திங்கள், 24 மே, 2021

அமைதிப் பூங்கா





அரிசோனாவில் "அன்னையர் தினத்தில்" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு.

சிவப்பு பாறை தேசிய பூங்கா (Red Rock State Park)



சிவப்பு பாறை தேசிய பூங்காவிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும்  புத்தஸ்தூபி அமைந்து இருக்கும் இடம் போனோம். அந்த இடத்தின் பேர் அமிதாபா ஸ்தூபா அமைதிப் பூங்கா   (Amitabha Stupa and Peace Park)

 2004 ம் வருடம் முதல் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும்  செடோனாவில் அமைந்து இருக்கும்  இந்த அமிதாபா ஸ்தூபத்திற்கு வருகிறார்களாம். உலகெங்கிலும்  இருந்து மக்கள் இந்த அமைதியான இடத்திற்கு நாள்தோறும்  வந்து செல்கிறார்களாம். அதிகாலை முதல் மாலை வரை  திறந்து இருக்குமாம். இங்கு அனுமதி இலவசம். நன்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்படும். என்று போட்டு இருக்கிறது.
நாம் வளர்க்கும் அன்புச் செல்லங்களை(வளர்ப்பு பிராணிகளை) அழைத்து வரலாம், அவைகளை கையில் பிடித்துக் கொண்டு ஸ்தூபியைச் சுற்றி வரலாம். இந்த இடத்தின் தூய்மையைக் காக்க வேண்டும். குப்பைகளை பூங்காவில் போடாமல் வெளியே கொண்டு சென்று விடுங்கள்.  பாதையை மறுசீர் அமைக்க வேண்டாம். உங்கள் பாதுகாப்பு கருதியே சொல்கிறோம்.பிரார்த்தனை சக்கரத்தை    கடிகார திசையில் சுழற்றுமாறு  உங்களை அழைக்கிறோம்  , என்று  நாம் இந்த இடத்தில் நடந்து கொள்ளவேண்டியதை சொல்லும் அறிவிப்பு பலகைகள்.

புத்தர் ஸ்தூபி போகும் வழி 

போகும் பாதையில் மரத்தடியில் நிழலில் அமர்ந்து தியானம் செய்யலாம்.
சாஞ்சி ஸ்தூபி போன்று தோற்றம் அளிக்கும் மலை
இந்த மலையில் மேகம் மூடி இருப்பது கயிலை மலையில் பனி மூடி இருப்பது போல் இருக்கிறது.   மலைகளை ஒரு நாள் தனி  பதிவு போட எண்ணம்  இருக்கிறது. மாலை நேரத்தில் மலையில் சூரியஒளி படும் போது மலை நிறம் மாறுவது அழகு.



மரங்களில்  பறவைகளுக்கு உணவுக்  குடுவைகள் தொங்க விட்டு இருக்கிறார்கள்.

ஸ்தூபிக்கு போகும் வழியில் ஒரு மரத்தடியில்  நடராஜர் சிலை வைத்து இருந்தார்கள். சிலைக்கு அருகில் காசு வைத்து இருந்தார்கள்.

மரத்தடியில் மண், மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் பறவைகளுக்கு  தண்ணீர் வைத்து இருந்தார்கள்.

ஸ்தூபிக்கு பின் புறம் தெரியும் மலை
ஸ்தூபிக்கு முன் பக்கம் கல் பெஞ்சில் வைக்கப்பட்டு இருக்கும்
   மோதிரங்கள், ஜபமாலைகள், கையில் கட்டும் கயிறுகள் உள்ளன. புத்தருக்கு   தண்ணீர்  கிண்ணங்கள் வைத்து இருக்கிறார்கள்.      

ஸ்தூபி வணங்குவதற்கு மட்டுமே!

ஸ்தூபத்தில் புத்தர் இருக்கிறார் என்ற நம்பிக்கை.

//ஸ்தூபி, புத்தரது பரிநிர்வாணத்தைக் குறிக்கும் புனிதச் சின்னம். எனவே அது வழிபாடு பொருளாயிற்று. //
-நன்றி விக்கிப்பீடியா

இந்த இடத்தில் புத்தஸ்தூபி கட்டபட்டதின் நோக்கம்:-

ஸ்தூபி கட்டப்பட்டதின்  நோக்கம் அனைவருக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்க வேண்டும் என்பதுதானாம்.  போரை தவிர்ப்பதற்கும், பஞ்சத்தை போக்கி  வளம் கொழிக்கவும் , நலவாழ்வை அனைவருக்கும் அருளவும்  புத்தரை வணங்கி பிரார்த்தனை செய்ய  என்று  இந்த ஸ்தூபி கட்டப்பட்டு இருக்கிறது. ஸ்தூபியில் நோய்களை குணப்படுத்தும்  ஆற்றுலும் உள்ளதாம்.



மந்திரங்கள் உள்ள மணி  சுழலும் காட்சி சிறிய காணொளிதான் 
ஸ்தூபி இருக்கும் இடத்தின் காணொளி. இதுவும் சிறிய காணொளிதான்  பாருங்கள். மலையின் தோற்றமும், புத்தர் சிலையும், அசையும் கொடிகளும் அழகாய் இருக்கும்.




 



புத்தர் சிலை பார்ப்பதற்கு மரச்சிற்பம் போல் இருக்கிறது.. ஆனால் பேரன் தொட்டுப்பார்த்தான் இரும்பு உலோகம் போல் இருக்கிறது என்றான்.

எதிரில் உள்ள பெஞ்சில் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள்



 இந்த இடத்தை பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நாங்கள் குழுவாக வருகிறோம் என்று முன் அறிவிப்பு செய்தால் அவர்கள்  வந்து இந்த ஸ்தூபியின் ஆற்றல்களைப்பற்றி விளக்ககாட்சிகள் மூலம் விளக்குவார்களாம்.


போன் நம்பர் :- 1-877-788-7229 ல் அழைக்கலாம்.    amitabhastupa@tara.org க்கு மின்னஞ்சல் முகவரி.

பழனி மலையில் ( ஆனைப்பாதை ) ஏறி போகும் போது சிறிது  அமர்ந்து செல்ல கல் பெஞ்சுகள் அமைத்துஇருப்பார்கள், அதில் அமைத்தவர் பேர் இருக்கும். அது போல நினைவு பெஞ்ச் அமைத்து இருக்கிறார்கள் மலையில்.

போகும் போது ஒரு பாதை, வரும் போது வேறு பாதை வழியாக வர வேண்டும். ஏறி வரும் பாதை குறுகலாக இருப்பதால் இறங்குவதற்கு வேறு பாதை. இந்த கொரோனா காலத்தில்  வசதியாக இருந்தது.(ஒருவருக்கு ஒருவர் இடைவெளி கடைபிடிக்க வசதி)

இந்த இடத்தில் அமர்ந்து  மக்கள்  ஆரோக்கியம்  அமைதிக்காக  பிரார்த்தனை செய்கிறார்கள்.

அமைதியான  இடம் , பறவைகளின் ஒலி மட்டும் கேட்கும் ரம்மியமான இடம்.

இப்போது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும்  மனத்துயரங்களை துன்பங்களை போக்கி அமைதியான வாழ்க்கை வாழ அருளவேண்டும் புத்தபகவான்.

உலக மக்கள் அனைவரும் கொரோனா  அச்சம் நீங்கி இயல்பு வாழ்க்கை வாழ  வேண்டும் என்று சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்து விட்டு வந்தோம்.

புத்த கொள்கையில் முக்கியமானது  மக்களை மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபட வைப்பதும் ஆகும். 

புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார், உணர்த்தினார் புத்தர்.

இந்த மோசமான காலகட்டத்தில் நாம் நடந்து கொள்ளவேண்டியதை புரிந்துணர்ந்து  அமைதியாக இருந்தால் எல்லாம் நலமாகும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

45 கருத்துகள்:

  1. அமைதிப் பூங்கா பற்றிய படங்களும் விளக்கங்களும் அருமை... பல விதிமுறைகளை அங்கங்கே எழுதி வைத்திருப்பது நல்லதே...

    காணொளிகளை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      பல விதிமுறைகளை எழுதி வைத்து இருப்பது நல்லதுதான்.
      மக்கள் கடைபிடிப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. காணொளியை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. படங்களும், விளக்கங்களும் அருமை.

    கொரோனா பிடியிலிருந்து உலகை இறைவன்தான் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க் வளமுடன்

      //கொரோனா பிடியிலிருந்து உலகை இறைவன்தான் காக்க வேண்டும்.//

      ஆமாம் ஜி, இறைவந்தான் காக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் எப்போதும்போல் அழகு. புது இடங்களைப் பற்றி அறிந்துகொள்ளவே மகிழ்ச்சி.

    நடராஜர் சிலை..அதன் அருகில் உண்டியலா? ஆரம்பித்துவிட்டார்களா நம்மவர்கள்?

    மரத்தின் அருகில் தியானமா? பாம்பு வந்துடுமோ என்று மனசு அலைபாயுமே..அப்புறம் தியானம் எப்படி வரும்?

    பறவைக்கான உணவுக் குடுவைகள் - நெகிழ்ச்சியாக இருந்தது.

    புத்தர் சிலை அருகில் பேரன் படம் எடுத்துக்கொள்ளவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      புது இடம் பார்க்க மகிழ்ச்சி தந்தது உண்மை, அதுவும் அமைதியான இடம்.

      //நடராஜர் சிலை..அதன் அருகில் உண்டியலா? ஆரம்பித்துவிட்டார்களா நம்மவர்கள்?//

      உண்டியல் இல்லை, காசு மட்டும் அவர் காலடியில் வைத்து இருக்கிறார்கள்.
      பறவைகளுக்கு தண்ணீரும், உணவும் நெகிழ்ச்சிதான்.

      புத்தர் சிலை அருகே அமர்ந்து தியானம் செய்யுவது போல் ஒரு படம், ஒரு மரத்தடியில் கல் இருந்தது அதில் அமர்ந்து தியானம் செய்வது போல் படம் எடுத்தேன்.

      நீக்கு
  4. அவ்வளவு தூரம் நடந்ததற்கு, காலார அந்த சேர்களில் அமரலாம் போல்தான் இருக்கும். உட்கார்ந்து, தியானமாவது?

    மழை பெய்தால், சுகமாக சேரில் உட்கார்ந்துகொண்டு ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல் அமர்ந்து மலை அழகை ரசிக்கலாம். பறவைகளின் ஒலியை , காற்றின் ஒலியை கேட்கலாம். மழை பெய்யும் போது சேரில் அமர்ந்து ரசிக்கலாம்தான்.
      ஸ்தூபியைப் பார்த்துக் கொண்டு தியானம் செய்ய அமைத்து இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்களும் விவரணங்களும் ;அருமை. அங்கும் புத்தர் ஸ்தூபி இருப்பது மிகவும் சிறப்பு!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      புத்தர் ஸ்தூபி அந்த இடத்தில் அமைத்து இருப்பது சிறப்புதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. //ஸ்தூபி கட்டப்பட்டதின் நோக்கம் அனைவருக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்க வேண்டும் என்பதுதானாம். போரை தவிர்ப்பதற்கும், பஞ்சத்தை போக்கி வளம் கொழிக்கவும் , நலவாழ்வை அனைவருக்கும் அருளவும் புத்தரை வணங்கி பிரார்த்தனை செய்ய என்று இந்த ஸ்தூபி கட்டப்பட்டு இருக்கிறது.//

    அட! சூப்பர் இல்லையா கோமதிக்கா!?

    மந்திரம் மணி அந்த காணொளியும், ஸ்தூபி காணொளியும் நன்றாக இருக்கின்றன. மலை கொடி அசைவது எல்லாம் செம

    படங்கள் எலலம் ரொம்ப அழகாக இருக்கின்றன வழக்கம் போல்

    ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, ரெங்கன், வாழ்க வளமுடன்
      ஸ்தூபி கட்டப்பட்டதின் நோக்கம் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      காணொளிகளை பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      படங்களை ரசித்தமைக்கு நன்றி கீதா.

      நீக்கு
  7. பறவைகளுக்கு நீர், உணவு எல்லாம் வைத்திருப்பதும், தியானம் செய்ய ஆங்காங்கே இருக்கைகள் எல்லாம் இருப்பதும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. போக ஒரு வழி வருவதற்கு ஒரு வழி அதுவும் செம ஆமாம் கொரோனா காலத்தில் இடைவெளி அவசியம் இல்லையா..

    நடராஜர் சிலை யாராவது வைத்திருப்பாங்களோ? வீடுகளில் இருப்பது போல இருக்கிறது இல்லையா

    ஆமாம் அக்கா சாஞ்சி ஸ்தூபி போலவே இருக்கு எனக்கும் தோன்றியது

    கைலாய மலையில் மேகம் கவிழ்ந்திருப்பது போல இருக்கு என்ற படமும் அழகாக இருக்கிறது நமக்கு மனதில் ஓடும் எண்ணங்களின் பிரதிபலிப்பு இல்லையா...

    எல்லாமே சிறப்பகக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா காலத்தில் இடைவெளி அவசியம் இல்லையா..//

      ஆமாம் கீதா. நாங்கள் போனபோது இரண்டு மூன்று குடும்பங்கள் இருந்தன. எல்லோரும் மிகவும் தள்ளி தள்ளி நின்று தரிசனம் செய்தார்கள்.

      //நடராஜர் சிலை யாராவது வைத்திருப்பாங்களோ? வீடுகளில் இருப்பது போல இருக்கிறது இல்லையா//

      நடராஜர் சிலைகள் அழகுக்கு என்று எல்லா இடத்திலும் வைக்கிறார்கள் கீதா.
      காசு வைத்து இருப்பதுதான் புதிது.

      //கைலாய மலையில் மேகம் கவிழ்ந்திருப்பது போல இருக்கு என்ற படமும் அழகாக இருக்கிறது நமக்கு மனதில் ஓடும் எண்ணங்களின் பிரதிபலிப்பு இல்லையா.//

      மனதில் நிறைய தோற்றங்கள் கொடுக்கிறது சட்டென்று நிறம் மாறும் மலைகள் பார்க்க பார்க்க அழகுதான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      மலைகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  8. அழகான இடம். பிரார்த்தனை செய்ய உகந்த இடமாகத் தெரிகிறது.

    படங்களும் தகவல்களும் சிறப்பு. இந்தியாவில் இருக்கும் சில ஸ்தூபாக்களுக்குச் சென்று வந்தது நினைவில் பசுமையாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்

      //அழகான இடம். பிரார்த்தனை செய்ய உகந்த இடமாகத் தெரிகிறது.//

      ஆமாம் வெங்கட்.

      //இந்தியாவில் இருக்கும் சில ஸ்தூபாக்களுக்குச் சென்று வந்தது நினைவில் பசுமையாக.//

      ஆமாம், இந்தியாவில், இலங்கையில் பார்த்த ஸ்தூபிகள் நினைவுகளில் வந்து போனது எனக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  9. படங்கள் அழகு
    படிக்கப் படிக்க நேரில் சென்று வந்த உணர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. அமைதியான இடம் என்று தெரிகிறது.  இடங்களின் அழகு படங்களில் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      அமைதியான இடம், அழகான இடம்தான் ஸ்ரீராம். எப்போதும் ஓடி கொண்டே இருக்கும் மக்களை புத்தரின் இருப்பிடம் அமைதியாக அமர வைக்கிறது.

      நீக்கு
  11. குன்றுகளும், பின்னணியில் மேகங்களுடன் வானமும் அழகு.  உயரமான புத்தர் சிலை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குன்றுகளும், பின்னணியில் மேகங்களுடன் வானமும் அழகு.//

      ஆமாம் ஸ்ரீராம். மேகம் வரும் போது மலை சட்டென்று நிறம் மாறும், சூரியஒளி வரும் போது ஒரு கலர் வரும், மாலை நேரம் சூரியஒளிக் கதிர் பொன் வண்ணமாக மாற்றியது மலையை.

      நீக்கு
  12. சட்டென தரையில் ஒரு நடராஜர் சிலை.  கேபி படப் பாடல்காட்சி போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சட்டென தரையில் ஒரு நடராஜர் சிலை. கேபி படப் பாடல்காட்சி போல இருக்கிறது!//

      நல்ல ரசனை.

      மரத்தடியில் தன்னம் தனியாக அமர்ந்து இருக்கிறார்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. இந்த இடமே நிறைய இந்திய தன்மையுடன் இருக்கிறது. அனைத்து புகைப்படங்களும் அழகு! ஆனாலும் இந்த புகைப்படங்களைப்பார்க்கும்போது ஒரு தனிமையுணர்வு இருக்கிற மாதிரி தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      ஆமாம் இந்திய தனமையுடன் தான் இருக்கிறது.
      தனிமையான யாரும் அதிகம் வராத இடத்திற்கு தேடி போய் இருக்கிறோம்.
      கொரோனா அச்சத்தால் வந்தவர்களும் மிகவும் தள்ளி தள்ளி இருந்தார்கள்.

      புகைப்படத்தில் இரண்டு மூன்று பேர் இருப்பார்கள் படத்தில்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மனோ.

      நீக்கு
  14. கோமதி அக்கா நலம்தானே?..

    அழகிய படங்கள்.. அமைதியான சூழலாகவே இருக்குது. காணொளி அழகு.
    அந்தப்புத்தர் சிலையைப் பார்த்து, நானும் மரச்சிற்பம் என்றுதான் நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நான் நலம், நீங்கள் நலமா/
      அமைதியான இடம்தான்.
      மரச்சிற்பம் இல்லை அதிரா, பார்க்க அப்படி காட்சி அளிக்கிறது.
      காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அதிரா.

      நீக்கு
  15. மிக அருமையான இடம். இந்த ஊரில் புத்தருக்காக ஸ்தூபி!!

    அதுவும் அமைதிப் பூங்கா என்ற பெயருடன்.

    நடராஜர் சிலை இருப்பதுதான் இன்னும் அதிசயம்.
    மிகச் சூடாக இருந்திருக்குமே.

    நெல்லைத்தமிழனின் சந்தேகம் எனக்கும்.
    ஊர்வன இருக்குமோ என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //மிக அருமையான இடம். இந்த ஊரில் புத்தருக்காக ஸ்தூபி!!

      அதுவும் அமைதிப் பூங்கா என்ற பெயருடன்.//

      வியப்பை தருகிறதா? அமைதியான இடம் பொருத்தமான பேர்.

      //நடராஜர் சிலை இருப்பதுதான் இன்னும் அதிசயம்.
      மிகச் சூடாக இருந்திருக்குமே.//
      நடராஜர் சிலை அவர்களுக்கு பிடித்த சிலையாச்சே!

      சூடு இல்லை அக்கா காற்று சுகமாக வீசியது.

      அங்கு இருக்கும் போது நெல்லைத் தமிழன் சொன்னதை நினைத்து பார்க்கவில்ல்லை அக்கா.


      நீக்கு
  16. மிக ஆர்வமாக எடுக்கப்பட்டிருக்கும் படங்கள்.
    புத்தர் பின்னால் இருக்கும் மலையும் ஸ்தூப ரூபத்தில் இருக்கிறது.

    காணொளிகள் இரண்டும் அருமை.
    ஏதோ திபெத், நேபால் மாதிரி தோன்றியது.
    அவர்கள்தான் கோரிக்கைகளை எழுதி மரத்தில்
    கட்டுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    கொடிகள் வண்ண வண்ணமாக அசைவது சிறப்பு.
    புத்த பகவானை வழிபட்டாலே
    அமைதி கிடைக்கும் என்பார்கள். இந்தத் தொற்று காலத்தில்
    இறைவனை வழிபடுவதை விட வேறு ஒன்றும் தோன்றவில்லை.
    பதிவுக்கு மிக நன்றி மா கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எடுத்த படங்கள்தான் அக்கா.
      மலையும் மிக அழகுதான்.

      திபெத் , நேபாள் போலதான் இருக்கிறது.
      நம் கோரிக்கைகளை அங்கு கிடைத்த அனுபவம் எழுதி வைக்க நோட்டு வைத்து இருக்கிறார்கள். நாங்கள் அதன் பக்கத்தில் போகவில்லை. இரண்டு பேர் எழுதி கொண்டு இருந்தார்கள்.

      தொற்று காலத்தில் இறைவன் மட்டுமே துணை இப்போது மக்களுக்கு.
      அமைதி கிடைக்கும் தான் அருமையான இடம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. பஞ்சம் பிணி தீர்வதற்கும் நவீன உயிரி ஆயுதங்களைக கொண்டு போர்கள் மூளாதிருக்கவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //பஞ்சம் பிணி தீர்வதற்கும் நவீன உயிரி ஆயுதங்களைக கொண்டு போர்கள் மூளாதிருக்கவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்...//

      நீங்கள் சொல்வது போல் எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும்.


      நீக்கு
  18. அன்பும் அமைதியும் நிலவுவதற்கு புத்தர் வழி வகைகளைச் சொன்னார்...

    அப்படியான புத்தரை முதற்பொருளாகக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் அன்பும் அமைதியும் தான் அரிதாகி இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அன்பும் அமைதியும் நிலவுவதற்கு புத்தர் வழி சொன்னார்தான் அதை கடைபிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது!

      //அப்படியான புத்தரை முதற்பொருளாகக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் அன்பும் அமைதியும் தான் அரிதாகி இருக்கின்றன...//

      அன்பும் அமைதியும் நிலவ பிரார்த்தனை செய்வோம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  19. அன்பும், அமைதியும் தவழும் இடமாக இருக்கிறது. புத்தர் பின்னால் இருக்கும் மலையைப் பார்த்தால் அஹோபிலம் உக்ரஸ்தம்பம் போல் உள்ளது. மேகங்கள் தவழ்வது எனக்கு ஊட்டியையும் நினைவூட்டும். மலையின் நிறங்கள் மாறுவது ஒரு அற்புதம் தான். மன அமைதிக்கும், நிம்மதியாக உட்கார்ந்து இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்ற இடம். நல்லவேளையாகச் சுற்றுலாத் தலங்களின் கூட்டமும், வேகமும், பரபரப்பும் இங்கே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      அன்பும், அமைதியும் தவழும் இடமாகத்தான் இருக்கிறது.

      //புத்தர் பின்னால் இருக்கும் மலையைப் பார்த்தால் அஹோபிலம் உக்ரஸ்தம்பம் போல் உள்ளது.//

      நீங்கள் சொல்வது போல் அலைபேசியில் வைத்து இருந்த படத்தைப்பார்த்து பானுமதியும் அப்படித்தான் சொன்னார்கள் . நான் அஹோபிலம் பார்க்கவில்லை. அதனால் தெரியவில்லை. சிங்கமுகம் கொண்ட மலைகளை படம் எடுக்கும் போது நரசிம்மரை நினைத்துக் கொண்டேன்.

      ஊட்டி, கொடைக்கானலில் சட் சட் என்றும் மேகங்கள் சூழ்ந்து மலை அழகாய் காட்சி அளிக்கும்.

      //மன அமைதிக்கும், நிம்மதியாக உட்கார்ந்து இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்ற இடம்.//

      ஆமாம், மாலை ஆகி விட்டதால் நிறைய நேரம் அங்கு இருக்க முடியவில்லை. நங்கு ரசித்துபார்த்தபின் கிளம்பி வந்து விட்டோம்.

      //நல்லவேளையாகச் சுற்றுலாத் தலங்களின் கூட்டமும், வேகமும், பரபரப்பும் இங்கே இல்லை.//

      ஆமாம், அதனால்தான் இந்த இடத்தை தேர்வு செய்தான் மகன்.
      பத்துபேர் இருந்து இருப்பார்கள்.


      நீக்கு
  20. நடராஜர் அழகாய் இருக்கிறார். அவராக வந்திருக்க முடியாது! யார் கொண்டு வைத்தார்களோ! நல்ல அரிய சுற்றுலாத் தலங்கள். இவற்றை எல்லாம் உங்கள் மூலம் கேள்விப் படுவதோடு அல்லாமல் விரிவான விளக்கங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடராஜர் சிலையை அழகுக்கு கொண்டு வந்து வைத்து இருக்கலாம். மேலை நாடுகளில் நடராஜரை ஷோகேஸில் வைக்கிறார்கள். நிறைய இருக்கிறது சுற்றுலாத் தலங்கள். நம்மால் எல்லாவற்றையும் பார்க்க முடியாது. நம்மால் முடிந்ததை பார்க்கிறோம் கீதா.
      அங்கு போட்டு இருப்பதை படித்து தெரிந்ததை எழுதுகிறேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  21. ஏற்கனவே படித்து விட்டேன் என்று நினைத்து கடந்து சென்று விட்டேன். இப்போது பார்த்த பொழுதுதான் படிக்கவில்லை என்று தெரிந்தது.
    படங்களை பார்க்கும் பொழுதே அமைதியை உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      //ஏற்கனவே படித்து விட்டேன் என்று நினைத்து கடந்து சென்று விட்டேன். இப்போது பார்த்த பொழுதுதான் படிக்கவில்லை என்று தெரிந்தது.//

      ஓ சரி.

      //படங்களை பார்க்கும் பொழுதே அமைதியை உணர முடிகிறது.//

      ஆமாம், அமைதியான இடம்தான்.

      நீக்கு
  22. இந்த பதிவை படித்து விட்டேன் என்று நினைத்து கடந்து விட்டேன். அமைதிப் பூங்காவாக தெரிகிறது.
    இந்த சுழலும் மணி நேபாளத்தில் உண்டு என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சுழலும் மணி நேபாளத்தில் உண்டு என்று நினைக்கிறேன்//

      நேபாளத்தில், முக்திநாத் கோவில், மற்றும் புத்தஸ்தூபி உள்ள இடங்களில் எல்லாம் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு