுடன் திருக்கடையூர் அன்னை நினைவும் பழைய
பதிவின் நினைவும் வந்தது. தை அமாவாசை மிகவும் சிறப்பு பெற்ற
நாள்
அதனால் இந்த மீள் பதிவு.
சகோ துரை செல்வராஜூ அவர்களும் தன் வலைத்தளத்தில் உச்சித் திலகம் என்ற பதிவில் அபிராமி அந்தாதி
பாடலை பகிர்ந்து இருக்கிறார். பாடலை பாடி பதிவை படிக்கலாம்.
"அந்தாதி எனும் ஒலி கேட்டு வானில் வந்தது முழுமதி ஓளி"
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------
ஸார் வரைந்த ஓவியம் சிறப்பு. முன்னரே பார்த்த நினைவும் இருக்கிறது. திருக்கடையூர் சென்று வந்த நினைவுகள் எனக்கும்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குமுன்னரே பார்த்த நினைவு இருக்கும், இரண்டு தடவை இந்த பதிவை போட்டு விட்டேன். நிறைய பதிவுகள் இருக்கு எழுத. இருந்தாலும் இப்போது நேரம் இல்லை. அதனால் மீள்பதிவு. இன்று இந்த பதிவு பொருத்தமாய் இருக்கும் என்பதால் இந்த பகிர்வு.
மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி திருக்கடையூர் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து கொண்டு இருந்தது.
இப்போது சாரின் அண்ணாவிற்கு “சதாபிஷேகம்" ஆச்சு போன மாதம் கலந்து கொள்ள முடியவில்லை.
உங்களுக்கு திருக்கடையூர் நினைவுகள் , உங்கள் அப்பாவின் புத்தகத்தில் இந்த கோயிலின் நந்தவனம் இடம் பெற்றதும் என் நினைவுகளில் வந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. அபிராமி அன்னையை தரிசித்துக் கொண்டேன். நவரத்தின அங்கியுடன் அம்மனின் அலங்கார திருவுருவம், மற்றும் வீதி உலா கண்டுகந்தேன். நல்ல விபரமாக அபிராமி பட்டரின் கதை தொகுப்பையும் வாசித்து மகிழ்ந்தேன். இப்போதுதான் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் பதிவுக்கும் சென்று அபிராமி அந்தாதி பாடல்களை கண்டு பாடி அன்னையை தரிசித்து வந்தேன். இன்று அன்னையை பக்தியுடன் தொழ வைத்த உங்கள் இருவருக்கும் என் மனமுவந்த நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஅபிராமி அம்மனை தரிசனம் செய்து அபிராமி அந்தாதி பாடல்களை பாடியது மகிழ்ச்சி.
கதை தொகுப்பு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தை அமாவாசை என்றாலே அபிராமி அந்தாதிதான் நினைவுக்கு வரும். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//தை அமாவாசை என்றாலே அபிராமி அந்தாதிதான் நினைவுக்கு வரும்//
ஆமாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிவினையும் படங்களையும் பார்த்து ரசித்தேன். சமீபத்தில் சென்று வந்த கோவில் என்பதால் இன்னமும் ரசிக்க முடிந்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குடெல்லி நண்பர் மணிவிழாவில் கலந்து கொண்டு பதிவு போட்டீர்கள், நினைவு இருக்கிறது. அடுத்த தடவை வந்தால் கோயில் மிக அழகாய் இருக்கும், கும்பாபிஷேகம் நடக்க போகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//நேற்று. (09/02/2013) தை அமாவாசை//
பதிலளிநீக்குஇது என்ன தேதி பழைய பதிவில் உள்ளதோ ?
சிறப்பான படங்கள் தரிசனம் நன்று. நிறைய வரலாற்று விடயங்கள் தந்தமைக்கு நன்றி சகோ
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபழைய பதிவுதான். அப்படியே போட்டு விட்டேன்.
புதிய பதிவுகள் போட வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஓவியம் அற்புதம்...
பதிலளிநீக்குபடங்களும் அருமை...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஓவியத்தையும், படங்களையும் ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கோமதிக்கா அழகான விவரணம், கோயில் பற்றிய விவரங்களும், புராணக் கதையும், படங்களும் சிறப்பு. அபிராமி அந்தாதியில் மூன்று பாடல்கள் மட்டும் மனப்பாடம். கலையாத கல்வியும், தனம் தரும், கடைசிப் பாடல் ஆத்தாளை ....
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா அழகான விவரணம், கோயில் பற்றிய விவரங்களும், புராணக் கதையும், படங்களும் சிறப்பு.//
நன்றி கீதா.
//அபிராமி அந்தாதியில் மூன்று பாடல்கள் மட்டும் மனப்பாடம். கலையாத கல்வியும், தனம் தரும், கடைசிப் பாடல் ஆத்தாளை ....//
அது போதுமே!கூட்டு வழிபாட்டில் சேர்ந்து பாடும் போது அடுத்த அடுத்த வரிகள் நினைவுக்கு வந்து விடும். தனியாக பாடினால் புத்தகம் பார்த்துதான் படிப்பேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
திருக்கடவூர் சென்றிருக்கிறேன் பல வருடங்கள் முன்பு. படங்களும் விவரங்களும் மிகவும் சிறப்பு.
பதிலளிநீக்குஅபிராமி அம்மையை தினமும் வணங்குவதும் உண்டு. அம்மையின் பெயர்தான் என் மகளின் பெயரும்.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களும் விவரங்களும் மிகவும் சிறப்பு.//
நன்றி.
உங்கள் மகளுக்கு அபிராமி அம்மையின் பெயர் என்று கேட்டவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தினம் அம்மையின் பெயர் உச்சரிக்கபடுவதே எல்லா நலங்களும் வந்து சேரும் குழந்தைக்கும் வீட்டுக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பழைய பதிவு என்றாலும் அருமை.. அருமை..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//பழைய பதிவு என்றாலும் அருமை.. அருமை..
வாழ்க நலம்..//
நன்றி, நன்றி.
திருவீழிமிழலை, திருப்பூந்துருத்தி, திருமறைக்காடு - தலங்களைப் போல திருக்கடவூர் தலத்திலும் அப்பர் ஸ்வாமிகளும் ஞான சம்பந்தப் பெருமானும் தங்கி இருந்திருக்கின்றார்கள் என்றொரு திருக்குறிப்பு உண்டு..
பதிலளிநீக்குசிவாலயங்களில் குங்கிலியத் தூபம் இட்டு சேவை புரிந்த கலய நாயனார் இவ்வூரினர்..
திருக்கடவூர் என்று தான் சொல்ல வேண்டும்..
அதுவே புண்ணியம்..
எல்லாப் பேருந்துகளிலும் தவறான உச்சரிப்பே..
ஊடகங்களும் அவற்றின் பங்கைச் சரியாகச் செய்கின்றன..
அபிராமவல்லி அருளால் நல்லோர் அனைவரும் நலம் பெற்று வாழ்க..
//திருவீழிமிழலை, திருப்பூந்துருத்தி, திருமறைக்காடு - தலங்களைப் போல திருக்கடவூர் தலத்திலும் அப்பர் ஸ்வாமிகளும் ஞான சம்பந்தப் பெருமானும் தங்கி இருந்திருக்கின்றார்கள் என்றொரு திருக்குறிப்பு உண்டு..//
பதிலளிநீக்குஆமாம், அவர்கள் இருவரும் சென்று வந்த சாட்சியாக
சுவாமி சன்னதி போகும் கோபுரத்தின் மேல் (கொடி மரம் பக்கம் இருந்து பார்க்கலாம்)
சம்பந்தரை பல்லக்கில் தூக்கி செல்லும் காட்சி இருக்கும்.
அப்பர் எங்குற்றார் என்று சம்பந்தர் கேட்க்கும் போது அடியேன் இங்குற்றேன் என்று சொல்லும் காட்சி அழகாய் சிலை வடித்து இருப்பார்கள்.
ஊரின் பேர் நிறைய இடங்களில் பேச்சு வழக்கில் மாறி விட்டது உண்மையே!
//அபிராமவல்லி அருளால் நல்லோர் அனைவரும் நலம் பெற்று வாழ்க..//
உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நன்றி.
பலமுறை தரிசித்த ஊர். இங்கே வந்த பின்னரும் 2,3 முறை சென்றோம். அபிராமி அந்தாதியின் சிறப்பும் அன்னையின் தரிசனமும் உங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. நவரத்தின அங்கி சாற்றிய விபரம் எல்லாம் தெரியாது. இப்போது கண்ணாரக் க்ண்டு கொண்டேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//பலமுறை தரிசித்த ஊர். இங்கே வந்த பின்னரும் 2,3 முறை சென்றோம். //
நல்லது. அன்னையின் அருள் பலமுறை பார்க்கும் பாக்கியம் கிடைத்து இருக்கிறது.
2013 ல் அங்கி சாற்றினார்கள்.. பழைய பதிவு.
தருமை ஆதீனம் கும்பாபிஷேகம் நடக்கபோவதை சொன்னதும் இந்த பதிவை மீள்பதிவாக போட ஆசை வந்து விட்டது.
அம்மனை கண்ணாரக் கண்டு கொண்டேன் நானும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஓவியம் அருமை.
பதிலளிநீக்குடிசம்பர் 25ல் ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலில் தரிசனம். உங்களையும் சாரையும் நினைத்துக்கொண்டேன். சென்ற வாரம் ஜோதிஷ்குடி பற்றிய உங்கள் பதிவுகளையும் படித்தேன்.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//ஓவியம் அருமை.//
நன்றி.
//டிசம்பர் 25ல் ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலில் தரிசனம். உங்களையும் சாரையும் நினைத்துக்கொண்டேன்.//
எங்களை நினைத்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி.
//சென்ற வாரம் ஜோதிஷ்குடி பற்றிய உங்கள் பதிவுகளையும் படித்தேன்.//
பிள்ளை லோகாக்காரியாரை தரிசனம் செய்து வந்தீர்களா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஜ்யோதிஷ்குடி செல்லவில்லை. யாத்திரைக்கு ஏற்பாடு செய்தவர், பலர், அவ்வளவு தூரம் நடந்து வரமாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்.
நீக்குஅன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
எத்தனை அற்புதமான தை அமாவாசைப் பதிவு.
அம்மா அபிராமியே நேரில் வந்தது
போல இருக்கிறது.
பழைய பதிவானால் என்ன அம்மா. எல்லோருக்கும் நல்ல விஷயங்களைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கிறதே.
இப்போதிருக்கும் வேலைகளுக்கு நடுவில் நீங்கள் பதிவிடுவதுதான்
பெருமை. அதுவும் ஸாரின் ஓவியமும் பார்க்கக் கிடைக்கிறது.
மிக மிக நன்றி கோமதி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//எத்தனை அற்புதமான தை அமாவாசைப் பதிவு.
அம்மா அபிராமியே நேரில் வந்தது
போல இருக்கிறது.//
நன்றி அக்கா.
//பழைய பதிவானால் என்ன அம்மா. எல்லோருக்கும் நல்ல விஷயங்களைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கிறதே.//
நன்றி அக்கா. எனக்கும் அன்னையின் புகழை சொல்ல பாக்கியம் கொடுத்து இருக்கிறாள் அன்னை.
அன்னையின் அருளால் அன்னையை வணங்க்குவோம்.
இப்போதிருக்கும் வேலைகளுக்கு நடுவில் நீங்கள் பதிவிடுவதுதான்
பெருமை. அதுவும் ஸாரின் ஓவியமும் பார்க்கக் கிடைக்கிறது.
மிக மிக நன்றி கோமதி.//
அதுதான் அக்கா மீள் பதிவுகள்.
சாரி ஓவியம் இந்த பதிவில் இருப்பதால் மீண்டும் பார்த்தேன், பகிர்ந்தேன்.
உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றிகள் அக்கா.
உங்கள் கணவர் வரைந்த ஓவியம் அருமை. திருக்கடவூர் அபிராமி கண்கொள்ளாக்காட்சி.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி