ஞாயிறு, 17 ஜூன், 2018

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

Image may contain: 2 people
என் தந்தையும் நானும்
Image may contain: 1 person
என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்)
                                                         என் மகனும் என் கணவரும் 

சிறு வயதிலிருந்தே அப்பா போல் சட்டை வேண்டும் என்பான் இருவருக்கு ஒரே மாதிரி துணி எடுத்து தைக்க கொடுப்போம். தீபாவளி பதிவில் இதை எழுதி இருப்பேன்.  இப்போது  டி -சர்ட் தனக்குப் போலவே அப்பாவிற்கு எடுத்து கொடுத்தான்.என் மகனும் பேரனும்
அப்பாவையும் மகனையும்  நான் எடுத்த படத்தை அவர்களிடம் காட்டும் போது என்னை என் மருமகள் எடுத்து இருக்கிறாள் எனக்குத் தெரியாமல்
போகும் இடங்களில் எல்லாம் தன் குழந்தையை அன்பாய்த் தோள் மீதும் கைகளிலும் சுமந்த தந்தையர்

அன்பாய், கண்டிப்பாய், ஆதரவாய் குழந்தைகளை வளர்த்த அப்பாக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

காலையில் பிள்ளைகள் எல்லாம் வாழ்த்துச் சொன்னார்கள் அப்பாவிற்கு. தங்கை குழந்தைகளும் வாழ்த்துச் சொன்னார்கள். அப்போது எல்லாம் பதிவு போடும் எண்ணம் இல்லை.  

கமலா ஹரிஹரனின்  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை  என்ற பதிவை படித்தவுடன்   அவர்கள் தோள் மீது குழந்தையை சுமக்கும் அப்பா படம் போட்டதைப் பார்த்தவுடன் சொன்னேன் நானும் இது போன்ற குழந்தையை தோள் மீது சுமப்பவர்கள் படம் எடுத்து இருக்கிறேன் இன்று போடலாம் அதை என்றேன். அதை தேடுவதற்குள் தந்தையர் தினமே முடிந்து விடும் போல!
ஆனால் வெளிநாட்டில் நாளை தானே! என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு எப்படியோ தேடி எடுத்துப் பதிவு போட்டு விட்டேன். 

இன்னும் நிறைய எடுத்தேன் அதை அடுத்த ஆண்டு போடுவோம், சரியா?
எங்கள் பேரன் கவினுக்கு இன்று பிறந்த நாள், உங்கள் எல்லோர் வாழ்த்துக் களை வேண்டுகிறேன்.

                                                       வாழ்க வளமுடன்.

57 கருத்துகள்:

 1. இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.

  கவினுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  தந்தையர் தின வாழ்த்துக்கும், பேரனை வாழ்த்தியதற்கும் நன்றி .

  பதிலளிநீக்கு
 3. தந்தையர்தின வாழ்த்துக்கள்.
  காலத்தால் மறக்கமுடியாத நினைவுகளை சுமந்து நிற்பவை ப்ளாக் அண்ட் வைட் போட்டோஸ். ஏதோ கோபமா இருக்கீங்க போல நீங்க.
  ஆஹா.. அழகான தொப்பியோடு நீங்க. கவின்குட்டிக்கு வாழ்த்துக்கள். அனேகமாக தந்தைமார்தான் தோளில் சுமப்பார்கள். கோவிலில் திருவிழா எனில் தோளிலிருந்து சுவாமியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு. தந்தையர் தின நினைவுகள் சிறப்பு.

  கவினுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனிதாய் அமைந்திடட்டும்.

  பதிலளிநீக்கு
 5. இனிய பகிர்வு வாழ்த்துக்கள்,இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்,,,/

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
  தந்தையர்தின வாழ்த்துக்கு நன்றி.
  அப்பாவைத்து இருக்கும் படத்தில் ஏதோ கேட்டு அடம்.
  பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

  பெரும்பாலும் தந்தைதான் தோளில் சுமந்து காட்டுவார் காட்சிகளை,நம்மூர் திருவிழாவில் ஒரு பெண் தன் தோளில் தூக்கி வைத்து கொண்டு கோவிலில் அம்மனை மகளுக்கு காட்டிய படம் போட்டு இருக்கிறேன் முன்பு.
  தொப்பி படம் நன்றாக இருக்கிறதா? நன்றி.
  உங்கள் தொடர் வருகைக்கு நன்றி அம்மு.  பதிலளிநீக்கு
 7. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், கவினை வாழ்த்தியதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோ விமலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஆஆஆஆஆ கோமதி அக்கா.. இந்த போஸ்ட் இப்போதானே என் கண்ணில பட்டுது... அனைத்து தந்தையர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.... நான் எப்பவும் வாழ்த்துப் போஸ்ட் போட விரும்புவதில்லை.. போடும் இடங்களில் எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லிடுவேன்:).

  உங்கள் அப்பாவைப் பார்க்க .. அப்படியே ஒரு நடிகர்போலவே இருக்கிறார், அவரின் பெயர் வர மாட்டேனென்கிறது ஆனா அவர் கொஞ்சம் பதிவு.. உங்கள் அப்பா உயரமானவர்.

  அப்பாவும் மகளும் அழகு...

  பதிலளிநீக்கு
 10. உங்களைத்தூக்கி வச்சிருப்பதை விட, தன் மூத்த பேரனைத்தூக்கி வைத்திருப்பதில் இன்னும் இளமையாக இருக்கிறார்:)..

  உங்கள் மகனும் கணவரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள். உண்மைதான் அப்பாவைப்போலவே தாமும் இருக்கோணும் என ஆண்குழந்தைகளுக்கு எப்பவும் ஆசை. என் மகன் குழந்தையாக இருக்கும்போது அடிக்கடி சொல்வது.. அப்பா உங்கட வொலட்டையும் காரையும் எனக்கு தரோணும் நான் பிக் ஆனதும் என்பார். ஏன் வொலட் எனக் கேட்பேன்.. அதுக்குள் பாங் கார்ட் இருக்காம்.. அடிக்க அடிக்க காசு வருமாம் என்பார் ஹா ஹா ஹா....

  பதிலளிநீக்கு
 11. //அப்பாவையும் மகனையும் நான் எடுத்த படத்தை அவர்களிடம் காட்டும் போது என்னை என் மருமகள் எடுத்து இருக்கிறாள் எனக்குத் தெரியாமல்//

  ஹா ஹா ஹா கோமதி அக்கா.. ஒரு நல்ல கைதேர்ந்த ஃபோட்டோகிராபராகவே இருக்கிறீங்க...

  பதிலளிநீக்கு
 12. //எங்கள் பேரன் கவினுக்கு இன்று பிறந்த நாள், உங்கள் எல்லோர் வாழ்த்துக் களை வேண்டுகிறேன்.///

  ஓ இன்று பிறந்தநாளோ?.. குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. என்றும் நலமோடும் மகிழ்வோடும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்ன்.. இது எத்தனையாவது 9 வயசோ? இல்ல 8?..

  பதிலளிநீக்கு
 13. //கமலா ஹரிஹரனின் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற பதிவை படித்தவுடன்///

  சில நேரங்களில் இப்படி சில போஸ்ட் பார்த்து நமக்கும் அதேபோல ஏதும் நினைவுகள் கிளறுப்பட்டுவிடுவதுண்டு... அழகிய போஸ்ட்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் கவிஞர் அதிரா, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  என் அப்பாவை டைரக்டர் ஸ்ரீதர் போல இருப்பதாய் சொல்வார்கள்.
  அக்காமகன் பிறந்த போது அப்பாவின் வயது 47, இளமைதானே !

  பதிலளிநீக்கு
 15. //உங்கள் மகனும் கணவரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்.//

  நன்றி.

  உண்மைதான் அப்பாவைப்போலவே தாமும் இருக்கோணும் என ஆண்குழந்தைகளுக்கு எப்பவும் ஆசை. என் மகன் குழந்தையாக இருக்கும்போது அடிக்கடி சொல்வது.. அப்பா உங்கட வொலட்டையும் காரையும் எனக்கு தரோணும் நான் பிக் ஆனதும் என்பார். ஏன் வொலட் எனக் கேட்பேன்.. அதுக்குள் பாங் கார்ட் இருக்காம்.. அடிக்க அடிக்க காசு வருமாம் என்பார் ஹா ஹா ஹா....
  உங்கள் மகன் சொன்னதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
  குழந்தைகள் அப்பா போல் இருக்க ஆசைபடுவது இயற்கை.

  பதிலளிநீக்கு
 16. //அப்பாவையும் மகனையும் நான் எடுத்த படத்தை அவர்களிடம் காட்டும் போது என்னை என் மருமகள் எடுத்து இருக்கிறாள் எனக்குத் தெரியாமல்//

  ஹா ஹா ஹா கோமதி அக்கா.. ஒரு நல்ல கைதேர்ந்த ஃபோட்டோகிராபராகவே இருக்கிறீங்க..//

  அதிரா உண்மையா , விளையாட்டா?
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. //எங்கள் பேரன் கவினுக்கு இன்று பிறந்த நாள், உங்கள் எல்லோர் வாழ்த்துக் களை வேண்டுகிறேன்.///

  ஓ இன்று பிறந்தநாளோ?.. குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. என்றும் நலமோடும் மகிழ்வோடும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்ன்.. இது எத்தனையாவது 9 வயசோ? இல்ல 8?..//

  ஆமாம் அதிரா, அவர்கள் நாளை கொண்டாடுகிறார்கள். ஜூன் 17ம் தேதி பிறந்தான். இப்போது 9 முடிந்து 10 ஆரம்பிக்கிறது.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. //கமலா ஹரிஹரனின் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற பதிவை படித்தவுடன்///

  சில நேரங்களில் இப்படி சில போஸ்ட் பார்த்து நமக்கும் அதேபோல ஏதும் நினைவுகள் கிளறுப்பட்டுவிடுவதுண்டு... அழகிய போஸ்ட்.//

  ஆமாம் அதிரா, நீங்கள் சொல்வது உண்மை. சமையல் போஸ்ட் பார்த்து செய்து பார்க்க தோன்றும். போடவும் ஆசை தான், ஆனால் நிறைய படங்கள் மட்டும் எடுத்து வைத்து கொண்டு போடாமல் இருக்கிறேன்.
  கமலா ஹரிஹரனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னை எழுத வைத்தமைக்கு.

  காலை முதல் வேறு வேலைகள், படம் தேடும் வேலை வேறு மாலைதான் போஸ்ட் போட்டேன் அதிரா.

  உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ஆஹா... புகைப்படங்கள் அன்பைச் சொல்கின்றன. தந்தையர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. நீங்கள் முவரும் இருக்கும் படம் அருமை.... அதை எடுத்த மருமகளுக்கு பாராட்டு...... பேரனுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் அவர்கள் உண்மைகள் வாழ்க வளமுடன்.
  மருமகளுக்கு பாராட்டுக்கள் சொன்னதற்கும், பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் சகோதரி

  தங்கள் தந்தையர் தினப் பதிவு மிக அருமையாக உள்ளது.
  தந்தையர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்த படங்களும், தாங்கள் எடுத்த குடும்ப புகைப்படங்களும் மிகவும் நன்றாக இருந்தன. நீங்களும் மிக சிறப்பாக படங்கள் எடுக்கிறீர்கள் என்றால் தங்கள் மருமகளும் தங்களனைவரையும் மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்கள். இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  தங்கள் குடும்பத்தினருக்கு தந்தையர் தின வாழ்த்துகள். தங்கள் பேரன் கவினுக்கு என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் வளமுடனும் பதினாறு செல்வங்களும் பெற்று நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

  என் பதிவை பார்த்து எழுத தோன்றியது என தங்களது பதிவில் என்னையும் குறிப்பிட்டு கூறியிருப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள். எழுதியதும் ஆக்கமும் தாங்கள்தான். தங்களுக்குத்தான் என்னையும் குறிப்பிட்டிருந்ததற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

  நான் மதியத்திலிருந்து கொஞ்சம் வெளியில் சென்றிருந்தேன். இப்போது வந்தவுடன் தங்கள் பதிவை பார்த்ததும் உடன் கருத்திடுகிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன். இன்னமும் சமையல் குறிப்புகளும் எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 24. //என் அப்பாவை டைரக்டர் ஸ்ரீதர் போல இருப்பதாய் சொல்வார்கள்.
  அக்காமகன் பிறந்த போது அப்பாவின் வயது 47, இளமைதானே !//

  நான் சொன்னவர் டிரக்டரா எனத் தெரியவில்லை.. ஆனா ஒரு பழைய நடிகர்...

  அதைச் சொல்லவில்லை, நீங்கள் குழந்தையாக இருந்தபொழுதை விட.. இன்னும் இளமையாக இருக்கிறார் பேரனோடு இருக்கும்போது எனச் சொன்னேன்:))

  ஹா ஹா ஹா உண்மையில் நீங்கள் கைதேர்ந்த ஃபோட்டோகிராஃபர்தான் அதிலென்ன சந்தேகம்... தீட்டத்தீட்டத்தானே தங்கம் துலங்கும் என்பதுபோல.. எதுவும் தொடர்ந்து செய்யும்போதுதானே நம் புலமை வெளிப்படும்.

  பதிலளிநீக்கு
 25. //Blogger கோமதி அரசு said...
  வணக்கம் கவிஞர் அதிரா,///

  ஆவ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ் இதை எல்லாம் என் செக்:) பார்க்க மாட்டாவே காக்கா போயிடுவா அவ கர்ர்ர்ர்:))..

  ஞானியை:) மறந்திட்டீங்க கோமதி அக்கா:))

  பதிலளிநீக்கு
 26. கவினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் தந்தையர் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 27. இந்த தோளில் சுமக்கும் கழுத்துக்கு மேலே தூக்கி செல்லும் வழக்கம் நம்மூர் போலவே இங்கே ஐரோப்பியரும் செய்வாங்கக்கா .
  ஒரு சந்தோஷ நினைவுகளை சுமந்த ஆல்பத்தை பார்த்த மகிழ்வு புகைப்படங்கள் எல்லாம் பொக்கிஷமான நினைவுகளை எக்காலமும் சுமந்து செல்லும்

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் சகோதரி கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

  //தங்கள் தந்தையர் தினப் பதிவு மிக அருமையாக உள்ளது.
  தந்தையர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்த படங்களும், தாங்கள் எடுத்த குடும்ப புகைப்படங்களும் மிகவும் நன்றாக இருந்தன. நீங்களும் மிக சிறப்பாக படங்கள் எடுக்கிறீர்கள் என்றால் தங்கள் மருமகளும் தங்களனைவரையும் மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்கள். இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.//

  பதிவை, படங்களை, மருமகளை , மற்றும் என்னை பாராட்டியதற்கு நன்றி.

  //தங்கள் குடும்பத்தினருக்கு தந்தையர் தின வாழ்த்துகள். தங்கள் பேரன் கவினுக்கு என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் வளமுடனும் பதினாறு செல்வங்களும் பெற்று நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்.//

  தந்தையர் தின வாழ்த்துக்களுக்கும், பேரனுக்கு சிறப்பாய் வாழ்த்தியதற்கும் மனமார்ந்த நன்றி.

  //என் பதிவை பார்த்து எழுத தோன்றியது என தங்களது பதிவில் என்னையும் குறிப்பிட்டு கூறியிருப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள். எழுதியதும் ஆக்கமும் தாங்கள்தான். தங்களுக்குத்தான் என்னையும் குறிப்பிட்டிருந்ததற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.//

  உங்கள் பதிவை படித்தபின் எழுந்த எண்ணம் என்பது உண்மை. பேரனுக்கும் வாழ்த்துக்கள் கிடைத்தது. அதற்கும் நன்றி.

  //நான் மதியத்திலிருந்து கொஞ்சம் வெளியில் சென்றிருந்தேன். இப்போது வந்தவுடன் தங்கள் பதிவை பார்த்ததும் உடன் கருத்திடுகிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன். இன்னமும் சமையல் குறிப்புகளும் எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.//

  தாமதம் இல்லை வருந்த வேண்டாம். சமையல் குறிப்புகளை போடுகிறேன்.

  உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி கமலா.  பதிலளிநீக்கு
 29. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
  தந்தையர் தின வாழ்த்துக்கும், பேரன் கவினை வாழ்த்தியதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 30. //இந்த தோளில் சுமக்கும் கழுத்துக்கு மேலே தூக்கி செல்லும் வழக்கம் நம்மூர் போலவே இங்கே ஐரோப்பியரும் செய்வாங்கக்கா .//

  ஆமாம் ஏஞ்சல், போகும் இடங்களில் எல்லாம் பார்க்க முடிந்த அற்புத காட்சி.
  நம்மூரில் எடுத்த படங்களை பல பதிவுகளில் பகிர்ந்து விட்டேன் அதனால் வெளிநாட்டுப் படங்களை பகிர்ந்தேன்.


  //ஒரு சந்தோஷ நினைவுகளை சுமந்த ஆல்பத்தை பார்த்த மகிழ்வு புகைப்படங்கள் எல்லாம் பொக்கிஷமான நினைவுகளை எக்காலமும் சுமந்து செல்லும்//

  நீங்கள் சொல்வது உண்மை. புகைப்படங்களுக்கு பின் ஒவ்வொரு நினைவுகள் இருக்கும். அந்த படங்களை பார்க்கும் போது இனிய நினைவுகளும் நம் நினைவில் வரும், அந்த அனுபவம் மனதுக்கு மகிழ்ச்சியை, சில நேரங்களில் சோகத்தை கொடுக்கும்.
  நினைவுகள் பொக்கிஷம் தான்.

  உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. //நான் சொன்னவர் டிரக்டரா எனத் தெரியவில்லை.. ஆனா ஒரு பழைய நடிகர்...

  அதைச் சொல்லவில்லை, நீங்கள் குழந்தையாக இருந்தபொழுதை விட.. இன்னும் இளமையாக இருக்கிறார் பேரனோடு இருக்கும்போது எனச் சொன்னேன்:))//

  நடிகர் யார் என்று தெரியவில்லை.

  ஆமாம், தாத்தாவான சந்தோஷத்தில் இளமையாக தெரிவார் தானே!  //ஆவ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ் இதை எல்லாம் என் செக்:) பார்க்க மாட்டாவே காக்கா போயிடுவா அவ கர்ர்ர்ர்:))..

  ஞானியை:) மறந்திட்டீங்க கோமதி அக்கா:))//
  ஞானியை மறக்க முடியுமோ? இப்போது இரண்டு நாள் முன் கவிஞராக கவிதை பாடியதால் அப்படி அழைத்தேன்.
  நீங்கள் பிறக்கும் போதே ஞானி.
  உங்கள் செக் பொறுப்பானவர், விவரம் தெரிந்தவர் கோமதி அக்கா ஏன் அப்படி சொல்லி இருக்கிறார் என்று தெரியும் அதனால் அவர் திருத்தவில்லை.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.


  பதிலளிநீக்கு
 33. ஆகா...

  மிகப் பழைய படங்களைப் பார்க்கும்போது
  அதிலிருந்து மீண்டு வருவது மிகக் கடினம்...

  நினைவுகளை மீட்டி விடும் அந்தப் படங்கள் எல்லாம் பொக்கிஷங்கள்...

  தனது ஆச்சியையும் பாட்டனாரையும் போட்டோக்களின் வாயிலாகப் பார்க்கும் பேரக்குழந்தைகளின் மகிழ்ச்சியை என்னவென்று வர்ணிப்பது!...

  தந்தையர் தினப் பதிவு அருமை..
  ( பேரனுக்கான வாழ்த்து தனியாக!..)

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 34. படங்களும் பகிர்வும் அருமை. பேரனுக்கும் மீண்டும் இங்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!

  தோள் மேல் குழந்தைகளைச் சுமக்கும் தகப்பன்களைப் பலமுறை படமாக்கியிருக்கிறேன் நானும். நல்ல படம்.

  தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

  //ஆகா...

  மிகப் பழைய படங்களைப் பார்க்கும்போது
  அதிலிருந்து மீண்டு வருவது மிகக் கடினம்...//

  பழைய படங்கள் தரும் நினைவுகளிலிருந்து மீண்டு வருவது கஷ்டம் தான்.

  //நினைவுகளை மீட்டி விடும் அந்தப் படங்கள் எல்லாம் பொக்கிஷங்கள்...//

  உண்மை.

  //தனது ஆச்சியையும் பாட்டனாரையும் போட்டோக்களின் வாயிலாகப் பார்க்கும் பேரக்குழந்தைகளின் மகிழ்ச்சியை என்னவென்று வர்ணிப்பது!...//

  என் குழந்தைகள் தாத்தாவை(என் அப்பாவை) போட்டோவில் பார்த்துதான் மகிழ்ந்தார்கள். அப்பா தாத்தாவுடன் பல காலம் மகிழ்ந்தார்கள்.

  //தந்தையர் தினப் பதிவு அருமை..//
  நன்றி.

  ( பேரனுக்கான வாழ்த்து தனியாக!..)

  பேரனுக்கு வாழ்த்துக்கு நன்றி.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.  பதிலளிநீக்கு
 36. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

  //
  படங்களும் பகிர்வும் அருமை. பேரனுக்கும் மீண்டும் இங்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!//

  நன்றி ராமலக்ஷ்மி.

  //தோள் மேல் குழந்தைகளைச் சுமக்கும் தகப்பன்களைப் பலமுறை படமாக்கியிருக்கிறேன் நானும். நல்ல படம்.//

  மிக அருமையாக படமாக்கியிருப்பீர்கள் பார்த்து மகிச்சி அடைந்து இருக்கிறேனே!  //தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்!//

  நன்றி.

  பதிலளிநீக்கு
 37. ( பேரனுக்கான வாழ்த்து தனியாக!..)

  >>> பேரனுக்கு வாழ்த்துக்கு நன்றி...<<<

  பேரனுக்கு இன்னும் வாழ்த்து சொல்லவில்லையே!..

  பதிலளிநீக்கு
 38. தந்தை தோளில் அமர்த்தி மகனுக்கு கடவுளைக் காட்டும்போது அவனுக்குத் தெரிய வில்லை
  கடவுளின் தோள் மீடுதான் அமர்ந்திருக்கிறோம் என்று

  பதிலளிநீக்கு
 39. இரவு வேலை முடித்து காலையில் வந்ததும்
  கணினியைத் திறந்து இணையம் ஜிங்..ஜிங்.. என்று குதிக்காமல் இருந்தால்
  அன்றைய பதிவுகளைப் படிப்பது.. மின்னஞ்சல்களைப் பார்ப்பது...

  அதன்பின், குளித்துவிட்டு விளக்கேற்றி வைத்து வழிபாடு...

  விபூதி தரித்தபின் சமையல்.. அதற்கப்புறம் சாப்பாடு.. தூக்கம்...

  இன்று பேரனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமே!...
  வழிபாடு முடித்த பின்னர் சொல்வது நல்லது தானே!..

  அதனால் தான் காலையில் உடனடியாக ஒன்றும் சொல்லவில்லை...

  இதோ எனது வாழ்த்துகள் தனியான கருத்துரையில்!...

  பதிலளிநீக்கு
 40. பேரனுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்!...

  கவின் என்ற சொல் அழகு
  கவின் கொண்ட பேர் அழகு...
  கவின் என்ற தளிர் வாழ்க
  கவின் கொண்டு கவின் வாழ்க!...

  பெரியோர்கள் பேர் வண்ணம்
  பிழையாமல் பெறும் வண்ணம்
  நானிலத்தில் நடை வண்ணம்
  நடந்தாலே புகழ் வண்ணம்!...

  பேர் கொண்ட சிவ குடும்பம்
  சீர் காக்க நீ முனைக...
  பேர் தந்த பெற்றோரை
  ஊர் போற்ற நீ விழைக!..

  கோமதி சிவ சங்கரியாள்
  குலங் காத்து நலம் சேர்ப்பாள்..
  வான்மதியின் வளர் நிலையாய்
  நலங் காத்து புகழ் சேர்ப்பாள்!...

  செந்தமிழாள் அருள் புரிவாள்
  வளர்ந்திடுக பல்லாண்டு..
  சிவ அபிராமி அருகிருப்பாள்
  வாழ்ந்திடுக பல்லாண்டு!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 41. கவினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அனைத்துத் தந்தையருக்கும் வாழ்த்துகள். துரை அவர்கள் கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

  ( பேரனுக்கான வாழ்த்து தனியாக!..)

  >>> பேரனுக்கு வாழ்த்துக்கு நன்றி...<<<

  பேரனுக்கு இன்னும் வாழ்த்து சொல்லவில்லையே!..//

  நான் பேரனுக்கு வாழ்த்து தனியாக என்று போட்டு விட்டு அடிக்க மறந்து விட்டீர்கள் போலும் என்று நினைத்தேன். அதனால் வாழ்த்துக்கு நன்றி என்று போட்டேன்.

  பதிலளிநீக்கு

 43. //இரவு வேலை முடித்து காலையில் வந்ததும்
  கணினியைத் திறந்து இணையம் ஜிங்..ஜிங்.. என்று குதிக்காமல் இருந்தால்
  அன்றைய பதிவுகளைப் படிப்பது.. மின்னஞ்சல்களைப் பார்ப்பது.//

  ஓ !

  //அதன்பின், குளித்துவிட்டு விளக்கேற்றி வைத்து வழிபாடு...

  விபூதி தரித்தபின் சமையல்.. அதற்கப்புறம் சாப்பாடு.. தூக்கம்...//

  நல்ல பழக்கம்.

  //இன்று பேரனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமே!...
  வழிபாடு முடித்த பின்னர் சொல்வது நல்லது தானே!..

  அதனால் தான் காலையில் உடனடியாக ஒன்றும் சொல்லவில்லை...

  இதோ எனது வாழ்த்துகள் தனியான கருத்துரையில்!...//

  இத்தனை வேலைகளுக்கு இடையில் பேரனை நினைவாக வைத்து இருந்து அழகான கவிதை மூலம் வாழ்த்து சொன்னத்ற்கு கொடுத்து வைத்து இருக்கிறான் பேரன்.  பேரனுக்கு அன்பின் நல்வாழ்த்துக்களை அனுப்பியது கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம் நானும் சாரும்.

  அழகான் கவிதை.
  பேரனுக்கு அனுப்பி வைக்கிறேன்.
  அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

  சார் உங்கள் கவிதையை படித்து பாராட்டினார். கவின் சின்ன வயதிலேயே வாழ்த்து கவிதை பெற்று விட்டான் என்று மகிழ்ந்தார்கள்.

  நன்றி சொல்கிறேன் மீண்டும்.
  இந்த கவிதையை தனி பதிவாய் போடுகிறேன் அப்போது எல்லோரும் படித்து மகிழ்வார்கள் கவிதையை.

  நீங்கள் போட்டவுடன் படிக்க முடியவில்லை. உறவினர் வீட்டுக்கு காலை சென்று விட்டு மாலைதான் வந்தோம். தாமதமாக படித்து கருத்து சொன்னதற்கு மன்னிக்கவும்.
  நன்றி நன்றி.


  பதிலளிநீக்கு
 44. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

  //தந்தை தோளில் அமர்த்தி மகனுக்கு கடவுளைக் காட்டும்போது அவனுக்குத் தெரிய வில்லை
  கடவுளின் தோள் மீடுதான் அமர்ந்திருக்கிறோம் என்று//

  அருமையாக சொன்னீர்கள்.
  கருத்துக்கு நன்றி.


  பதிலளிநீக்கு
 45. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

  //கவினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அனைத்துத் தந்தையருக்கும் வாழ்த்துகள். துரை அவர்கள் கவிதை அருமை!//

  முகநூலில் சொன்னீர்கள் இங்கு வந்தும் சொன்னீர்கள்.
  நன்றி நன்றி கீதா.

  துரை அவர்கள் அனபான கவிதை கண்டு மகிழ்ந்தோம் நாங்களும்.

  பதிலளிநீக்கு
 46. படங்கள் வழக்கம்போல் அருமை. பேரனுக்கு கொஞ்சம் தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். இறை அருளால் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 47. >>> இந்த கவிதையை தனி பதிவாய் போடுகிறேன்... <<<

  தங்களன்பிற்கு மகிழ்ச்சி.. நன்றி..

  தனிப் பதிவாகப் போடுமளவுக்கு நான் ஒன்றும் சொல்லவில்லை..

  தங்கள் கருத்தினை நேற்றே படித்து விட்டேன்..
  இணையம் ஒத்துழைக்காததால் பதில் கூற முடியவில்லை...

  என்றும் மாறாத அன்பு வேண்டும்..
  அதுவே மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 48. அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்...

  கவினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  அழகான புகைப்படங்களுக்கு.....
  நன்றி அம்மா

  பதிலளிநீக்கு
 49. கவினுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.....மா


  பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் எப்படி இருந்த்து கவின் குட்டிக்கு...

  என் பெரிய பையன் ஜூன் 16...


  படங்கள் எல்லாம் வெகு அழகு மா..

  பதிலளிநீக்கு
 50. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
  படங்கள் பற்றிய கருத்துரைக்கும், பேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னத்ற்கும் நன்றி.
  அமெரிக்காவில் நேற்று தானே கொண்டாடினார்கள் அதனால் தாமதம் எல்லாம் இல்லை சரியாக வாழ்த்தி விட்டீர்கள்.
  நன்றி பானுமதி.

  பதிலளிநீக்கு
 51. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.

  //தனிப் பதிவாகப் போடுமளவுக்கு நான் ஒன்றும் சொல்லவில்லை..//

  அருமையாக வாழ்த்து கவிதை சொன்னீர்கள்.
  பின்னூட்டம் கொடுத்தவர்கள் எல்லோரும் உங்கள் கவிதையை படித்து இருக்க மாட்டார்கள்.
  படிக்காதவர்களுக்கு உங்கள் திறமை சென்றடையும். கதை, கட்டுரை, ஆன்மீகம் , சமையல் கவிதை என்று பன்முக திறமைகள் இருக்கிறது உங்களிடம்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 52. வணக்கம் உமையாள். வாழ்க வளமுடன்.
  தந்தையர் தின வாழ்த்துக்களுக்கும், பேரனை வாழ்த்தியமைக்கும் நன்றி.
  புகைப்பட கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 53. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

  பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மிக சிறப்பாய் நடந்தது.
  என் பேத்திக்கும் ஜூன் 16ம் தேதி பிறந்த நாள்.
  உங்கள் பெரிய பையனுக்கு வாழ்த்துக்கள்.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 54. Blogger Thulasidharan V Thillaiakathu said...
  துளசிதரன்: தேடி எடுத்து படங்கள் போட்டு என்னைப் போன்ற தந்தையர்களை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. படங்களை மிகவும் ரசித்தேன். உங்கள் தந்தையுடன், உங்கள் மகனும் தந்தையும், மகனும் அவரது மகனும் என்று மிக மிக அழகாய் கவித்துவமான படங்கள்.

  கீதா: கோமதிக்கா தாமதமாகிவிட்டது. மகனின் வருகையால் உங்களுக்குத் தெரியுமே!. அதனால் துளசியின் கமென்டையும் போட முடியாமல் போய்விட்டது. அவர் பல இடுகைகளுக்குக் கருத்து அனுப்பியிருந்தார் ஒரே மெயிலில். எது எதற்கு என்று தெரியாமல் தேடி எடுத்துப் பொருத்திப் பார்த்துப் போடுகிறேன் ஹா ஹா ஹாஅ...இப்போது சொல்லியிருக்கேன் அவரிடம் யார் இடுகை அல்லது பதிவின் தலைப்பு என்பதையாவது சொல்லிக் கருத்து எழுதச் சொல்லியிருக்கேன். ஹா ஹா ஹா

  //சிறு வயதிலிருந்தே அப்பா போல் சட்டை வேண்டும் என்பான் இருவருக்கு ஒரே மாதிரி துணி எடுத்து தைக்க கொடுப்போம். தீபாவளி பதிவில் இதை எழுதி இருப்பேன். இப்போது டி -சர்ட் தனக்குப் போலவே அப்பாவிற்கு எடுத்து கொடுத்தான்.// நான் மிகவும் ரசித்த வரிகள்!!!

  அருமையான படங்கள். நினைவுத் தொகுப்புகள். அத்தனையும் அன்பு ததும்பும் படங்கள் கோமதிக்கா. பேரன், தங்கள் மகன், நீங்கள் மூவரும் டிட்டோவாக இருக்கிறீர்கள்!! ரசித்த பதிவு.


  June 24, 2018 at 8:57 PM Delete//

  பதிலளிநீக்கு
 55. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி சகோ துளசிதரன்.


  //கீதா: கோமதிக்கா தாமதமாகிவிட்டது. மகனின் வருகையால் உங்களுக்குத் தெரியுமே!. அதனால் துளசியின் கமென்டையும் போட முடியாமல் போய்விட்டது. அவர் பல இடுகைகளுக்குக் கருத்து அனுப்பியிருந்தார் ஒரே மெயிலில். எது எதற்கு என்று தெரியாமல் தேடி எடுத்துப் பொருத்திப் பார்த்துப் போடுகிறேன் ஹா ஹா ஹாஅ...இப்போது சொல்லியிருக்கேன் அவரிடம் யார் இடுகை அல்லது பதிவின் தலைப்பு என்பதையாவது சொல்லிக் கருத்து எழுதச் சொல்லியிருக்கேன். ஹா ஹா ஹா//

  மகன் ஊருக்கு நலமாய் சென்று சேர்ந்து பேசிய பின்னர் தான் நமக்கு வேலை ஓடும் இல்லையா கீதா.

  தந்தையர் தின பதிவை விண்கல் பதிவில் போட்டு விட்டீர்கள் அதை எடுத்து இங்கு ஒட்டி விட்டேன்.

  பதிவையும் அதில் உள்ள வரிகளையும் ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு