வெள்ளி, 6 மார்ச், 2020

கண்ணாமூச்சி ரே ரே!

மனக்கவலை போக்கும்  பறவைகள்,  குழந்தைகள்-  இந்தப் பதிவில்.

போன பதிவில் கொஞ்சம் மனபாரத்தை இறக்கி வைத்தேன் உங்களிடம் . .இந்தப் பதிவில் அதிலிருந்து விடுபட வைத்தவர்களின் பகிர்வு.

என்ன ஒய்யாரம்!

நீ சீக்கீரம் சாப்பிட்டு விட்டு வா 

நீ நடந்து நடந்து பேசுகிறாய் எனக்கு கால்வலிக்கிறது உட்கார்ந்து கொள்கிறேன்

இன்று என்ன ரொட்டியா?
சோளம் போடவில்லையா அம்மா?


எனக்குப் பிடித்தது ரொட்டி, அம்மா!
நான் சாப்பிட்டு விட்டேன்  குழந்தைகளுக்குக் கொண்டுபோகிறேன்
ரொட்டி  எனக்கும் மிகவும் பிடிக்கும் 

காராபூந்தியுமா? சூப்பர்!

என்ன பார்வை! 


வயல்வெளியில், மரத்தடியில் விளையாடிய விளையாட்டு- காணொளியில்

  அடுக்குமாடிக் குடியிருப்புக் குழந்தைகள்   கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள்

குழந்தைகள்  கண்ணாமூச்சி விளையாட்டு- காருக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட பெண் குழந்தை

“கண்ணாமூச்சி ரேரே!
காட்டு மூச்சி ரேரே!
 உனக்கொரு பழமும்
எனக்கொரு பழமும் கொண்டு வா”

கண்டுபிடித்துவிட்டேன் வெளியே வா என்று கூப்பிடும் குழந்தை

சந்தோஷ ஒலிகள் எழுப்பி  வளாகத்தைச் சுற்றி விளையாடும் குழந்தைகள்
நம் சிறு வயது நினைவுகளைக் கொண்டு வரும் இந்த குழந்தைகளின் உற்சாகத்தைப்பார்க்கும் போது.


பேரனிடம் "கவினை எங்கே  காணோம் " என்ற விளையாட்டை விளையாடுவேன் உன் கூட   நீ சின்னப்பிள்ளையாக இருக்கும் போது, என்று சொன்னேன், உடனே  ஒளிந்து கொண்டு  விளையாடி மகிழ்வித்தான்.

சின்ன காணொளிதான் நீங்களும் பார்த்து மகிழலாம். 

பறவைகளையும், எங்கள் வளாகக் குழந்தைகள் விளையாட்டையும்   பேரன் விளையாட்டையும் ரசித்தீர்களா?

கண்ணாமூச்சி பாடலைத் தேடும் போது அருமையான , வித்தியாசமான பேய் கதை திகில் கதை கிடைத்தது. படித்து முடித்தவுடன் இப்படியும் எழுதலாமா? என்று புன்சிரிப்பை வரவழைத்து விட்டது நீங்களும் படித்துப் பாருங்கள்.

முதலில்  பயம், பின்பு சிரிப்பு- கதை எழுதியவரைப் பாராட்டுவீர்கள்.
எழுதியவர் அன்புடன் தமிழ்
எப்படி இருக்கிறது என்று படித்து விட்டுச் சொல்லுங்கள் .

வாழ்க வளமுடன்!
=====================================================================

60 கருத்துகள்:

  1. படங்களும், வார்த்யை ஜாலங்களும் ரசிக்க வைத்தன...

    பேய் சுட்டிக்கு செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

    நேரம் கிடைக்கும் போது படிங்க இந்த கதை உங்களுக்கு பிடிக்கும்.உங்களைப் போல் வித்தியாசமான சிந்தனை உடையவர் போலும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய்க்கதை படித்தேன் கடைசியில் புஸ்.... என்று போய் விட்டதே நல்ல காமெடி

      நீக்கு
    2. கதை படித்து காமெடியை ரசித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி. அதற்குத்தான் படிக்க சொன்னேன்.
      நன்றி.

      நீக்கு
  3. குழந்தைகளின் விளையாட்டைப் பார்த்தபோது என்னுடைய அக்கால நினைவுகள் மனதில் வந்து சென்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      ஆமாம், குழந்தைகள் விளையாட்டை பார்த்தபோது நம் நினைவுகள் நம் இளமைகாலத்திற்கு போவது உண்மை.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. இனிமையான விஷயங்கள் எங்கும் நிறைந்திருக்கட்டும்.

    பேய் கதை - படித்துப் பார்க்கிறேன் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      இனிமையான விஷயங்கள் எங்கும் நிறைந்து இருக்க வேண்டும் என்பது தான் நமது விருப்பமும்.
      பேய் கதை படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்களைப் பார்க்கப் பார்க்க மனதில் ஒரு உற்சாகம் பிறக்கத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு உற்சாகம் வந்தது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. படங்களும், அதற்கான வாசகங்களும் அருமை. என் பேத்தி வாட்ஸாப் காலில் வரும் பொழுதெல்லாம்,"ஐ வாண்ட் டு டாக் வித் பானு பாட்டி" என்பாள், ஆனால் என் முகத்தைப் பார்த்தவுடன்,தலையணைக்குள் முகத்தை பொதித்துக் கொள்வாள். நான் எங்கே ஷிவானி? காணுமே..? என்றதும், சிரித்துக் கொண்டே வெளி வருவாள்.குழந்தைகளுக்கு எப்போதுமே பிடித்த விளையாட்டு கண்ணாமூச்சி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      நீங்கள் சொல்வது சரிதான். முன்பு கைகளால் முகத்தி மூடிக் கொண்டு நாம் எங்கே என்றே என்று கேட்டு ஆறு மாத குழந்தையிடம் விளையாடும் போது கைகளை எடுத்து விட்டு பக பக என்று குழந்தை சிரிக்கும். அடுத்த கட்டத்தில் அப்புறம் குழந்தை பேரை சொல்லி "எங்கே காணோம்" என்று சொல்லும் போது சேலையால் முகத்தை மூடிக் கொண்டு "இந்தா இருக்கேன்" என்று வெளியே முகம் காட்டி சிரிக்கும் குழந்தை.

      குழந்தைகளுக்கு கண்ணாமூச்சி பிடிக்கும் தான்.
      உங்கள் கருத்துக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    நலமா? தங்கள் உடல் நலம் தற்சமயம் எவ்வாறுள்ளது? நினைவுப் பதிவு அருமை. தாங்கள் பகிர்ந்த படங்கள் எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால் தாங்கள் அதற்கு கூறியுள்ள விமர்சனங்களை வைத்து என் கற்பனையில் நீங்கள் கூறியபடி பறவைகளை கண்டு மகிழ்ந்தேன். நெட்டில் பிரச்சனையா? இல்லை என் கைப்பேசியில் வரவில்லையா? என தெரியவில்லை. ஆனால் எப்போதும் தங்கள் பதிவை படங்களுடன் கைப்பேசியில்தான் கண்டு ரசித்திருக்கிறேன்.பிறகு படங்கள் வந்தால் கண்டிப்பாக பார்க்கிறேன்.

    தங்கள் பேரனின் காணொளியை கண்டு ரசித்தேன். அது மட்டும் வந்தது. மிகவும் நன்றாக உள்ளது. ஒளிந்து கொண்டு தங்களை மகிழ்விக்க தங்களுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறார். அவரின் குறும்பு பார்வையை ரசித்தேன்.

    வளாக குடியிருப்பு குழந்தைகளின் விளையாட்டையும், தங்கள் பேரனின் விளையாட்டையும் கண்டு ரசித்து தங்கள் மனக்கவலைகளை மறந்து உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.மனம் சோர்வடைந்தால் உடலையும் பாதிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      இப்போது உடல் நலமாக இருக்கிறேன், மனநலமும் நன்றாக இருக்கிறது.
      மாயவரத்திலிருந்து பக்கத்து வீட்டு நட்பு வந்து சென்றார்கள். (உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு வந்தவர்கள்) மூன்று மணி நேரம் இருந்தார்கள். உணவு அருந்தி, பேச்சு பேச்சு என்று மாயவரம் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். மகிழ்ச்சி கடலில் திளைத்து எழுந்து விட்டது மனம், அதனால் உடல் நலம்.

      ஏன் படங்கள் வரவில்லை என்று தெரியவில்லை. வந்தால் பாருங்கள்.

      பேரன் காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      குழந்தைகள் வெள்ளி இரவு விளையாடுவார்கள், அப்புறம் சனி , ஞாயிறு விளையாடுவார்கள் இரவு படுக்க நேரம் ஆகும் , அவ்வளவு குதுகலமாக விளையாடுவார்கள். மனசோர்வை போக்கிவிடும்.

      கீழ் வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள் நன்றாக என்னிடம் பேசுவார்கள். அந்த குழந்தைகள் வீடு மாற்றி போய்விட்டார்கள். மற்ற குழந்தைகள் பெரியவர்களுடன்(வயதானவர்களுடன்) பழக மாட்டேன் என்கிறார்கள்.

      மாயவரத்தில் எங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் ஒரே ஆட்டம் போடுவார்கள் என்னுடன் விளையாடுவார்கள்.அவர்கள் திருமணம் ஆகி போனவர்கள் இன்னும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இன்னொரு குழந்தைக்கு மேமாதம் திருமணம் அழைத்து இருக்கிறாள்.

      இங்கு அப்படி யாரும் வருவதில்லை வீட்டுக்கு அதுதான் வருத்தம் எனக்கு.

      பறவைகளை பார்த்துக் கொண்டு தூரத்திலிருந்து குழந்தைகளின் விளையாட்டைப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.









      நீக்கு
  8. குழந்தைகளும் பறவைகளும் பார்க்கும் போதெல்லாம் மனதுக்கு மிகுந்த இதமானவை.
    படங்கள் விடியோ காட்சிகள் ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      நலமா? எங்கே குழந்தைகளைப் பார்க்க ஊருக்கு போய் விட்டீர்களா? வெகு நாட்களாக காணாமே!

      இதம் தரும் காட்சிகள்தான் மாதேவி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. ஆஹா கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமோ.. இனிக் கோடை ஆரம்பித்திடும் உங்களுக்கு என்பதால இவர்கள் வருகையும் அதிகமாகிடும்...

    //என்ன ஒய்யாரம்!//
    ஹா ஹா ஹா அதேதான் என்னா லுக்கூஉ எனக் கேட்கத் தோணுது, அழகோ அழகு, சூப்பராக கமெராவுக்குள் பிடிச்சிட்டீங்க கோமதி அக்கா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா வாழ்க வளமுடன்
      கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பித்து விட்டது.கோடை
      ஆரம்பித்து விட்டது. தண்ணீர் தேடி தவிக்கும் பறவைகள் அதிகம் வருவார்கள்.

      என்னபார்வை என்று கேட்கும் படம் கீழே வருது.

      மணி அதிகமாக இருக்குமே! தூங்கவில்லையா?
      வாங்க பொறுமையாக.

      நீக்கு
  10. அந்த வெள்ளை கறுப்பு சேர்ந்த புறாப்பிள்ளையின் பெற்றோர், கலப்புத் திருமணம் முடித்தவர்களாக இருக்கும்போல ஹா ஹா ஹா..

    பொல்லாத மைனா:))

    காகப்பிள்ளை ரொட்டி என நினைச்சுக் கற்பூரட்த்தைக் கடிக்கிறார்போல இருக்கே:)) ரொட்டி இவ்ளோ வெள்ளையாகவா இருக்கும்:))

    //காராபூந்தியுமா? சூப்பர்!//
    ம்ஹூம்ம்.. இது வேற வேணுமாமோ:)).. ஸ்ரோங்கா ஒரு ரீயும் கேட்டாலும் கேட்பார்கள் இனி:)).. ஹா ஹா ஹா அனைத்தையும் ரசித்தேன் விடிய எழும்பி ஓடிவந்து கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த வெள்ளை கறுப்பு சேர்ந்த புறாப்பிள்ளையின் பெற்றோர், கலப்புத் திருமணம் முடித்தவர்களாக இருக்கும்போல ஹா ஹா ஹா..//

      ரசித்தேன், இருக்கலாம்.

      //காகப்பிள்ளை ரொட்டி என நினைச்சுக் கற்பூரட்த்தைக் கடிக்கிறார்போல இருக்கே:)) ரொட்டி இவ்ளோ வெள்ளையாகவா இருக்கும்:))//

      ரொட்டியின் உள்புறம் வெள்ளையாத்தான் இருக்கும் வெள்ளை கோதுமையில் செய்த ரொட்டி அதிரா அதன் ஓரம் மட்டும் பிரவுன் கலரில் இருக்கும்.

      காரபூந்தி, மிச்சர், முறுக்கு என்று தின்பண்டங்கள் எல்லாம் காகத்திற்கும் மற்றபறவைகளுக்கும் பிடிக்கும் போட்ட நொடி காலி. நேற்று இனிப்பு பூந்தியும் போட்டேன்.

      //ஸ்ரோங்கா ஒரு ரீயும் கேட்டாலும் கேட்பார்கள் இனி:)).. ஹா ஹா ஹா அனைத்தையும் ரசித்தேன் விடிய எழும்பி ஓடிவந்து கோமதி அக்கா.//

      இப்போது அதிராவுக்குதான் ரீ தேவைபடுது விடியும் நேரம் என்பதால் இல்லையா?


      விடிந்து விட்ட்தோ! தூங்கும் நேரம் என்று நினைத்தேன்.

      நீக்கு
  11. //அடுக்குமாடிக் குடியிருப்புக் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள்//

    ஓ சூப்பர், நான் நினைச்சிருந்தேன் இப்போ இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து விளையாட மாட்டினம் என.. நல்ல விஷயம், என் குழந்தைக்காலம் நினைவுகு வருது.. வேர்த்துக் கொட்டக் கொட்ட ஓடி விளையாடுவது..

    பேரன் ஒளிச்சுக் காட்டுவது சூப்பர்ர்...
    //பறவைகளையும், எங்கள் வளாகக் குழந்தைகள் விளையாட்டையும் பேரன் விளையாட்டையும் ரசித்தீர்களா?//
    ரசித்தேன் ரசிக்கிறேன் கோமதி அக்கா... அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ சூப்பர், நான் நினைச்சிருந்தேன் இப்போ இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து விளையாட மாட்டினம் என.. நல்ல விஷயம், என் குழந்தைக்காலம் நினைவுகு வருது.. வேர்த்துக் கொட்டக் கொட்ட ஓடி விளையாடுவது..//

      விளையாட விடாத பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
      விளையாடும் குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒடி விளையாடினால்தான் உடலுக்கும் நன்மை. எதிர்காலத்துக்கும் நன்மை அந்த குழந்தைகளுக்கு.

      நீங்கள் வேர்த்துக் கொட்ட கொட்ட ஓடி விளையாடி அம்மா அற்றி வைத்து இருக்கும் ரீயை கட கட என்று குடித்து விட்டு மீண்டும் விளையாட போவதை சொன்னது நினைவுக்கு வருதே!

      நாங்கள் விளையாடி விட்டு வந்து கட கட என்று தண்ணிர் குடிப்போம் அது மிகவும் ருசியாக இருக்கும்.
      பேரன் ஓளிச்சுக் காட்டுவது பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. //முதலில் பயம், பின்பு சிரிப்பு- கதை எழுதியவரைப் பாராட்டுவீர்கள்.
    எழுதியவர் அன்புடன் தமிழ்
    எப்படி இருக்கிறது என்று படித்து விட்டுச் சொல்லுங்கள் .//

    ஓ.. இதுக்குப் பின்பு வருகிறேன்ன், இப்போ ஒரு ரீ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரீயை குடித்து விட்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கதையை படிங்க அதிரா.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  13. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கண்ணாமூச்சி ரே ரே! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் உங்கள் வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியானதும் அந்த பதிவு உடனடியாக வலை ஓலையிலும் வெளியாகிவிடும். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
      என் வலைத்தளத்தை இணைத்தது மகிழ்ச்சி, நன்றி.
      விவரங்களை பார்க்கிறேன்.

      நீக்கு
  14. கண்ணாமூச்சி விளையாட்டை நாங்க ஒளிச்சுபிடித்து விளையாட்டு என்போம்.நீங்க சொன்னமாதிரி குட்டிகளுக்கு கையால் முகத்தை மூடி, பின் யாருக்காவது பின்னால் ஒளிந்து கொண்டு விளையாடுவது, பிறகு பெரியவர்களானதும் கண்ணாமூச்சி. என்ன ஒரு சுவாரஸ்யம். அதுவும் நாங்க கண்டுபிடிக்கனுமென்றா யாரைவாது ஹெல்ப் கேட்டு, ஆ...அது ஒரு காலம் அக்கா. மறக்கமுடியாதது. கவின்குட்டி யும் அழகா விளையாடுறார். உங்க கூட இருந்தா இன்னும் மகிழ்ச்சியா இருக்கும் குட்டிக்கு. இப்படியாவது கிடைத்ததே என சந்தோஷபடுங்க.வீடியோ பார்த்தேன். அழகு குட்டி.
    சிறுவர்கள் விளையாடுவதை பார்த்தாலே சந்தோஷமா இருக்கும்,மனமும் குதூகலிக்கும். இப்ப எங்கு வெளியில் விளையாடுகிறார்கள்.எல்லாருமே மொபைல்தான்.
    ஆ...புறா, மைனா, காகம் என வரிசையாக வருகிறார்களா. நல்லது. எங்க வீட்டிலும் இங்கு மைனா மாதிரி ஒரு பறவை மரங்களுக்கு இருக்கினம் குடும்பமா. படம் எடுக்க முடியவில்லை. கண்டவுடன் ஓடிவிடுகிறார்கள். சம்மர் வர எடுக்கலாம் என இருக்கேன்.பாவம் குளிருக்கு உணவு வைத்தால் தட்டோடு தூக்கி மரத்துக்குள் ஒளிகிறது.
    அழகா இருக்கிறாகள் உங்க வீட்டு பறவைகள்/ நீங்களும் நன்றாக ரசித்து படம் எடுத்திருக்கிறீங்க அக்கா.
    லிங்க் பின்னர் பார்த்துவிட்டு எழுதுகிறேன் அக்கா.
    உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்க அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
      ஒளிச்சு பிடித்து விளையாடுவது என்றும், கள்ளன், போலீஸ் விளையாட்டாகவும் விளையாடுவோம் நாங்களும் அம்மு.

      நீங்கள் சொல்வது போல் ஒரு பெரிய அக்கா கண்ணை பொத்தி கொண்டு இருப்பார். எல்லோரும் ஒளிந்த பின் தன் கையை எடுப்பார். பின் அந்த குழந்தை தேடும், பிடிக்கும்.

      கவின் பேச வரும் போது நன்றாக விளையாடுவான். ஏதாவது விளையாட்டு எங்களுடன் விளையாடி மகிழ்ச்சி படுத்துவான். கூட இருந்தால் மகிழ்ச்சிதான் என்ன செய்வது!நீங்கள் சொன்னது போல் இப்படியாவது கிடைத்ததே என சந்தோஷபட்டுக்க வேண்டியதுதான்.

      குழந்தைகள் நன்கு விளையாடுகிறார்கள் மொபைல்போனில் விளையாடுவதை பார்க்கவே இல்லை.
      பறவைகள் உங்கள் வீட்டிலும் குடும்பமா இருப்பது மகிழ்ச்சி. உணவை தட்டோடு தூக்கி மரத்துக்குள் ஓளிவது பார்க்க நன்றாக இருக்குமே!

      உடல் நலத்தைப்பார்த்துக் கொள்கிறேன் அம்மு.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  15. குடியிருப்பு வளாகத்தில் கண்ணாமூச்சி விளையாட்டில் குழந்தைககாணாமல் போகவும் நேரலாம் ஜாக்கிரதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      யார் வீட்டுக்குள்ளும் போய் ஒளிந்து விளையாடுவது இல்லை.
      வளாகத்தின் வெளிப்புறம்தானே விளையாடுகிறார்கள்.

      இரவு 10 மணி வரை விளையாடுகிறார்கள் இறைவன் அருளால் அந்த மாதிரி நடக்க கூடாது.

      பெற்றோர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. ஒவ்வொரு படங்களும் அதற்கான கேப்ஷன்களும் சூப்பர்க்கா :) புறாக்கள் தலையை அசைத்து நடப்பதே ஒரு அழகு :)எங்க வீட்டுக்கு இப்போ மணிப்புறாவும் வராங்க .கண்ணாமுச்சி விளையாட்டு ரசித்தேன் .கதையை படித்து விட்டு வரேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      புறா தலையை அசைத்து நடப்பதும், தலையை சாய்த்து பார்ப்பதும் மிக அழகாய் இருக்கும் ஏஞ்சல்.

      மணிப்புறாவும் அழகாய் இருக்கும். இங்கு மணிப்புறா இருக்கிறது ஆனால் அவை இந்த புறாக்களுக்கு பயப்படுகிறது.நடுவில் ஒறு வீடு இருக்கிறது அந்த தோட்டத்தில் மணிப்புறா இருக்கிறது. கண்ணாமூச்சி விளையாட்டை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஏஞ்சல். நேரம் கிடைக்கும் போது இத்த கதையை படிங்க.

      நீக்கு
  17. அன்பு கோமதி,
    எத்தனை அருமையான விஷயங்களை இறைவன்
    கொடுத்திருக்கிறான்.

    அழகான பறவைகள். அதன் முக உணர்ச்சிகள். அதை நீங்கள் விவரிக்கும்
    விதம், உங்கள் ரசனை அற்புதம்.
    உங்கள் அன்பு உலகம் இத்தனை அழகு.
    அதை உங்கள் எழுத்தினால் மலரும் காட்சிகள்.
    குழந்தைகளின் கண்ணாமூச்சி.
    மனம் சிறகடித்துப் பறக்கிறது அந்த நாட்களை நினைக்கும் போது.

    குழந்தைகளைக் காணும் போது கிடைக்கும்
    இன்பத்தை என்ன சொல்வது.

    பேரன் ,பேத்தி எல்லோருக்கும் நான் கூப்பிட்டால்
    சும்மாவே இருக்க முடியாது,பாட்டி என்று வந்து
    என் கையைப் பிடித்து அழைத்துப்
    போய் இங்கதான் இருக்கேன் என்று சிரிப்பார்கள். எத்தனை இனிமை.

    படங்கள் பேசுகின்றன. காணொளி அருமை. என்ன வெள்ளையான சிரிப்பு.
    நீங்கள் சொன்ன கதையை இனிதான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ஆமாம் அக்கா, குழந்தைகளின் அன்பு உலகத்துக்குள் நம்மை கைபிடித்து சேர்த்துக் கொண்டால் அப்புறம் கவலை ஏது? மகிழ்ச்சிதான்.

      பறவைகளின் அன்பு உலகமும் அப்படித்தான். அவை பேசும் நம்மிடம், சண்டையிடும் இன்னும் "வைக்கவில்லையா உணவு "என்று உரிமையுடன்.

      உண்மைதான் அக்கா, அந் நாளை நினைக்கையில் மனம் சிறகடித்துதான் பறக்குது.

      குழந்தைகளை காணும் போதும், அவர்களுடன் விளையாடும் போதும் இன்பம் தான்.

      காணொளியை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா. பேய்கதையை இப்படியும் மாற்றி சிந்தித்து இருக்கிறார்களே! என்று மகிழ்வீர்கள் படித்து படித்து பாருங்கள்.




      நீக்கு
  18. மேலிருந்து காருக்குப் பின்னால் ஒளிந்த கொண்டிருந்த குழந்தையை எடுத்த படமும், கண்டு பிடித்து விட்டேன், வெளியே வா! -படமும் எனக்கென்னவோ திகில் படப் படங்கள் போலிருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்


      //மேலிருந்து காருக்குப் பின்னால் ஒளிந்த கொண்டிருந்த குழந்தையை எடுத்த படமும், கண்டு பிடித்து விட்டேன், வெளியே வா! //

      குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளை செய்திகளில் படித்து இந்த படங்கள் திகிலை ஏற்படுத்தி விட்டது போல!

      இங்கு பாதுகாப்பாக இருக்கிறது எல்லா பக்கமும் குழந்தைகளை கவனிக்க முடியும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. குஞ்சுலு அங்கே இருக்கும்போதெல்லாம் பீக் அ பூ விளையாடும். வெளியே நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்க்கும். மூடி இருக்கும் கண்களைத் திறந்தால் கோபம் வந்துடும். இங்கே அவங்க பாட்டி வீட்டில் பார்த்தப்போக் குழந்தை முதலில் கோபத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள். பின்னர் அழுகை தொண்டையை அடைக்கக் கண்களைத் திறந்து பார்த்தாள். மனசு அதே வேதனையில் இருக்கு. உங்கள் பேரன் விளையாட்டைப் பார்த்ததும் அது நினைவில் வந்தது. உங்களை அப்படியே உரித்து வைத்திருக்கிறான் பேரன். நீண்ட ஆயுசோடு ஆரோக்கியத்துடன் வாழட்டும். ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் வாழ்க வளமுடன்
      குஞ்சுலுவின் நினைவுகள் அருமை.
      நமக்கு வேதனை தருவது இந்த ஒன்றுதான் கைகளில் அள்ளி எடுத்து குஞ்சுலுவை கொஞ்சமுடியாததுதான்.
      பேரனுக்கு உங்கள் ஆசிகள் கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  20. புறாக்கள், மைனாக்கள், காக்கைகள் எல்லாம் இங்கேயும் வர ஆம்பித்துவிட்டன. ஆனால் சாதம் சாப்பிடுவதில்லை. காராபூந்தியும், ஓமப்பொடியும் தான். நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்புகள் ரசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் போல் தின்பண்டங்கள் பழகி விட்டது பறவைகளும்.
      சாதம் சாப்பிட்டு விடும். நான் அம்மா மாதிரி சாதம் சாப்பிடும் நேரத்தில் தின்பண்டம் தர மாட்டேன், மாலை டிபன் நேரம் தான் இவைகள். மாலை வரை அவைகளுக்கு கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து கொண்டு இருப்பேன்.
      பால்கனியில் என் தலையை கண்டாலே ஏதாவது வைப்பாள் என்று பறந்து வந்துவிடும்.
      முன்பு பின் வீட்டில் ஒரு குடும்பம் இருந்தது அவர்கள் நிறைய காலை முதல் இரவு வரை உணவுகளை தட்டில் வைத்துக் கொண்டே இருப்பார்கள் அவர்கள் வேறு வீடு போய் விட்டார்கள் பறவைகளுக்கு ஏமாற்றம் தான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  21. பறவைகளைப் பார்க்கப் பார்க்க இனிமை.. மகிழ்ச்சி...

    சந்தோஷமான பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      பறவைகளைப் பார்க்க பார்க்க இனிமைதான், மகிழ்ச்சிதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள வரிகள், வெறும் வரிகள் அல்ல... தங்களின் அன்பு...

    மிகவும் ரசித்தேன் அம்மா...

    காணொளி சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      படங்களை, காணொளியை ரசித்தமைக்கு நன்றி.

      அன்பான கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  23. படங்களும் அதற்கான வாசகங்களும் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  24. படங்கள் மற்றும் captions அருமை. எனக்கும் குடியிருப்பிலுள்ள குழந்தைகளின் விளையாட்டுகளைப் பார்க்கும் போது அந்தநாள் நினைவுகள் வந்து போகும். 8 வருடங்களுக்கு முன் பதிந்த ஒரு பதிவும் நினைவுக்கு வருகிறது: https://tamilamudam.blogspot.com/2012/05/blog-post_31.html

    ‘எங்கே காணோம்’ விளையாட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்று :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      நீங்கள் எட்டு வருடமுன் போட்ட பதிவை படித்தேன்.

      என் பின்னூட்டமும் படித்தேன்.
      படங்கள் எல்லாம் அருமை.
      கோடை விடுமுறை வரவில்லை வந்தால் குடியிருப்பு குழந்தைகளின் விளையாட்டு காலை முதல் இரவு வரை இருக்கும்.
      எங்கே காணோம் விளையாட்டு முன்பு பேரனுடன் விளையாடிய பதிவு போட்டு இருக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த விளையாட்டுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  25. மனதை லேசாக்கிய பறவைகள் வாழ்க... அவை தங்கள் குட்டிகளுக்கு எடுத்துச் செல்வதாகட்டும், தங்களுக்கே எடுத்துப்போய் ஒளித்துவைத்து பத்திரப்படுத்தும். பார்த்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      மனதை லேசாக்கிய பறவைகள் வாழ வேண்டும்.
      மைனா முதலில் எடுத்து போய் ஜன்னலில் ஒளித்து வைத்து விட்டு வரும் அப்புறம் நிதனாமாக இங்கு சாப்பிட்டு விட்டு பின் அதை சாப்பிடும். காக்கா காலின் அடியில் ஒரு துண்டை மறைத்து வைத்துக் கொண்டு அப்புறம் தட்டில் உள்ளதை சாப்பிடும்.
      நீங்களும் ஒளித்து வைத்து சாப்பிடுவதை ஒரு பதிவு எழுதி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  26. கண்ணாமூச்சி ரேரே வரியை வைத்து ஜெயம் படத்தில் ஒரு பாடல் உண்டு. கேட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயம் படம் பாடல் நினைவுக்கு வரவில்லை கேட்கிறேன்.

      நீக்கு
  27. பேரனுடனான விளையாட்ட காணொளியை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரனுடைய காணொளியை ரசித்தமைக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  28. பறவைகளின் படங்கள் மிக அழகு.

    சமீபத்தில் குருஷேத்திரத்திலா இல்லை தில்லியிலா என நினைவில்லை. மைனாக்கள் மிக அருகில் நடந்தும் பறக்காமல் அது பாட்டுக்கு இருந்தன. பொதுவாக மைனாக்கள் ஆட்களைக் கண்டால் பறந்துவிடுவதைத்தான் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன் வாழ்க வளமுடன்
      குருஷேத்திரம் போய் விட்டு வந்து விட்டீர்களா?
      மைனாக்கள் மிக அருகில் படம் எடுத்தீர்களா?

      உங்கள் பயணத்தில் இடையில் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. பயணம் முடிந்து பெங்களூர் வந்துவிட்டேன் கோமதி அரசு மேடம். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

      நீக்கு
    3. வணக்கம் நெல்லைத் தமிழன் , வாழ்க வளமுடன்

      உங்கள் பயணம் திட்டமிட்டபடி இனிதாக நிறைவு பெற்றது மகிழ்ச்சி.
      மீண்டும் வந்து பதில் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  29. மனக்கவலை போக்கும் பறவைகள், குழந்தைகள்- ...

    எல்லா படங்களும் மிக அழகு மா ..புத்துணர்ச்சி தரும் காட்சிகள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்

      குழந்தைகளும், பறவைகளும் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் .
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு