விண்கல் விழுந்த இடத்திற்கு வந்து விட்டேன் எல்லோரும் வாங்க என்று கூப்பிடும் பேரன்
அவன் குட்டி காமிராவில் அவனுக்குப் பிடித்த காட்சிகளைப் பதிவு செய்தான்.
விண்கல் விழுந்த இடத்திற்குப் போகும் நுழை வாயில் முன்பு என் கணவர்
சுவரில் ஜன்னல் போன்ற அமைப்பிலிருந்து மலைக் காட்சியை ரசிக்கலாம்.
நீலவானமும், காய்ந்த மஞ்சள் புற்களும் தொடர் மலைகளும் அழகாய் தெரிகிறது பனிப்படலம் மறைக்கிறது.
பெரிய டெலஸ்கோப் உள்ள மலை சந்திர மலை என்று போட்டு இருக்கிறது.
விண்கல் விழுந்த இடம். (அரிசோனா மாநிலம்)
மகன் அழைத்துச் சென்ற இடம்.
மிகவும் திகைப்பூட்டும் அனுபவம் ஏற்பட்ட இடம்.
மிகவும் திகைப்பூட்டும் அனுபவம் ஏற்பட்ட இடம்.
தூரத்தில் வெள்ளையாகத் தெரியும் இடம் தான் விண்கல் விழுந்த இடம் டெலஸ்கோப்பில் பார்த்தால் பக்கத்தில் தெரிகிறது. கம்பி வலை போட்டு மூடி வைத்து இருக்கிறார்கள்.
இங்கும் நிறைய சிறிய ரக டெலஸ்கோப் இருக்கிறது பார்வையிட
இங்கிருந்தும் பார்க்கலாம்.
அன்று காற்று மிகவும் அதிகமாய் வீசியது அதனால் அதிக நேரம் மேலே நிற்க முடியவில்லை, படியில் இறங்க்கும் போது ஆளைத் தள்ளும் குளிர் காற்று. திறந்த வெளியாக இருப்பதால் காற்று எப்போதுமே அதிகம். அன்று மேலும் அதிகம்.
கீழே கடைகளைப் பார்வையிடாமல் வர முடியாது கடைகளைப் பார்த்துக் கொண்டே தான் வெளியே வரும் வழி அமைத்து இருக்கிறார்கள்.
அரிசோனாவில் கிடைக்கும் கனிமங்கள்
மண் அழுத்ததினால் கல்லாக மாறியதில் செய்த அரிசோனா விலங்குகள், பறவைகள்.
மேல் இருந்து எடுத்த படம்
கீழ் இருந்து எடுத்த படம்
இதை தாண்டி போககூடாது என்றாலும்
தடை செய்யப்பட்ட பகுதியில் விளிம்பில் நின்று நீண்ட குச்சி மூலம் அனைவரையும் படம் எடுக்கும் கூட்டம்
கலைப்பொருட்களைக் கண்களால் பார்வைமட்டும் செய்தோம் வாங்கவில்லை.
முன்பு பழைய சினிமாவில் மிகவும் முக்கியமான செய்தியைப் பரபரப்பான தலைப்பு செய்தியை சொல்லி ஓடி கொண்டு இருப்பான் சிறுவன்.
அது போல் 'வானம் இடிந்து விழுந்தது ' என்று சொல்லி செய்தித்தாள் விற்கும் பையன்.
"பெரிஞ்சர்(Barringer) பள்ளம் " என்பது ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் உள்ள ஒரு விண்கல் விழுந்த பள்ளம்.
அது அமைந்து இருக்கும் இடம் 'ஃப்ளாக்ஸ்டாஃப்' (Flagstaff)என்ற இடத்திலிருந்து 69 கி.மீ கிழக்கில் வின்ஸ்லோ அருகில் இருக்கிறது.
மகன் அழைத்து சென்றான் இந்த இடத்திற்கு.
50,000 ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்த இடம்.
20 மில்லியன் டன் வெடிக்கத் தக்க பொருளுக்குச் சமமான சக்தியுடைய எரிகல்!
விழுந்த இடத்தைப் பாதுகாத்து வைத்து, பார்ப்பதற்குக் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
முதியவர்களுக்குச் சலுகை உண்டு, குடியுரிமை உள்ள முதியவர்களுக்கு மேலும் கட்டணச் சலுகை உண்டு.
காற்று அதிவேகத்தில் அடித்தது ,படிகளில் ஏறிச் செல்ல கைப்பிடி இருந்ததால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மேலே போய் எரிகல் விழுந்த இடத்தைப் பார்த்தோம்.
கம்பித் தடுப்பைப் பிடித்துக் கொண்டாலும் கீழே தள்ளும் அளவு காற்று.தொலைநோக்கி மூலம் எரிகல் விழுந்த இடத்தைப் பக்கத்தில் பார்க்கலாம்.
கம்பித் தடுப்பைப் பிடித்துக் கொண்டாலும் கீழே தள்ளும் அளவு காற்று.தொலைநோக்கி மூலம் எரிகல் விழுந்த இடத்தைப் பக்கத்தில் பார்க்கலாம்.
ஒளி, ஒலி காட்சிகள் வைத்து இருக்கிறார்கள் .
விண்கல் விழுந்த செய்தியை'வானம் இடிந்து விழுந்தது 'என்று கூறியபடி சிறு பையன் நியூஸ் பேப்பர் விற்கும் காட்சி அழகாய் வைத்து இருந்தார்கள்.
விண்கல் பார்க்கப் போன இடத்தில் கூடு கட்ட காய்ந்த புல் சேகரிக்கும் குருவி.
விண்கல் பார்க்கப் போன இடத்தில் கூடு கட்ட காய்ந்த புல் சேகரிக்கும் குருவி.
அலகில் காய்ந்த புல்லை வைத்து இருக்கும் குருவி -இறைவனின் படைப்பு வியக்க வைக்கும்-
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன் (டெஸ்ட்)
பதிலளிநீக்குஅழகிய படங்களுடன் எங்களையும் காணும் உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் நன்றி சகோ.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
///வாழ்க வளமுடன் (டெஸ்ட்)///
பதிலளிநீக்குநோஓஓஓஓஓஓ கர்ர்ர்:)) மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)) இப்போதான் பார்த்தேன் கோமதி அக்கா.. நைட் வந்து விபரமா பார்த்து பதில் போடுறேன்ன்..
வணக்கம் அதிரா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குதேவகோட்டை ஜி 1ஸ்ட்டூஊஊஊஊஊ
வாங்க வாங்க விடுமுறை நாள் இல்லையா?
பின்னூட்டம் டெஸ்ட் செய்ய ஒரு பதிவு போட்டேன்.
சுவாரஸ்யமான தகவல்கள். கலைப்பொருட்கள் நன்றாக இருந்தாலும் விண்கல் விழுந்த இடத்தில் அப்படி என்ன விசேஷம்?
பதிலளிநீக்குபடங்கள் மூலம் நாங்களும் அந்த இடத்தைப் பார்த்த உணர்வு. என்ன, காத்ருஹன் இல்லை!!!
பதிலளிநீக்குவிண்கல் விழுந்த இடம் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா. உங்கள் மூலமாக நானும் அங்கே பயணித்தேன்.
பதிலளிநீக்குவளமாக வாழ்வதற்கு டெஸ்ட் வைத்திருக்கிறீர்கள்!!! பாஸா?
பதிலளிநீக்குஅறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் - அழகிய படங்களுடன்...
பதிலளிநீக்குஆகா...
அங்கும் தங்களுக்கென அழகழகு குருவிகள்..
வாழ்க நலம்...
// படங்கள் மூலம் நாங்களும் அந்த இடத்தைப் பார்த்த உணர்வு. என்ன, காத்ருஹன் இல்லை!!!//
பதிலளிநீக்குகாற்றுதான் இல்லை!
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சுவாரஸ்யமான தகவல்கள். கலைப்பொருட்கள் நன்றாக இருந்தாலும் விண்கல் விழுந்த இடத்தில் அப்படி என்ன விசேஷம்?//
கலைப்பொருட்கள் அரிஸோனாவில் கிடைக்கும் கனிமங்களில் செய்து இருக்கிறார்கள் அதுதான் விசேஷம்.
வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாற்றில் நிறைய பேருக்கு தலையில் கட்டி இருந்த ஸ்கார்ப் பறந்து போனது.
வளமாக வாழ்வதற்கு டெஸ்ட் வைத்திருக்கிறீர்கள்!!! பாஸா?
பதிலளிநீக்குபாஸ் என்றுதான் சொல்ல வேண்டும் . பின்னூட்டங்கள் மெயிலில் காட்டுகிறது.
ஆனால் பதிவில் விழுந்தபின் தான் காட்டுது.
நேற்று கீதாசாம்பசிவம், வெங்கட் நாகராஜ், ராமலக்ஷ்மி பின்னூட்டங்கள் awaiting moderation இருந்து எடுத்து போட்டேன்.
இடை இடையே இப்படி இருக்கு.
இன்று எல்லாம் இங்கு விழுந்தபின் மெயிலில் காட்டுது.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி .
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அருமையான படங்களுடன் எங்களையும் அழைத்து கைடெட் டூர் செய்ததற்கு மிக நன்றி கோமதி.
பதிலளிநீக்குஅந்தக் குருவி தான் நம் நம்பிக்கை.
வாழ்க வளமுடன்,.
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅந்த குருவி காய்ந்த குச்சியை எடுத்து கொண்டு கூடு கட்டும் போது கீழே விழுந்தாலும் மீண்டும் முயற்சி செய்து கட்டுமே ! அந்த தன்னம்பிக்கை நமக்கு வேண்டும் தான்.
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி அக்கா.
ஆவ்வ்வ்வ் விண்கல் விழுந்த இடம் பார்க்கவே பயங்கரமாக இருக்கே. அந்த இடத்தை மிக அழகாகப் பேணிப்பாதுகாப்பதோடு சுற்றுலாத்தளமாகவும் மாற்றி விட்டார்கள்.. இந்த பழைமையைப் போற்றுவதில் இவர்கள் வல்லவர்கள்.
பதிலளிநீக்குபேரன் எப்பவும் துருதுரு என்றிருக்கிறார்.. நல்ல கெட்டிக்காரனாக வருவார் என்பது தெரியுது..
பதிலளிநீக்குஹீரோ வை மட்டும் படம் எடுத்திருக்கிறீங்களே ஹீரோயின் எங்கே?[கோமதி அக்காவைக் காணவில்லை:)]
ஹா ஹா ஹா உங்கள் கண்ணுக்கு ஒரு குருவியாவது அகப்பட்டு விடுகிறதே:).. அருமையான சுற்றுலா. மண்ணில் செய்த பொம்மைகள் பொருட்கள் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவிண்கல் விழுந்த இடம் பயங்கரமாய் தான் இருக்கிறது.
//அந்த இடத்தை மிக அழகாகப் பேணிப்பாதுகாப்பதோடு சுற்றுலாத்தளமாகவும் மாற்றி விட்டார்கள்.. இந்த பழைமையைப் போற்றுவதில் இவர்கள் வல்லவர்கள்.//
ஆமாம் அதிரா, அவர்கள் பழமையை போற்றுவதில் வல்லவர்களாய் இருக்கிறார்கள் இன்னும் வரப்போகும் பதிவுகள் அதை மேலும் உண்மை என்று சொல்லும்.
//பேரன் எப்பவும் துருதுரு என்றிருக்கிறார்.. நல்ல கெட்டிக்காரனாக வருவார் என்பது தெரியுது..//
பதிலளிநீக்குஉங்கள் கணிப்பு எப்போது வீண் போகாது. கெட்டிக்காரன்தான். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
//ஹீரோ வை மட்டும் படம் எடுத்திருக்கிறீங்களே ஹீரோயின் எங்கே?[கோமதி அக்காவைக் காணவில்லை:)]//
நான் எப்போதும் காட்சிகளை பதிவு செய்ய போற இடங்களில் சுற்றி கொண்டு இருப்பேன், நின்று என்னை எடுங்கள் என்று போஸ் கொடுத்தால் தானே?
என் மகன் எங்களை எடுத்தான் அவன் காமிராவில் அதை அனுப்ப சொல்ல வேண்டும்.
அத்தைக்காக எங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த அவசரத்தில் படங்களை சேகரிக்க முடியவில்லை .
இப்போதும் தேடினேன் உங்களுக்காக என் கணவர் நோட் மூலம் எடுத்தபடங்களை அதில் எல்லாம் நான் காமிராவில் பதிவு செய்வதையே இரண்டு மூன்று கோணங்க்களில் எடுத்து இருக்கிறார்கள் முகம் தெரியவில்லை அதை போடுகிறேன்.
பதிலளிநீக்கு//ஹா ஹா ஹா உங்கள் கண்ணுக்கு ஒரு குருவியாவது அகப்பட்டு விடுகிறதே:).. அருமையான சுற்றுலா. மண்ணில் செய்த பொம்மைகள் பொருட்கள் அழகு.//
ஆமாம் , அங்கு உள்ள குருவி எப்படி இருக்கும் என்று தெரிகிறது அல்லவா?
போகும் இடங்களில் எல்லாம் குருவி எடுத்து இருக்கிறேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
அருமையான கருத்துக்களுக்கு நன்றி அதிரா.
அருமை...
பதிலளிநீக்குமுடிவில் குருவி - மிகவும் ரசித்தேன்...
அழகா இருக்கின்றன படங்கள் எல்லாம். அங்கு போக முடியுமோ தெரியாது. ஆனா நீங்க அந்த குறையை போக்கி எங்களுடன் பகிர்ந்துவிட்டிருக்கீங்க. சுவர் வழி மலைகாட்சி மிக அழகாக இருக்கு. ரியல் போல இருக்கு. கவினுக்கு ஹப்பியா இருக்கும். அவரும் உங்களை போல படங்கள் எடுக்கிறார். நானும் குருவிபடம் பார்த்தவுடன் நினைத்தேன் அக்காவுக்கு பறவைகள் அகப்பட்டுவிடுகிறார்களேன்னு.
பதிலளிநீக்குபொம்மைகள் அழகா இருக்கின்றன. நல்லதொரு பதிவு அக்கா.
புகைப்படங்களும், உங்களின் விவரிப்பும் நல்ல அனுபவத்தை தருகின்றன. நன்றி!
பதிலளிநீக்குஅது ஜன்னல் போன்ற அமைப்பா? ஓவியம் என்று நினைத்தேன். வெகு அழகு! அங்கேயும் உங்கள் கண்ணில் ஒரு குருவி பட்டிருக்கிறதே!
வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் அம்மு, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇப்போது போகவில்லை என்றாலும் எப்போது வேண்டுமென்றால் போகலாம்.
கவின் பேரை நினைவு வைத்து இருப்பது மகிழ்ச்சி.
சுவரில் ஐன்னல் போன்ற அமைப்பின் மூலம் மலை தெரிவது உண்மையான மலைதான் அம்மு.
பேரன் அழகாய் படங்கள் எடுப்பான்.
பறவைகள் எப்படியோ கிடைத்து விட்டது.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .
வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஐன்னல் போன்ற அமைப்புதான் . அது வழியே இயற்கை காட்சிகளை எடுக்கலாம்.
மலைகாட்சியை எடுத்தேன் நான்.
அங்கும் குருவி பார்த்து விட்டேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான இடங்கள். தாங்கள் எடுத்த புகைப் படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. புகைப்படங்கள் எடுக்கும் கலையில் தாங்கள் மிகவும் சிறந்து விளங்குகின்றீர்கள்..உங்கள் பேரனின் போட்டோகளும் அழகாக இருந்தது.
அனைத்துப் படங்களும் நன்றாக இருக்கின்றன. கலர் குருவி அந்த வெதருக்கு ஏற்றபடி அழகாக உள்ளது. எங்கிருந்தாலும் அதுவும் குடும்பம் குழந்தைகள் தாய்ப்பாசம் என்ற வளையத்திற்குள் சுற்றி வருகிறதே! அதனால் அதுவும் வீடு கட்டும் மும்மரத்தில் உள்ளதோ?
விண்கல் விழுந்த இடங்கள் மிகவும் அழகாக இருந்தது.உங்கள் பதிவின் மூலம் நாங்களும் விண்கல் விழுந்த இடங்கள், மற்றும் கலைப் பொருட்கள் என்று அனைத்தையும் ரசித்தோம். பகிர்வுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.
நேற்று என் வலைத்தளத்தில் உங்கள் பதிவு தெரியவில்லை. இன்று காட்டியது. அதனால் கருத்துரைக்க தாமதமாகி விட்டது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//அருமையான இடங்கள். தாங்கள் எடுத்த புகைப் படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. புகைப்படங்கள் எடுக்கும் கலையில் தாங்கள் மிகவும் சிறந்து விளங்குகின்றீர்கள்..உங்கள் பேரனின் போட்டோகளும் அழகாக இருந்தது.//
எனக்கு தெரிந்த அளவு எடுத்து இருக்கிறேன் கமலா.
//அனைத்துப் படங்களும் நன்றாக இருக்கின்றன. கலர் குருவி அந்த வெதருக்கு ஏற்றபடி அழகாக உள்ளது. எங்கிருந்தாலும் அதுவும் குடும்பம் குழந்தைகள் தாய்ப்பாசம் என்ற வளையத்திற்குள் சுற்றி வருகிறதே! அதனால் அதுவும் வீடு கட்டும் மும்மரத்தில் உள்ளதோ?//
புகைப்படம் நன்றாக இருக்கிறதா நன்றி.
குருவி அந்த ஊர் மண்ணுக்கு ஏற்ற கலரில் இருக்கிறது.
முட்டியிடும் சமயத்தில் மட்டும் தான் கூடு அமைக்கும் குருவி.
கூடு கட்டப்பபோகிறது.
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நேற்று மாலைதான் போட்டேன் கமலா பதிவு.
நேரம் கிடைக்கும் போது கருத்துரை கொடுங்கள் .
சில நேரம் டேஸ்போர்ட் காட்டாது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி. பேரன் ஆர்வத்துடன் கவனிக்கிறான்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபேரன் ஆரவமாய் கவனிப்பான், அதை விளையாட்டின் போது சேர்த்துக் கொண்டு அதை வைத்து கதைகள் புனைவான் .
உங்கள் கருத்துக்கு நன்றி.
காணக்கிடைக்காத அரிய காட்சிகளைத் தங்களால் கண்டேன்
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
விண்கல் விழுந்த இடம் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்
பதிலளிநீக்குஅனைத்தும் மிக சிறப்பு மா..
மிக ரசித்து பார்த்தேன்...
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி .
படங்கள் சிரப்பு.
பதிலளிநீக்குஇங்கே வந்திருக்கீங்களா?
வணக்கம் துரை சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநாங்கள் அக்டோபர் மாதம் போனோம், சாரின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் டிசம்பர் மாதம் வந்து விட்டோம்.
அத்தையும் ஜனவரியில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களாக சுட்டுத் தள்ளியிருக்கிறீர்கள். பிற்பாடு நல்ல நினைவுகளாய் நிற்கும்
பதிலளிநீக்குகாய்ந்தபுல் சேகரிக்கும் குருவி.. விண்கல்லைப்பற்றிய விஞ்ஞானம் அறிந்திராததால் நிம்மதி! Ignorance is bliss!
வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//படங்களாக சுட்டுத் தள்ளியிருக்கிறீர்கள். பிற்பாடு நல்ல நினைவுகளாய் நிற்கும்//
ஆமாம், நினைவுகளுக்கு தானே படங்கள் எடுப்பது.
//காய்ந்தபுல் சேகரிக்கும் குருவி.. விண்கல்லைப்பற்றிய விஞ்ஞானம் அறிந்திராததால் நிம்மதி! Ignorance is bliss!//
நன்றாக சொன்னீர்கள், அறியாமையும் வரம் தான்.
குருவிக்கு அதன் வேலை பெரிது விஞ்ஞானம் அதற்கு எதற்கு?
கூடு கட்டும் கலை பெரிது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
விண்கல்...விவரங்களும் படங்களும் அசத்திவிட்டன.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
துளசிதரன்: படங்கள் அத்தனையும் அழகாக இருக்கின்றன. இடங்கள் வெகு சிறப்பு. எங்களையும் படங்கள் மூலம் இப்படியான இடங்களைப் பார்க்க அழைத்துச் சென்றுவிட்டீர்கள். அருமை
பதிலளிநீக்குகீதா: கோமதிக்கா நமக்கு எங்கு போனாலும் குருவிகள் கண்ணில் பட்டுவிடும்..விண்கல் விழுந்த இடம் மிக மிக அழகாகத்தான் இருக்கிறது பாலைவனமாக இருந்தாலும். அதையும் ப்ரொட்டெக்ட் பண்ணி பார்வைக்கு வைத்து நன்றாகவே பராமரிக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது நம் ஊரில் எவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றன?! அதுவும் பழம் பெருமை வாய்ந்த இடங்கள். அதை எல்லாம் எவ்வளவு அழகாகப் பராமரித்து எல்லோரையும் கவரும் வண்ணம் செய்து சுற்றுலாவிலேயே வருமானம் நம் நாட்டிற்கும் பெற வைக்கலாம் என்று தோன்றாமல் இல்லை. பல புராதான இடங்கள் பராமரிப்பு இல்லாமல் நலிந்து வருகின்றன என்று வெங்கட்ஜி, துரை அண்ணா, நீங்கள் எல்லோரும் எழுதி வருகிறீர்கள்தான்.
ஜன்னல் போன்ற இடத்திலிருந்து எடுத்த படம் செம. குருவி படங்களும் செமையா இருக்கு.
பேரன் க்யூட்!!! நல்ல திறமை தெரிகிறது. கண்டிப்பாக நன்றாக வருவார் என்று இப்போதே தெரிகிறது. வாழ்த்துகள்.
விண்கல் விழுந்த இடமும் அதைச் சுற்றியுள்ள இடங்களின் படங்கள் அனைத்தும் வெகு அழகாக இருக்கின்றன என்றால் கலைப்பொருட்கள் கண்ணைக் கவர்கின்றன. அந்தக் கல்லில் செய்த பொம்மைகள் வாவ் போட வைக்கின்றன.
ரசித்தோம் அக்கா பதிவை...
துளசிதரன்: தேடி எடுத்து படங்கள் போட்டு என்னைப் போன்ற தந்தையர்களை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. படங்களை மிகவும் ரசித்தேன். உங்கள் தந்தையுடன், உங்கள் மகனும் தந்தையும், மகனும் அவரது மகனும் என்று மிக மிக அழகாய் கவித்துவமான படங்கள்.
பதிலளிநீக்குகீதா: கோமதிக்கா தாமதமாகிவிட்டது. மகனின் வருகையால் உங்களுக்குத் தெரியுமே!. அதனால் துளசியின் கமென்டையும் போட முடியாமல் போய்விட்டது. அவர் பல இடுகைகளுக்குக் கருத்து அனுப்பியிருந்தார் ஒரே மெயிலில். எது எதற்கு என்று தெரியாமல் தேடி எடுத்துப் பொருத்திப் பார்த்துப் போடுகிறேன் ஹா ஹா ஹாஅ...இப்போது சொல்லியிருக்கேன் அவரிடம் யார் இடுகை அல்லது பதிவின் தலைப்பு என்பதையாவது சொல்லிக் கருத்து எழுதச் சொல்லியிருக்கேன். ஹா ஹா ஹா
//சிறு வயதிலிருந்தே அப்பா போல் சட்டை வேண்டும் என்பான் இருவருக்கு ஒரே மாதிரி துணி எடுத்து தைக்க கொடுப்போம். தீபாவளி பதிவில் இதை எழுதி இருப்பேன். இப்போது டி -சர்ட் தனக்குப் போலவே அப்பாவிற்கு எடுத்து கொடுத்தான்.// நான் மிகவும் ரசித்த வரிகள்!!!
அருமையான படங்கள். நினைவுத் தொகுப்புகள். அத்தனையும் அன்பு ததும்பும் படங்கள் கோமதிக்கா. பேரன், தங்கள் மகன், நீங்கள் மூவரும் டிட்டோவாக இருக்கிறீர்கள்!! ரசித்த பதிவு.
வணக்கம் துளசிதரன் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//துளசிதரன்: படங்கள் அத்தனையும் அழகாக இருக்கின்றன. இடங்கள் வெகு சிறப்பு. எங்களையும் படங்கள் மூலம் இப்படியான இடங்களைப் பார்க்க அழைத்துச் சென்றுவிட்டீர்கள். அருமை //
நன்றி.
//கீதா: கோமதிக்கா நமக்கு எங்கு போனாலும் குருவிகள் கண்ணில் பட்டுவிடும்..விண்கல் விழுந்த இடம் மிக மிக அழகாகத்தான் இருக்கிறது பாலைவனமாக இருந்தாலும். அதையும் ப்ரொட்டெக்ட் பண்ணி பார்வைக்கு வைத்து நன்றாகவே பராமரிக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது நம் ஊரில் எவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றன?! அதுவும் பழம் பெருமை வாய்ந்த இடங்கள். அதை எல்லாம் எவ்வளவு அழகாகப் பராமரித்து எல்லோரையும் கவரும் வண்ணம் செய்து சுற்றுலாவிலேயே வருமானம் நம் நாட்டிற்கும் பெற வைக்கலாம் என்று தோன்றாமல் இல்லை. பல புராதான இடங்கள் பராமரிப்பு இல்லாமல் நலிந்து வருகின்றன என்று வெங்கட்ஜி, துரை அண்ணா, நீங்கள் எல்லோரும் எழுதி வருகிறீர்கள்தான். //
உங்கள் கருத்து உண்மையே நம் நாட்டில் எவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இடங்கள் இருக்கிறது அதை போற்றி பாதுகாக்க வேண்டும் அடுத்த தலைமுறைக்கு.
அனைத்தையும் ரசித்து அருமையாக கருத்து சொன்ன கீதாவுக்கு நன்றி.