எங்கள் குடியிருப்புக்கு வரும் பறவைகள். என் பொழுது போக்கு -பறவைகளைக் கண்டு ரசித்தல். அவைகளைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
முகநூல் பக்கத்தில் 'என் ஜன்னல் வழியே' என்று அடிக்கடி பகிர்ந்து வரும் படங்களின் தொகுப்பு.
காமிரா, மொபைல் போன் இரண்டிலும் எடுத்த படங்கள்.
புறாவும், சிட்டுக் குருவியும்
எதிர்ப் பக்க வீட்டில் உணவு சாப்பிடும் பறவையை என் ஜன்னல் வழியாக எடுத்த படம்
மிக ஓரமாய் இருக்கிறதே! (அடுக்களை பக்கத்தில் உள்ள ஜன்னல் வழி எடுத்த படம்)
சாப்பாடு இல்லையே என்று கழுத்தை வளைத்து பாக்குது.
இந்த பறவை பெயர் Rufous treepie என்று கூகுள் இமேஜ் பறவைகள் படத்தில் போட்டு இருக்கிறது.
கூப்பிடுகிறது சாப்பாடு கேட்டு
எங்கள் குடியிருப்பு மதில் பக்கம் இருக்கும் கொடுக்காப்புளி மரத்தில் அமர்ந்து இருக்கும் பச்சைகிளி (எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து எடுத்த படம்)
எங்கள் குடியிருப்பு மரத்தில் கருங்குயில்
எங்கள் வீட்டு டி.வி ஒயரில் ஊஞ்சலாடும் குருவி
பாபம் போல் பார்க்கும் புறா
கோபப் பார்வை பார்க்கும் மைனா
ஜன்னல் வழியே அன்புச் செல்லங்களை
இன்னும் நேரம் ஆகுமோ என்று யோசிக்கிறது
எங்கள் வீட்டில் சாப்பிடும் பறவை
எங்கள் வீட்டில் வைத்த உணவுப் பருக்கையைக் கொத்தி வாயில் வைத்துக் கொண்டு எதிர் வீட்டு மேல் மாடி கொடிக் கம்பியில் உட்கார்ந்து பார்க்கிறது.
இந்த புல் புல் பறவை அடிக்கடி அமரும் இடம். அவர்கள் வீட்டு கண்ணாடி(பால்கனிக்கு கண்ணாடி தடுப்பு போட்டு அடைத்து இருப்பார்கள்) ஜன்னலில் தன் முகத்தை பார்த்தே கொத்திக் கொள்ளும் சில வேளைகளில்
எங்கள் வீட்டில் சாப்பாட்டுத் தட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்குது
எதிர் வீட்டில் வித்தியாசமான கலரில் புறா
பாடும் பறவை (வானம்பாடி)
காக்கா நிறைய வரும் .அவற்றைத் தனிப் பதிவாய்ப் போட எடுத்து வைத்து இருக்கிறேன். முன்பு "குண்டு காக்கா" என்று எழுதிய கதைக்குக் காக்கா படம் கிடைக்காமல் நம் ராமலக்ஷ்மியிடம் கேட்டு அவர் கொடுத்தார் அழகான குண்டு காக்கா படம்.
எதிர்ப்பக்கத்தில் கடைசி வீட்டுக்கு வந்த பெண் குயில்கள்
ஆண் குயில்
பெண் குயில்
காக்கை காணொளியில் கடைசியில் பச்சைக் கிளியும் வரும். எங்கு அமர்ந்து இருக்கு என்று பார்த்து சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
காக்கை காணொளியை பெரிது செய்து பாருங்கள் கிளி நன்றாக தெரியும்.
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள் காணொளி கண்டேன்.
பதிலளிநீக்குகிளியும், செடிகளும் ஒரே நிறத்தில் இருந்து குழப்புகின்றன...
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//கிளியும், செடிகளும் ஒரே நிறத்தில் இருந்து குழப்புகின்றன//
அதனால்தான் கண்டுபிடிக்க சொன்னேன்.
பார்த்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
கருத்துக்கு நன்றி.
பார்க்க பார்க்க பரவசம்...!
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅழகான பறவைகள் படங்கள. ஒவ்வொன்றையும் மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள். புறா, மைனா, கருங்குயில், ஆண்குயில், பெண்குயில் என அனைத்துக்கும், விமர்சனங்கள் மிக அழகான வார்த்தைகளில் படிக்க ரசனையாக இருந்தது. காணொளியில், காக்கையுடன், பச்சை நிற செடிகளுக்கிடையே அழகாக கிளியும் அமர்ந்திருக்க கண்டேன். பறவைகள் மீது பாசமாக இருக்கும் தங்கள் அன்புணர்வுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆஅவ்வ் மீ தான் 1ச்ட் என நினைச்சு ஸ்பீட்டா ஓடி வந்தேன் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).
பதிலளிநீக்குபுறாவும் சிட்டுக் குருவியும் என்ன ஒற்றுமையாக ஒரு தட்டில் சாப்பிடுகிறார்கள்போலும்.. புறாப்பிள்ளை கொத்திக் கலைக்க மாட்டாரோ..
உங்கள் ஊர் சிட்டுக்குருவி பெரிதாக இருக்கு.. கால்களும் பெரிசு.. இங்கு குட்டிக் குட்டியாக இருக்கும்... அதனாலதான் டெய்சிப்பிள்ளை ஈசியாக பிடிச்சிடுறா.
நீட்டு வால்க் குருவி, ஏதும் கிளிவகையைச் சார்ந்ததுபோல இருக்கு... சொண்டைப்பார்க்க கிளிச்சொண்டு போலவே இருக்கு.
பதிலளிநீக்குஓ உங்கள் ஏரியாவில் கொடுக்காப்புளி மரம் இருக்கோ.. படம் எடுத்துப் போடலாமே மரத்தில் புளியை..
புறா என்றாலே அப்பாவிதான்.. இங்கும் அப்படித்தான் பயமில்லாமல் கிட்ட வருவார்கள்.
மைனாவைப் பார்த்து எவ்ளோ காலமாகி விட்டது.. சின வயதில் பார்த்தது..
பதிலளிநீக்குவிதம் விதமான புறாக்கள். அது வானம்பாடியா? கரிக்குருவி போல இருக்கே.
கருங்குயில்தான் எனக்கு தெரியும்.. பெண் குயில்கள் சாம்பல் நிறமோ?
உங்கள் வீட்டுக்கு மனிதரை விடப் பறவைகள் அதிகம் வருவினம் போல இருக்கே:) ஹா ஹா ஹா..
வணக்கம் சகோ கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபறவைகளைப் பார்த்து கருத்து சொன்னதற்கும் காணொளி பார்த்து பாராட்டு தெரிவித்தமைக்கும் நன்றி கமலா.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதேவகோட்டையார் முதலில் வந்து விட்டார்.
ஓடி வந்தமைக்கு நன்றி.
புறா எப்போதும் மற்ற பறவைகளை விரட்டி விடும், குருவியை விரட்டாமல் விட்டது ஆச்சரியம்.
டெய்சிப்பிள்ளை பிடித்து விடுமா குருவியை? ஐயோ பாபம்.
அதிரா நீண்ட வால் பறவை கிளி போல் இருக்கா உங்களுக்கு?
பதிலளிநீக்குஎங்குப் பார்த்தாலும் கொடுக்கபுளி மரம் இருக்கிறது.
முன்பு போட்டு இருக்கிறேன் கொடுக்காபுளியை.
இன்னொரு பதிவில் போடுகிறேன்.
பறவைகள் எப்பவும் அழகு .அதில் இந்த சிட்டுக்குருவிகளின் சாய்ந்த வாக்கில் பார்க்கும் பார்வை கொள்ளை அழகு .
பதிலளிநீக்குகாணொளியில் காகத்தின் தலைக்கு மேலே மரத்தில் கிளி அமர்ந்திருக்கு .
இங்கே வெளிநாட்டில் கண்ணாடி ஜன்னல்கள்னா அதில் கருப்பு ஸ்டிக்கர் Anti-Collision Stickers ஒட்டி வைப்பாங்க அதனால் பறவைகள் முட்டி மோதாது .முந்தி எங்க வீட்ல doggies ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை பார்த்து வளவள்னு குலைப்பாங்க :)
அக்கா காகங்களும் தண்ணியை பிற பறவைகளுடன் சேர்ந்து குடிப்பதால் அங்கங்கே கொஞ்சம் கொத்தமல்லி புதினா ,சிறுகுறிஞ்சான் இலைகளையும் நறுக்கி போட்டு வைங்க பாக்டீரியால் நோய் ஏதும் அண்டாது
அதிரா , மைனா கிடையாதா உங்கள் ஊரில்?
பதிலளிநீக்குவானம்பாடி தான், கரிக்குருவி உடல் பட்டு போல் இருக்கும் வாலும் வேறு மாதிரி இருக்கும்.
ஆண் குயில் கறுப்பு , பெண் குயிலுக்கு உடலில் பொட்டு பொட்டாய் டிசைன் இருக்கும்.
என் வீட்டுக்கு மனிதரும் வருவார்கள்.
பறவைகளும் வருவார்கள்.
எங்கள் இன்னொரு வீட்டில் கால்நடைகளும் வரும்.(ஆடு, மாடு, நாய்)
வாசலில் வந்து கேட்டை மோதி உணவு கேட்கும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபறவைகள் பார்வை ஒவ்வொன்றும் ஒரு அழகுதான்.
காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//இங்கே வெளிநாட்டில் கண்ணாடி ஜன்னல்கள்னா அதில் கருப்பு ஸ்டிக்கர் Anti-Collision Stickers ஒட்டி வைப்பாங்க அதனால் பறவைகள் முட்டி மோதாது .முந்தி எங்க வீட்ல doggies ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை பார்த்து வளவள்னு குலைப்பாங்க :)//
நல்ல யோசனை. எங்கள் வீட்டு மரபீரோ கண்ணாடியை குருவி கொத்துவதைப் பார்த்து அம்மா அதற்கு திரை தைத்து மாட்டினார்கள் குருவியின் அலகு வலிக்கும் என்று.
//அக்கா காகங்களும் தண்ணியை பிற பறவைகளுடன் சேர்ந்து குடிப்பதால் அங்கங்கே கொஞ்சம் கொத்தமல்லி புதினா ,சிறுகுறிஞ்சான் இலைகளையும் நறுக்கி போட்டு வைங்க பாக்டீரியால் நோய் ஏதும் அண்டாது //
உங்கள் நல்ல யோசனைக்கு நன்றி. புதினா, கொத்தம்ல்லி இலைகளை நறுக்கி போடுகிறேன்.
சிறுகுறிஞ்ச்சான் முன்பு மாயவரத்தில் தொட்டியில் வைத்து இருந்தேன். இப்போது இல்லை.
கிடைத்தால் அதையும் போடுகிறேன். பற்வைகளுக்கும் நோய் வராமல் இருக்கும் இல்லையா?
தண்ணீரை மாற்றும் போது கையுரை போட்டுக் கொண்டு பிரஷால் கழுவி வேறு தண்ணீர் வைக்கிறேன். டெட்டால் போட்டு கைகளை கழுவி கொள்வேன்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
ஹையோ நான் லேட்டு இன்று...எப்படி மிஸ் ஆகிப் போனது அத்தனை படங்களும் அழகோ அழகு..
பதிலளிநீக்குஇரண்டாவது படத்தில் சிட்டுக் குருவி ...என்னையா படம் எடுக்கறே இரு போஸ் கொடுக்கறேன் என்று அழகாகக் கழுத்தை வளைத்துக் காட்டுவது போல இருக்கு...ரொம்ப க்யூட்
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஊரில் இல்லாததால் வரலை! பறவைகளைப் பிடிக்க ரொம்பப் பொறுமை வேணும். எங்க அம்பத்தூர் வீட்டிலும் இந்த எல்லாப் பறவைகளும் வரும். அதுவும் வாசல் வேப்பமரத்துக்குக் கொத்துக் கொத்தாகக் கிளிகள்! மைனாக்கள் சண்டை போட்டுக் கொள்ளும். நல்லா இருக்கும். பறவைகளைக் காப்பாற்றவாவது எல்லோரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கணும். இப்போல்லாம் குறைஞ்சுட்டு வருதோனு தோணுது. சிட்டுக்குருவி இனம் அழியவில்லை என்பதும் உங்கள் படங்களில் இருந்து தெரிகிறது.
பதிலளிநீக்குநான் ரோபோவானு கேட்டுட்டு இருக்கு இன்னமும்! :))))
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அழகு
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் தான் இரண்டு நாள் ஊரில் இருக்கமாட்டேன் என்று சொன்னீர்களே!
பறவைகளை படம் எடுக்க பொறுமை வேண்டும் தான்.
நாம் படம் எடுக்கும் போது அலகால் உடம்பை சுத்தம் செய்யும் தலையை குனிந்து கொள்ளும். ஜூம் செய்யும் போது பறந்து போகும்.
மைனா சண்டை போடுவது அந்த வீட்டில் இருக்கும் போது எடுத்து இருக்கிறேன்.
கிளி கத்திக் கொண்டே பறந்து கொண்டே இருக்கும், அமர்ந்து இருப்பது கொஞ்சம் கடினம்.
சிட்டுக்குருவி அதற்கு வாழ தகுந்த இடத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
//நான் ரோபோவானு கேட்டுட்டு இருக்கு இன்னமும்! :))))//
இன்னும் சரியாகவில்லை , மெயிலுக்கு பின்னூட்டம் வர மாட்டேன் என்கிறது , தானாய் விழுந்து கொண்டு இருக்கிறது பின்னூட்டங்கள்.
சரி செய்து கொண்டு இருக்கிறேன்.
ஜி மெயில் புதிதாக மாற்றம் செய் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது.
பார்ப்போம் எப்போது சரியாகும் என்று.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா ரசித்து ரசித்து எடுத்திருக்கீங்க..செம இருங்க ஒவ்வொண்ணா கமென்ட் ..
பதிலளிநீக்குஅந்த இரண்டாவது படத்தில் கழுத்தை வளைத்துக் கொண்ட குருவியே இன்னும் என் மனதைவிட்டுப் போல அடுத்த படத்துக்குப் போகவே இல்லை...ஹா ஹா ஹா..அந்தக் கழுத்து வளைத்தலில் பல எண்ணங்கள் தோணுது..ஹையோ தொட்டுப் பார்க்கணும் போல இருக்கு என்னது இது ஒன்னையும் காணலையே நீங்க இன்னும் போடுவீங்களானு பாக்குதோ...ஹா ஹா ஹா
4 வது புறா...ஹூம் நமக்கு எட்டாது போல அந்த வெள்ளையே சாப்பிட்டுடுமோ...என்று சொல்லுகிறதோ....
அந்த வால் குருவி (சரி சரி அந்தப் பெயர் வாயில் நுழையலை...விட்டுருவோம் ஹிஹிஹி) ரொம்ப அழகாகக் கழுத்தை வளைத்து...ஆமாம் நீங்க சொல்லுவது போலத்தான் பார்க்கிறது....
ஆமாம் கூப்பிடுது பாருங்க பாவம்...
பச்சைக் கிளி, குயில், ஊஞ்சலாடும் குருவி வாவ்!!! எல்லாமே செம கிளிக்ஸ்...
அந்த மதில் மேல் பார்க்கும் புறா ..ஹூம் நீ மட்டும் சாப்பிட்டுட்ட எனக்கு ஒன்னுமே கிடைக்கலனு சொல்ல...அடுத்த அந்த வெள்ளை....ஓ நீ இன்னும் சாப்பிடலையா முதல்ல சொல்லிருக்கக் கூடாதா வைச்சுரூபேனே என்று சொல்லுதோ...
மைனாவுக்குக் கோபம் கத்துது...எங்க யாருக்கும் இல்லாம நீயே சாப்பிட்டுவிட்டாய் நியாயமா என்று ஹா ஹா ஹா
அடுத்த இரு படங்கள்..சரி போனா போகுது கோச்சுக்காத வெயிட் பண்ணு அடுத்து போடுவாங்க காவல் காத்து உனக்க்குத் தரேன் என்று சொல்லிவிட்டு போடுவாங்களானு பார்க்க
அதுக்குள்ள வேற ஒன்னு வந்து உக்காந்துருச்சே...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைனு
உங்கள் வீட்டு உணவைக் கொத்திச் சாப்பிடுவதும் கம்பியில் உட்கார்ந்திருப்பதும் ஆஹா எனக்குக் கிடைச்சுருச்சே ஹெ எஹ் ஹெஹெ என்று...புல்புல்
ஜன்னலைப் பார்ப்பவர்...இந்தக் கோமதிக்கா உணவு போடப் போறாங்களா இல்லை சும்மா க்ளிக்கிக்கிட்டே இருக்கப் போறாங்களானு பார்க்குதோ..ஹா ஹா ஹா
பாரு எங்க அக்கா படம் மட்டும் எடுக்க மாட்டாங்க உங்களுக்கு எல்லாம் உணவும் கொடுப்பாங்களாக்கும் பாரு சாப்பிடு...
வித்தியாசமான கலர்ப் புறா அழகு....
வானம் பாடி, அண்டங்கக்காக்கா, பெண் குயில்கள் ஆன் குயில், அனைத்தும் அழகு...
இதோ காணொளி பார்த்துட்டு வரேன்...
கீதா
..
காணொளி அருமை...பச்சைக்கிளியை பார்த்துட்டேனே...கடைசியில் காக்கையின் தலைக்கு மேலே உள்ள கிளியில் பார்க்க முடியுது....அழகு
பதிலளிநீக்குகீதா
நல்ல பொறுமை கோமதிக்கா உங்களுக்கு....ஏனென்றால் பறவை, வண்ணத்துப் பூச்சி எல்லாம் பிடிக்க ரொம்ப நேரம் ஆகும் அணிலும் அப்படித்தான்..சொடக்கு பொடும் நேரத்தில் ஓடிவிடும்...
பதிலளிநீக்குஎங்கள் வீட்டருகில் எல்லாம் இத்தனை வருவதில்லை. புறா காகம் மட்டும் வரும்...கிளி வாக்கிங்க் போகும் இடத்தில் வரும் ஆனால் படம் எடுப்பது கஷ்டம் இப்போது கேமராவும் இல்லை...மரத்தில் மேலே அமர்ந்திருக்கும் நிறைய கிளிகள்....ஒரு முறை எடுத்தேன் ஆனால் சரியா வரலை அதனால் போடவில்லை...
கீதா
அச்சோ so sweet..
பதிலளிநீக்குஅப்படின்னு தான் தோன்னுசு முதல் படம் பார்க்கும் போது...
எல்லாமே ரொம்ப அழகு...மா
கீதா மீண்டும் வந்து ஒவ்வொரு படத்தையும் ரசித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு//ஒவ்வொண்ணா கமென்ட் ..//
அருமை.
காலை முதல் மாலை வரை சமைத்து போட்டுக் கொண்டே இருக்கலாம் , வந்து காத்துக் கொண்டு இருக்கும், காக்கா கூப்பிட்டுக் கொண்டே இருக்கும்.
//காணொளி அருமை...பச்சைக்கிளியை பார்த்துட்டேனே...கடைசியில் காக்கையின் தலைக்கு மேலே உள்ள கிளியில் பார்க்க முடியுது....அழகு//
காக்காவைத்தான் எடுத்தேன் காணொளி போட்டு பார்த்த போது தான் கிளியும் இருப்பது தெரிந்தது.
அதுதான் உங்களையும் பார்க்க சொன்னேன். பார்த்தற்கு நன்றி.
கீதா பறவையாவது பரவாயில்லை ஆனால் வண்ணத்து பூச்சி எடுப்பது கஷ்டம் தான். இரண்டு நாள் முன்பு ஓமவல்லி செடியில் வெகு நேரம் உட்கார்ந்து இருந்த வண்ணத்து பூச்சியை எடுத்தேன் ஒரு பதிவில் போடுகிறேன்.
பதிலளிநீக்குகேமராவும் இல்லை//
கேமரா என்னாச்சு?
உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி, நன்றி.
வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
புதிதாகச் சொல்வதற்கு எதுவுமே இல்லை...
பதிலளிநீக்குஇந்த பாசம் எல்லாம் ஏழேழு ஜன்மங்களாகத் தொடர்பவை என்று மட்டும் புரிகின்றது...
இந்தப் பறவைகள் ஏதேதோ செய்திகளுடன் தங்களைத் தேடி வருகின்றன..
என்னவென்று உணர்ந்து கொள்ளுங்கள்.. அவற்றை வெளியே யாரிடத்தும் சொல்லாதீர்கள்...
வாழ்க நலம்...
ஓ கோமதி அக்கா.. ஆண்குயில் பெண்குயில் பற்றி எனக்கு இப்போதான் தெரியும் நன்றி. நான் குயில் எல்லாம் அதே கறுப்பு என நினைச்சிருந்தேன்:))..
பதிலளிநீக்குஇலங்கையில்தான் மைனா உண்டு.. இங்கு கிடையாது.. காகம் இருக்கு. குயிலும் இல்லை.
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//இந்த பாசம் எல்லாம் ஏழேழு ஜன்மங்களாகத் தொடர்பவை என்று மட்டும் புரிகின்றது..//
மிகுந்த சந்தோஷம்.
//இந்தப் பறவைகள் ஏதேதோ செய்திகளுடன் தங்களைத் தேடி வருகின்றன..
என்னவென்று உணர்ந்து கொள்ளுங்கள்.. அவற்றை வெளியே யாரிடத்தும் சொல்லாதீர்கள்...//
என்ன வென்று தெரிந்தால் சொல்லுங்கள் நீங்கள்.
உணர்ந்து கொள்ள முயல்கிறேன்.
சிறு வயதிலிருந்து பறவைகளை கண்டால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுயில் , மைனா இல்லையா?
இங்கு குயில் காலையில் எல்லோரையும் எழுப்பிவிடும்.
அதன்பின் தான் கோழி கூவும்.
அதுவும் வசந்த காலம் வந்து விட்டால் குயிலின் கச்சேரி அதிகமாய் கேட்கலாம்.
உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இத்தனை வகை பறவைகளா உங்கள் குடியிருப்பு பகுதியில்? இன்றைக்கு நகரங்களில் மிக மிக அரிய பறவையான குருவி உங்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கிறதென்றால் நீங்கள் கொடுதுவைதவரே.
பதிலளிநீக்குவணக்கம் மஹேஷ் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுடியிருப்பு பகுதிக்கு இரு பக்கமும் காலி மனை உள்ளது மரங்கள் நிறைய இருக்கிறது, கொடிகளும், செடிகளும் இருக்கிறது. குடியிருப்பிலும் நிறைய மரங்கள் இருக்கிறது.
குருவி வாழ வசதியான இடம் இருக்கிறது குடியிருப்பில்.
அதனால் பறவைகள் நிறைய இருக்கிறது.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
பறவைகளின் சரணாலயம் போல இருக்கிறது போல உங்கள் வீடு. ரசித்தேன். காணொளியையும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு>>>> என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள் நீங்கள்.
பதிலளிநீக்குஉணர்ந்து கொள்ள முயல்கிறேன்... <<<<
அவையெல்லாம் தங்களுக்கானவை...
என்றென்றும் மகிழ்வுடன்...
உங்கள் இல்லமும் அதன் சுற்றுப்புறமும் பறவை சரணாலயம் போல மாறி வருகிறது போலவே....
பதிலளிநீக்குகாணொளி பார்த்து ரசித்தேன்.
பதிலளிநீக்குஇது போல இரண்டு கமெண்ட்ஸ் நேற்றே இட்டேன். இதோ, உங்கள் தளத்துக்கு வரும்போதே பின்தொடரும் ஆப்ஷன் க்ளிக்காகி இருக்கிறது. அதாவது கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணிட்டுதான் போயிருந்திருக்கிறேன்!
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு? அந்தப் பறவைகளுக்கும் நீங்கள் உணவளித்து விடுகிறீர்கள்... அவையும், குறிப்பாக காக்காவும் தூக்கிப்போக வாய்ப்பில்லையே....!!!
:))))
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபறவைகள் சரணாலயம் போல் இருக்கிறது போல் உங்கள் வீடு//
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
காணொளியும் ரசித்தமைக்கு நன்றி.
உங்கள் பின்னூட்டம் மறந்து இருந்தது இப்போது தான் பார்த்தேன்.
உங்கள் அனபான கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்கு//உங்கள் இல்லமும் அதன் சுற்றுப்புறமும் பறவை சரணாலயம் போல மாறி வருகிறது போலவே....//
ஸ்ரீராம், நீங்கள் சொல்வது உண்மைதான். இன்னும் நகரமயம் ஆகாமல் கொஞ்சம் கிராமம் போல் இருக்கிறது. காலி மனைகளில் உள்ள மரம், செடி, கொடிகள் அழிந்து விட்டால் இவை வேறு எங்காவது போய்விடும்.
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//அவையெல்லாம் தங்களுக்கானவை...
என்றென்றும் மகிழ்வுடன்..//
மகிழ்ச்சி என்றென்றும் என்பது பெரிய விஷயம்.
மகிழ்ச்சியாக இருக்கிறேன் பறவைகளை பார்க்கும் போது.
நன்றி.
இது போல இரண்டு கமெண்ட்ஸ் நேற்றே இட்டேன். இதோ, உங்கள் தளத்துக்கு வரும்போதே பின்தொடரும் ஆப்ஷன் க்ளிக்காகி இருக்கிறது. அதாவது கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணிட்டுதான் போயிருந்திருக்கிறேன்!
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு? அந்தப் பறவைகளுக்கும் நீங்கள் உணவளித்து விடுகிறீர்கள்... அவையும், குறிப்பாக காக்காவும் தூக்கிப்போக வாய்ப்பில்லையே....!!!//
காக்கா தூக்கி போகாது, புறா கொண்டு வந்து கொடுத்து விடும்.
என் தளம் இன்னும் சரியாக வில்லை என்று தெரிகிறது
, போஸ்ட் போட்டவுடன் எல்லாவற்றையும் ஒரு தடவை பார்த்து விடுகிறேன்.
பானுமதி வெங்கடேஷ்வரன் மூன்று போஸ்ட்க்கு பின்னூட்டம் கொடுத்து இருக்கிறார் இப்போது தான் உங்கள் பதிலை தேடும் போது கிடைத்தது அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அன்பு கோமதி, எத்தனை விதப் பறவைகள். அவை உணவெடுக்க
பதிலளிநீக்குநீங்கள் செய்திருக்கும் ஏற்பாடு அனைத்தும் மிக அருமை.
வள்ளலார் போல உயிர்களைப் பேணும் அழகை உணர்ந்து செய்கிறீர்கள்.
நானும் இரண்டு தடவை செக் செய்து கிளியைல் கண்டேன்.
மனம் நிறைகிறது.
இங்கும் தானியக் கூடு வைத்திருக்கிறது.
கண்ணாடிச் சுவற்றின் வழியே நம் நிழலாடினால் கூட அத்தனையும் பறந்துவிடும்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குரல். காலை வேளைக்குப் பிறகு
மதியம் இன்னோரு செட். சாயந்திரம் வேறு பறவைகள்..
பறவைகளும் நெங்களும் நடத்தும் ராஜாங்கம்
மிக இனிமை.
விதவிதமான பறவைகளைக் காண்பதே அழகு...எங்களையும் காண வைத்து மகிழ்வித்து விட்டேர்கள் ....எப்படி இருக்கிறீர்கள்....
பதிலளிநீக்குரொம்ப பொறுமை உங்களுக்கு, அழகாக படம் எடுத்து போட்டிருக்கிறீர்கள். இதுதான் பெண் குயில் என்று தெரியாது. எதற்கு இனிமையான குரல்? ஆண் குயிலுக்கா? பெண் குயிலுக்கா?
பதிலளிநீக்கு// பானுமதி வெங்கடேஷ்வரன் மூன்று போஸ்ட்க்கு பின்னூட்டம் கொடுத்து இருக்கிறார் இப்போது தான் உங்கள் பதிலை தேடும் போது கிடைத்தது அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.//
மன்னிப்பு என்னும் பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு? It's OK.
வனக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநான் நலமாய் இருக்கிறேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் உமையாள் உங்கள் கருத்தை தேடி எடுத்து தான் போட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குமன்னிக்கவும், நேற்று போட்டதை இன்று வெளியிட்டு கருத்து சொல்கிறேன்.
வணக்கம் பானுமதி வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇப்போதும் உங்கள் கருத்தை தேடி எடுத்து தான் போட்டு இருக்கிறேன்.
மன்னிக்கவும்.
இரண்டு குயில்களுக்கு குரல் இனிமைதான். ஆண் குயில் மரத்தில் இருந்து கூவும் போது பதில் குரல் பெண் குயில் தூரத்தில் இருந்து கொடுக்கிறது குரல் ஒரே மாதிரிதான் இருக்கிறது கேட்க.
ஒன்றும் புரியவில்லை பின்னூட்டங்கள் மெயிலுக்கு வர மாட்டேன் என்கிறது.
தானகவே விழுகிறது. சிலது awaiting moderation க்கு போகிறது. உங்கள் பின்னூட்டம் அதில் தான் இருந்தது. உமையாள் கருத்துக் அதில் தான் இருந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//ஆண் குயில் மரத்தில் இருந்து கூவும் போது பதில் குரல் பெண் குயில் தூரத்தில் இருந்து கொடுக்கிறது குரல் ஒரே மாதிரிதான் இருக்கிறது கேட்க.// உங்கள் பதிலுக்குக் காத்திருந்தேன். பெண் குயில் கூவாது! காலை நேரம் மட்டுமே முதல் குரல் கொடுக்கும். அது ஒரு மாதிரி பிர்ர்ர்ர், பிங்க்ங் என ஒலிக்கும். அதுக்குப் பதிலாக ஆண் "கூ" எனக் குரல் கொடுக்கும். பின்னர் நாள் முழுவதும் கூவுவது ஆண் குயிலே. குஞ்சுகளைக் காக்கைகள் கூட்டமாகத் துரத்துகையில் பெண் குயில் இறக்கைகளை அடித்துக் கொண்டு மேலே சொன்ன மாதிரி பிர்ர்ர்ர்ர்ர்ர் எனக் குரல் கொடுக்கும். கூகூகூ என வேகமாக அலறும். கொஞ்சம் சண்டை போட்டுத் திட்டுவது போலவே இருக்கும். அம்பத்தூர் வீட்டில் இதான் பொழுது போக்கே! :)
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅருமையாக சொன்னீர்கள். காலையில் இரண்டும் கூவுவது ஒரே மாதிரிதான் இருக்கிறது.
நீங்கள் சொல்வது போல் பகலில் ஒரு குரல் மட்டுமே கேட்கிறது.
சில நேரத்தில் காட்டு கத்தலாக இருக்கும்.
விரிவாக சொன்னதற்கு நன்றி கீதா.
பதிவு போட்ட அன்று பின்னூட்டம் போட்டால் பதிவில் பார்க்க முடிகிறது அடுத்த நாள், அல்லது சில நாள் கழித்து போட்டால் awaiting moderationக்கு போய்விடும் போல
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டம் அங்கு தான் இருந்தது.
பின்னூட்டங்கள் மெயிலுக்கு வர மாட்டேன் என்கிறது கீதா.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//அன்பு கோமதி, எத்தனை விதப் பறவைகள். அவை உணவெடுக்க
நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடு அனைத்தும் மிக அருமை.
வள்ளலார் போல உயிர்களைப் பேணும் அழகை உணர்ந்து செய்கிறீர்கள்.
நானும் இரண்டு தடவை செக் செய்து கிளியைல் கண்டேன்.//
அக்கா , வள்ளலார் போல வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாட பெரிய மனது வேண்டும்.
காணொளியை இரண்டு முறை பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
//மனம் நிறைகிறது.
இங்கும் தானியக் கூடு வைத்திருக்கிறது.
கண்ணாடிச் சுவற்றின் வழியே நம் நிழலாடினால் கூட அத்தனையும் பறந்துவிடும்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குரல். காலை வேளைக்குப் பிறகு
மதியம் இன்னோரு செட். சாயந்திரம் வேறு பறவைகள்..
பறவைகளும் நெங்களும் நடத்தும் ராஜாங்கம்//
உங்கள் அன்பான கருத்தால் என் மனமும் நிறைகிறது.
உங்களுக்கும் பறவைகளை பார்த்து மகிழமுடிவது மகிழ்ச்சி.