வெள்ளி, 8 ஜூன், 2018

மதுரைக் கதம்பம்

பரிசாக கிடைத்த கால்மிதி  முன் பக்கம் புள்ளிக் கோலம்
பின் பக்கம் பூக் கோலம். 

சங்கிலி  தையல் மூலம் பூக்கோலம், புள்ளிக்கோலம் போடபட்டு இடுக்கிறது கம்பிளி நூலால் ,  பார்டரில்  குரோசோ பின்னல் பொருட்களை சுற்றி வரும் சாக்குத் துணியை வீண் செய்யாமல் அதை இப்படி கைவேலைப்பாடு செய்து கால்மிதி செய்து இருக்கிறார்கள். எனக்கு அதை கால் மிதியாக போட்டு  வீணாக்க விரும்பாமல் பத்திரமாய் அவர்கள் நினைவாய் வைத்து இருக்கிறேன். சிவகாசியிலிருந்து வந்து இருக்கு இந்த கால்மிதி.
எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து குழந்தைகள் விளையாடுவதை எடுத்த படம். நான் சொல்லும் விளையாட்டுக்கு யாரெல்லாம் வருகிறீர்கள்? கைதூக்குங்கள் என்று கேட்கும் பையனுக்கு எல்லோரும் நாங்கள் வருகிறோம் என்று கை தூக்குகிறார்கள்.

பள்ளி விடுமுறை முழுவதும்  காலை முதல் இரவு வரை மகிழ்ச்சியாக விளையாடினார்கள். அவர்களின் உற்சாக கூக்குரல் மனதுக்கு உற்சாகத்தை அளித்தது.
                             
 மருத்துவ குணம் தெரிந்த வண்ணத்துப் பூச்சி. ஓமவல்லி (கற்பூரவல்லி)  இலை சாப்பிட்டால் சளிதொல்லை இருக்காது என்பாதால் இலையை சாப்பிடுகிறதோ!! (எங்கள் குடியிருப்பு வளாகத்தில் எடுத்த படம்)
                               

 எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அய்யனார் கோவில் செல்லும் வழியில் பார்த்த  காட்சி. (செல்லில் எடுத்த படங்கள்)

மாடக்குளம் சோனையார் கோவிலுக்கு திரு ஆபரணப்பெட்டி எடுத்துச் செல்லும் பக்தர் கூட்டம்.
அய்யனார் கோவில்  பக்கத்தில் நின்று ஆடியவர்களுக்கு குளிர்பானங்கள்  கொடுத்தார்கள். அனைவருக்கும் விபூதி வழங்கினார்கள்.
                                              
                                   ஆடி வந்ததைப் பின்புறம் இருந்து எடுத்தேன்.

கீழே வரும் படங்கள் அய்யனார் கோவில் வாசல் உள் எல்லாம் எடுத்தது. முன்பு கிராமக் கோவில் பதிவில்  அய்யனார் கோவில் போட்டு  இருக்கிறேன்.
கோடைக்கு ஏற்ற நுங்கு குளிர்ச்சியாக இருக்கும் ஏற்கனவே ! இன்னும் குளுமைதர ஆலமரம், வேப்பமரம், புளியமரம் சூழ்ந்து பனைமரத்திற்கு நிழல் தருது
                               
                                                  காய்த்துக் குலுங்கும் பனைமரம்.
வில்வ மரத்தில் வில்வக் காய்கள்
வில்வமரத்தில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் ஒன்று அமர்ந்து இருக்கிறது பார்த்துச் சொல்லுங்கள் அதன் பெயரை (வில்வ இலை, காய் எல்லாம் மருத்துவ குணம் நிறைந்தது)

ஆலமரத்தில் ஆலம்பழம்   நிறைய காய்த்து  பறவைகளுக்கு விருந்து அளிக்கிறது
அழகான ஆலம்பழம்

பறவைகளுக்கு உணவு கிடைக்கிறது ஆலமரத்தில், இந்த சிறுமிக்கு ஆனந்த ஊஞ்சல் கிடைக்குது.

புளியங்காய்
Image may contain: plant, tree, nature and outdoor
புளியம்பூ
தன் குஞ்சுகளுடன் விரையும் கோழி

குப்பையைக் கிளரும் சேவல், கோழிகள்
வேப்பங்காய்- இது பழுத்தால் கிளி கூட்டம் வரும்

வேப்பமர நிழலில் குதிரை மீது அய்யனார்.

முகநூலில் இந்தப் படத்தைப் போட்ட போது பழைய பதிவர் நானானி 
ஐயனாரு நெறஞ்ச வாழ்வைக் கொடுக்கணும் என்று பின்னூட்டம் கொடுத்து இருந்தார்கள். அவர்கள் சொன்னது போல் அனைவருக்கும் அய்யனார் நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கட்டும்.

'ஐயனாரு நெறஞ்ச வாழ்வைக் கொடுக்கணும்'  என்ற திரை இசைப் பாடல் நினைவுக்கு வருமே சிலருக்கு !

வாழ்க வளமுடன்.

57 கருத்துகள்:

  1. கால்மிதி !! ஆஹா கொள்ளை அழகு இவ்ளோ பிரயத்தனப்பட்டவர்கள் அதை கைப்பையாக தைத்திருந்தா இன்னும் பத்திரமா இருக்கும் .
    இன்னொன்றும் செய்யலாம் இதை டெலிபோன் ஸ்டாண்ட் மீது அல்லது wall ஹாங்கர் போலவும் யூஸ் பண்ணலாம்

    பதிலளிநீக்கு
  2. நானும் பழைய கோணிப்பை துணிகளை பத்திரமா வச்சிருக்கேன் .அப்பப்போ க்ராப்ட்டுக்கு யூஸ் செய்வேன் .இங்கே கோணி விலை அதிகம் :) ஆங்கிலத்தில் burlap /hessian என்பார்கள் ..

    இந்த மாதிரி சிறிய துணி க்களிலும் எம்பிராய்டரி செஞ்சு frame போடலாம்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வதும் நல்ல யோசனைதான். என் அம்மா இருந்தால் உடனே செய்து விடுவார்கள். உங்கள் யோசனைபடி. இப்பஒது தங்க்கையிடம் சொல்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இந்த கால மிதி படம் போடும் போதே ஏஞ்சலுக்கு பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டே போட்டேன். அது போலவே உங்களை கவர்ந்து விட்டது.
    முன்பு எல்லாம் சணலில் செய்த கோணி பைகள்தான் நிறைய பொருட்கள் சுற்றி வரும் இப்போது ரெக்ஸின் பையில், அல்லவா கோணி சாமான்கள் சுற்றி வருது, அல்லது பெரிய பாலுதீன் பைகளில் வருகிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பட்டாம்பூச்சி மட்டுமில்லை எல்லா சிறு ஜீவராசிகளின் இயல்பே இதுதான் தங்களை காத்துக்கொள்ள அவற்றுக்கு நல்லா தெரியும் .
    சில மூலிகைச்செடிகள் வண்ணத்துப்பூச்சிக்கும் தேனீக்கு பிடித்தவை .

    விளையாடும் சிறுவர்கள் அழகு .
    அந்த நிறம் மாறுபவர் பச்சோந்தி ஓணான் .
    நுங்குப்பழம் பார்த்து வருடங்கள் ஆகிறது .
    வேகமா நடங்கன்னு ரோட்டை க்ராஸ் செய்யும் அம்மா கோழி :)
    ஸ்ஸ் :) அந்த புளியங்காய்

    வேப்பம்பழங்களுக்கு காகங்களும் வரும் அக்கா ஊரில் எங்க வீட்டில் .

    அய்யனார் அனைவரையும் காக்கட்டும் .கிராமங்களில்தான் ஒவ்வொரு விஷயத்தையும் எத்தனை யோசனையோடு செய்திருக்காங்க .எல்லையில் காக்க அய்யனார் அவருக்கு நிழல் தர வேப்ப மரம்

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் அக்கா எனக்கு இப்படி மறுசுழற்சி செய்ற விஷயம் மிகவும் பிடிக்கும் .
    வால் HANGER ஆகா செஞ்சா வீட்டுக்குள் நுழைவார் கண்ணுக்கு அழகா தெரியும் .இதை அப்படியே ஒரு முனையை ஆணியில் அல்லது நாலு முனைகளிலும் குட்டி க்ளிப்ஸ் அடித்து சுவரில் மாட்டிடுங்க .
    முந்தி வல்லிம்மா ஒரு பதிவு முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் பழைய பட்டுப்புடவையை வீசாம சுவர் அலங்காரமாகி இருந்தாங்க அவர் மகள் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. இங்கிலாந்தில் பிளாஸ்டிக் பை கு 5 penny சார்ஜ் பன்றாங்க அப்படியும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை ..
    ஆனா நாங்க துணிப்பை கட்டைப்பை தான் ஷாப்பிங் கொண்டு போறோம் .இதோ இதே சாக்கில் தைத்த பை 2 பவுண்டுக்கு வாங்கி வச்சேன் 3 வருஷமா இருக்கு

    பதிலளிநீக்கு
  8. பட்டாம்பூச்சி மட்டுமில்லை எல்லா சிறு ஜீவராசிகளின் இயல்பே இதுதான் தங்களை காத்துக்கொள்ள அவற்றுக்கு நல்லா தெரியும் .
    சில மூலிகைச்செடிகள் வண்ணத்துப்பூச்சிக்கும் தேனீக்கு பிடித்தவை .//

    ஆமாம் ஏஞ்சல், விலங்குகள்(நாய்)வயிறு சரியில்லை என்றால் அருகம்புல்லை கடித்து துப்பும் பார்த்து இருக்கிறேன்.

    படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பட்டாம்பூச்சி மட்டுமில்லை எல்லா சிறு ஜீவராசிகளின் இயல்பே இதுதான் தங்களை காத்துக்கொள்ள அவற்றுக்கு நல்லா தெரியும் .
    சில மூலிகைச்செடிகள் வண்ணத்துப்பூச்சிக்கும் தேனீக்கு பிடித்தவை .//

    ஆமாம் ஏஞ்சல், விலங்குகள்(நாய்)வயிறு சரியில்லை என்றால் அருகம்புல்லை கடித்து துப்பும் பார்த்து இருக்கிறேன்.

    படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //ஆமாம் அக்கா எனக்கு இப்படி மறுசுழற்சி செய்ற விஷயம் மிகவும் பிடிக்கும் .
    வால் HANGER ஆகா செஞ்சா வீட்டுக்குள் நுழைவார் கண்ணுக்கு அழகா தெரியும் .இதை அப்படியே ஒரு முனையை ஆணியில் அல்லது நாலு முனைகளிலும் குட்டி க்ளிப்ஸ் அடித்து சுவரில் மாட்டிடுங்க .
    முந்தி வல்லிம்மா ஒரு பதிவு முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் பழைய பட்டுப்புடவையை வீசாம சுவர் அலங்காரமாகி இருந்தாங்க அவர் மகள் என்று நினைக்கிறேன்//

    நீங்கள் மறுசுழற்சி செய்வீர்கள் அழகாய் என்பதை பார்த்து இருக்கிறேன் உங்கள் தளத்தில்.
    சுவரில் மாட்டலாம் அழகாய் இருக்கும் தான்.
    நல்ல யோசனை.
    நன்றி உங்கள் கருத்துக்களுக்கு ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  11. .இதோ இதே சாக்கில் தைத்த பை 2 பவுண்டுக்கு வாங்கி வச்சேன் 3 வருஷமா இருக்கு//

    நானும் வைத்து இருக்கிறேன் அழகாய் பூ போட்ட சாக்கு பை சந்தைக்கு அதைதான் எடுத்து போவேன்.
    நீங்கள் சொல்வது போல் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை தான். நாங்களும் கடைக்கு போகும் போது கட்டை பை கொண்டு போய் விடுகிறோம்.

    நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  12. அய்யனார் அனைவரையும் காக்கட்டும் .கிராமங்களில்தான் ஒவ்வொரு விஷயத்தையும் எத்தனை யோசனையோடு செய்திருக்காங்க .எல்லையில் காக்க அய்யனார் அவருக்கு நிழல் தர வேப்ப மரம் //

    எல்லையில் இருப்பார் அய்ய்னார் காவல் காக்க என்பது உண்மை. கடைசியில் இருப்பார் அப்புறம் ஊர் இருக்காது, இப்போது அதையும் தாண்டி ஊர் விரிவடைகிறது.
    இந்த கோவிலை சேர்ந்தவர்களுக்கு பண ஆசை இல்லை அதனால் கோவில் பழமையுடன் இருக்கிறது எதிரில் இருக்கும் திடலில் கிராம மக்கள் எளிமையாக தங்கள் வீட்டு விழா, திருமணம், காது குத்து முதலியவற்றை நடத்திக் கொள்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு விளையாட இடம் கிடைக்கிறது. கோழி, ஆடு, மாடு என்று அங்கு வளர்த்துக் கொண்டுஇருக்கும் மக்களுக்கு அவைகளை உலாவவிட இடம் ஆச்சு.
    அனைவரையும் காத்துக் கொண்டு இருக்கிறார் அய்யனார்.
    உங்கள் அழகான கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  13. இங்கெல்லாம் துணிப்பைகள் கொடுக்கிறாங்க இப்போ! நாங்களும் சாக்குப் பை கல்கத்தாவி இருந்து வாங்கி வந்தோம். அவற்றையும் பயன்படுத்துவோம். என்றாலும் ப்ளாஸ்டிக் பயன்பாடு இருக்கத் தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  14. அழகான படங்கள். இம்மாதிரிப் பழைய துணி, விரிப்புக்களில் செய்பவை எங்க வீட்டில் போணி ஆகாது! விளையாடும் சிறுவர்கள் இங்கேயும் இப்போ இல்லை. எல்லோரும் பள்ளிப் பாடங்களில் மும்முரம். ஐயனார் ஊர்வலம் அழகு! பட்டாம்பூச்சி ஒன்றை நானும் முன்னால் எங்க வீட்டு விருட்சிப் பூவில் தேன் குடிக்கையில் படம் எடுத்திருந்தேன். கிடைக்குதானு பார்க்கணும். :)

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரி

    கதம்பம் நன்றாக இருக்கிறது.

    மிதியடி இத்தனை அழகாய் இருந்தால் யாருக்குத்தான் மிதிக்க மனசு வரும். அந்த காலத்தில் வெறும் சணலில் செய்த மிதியடியைதான் பயன் படுத்துவோம். இந்த மிதியடியை வேற அழகுக்காக (சகோதரி ஏஞ்சல் சொல்ற மாதிரி)
    பயன்படுத்தலாம்.

    குழந்தைகளின் விளையாட்டை எப்போதும் ரசித்துக் கொண்டேயிருக்கலாம்.

    வண்ணத்துப்பூச்சிக்கு மருத்துவம் பற்றி தெரியும் போலிருக்கிறது.

    வில்வமரம், ஆலமரம் பனைமரம் வேப்ப மரம் அனைத்து மரங்களும் அழகு. அம்மா வீட்டில் இந்த மரங்கள் இருந்தன. அவற்றிற்கு அதற்கு என்று ஒரு வாசனை. தங்கள் பதிவை படித்ததும் பழைய நினைவுகள் வந்தன. நுங்கு பழங்களை பறித்து மண்ணில் புதைத்து பனங்கிழங்குகளை உண்டாக்கி சாப்பிட்ட நினைவுகளில், அந்த சிறுமியை போல் நானும் மனதளவில் ஊஞ்சல் ஆடினேன்.தோழியருடன் வேப்பமுத்து பொறுக்கி விலைக்கு விற்று... நினைவுகள் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கின்றன. நகர வாழ்வில் ஏதும் இல்லை.

    ஐய்யனார் படங்களும் அருமை.
    கதம்பம் மணந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. மறந்துட்டேனே. வில்வப் பழத்தில் ஜூஸ் பண்ணி வைச்சுக்கலாம்! வெய்யிலுக்கு நல்லது. வயிற்றுக்கும் நல்லது.

    பதிலளிநீக்கு
  17. எல்லாப் படங்களும் அழகு. வில்வ இலை சிவனுக்கு உகந்தது இல்லையா? இருமலுக்கும் நல்லது என்று சொல்வார்கள். நிறம் மாறும் அந்த உயிரினம் [பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  18. ஓமவல்லியில் பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது ஆச்சர்யம். உங்கள் வீட்டு செடியில் பூ பார்த்ததில்லை என்று முன்னர் சொல்லி இருந்தீர்கள். அப்புறம் பூ வந்ததா? பட்டாம்பூச்சி சளியைச் சிந்திப் போட்டு, இருமினால் எப்படி இருக்கும்!

    பதிலளிநீக்கு
  19. அய்யனாரு நெறஞ்ச வாழவைக்க கொடுக்கணும்... என்ன இனிமையான பாடல் அது...

    பதிலளிநீக்கு
  20. படங்கள் அனைத்தும் அழகு.
    மரத்தில் பச்சோந்தியை கண்டேன்.
    எந்த இடங்களையும் விட்டு வைப்பதில்லை நடிகர்களின் ப்ளக்ஸ் போர்டு.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கீதா சாம்பசிவம் , வாழ்க வளமுடன்.

    //ப்ளாஸ்டிக் பயன்பாடு இருக்கத் தான் செய்கிறது.//

    ப்ளாஸ்டிக் பைகளை
    தயார் செய்வதை நிறுத்தினால் தானே ஒழியும். அதை தயார் செய்து கொண்டே பளாஸ்டிக் பைகளை உபயோக படுத்தாதீர்கள் என்று சொல்லி என்ன புண்ணியம்?

    நாம் சாக்குபை, துணிபை உபயோகபடுத்தினாலும் கடைகளில் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

  22. அழகான படங்கள். இம்மாதிரிப் பழைய துணி, விரிப்புக்களில் செய்பவை எங்க வீட்டில் போணி ஆகாது!//

    பொருட்களை சுற்றி வந்த சாக்கு துணி என்றாலும் பழையது இல்லை கீதா, புது சாக்கு துணிதான்.
    பள்ளி நாளில் மாலை விளையாடுகிறார்கள் இங்கு.

    வண்ணத்துப்பூச்சி படம் கிடைத்தால் போடுங்கள்.

    வில்வ பழம் வாசனை பார்த்து இருக்கிறேன். கோவிலில் என்பதால் எடுத்தது இல்லை.
    வேறு எங்காவது கிடைத்தால் ஜூஸ்செய்து பார்க்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி கீதா சாம்பசிவம்.

    பதிலளிநீக்கு
  23. அனைத்து படங்களும் அருமை... ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //வில்வ இலை சிவனுக்கு உகந்தது இல்லையா? இருமலுக்கும் நல்லது என்று சொல்வார்கள். நிறம் மாறும் அந்த உயிரினம் [பார்க்க முடிந்தது.//

    இந்த கோவில் அய்யனார் சிவரூபமாய் காட்சி அளிப்பதாய் இங்குள்ள பூசாரி சொல்வார்.
    வில்வ மரம் வைத்து இருக்கிறார்கள். கோவிலுக்குள், புளியமரம், வேப்பமரம், வில்வமரம், பனைமரம் உள்ளன.கோவிலுக்கு முன்புற திடலில் ஆலமரம் இரண்டு, வேப்பமரம் இரண்டு இருக்கிறது.

    கோவில் மதில் பக்கம் பனைமரம், ஆலமரம், வேப்பமரம் என்று சோலைவனமாய் தான் இருக்கும் கோவில் இருப்பிடம்.

    வில்வ இலை சளிக்கு நல்லது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  25. //ஓமவல்லியில் பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது ஆச்சர்யம். உங்கள் வீட்டு செடியில் பூ பார்த்ததில்லை என்று முன்னர் சொல்லி இருந்தீர்கள். அப்புறம் பூ வந்ததா? பட்டாம்பூச்சி சளியைச் சிந்திப் போட்டு, இருமினால் எப்படி இருக்கும்!//

    இப்போது என் வீட்டில் ஓமவல்லி இல்லை, தங்கை வீட்டிலிருந்து வாங்கி வந்து வைக்க வேண்டும். ஓமவல்லி பூ பூத்தது இல்லை என் வீட்டில்.
    மாயவரத்தில் அத்தனை செடிகளையும் விட்டு வந்து விட்டோம்.
    இப்போது சிறிய தொட்டிகளில் கற்றாழை, நித்தியகல்யாணி, துளசி வைத்து இருக்கிறேன், ஒரு தொட்டியில் திருநீற்றுபச்சை செடியின் விதை போட்டு இருக்கிறேன் வர வேண்டும்.

    பட்டாம்பூச்சி சளியைச் சிந்திப் போட்டு, இருமினால் நமக்கு தெரியாது.
    நம் மனிதர்கள் கண்ட இடங்களில் சளியை சிந்தி போடுவது போல் அவை செய்யாது என்று நினைக்கிறேன்.

    வில்வமரத்தில் உள்ள உயிரினத்தை பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. மிகவும் உயரத்தில் இருந்தது காமிரா என்றால் நன்றாக தெரியும் கைபேசியில் எடுத்ததால் அவ்வளவுதான் எடுக்க முடிந்தது.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  26. //அய்யனாரு நெறஞ்ச வாழவைக்க கொடுக்கணும்... என்ன இனிமையான பாடல் அது.//

    அருமையான இனிமையான பாடல், ஒரு வெள்ளிக்கிழமை வீடியோவில் போடுங்கள்.
    தராபுரசுந்தர்ராஜனும், சுசிலாவும் பாடிய பாடல். படம் காவல்தெய்வம் என்று நினைக்கிறேன்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.

    //படங்கள் அனைத்தும் அழகு.
    மரத்தில் பச்சோந்தியை கண்டேன்.
    எந்த இடங்களையும் விட்டு வைப்பதில்லை நடிகர்களின் ப்ளக்ஸ் போர்டு//
    ஊஞ்சல் ஆடும் பெண்ணின் பக்கத்தில் உள்ள நடிகர் ப்ள்கஸ் போர்டு பார்த்து விட்டீர்களா?

    காணொளி பார்க்கவில்லையா?
    திடலில் கல்யாணம் மற்றும் காது குத்து விழா நடக்கும் போது நடிகர்கள் ரசிகமன்ற சார்பில் பெரிய பெரிய கட் அவுட் வைப்பார்கள் .

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரி கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

    //கதம்பம் நன்றாக இருக்கிறது.//

    நன்றி.

    //மிதியடி இத்தனை அழகாய் இருந்தால் யாருக்குத்தான் மிதிக்க மனசு வரும். அந்த காலத்தில் வெறும் சணலில் செய்த மிதியடியைதான் பயன் படுத்துவோம். இந்த மிதியடியை வேற அழகுக்காக (சகோதரி ஏஞ்சல் சொல்ற மாதிரி)
    பயன்படுத்தலாம். //

    ஆமாம் கமலா, முன்பு அழகான சணல் மிதியடி , தேங்காய்நாரில் செய்த கலர் கலரான மிதியடி தான் வீட்டில் இப்போது வித விதமாய் துணிகளில் மிதியடிகள், ரப்பர் மிதியடிகள் வந்து விட்டது. ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு மாதிரி மிதியடிகள் போடுகிறோம்.

    இந்த மிதியடியை ஏஞ்சல் சொல்வது போல் பயன்படுத்தலாம்தான்.

    //வில்வமரம், ஆலமரம் பனைமரம் வேப்ப மரம் அனைத்து மரங்களும் அழகு. அம்மா வீட்டில் இந்த மரங்கள் இருந்தன. அவற்றிற்கு அதற்கு என்று ஒரு வாசனை. தங்கள் பதிவை படித்ததும் பழைய நினைவுகள் வந்தன. நுங்கு பழங்களை பறித்து மண்ணில் புதைத்து பனங்கிழங்குகளை உண்டாக்கி சாப்பிட்ட நினைவுகளில், அந்த சிறுமியை போல் நானும் மனதளவில் ஊஞ்சல் ஆடினேன்.தோழியருடன் வேப்பமுத்து பொறுக்கி விலைக்கு விற்று... நினைவுகள் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கின்றன. நகர வாழ்வில் ஏதும் இல்லை. //

    எவ்வளவு அருமையான மலரும் நினைவுகள் கமலா!
    படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது, மனகண்ணில் பார்க்கும் போது மேலும் மகிழ்ச்சி.
    அனைத்தையும் ரசித்து விரிவான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி கமலா.


    பதிலளிநீக்கு
  29. காணொளி இப்பொழுதுதான் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  30. வாங்க தேவகோட்டை ஜி, காணொளி பார்த்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  31. சாக்கு பையில் செய்த மிதியடி செம. நானும் ட்ரை பண்றேன்

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
    ராஜி நீங்கள் கைவேலை அருமையாக செய்வீர்களே!
    செய்வீர்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. ஆஹா கதம்பம் இனிக்கிறது.. கிராமிய மணம் கமழ்கிறது...

    கால் மிதி .. அது பார்க்க தலையணை உறைபோல தெரியுதேஎ... காலுக்குப் போடக்கூடாஅது.. சுவரில் வைத்து ஆணி அடிச்சு விட்டால் அழகாக இருக்குமே.

    குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க என் சின்ன வயது நினைவு வருகிறது. பயங்கரமாக ஓடிப்பிடித்து விளையாடுவேன்.. அம்மா 5 மணிக்கு பிளேன் ரீ ஊத்தி[மில்க் போட்டால் குடிக்க மாட்டேன்] நிறைய சீனியும் போட்டுக் கூப்பிடுவா.. நின்று ஊதிக் குடிக்க நேரமிருக்காது.. அதனால நன்கு ஆத்திவிட்டுக் கூப்பிடுங்கோ என்பேன், நன்கு ஆத்திப்போட்டுக் கூப்பிடுவா.. ஓடிப்போய் மடமடவெனக் குடித்து விட்டு ஓடுவேன்.... அதன் சுவையே தனி:))

    பதிலளிநீக்கு
  34. வண்ணத்துப் பூச்சியாருக்கு தடிமன் போலும்:) அதுதான் கற்பூரவள்ளி தேடுறா:)).

    அய்யனார் கோயில் நுங்கு அழகு...

    ஆஆ வில்வம்பழம்.... அர்ச்சனையின்போது சில கோயிலில் கிடைக்கும்.. எனக்கு அதன் சுவை பிடிக்கவே இல்லை. நானும் பார்த்திருக்கிறேன் வில்வம் மரம்.

    அது ஓணான் எனவும் சொல்லப்படுவதுண்டு.. பச்சோந்தி.

    பதிலளிநீக்கு
  35. ஆவ்வ்வ் ஆலம்பழம் எனக்கும் தெரியுமே.. சாப்பிட்டதாக நினைவில்லை.. அது சாப்பிடுவதில்லை என்ன கோமதி அக்கா?.

    ஆலம் விழுதில்கூட ஊஞ்சல் கட்டுவினமெல்லோ.. பார்க்கவே ஆசையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  36. புளியம்பழம்.. புளியம் பூ.. புளியம்குருத்து எல்லாம் பிடுங்கிச் சாப்பிடுவேனே.. புளிப்பன எல்லாம் எனக்குச் சொந்தமானவை:))..

    கோழிகள் அழகு.. இது கால் உயரமான இனமெல்லோ.. எங்களிடமும் இருந்தது இப்படி ஒரு கோழி.. அவவுக்கு “உயரி” எனப் பெயர் வச்சுக் கூப்பிடுவோம்:)).

    வேப்பம்பழம்.. அவ்வ்வ்வ் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.. காய் எனில் பால் வடியும்.. அய்யனாருக்கு வணக்கம் சொல்லி விடை பெறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //ஆஹா கதம்பம் இனிக்கிறது.. கிராமிய மணம் கமழ்கிறது...//

    ஆஹா மகிழ்ச்சி.

    //கால் மிதி .. அது பார்க்க தலையணை உறைபோல தெரியுதேஎ... காலுக்குப் போடக்கூடாஅது.. சுவரில் வைத்து ஆணி அடிச்சு விட்டால் அழகாக இருக்குமே.//

    ஏஞ்சலும் இதையே சொன்னார்கள்.

    //குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க என் சின்ன வயது நினைவு வருகிறது. பயங்கரமாக ஓடிப்பிடித்து விளையாடுவேன்.. அம்மா 5 மணிக்கு பிளேன் ரீ ஊத்தி[மில்க் போட்டால் குடிக்க மாட்டேன்] நிறைய சீனியும் போட்டுக் கூப்பிடுவா.. நின்று ஊதிக் குடிக்க நேரமிருக்காது.. அதனால நன்கு ஆத்திவிட்டுக் கூப்பிடுங்கோ என்பேன், நன்கு ஆத்திப்போட்டுக் கூப்பிடுவா.. ஓடிப்போய் மடமடவெனக் குடித்து விட்டு ஓடுவேன்.... அதன் சுவையே தனி:))//

    மலரும் நினைவுகள் அருமை.
    விளையாடிவிட்டு ஓடி வந்து தண்ணீரை மடக் மடக் என்று குடித்தாலே இனிமையாக இருக்கும், நீங்கள் டீ குடித்து இருக்கிறீர்கள் அது மேலும் சுவையாக இருக்கும்.


    பதிலளிநீக்கு
  38. //வண்ணத்துப் பூச்சியாருக்கு தடிமன் போலும்:) அதுதான் கற்பூரவள்ளி தேடுறா:)).//

    அதேதான்.

    //அய்யனார் கோயில் நுங்கு அழகு... //

    முதலில் வரும் இளம் நுங்கு பச்சையும் இளம் கறுப்பும் அழகாய் இருக்கும்.

    //ஆஆ வில்வம்பழம்.... அர்ச்சனையின்போது சில கோயிலில் கிடைக்கும்.. எனக்கு அதன் சுவை பிடிக்கவே இல்லை. நானும் பார்த்திருக்கிறேன் வில்வம் மரம். //

    வில்வபழம் அர்ச்சனையின் போது கிடைக்குமா? வில்வ இலைதான் இங்கு அர்ச்சனை செய்வார்கள்.

    //அது ஓணான் எனவும் சொல்லப்படுவதுண்டு.. பச்சோந்தி.//

    ஆமாம் அதிரா.

    பதிலளிநீக்கு
  39. //ஆவ்வ்வ் ஆலம்பழம் எனக்கும் தெரியுமே.. சாப்பிட்டதாக நினைவில்லை.. அது சாப்பிடுவதில்லை என்ன கோமதி அக்கா?.//

    ஆமாம், அதிரா நானும் ஆலம்பழம் சாப்பிட்டது இல்லை. சாப்பிடுவார்களா என்று தெரியவில்லை. பறவைகளுக்கு பிடித்த உணவு.


    //ஆலம் விழுதில்கூட ஊஞ்சல் கட்டுவினமெல்லோ.. பார்க்கவே ஆசையா இருக்கு.//

    விழுதில் பிடித்து தொங்கி ஊஞ்சல் ஆடுவார்கள், இரண்டு விழுதுகள் பக்கத்தில் இருந்தால் அதில் ஊஞ்சல் கட்டுவார்கள். கோவில் பக்கத்தில் உள்ள குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். நல்ல காற்றை சுவாசித்து நல்ல விளையாடி மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  40. //புளியம்பழம்.. புளியம் பூ.. புளியம்குருத்து எல்லாம் பிடுங்கிச் சாப்பிடுவேனே.. புளிப்பன எல்லாம் எனக்குச் சொந்தமானவை:))..//

    முன்பு நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.

    //கோழிகள் அழகு.. இது கால் உயரமான இனமெல்லோ.. எங்களிடமும் இருந்தது இப்படி ஒரு கோழி.. அவவுக்கு “உயரி” எனப் பெயர் வச்சுக் கூப்பிடுவோம்:)).//

    உயரி பெயர் நல்லா இருக்கே!

    //வேப்பம்பழம்.. அவ்வ்வ்வ் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.. காய் எனில் பால் வடியும்.. அய்யனாருக்கு வணக்கம் சொல்லி விடை பெறுகிறேன்.//

    வேப்பழம் சாப்பிட்டது இல்லை நான்.
    அய்யனார் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு சேரட்டும்.
    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
    அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி அதிரா.

    பதிலளிநீக்கு
  41. ஊர்த் திருவிழாவையும் பசுமை கொஞ்சும் இயற்கைக் காட்சிகளையும் கண்டாலே மகிழ்ச்சி தான்...

    மாடக்குளம் ஐயனார் ஸ்வாமியைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு...

    சில ஆண்டுகளுக்கு முன் புரவி எடுப்பு நடந்தது...

    அனைவருக்கும் ஐயனார்
    நல்லருள் பொழிவாராக..

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

    //ஊர்த் திருவிழாவையும் பசுமை கொஞ்சும் இயற்கைக் காட்சிகளையும் கண்டாலே மகிழ்ச்சி தான்...//

    ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை.

    //மாடக்குளம் ஐயனார் ஸ்வாமியைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு...

    சில ஆண்டுகளுக்கு முன் புரவி எடுப்பு நடந்தது...//

    நானும் படித்தேன் புரவி எடுப்பு விழா பார்த்தது இல்லை பார்க்க வேண்டும்.
    அய்யனார் கோவில் முன்பு புரவி எடுப்பு விழா படம் மாட்டி இருக்கிறது.

    //அனைவருக்கும் ஐயனார்
    நல்லருள் பொழிவாராக..//

    கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. கலவையான, பல்சுவைப் பதிவு. அழகான புகைப்படங்க்ள், அருமையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. அன்புடையீர்..

    கைப்பேசியில் இருந்து கருத்துரையிட்டதால் விவரமாக எழுத இயலவில்லை..

    தாங்கள் பதிவில் மாடக்குளம் சோனையார் கோயில் என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்..

    மாடக்குளத்தில் ஸ்ரீஈடாடி ஐயனார் என்று திருக்கோயில் உள்ளது..

    தாங்கள் குறிப்பிடும் கோயிலும் இதுவும் ஒன்றா!.. - தெரியவில்லை...

    நமது தளத்தில் 2014ல் மாடக்குளத்தில் நடந்த புரவி எடுப்பு வைபவத்தின் படங்களை பதிவு செய்துள்ளேன்..

    அதன் இணைப்பு -
    http://thanjavur14.blogspot.com/2014/10/blog-post6-madakkulam-edadi-aiyanaar.html

    தாங்கள் அந்தப் பதிவினை வாசித்து கருத்துரையும் செய்திருக்கின்றீர்கள்...

    மகிழ்ச்சி.. நன்றி..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  46. நான் இந்த மாடக்குளம் ஐயனார் கோவில் பார்த்தது இல்லை.
    எங்கள் வீட்டுக்கு பக்கம் இருக்கும் பொன்மேனி ஐயனார் கோவில் போகும் வழியில் ஊர்வலம் பார்த்தேன். ஊர்வலத்தில் வந்தவரிடம் எந்த கோவில் என்ற போது மாடக்குளம் சோனயார் திருவிழா என்றார்
    பொன்மேனி ஐயனார் கோவிலில் தான் புரவி எடுப்பு விழா படம் பார்த்தேன் பேப்பரில் வந்த படத்தை பிரேம் செய்து போட்டு இருந்தார்கள்.

    கூடியவிரைவில் மாடக்குள அய்யனார் கோவில் போய் வந்து பதிவு போடுகிறேன்.

    நன்றி உங்கள் சுட்டிக்கு.

    பதிலளிநீக்கு
  47. மதுரையில் மாடக்குளம் கம்மாய் (கண்மாய்) நீரும் அங்கே விளையும் கத்திரிக்காயும் ரொம்பப் பிரபலம். அதோடு இல்லாமல் முன்னெல்லாம் மாலை ஆறு மணி ஆச்சுன்னாலே மாடக்குளம் கோயில் பக்கம் நடமாட்டம் குறைந்து விடும். இப்போத் தான் கம்மாயைத் தூர்த்து வீடுகள் கட்டி விட்டார்கள். மிகப் பெரிய கண்மாய்! :( மாடக்குளம் கருப்பும் உண்டு! அவரும் இப்போவும் பைபாஸ் ரோடில் கோயில் கொண்டிருக்கார்.

    பதிலளிநீக்கு
  48. மிதியடி அழகாய் இருக்கிறது. அய்யனார் படங்களும் காணொளியில் வரும் துள்ளு இசையும் மிகவும் ரசித்தேன்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

    மாடக்குள கண்மாய்பற்றி கோவிலில் பெரியவர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். ஒரு காலத்தில் கடல் போல் இருந்தது இப்போது நில ஆக்கிரமிப்புகளால் காண்மாய் அள்வு குறைந்து நீர் வரத்தும் குறைந்து விட்டது என்பார்கள். மண் எடுப்பது, குப்பையை கொட்டுவது என்று வேறு கண்மாயை தூர்த்து வருகிறார்களாம்.
    பலவித பறவைகள் இருக்குமாம் .மாடக்குளம் கருப்பு கோவில் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.
    மாடக்குளம் பக்கம் போனதில்லை.
    சந்தையில் கிடைக்கும் கத்திரிக்காய் நன்றாக இருக்கிறது அங்கு தான் விளைந்தது போல அடுத்த முறை சந்தைக்கு போனால் கேட்க வேண்டும் மாடக்குள கத்திரிக்காயா? என்று.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  50. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    தொடர்வதற்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  51. விடுமுறை முடிந்து இங்கும் குடியிருப்பில் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பியாயிற்று. வெறிச்சோடிக் கிடக்கிறது வளாகம். படங்களும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  52. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    //விடுமுறை முடிந்து இங்கும் குடியிருப்பில் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பியாயிற்று. வெறிச்சோடிக் கிடக்கிறது வளாகம்.//

    விடுமுறையில் நாள் முழுவதும் விளையாட்டு.
    மற்ற நாட்களில் மாலை மட்டும் விளையாட்டு, சனி ஞாயிறு கூட்டம் அதிகமாய் இருக்கும்.


    படங்களும் பகிர்வும் அருமை.//

    படங்களையும், பகிர்வையும் ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  53. ப்ளாக் ஐ சரிசெய்துவிட்டீங்களா அக்கா? இப்போ சரியாக இருக்கு. மகிழ்ச்சி.
    அழகான தையல். மிதியடி அழகா இருக்கு. படங்கள் காணும் போது ஊர் ஞாபகம் வருகின்றது. ஓமவல்லி இங்கும் கூட நான் வைத்திருக்கேன். இருமல்,சளியெனில் 2இலை சாப்பிட சரியாகும்.
    புளியம்பழத்தின் செங்காய்தான் எனக்கு பிடிக்கும். எங்கட காணியில் நுங்கு,புளியமரம் எல்லாமே நிற்கின்றன. ஆலம்பழம் பார்க்க அழகு.
    வேறு இருத்தங்க காணியில் ஆலும்,அத்திமரமும் இருக்கின்றன. எந்நேரமும் கீச்சு கீச்சு என கிளிகள் கூட்டமா சத்தமா இருக்கும்.
    வேப்பம்பழம் அதை காயவைத்து மாரிகாலம் நுளம்புக்கு புகை போடுவதுதான் ஞாபகம் வருது. மரத்திலிருந்து காகம் ஒவ்வொரு பழமா கொத்தி கீழே போடும் பார்க்க அழகா இருக்கு.
    ஐயனார் மாதிரி எங்கட ஊரில் கூடுதலா பைரவர் இருப்பார். சின்ன கோவில்கள் அதிகம்.
    அழகாக நினைவுபடுத்திய அழகான படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  54. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
    ப்ளாக் ஐ ஓரளவு சரிசெய்து இருக்கிறேன்.
    உங்களுக்கு இப்போது எனக்கு கருத்திட முடிகிறதா?
    சிரமம் இல்லை அல்லவா?
    உங்க ஊர் நினைவு வந்து விட்டதா? ஒமவல்லி சளிக்கு நல்லது.
    அந்த இலையில் பஜ்ஜி செய்வேன் நன்றாக இருக்கும்.
    உங்க ஊர் காணி நினைவுக்கு வந்து விட்டதா?
    வேப்பமழம், அதன் விதை நிறைய மருத்துவ உபயோகம் இருக்கிறது.
    சின்ன கோவில்கள் அழகாய் இருக்கிறது. பார்க்க வேண்டும் ஒவ்வொன்றாய்.
    உங்களுக்கு மலரும் நினைவுகள் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. முடிந்த போது வாருங்கள் பதிவுக்கு.
    உங்கள் அழகான விரிவான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  55. துளசி: படங்கள் அனைத்தும் அழகு அதற்கான தங்களின் விளக்கங்களும் மிக மிக அழகு. குழந்தைகளின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் தான்.

    கீதா: படங்கள் செம. அந்த நுங்கு ஆஹா போட வைத்தது அழகாக இருக்கிறது அக்கா.வில்வம் வில்வக்காய்கள், வில்வ மரத்தில் பச்சோந்தி இருக்கிறது தெரிகிறதே கோமதிக்கா....!!!

    ஹையோ ஆலம்பழம் செம அழகா இருக்குக்கா...புளியம்பூ, வேப்பம்பழம், ஐயனார் எல்லாமே மிக மிக அழகு. ஐயனார் குதிரை படம் சூப்பரா இருக்குக்கா

    மிதியடி இது போன்று நான் வீட்டிற்கு முன்னெல்லாம் அரிசி வரும் சாக்கை வெட்டி நுனி எல்லாம் துணி வைத்து அழகு செய்து தைத்து மிதியடியாக்குவேன். நடுவில் இப்படி க்ரோஷியோ நூலால் சங்கிலித் தையல் என்று எம்ப்ராய்டரி செய்ததுண்டு. கல்லூரியில் வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்பதற்குச் செய்ததில்...அப்புறம்வீட்டிலும் செய்ததுண்டு.

    மிதியடி ரொம்ப அழகா இருக்குக்கா இப்படி இருந்தால் மிதிக்கவே தோணாது அழகுப் பொருளா வைக்கத்தான் தோன்றும் ரொம அருமை அக்கா...


    பதிலளிநீக்கு
  56. வணக்கம் சகோ துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.

    //துளசி: படங்கள் அனைத்தும் அழகு அதற்கான தங்களின் விளக்கங்களும் மிக மிக அழகு. குழந்தைகளின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் தான். //

    நன்றி துளசிதரன்.

    கீதா, அனைத்து படங்களையும் அரசித்து தனி தனியாக கருத்து சொன்னதற்கு நன்றி.

    //நான் வீட்டிற்கு முன்னெல்லாம் அரிசி வரும் சாக்கை வெட்டி நுனி எல்லாம் துணி வைத்து அழகு செய்து தைத்து மிதியடியாக்குவேன். நடுவில் இப்படி க்ரோஷியோ நூலால் சங்கிலித் தையல் என்று எம்ப்ராய்டரி செய்ததுண்டு. கல்லூரியில் வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்பதற்குச் செய்ததில்...அப்புறம்வீட்டிலும் செய்ததுண்டு.//

    நீங்களும் இது போல் செய்தது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு