மகனுடைய  ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது  வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற   இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன்.
அமெரிக்காவில் 400 தேசிய பூங்கா உள்ளன. அதில் இதுவும் ஒன்று.

காலையில் தெரிந்த நிலா


நடுவில் இருக்கும் மலை கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.


விஷ்ணு பாதம் என்கிறார்கள்.

ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு அழகு.

மாலைச் சூரிய ஒளியில் தங்கம் போல் ஜொலிக்குது மலை

வெயில் படும் இடம் தங்கம் போலவும் மற்ற இடங்கள் சிவப்பாகவும் தெரிகிறது.

மாலை அழகு




கொலராடோ ஆற்றின் அழகு வெகு ஆழத்தில் போகிறது இந்த 446 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. பலவகையான மண் , கல், அடுக்குகளை அரித்துக் கொண்டு இப்போது கீழே ஓடிக் கொண்டு இருக்கிறது. இரண்டு பில்லியன்(2,000, 000 , 000)
ஆண்டுகள் பழைமையான பாறைப் பகுதிகள் கீழே அமைந்துள்ளன.


கம்பித்தடுப்பு இல்லா இடத்திற்குச் செல்லவேண்டாம் என்று அறிவிப்புகள் வைத்து இருந்தாலும் பயத்தை வென்ற மக்கள் நமக்கு அச்சத்தை வரவழைத்தனர்.

பாதுகாப்பான எங்கள் கண் பார்வையில் பேரனின் சாகச போஸ்


குளிர் காற்று நம்மைப் பயமுறுத்துகிறது, அதை மீறி ,படம் எடுப்பவர் சொல்படி சிரிப்பு

பள்ளத்தாக்கிலிருந்து நடந்து செல்ல ஏற்பாடு செய்து தருகிறார்கள்.


கிராண்ட் கேன்யானில் தங்கி இருந்த விடுதி அருகில் இருந்த மரத்தில் காலை நேரம் பள பள என்று மின்னிய காக்கா- பைன் மரத்தில்

அதன் சத்தமும் கொஞ்சம் வித்தியாசம்.
நல்ல உடல் வாகு.

போல் மின்னுகிறது. நல்ல உடல்வாகைப் பெற்று இருக்கிறது. கழுகு போல் மிக உயரத்தில் பறக்கிறது.
அமெரிக்காவில் 400 தேசிய பூங்கா உள்ளன. அதில் இதுவும் ஒன்று.
இந்த பள்ளத்தாக்கில்  மாலைச் சூரியன் மறையும் போது ஒரு அழகு, காலை ஒரு அழகு. அங்கு இரண்டு நாள் தங்கிப் பார்த்தோம்.
நிறைய இடங்கள் கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.
சிவன் கோயில், விஷ்ணு பாதம், என்றெல்லாம் பெயர் கொடுத்து இருக்கிறார்கள்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தோன்றும் கற்பனைக்கு ஏற்ற மலை அழகு.
நிறைய இடங்களில் இருந்து மலையின் அழகையும் பள்ளத்தாக்கையும், ஓடும் கொலராடோ ஆற்றின் அழகையும் பார்க்கப் பாதுகாப்பான கம்பித் தடுப்புகள் உள்ளன.
பாதுகாப்பற்ற மலையின் விளிம்பில் நின்று பார்க்கும் பயத்தை வென்றவர்களும், விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களும் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்கள்.

காலையில் தெரிந்த நிலா


நடுவில் இருக்கும் மலை கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.


விஷ்ணு பாதம் என்கிறார்கள்.

ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு அழகு.

மாலைச் சூரிய ஒளியில் தங்கம் போல் ஜொலிக்குது மலை

வெயில் படும் இடம் தங்கம் போலவும் மற்ற இடங்கள் சிவப்பாகவும் தெரிகிறது.

மாலை அழகு



கொலராடோ ஆற்றின் அழகு வெகு ஆழத்தில் போகிறது இந்த 446 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. பலவகையான மண் , கல், அடுக்குகளை அரித்துக் கொண்டு இப்போது கீழே ஓடிக் கொண்டு இருக்கிறது. இரண்டு பில்லியன்(2,000, 000 , 000)
ஆண்டுகள் பழைமையான பாறைப் பகுதிகள் கீழே அமைந்துள்ளன.
ஆற்றின் அழகைக் கம்பித்தடுப்பு வழியாகப் பார்க்கலாம்.
பயமே இல்லாமல் கம்பித்தடுப்பு இல்லா இடத்தில் மக்கள்.

கம்பித்தடுப்பு இல்லா இடத்திற்குச் செல்லவேண்டாம் என்று அறிவிப்புகள் வைத்து இருந்தாலும் பயத்தை வென்ற மக்கள் நமக்கு அச்சத்தை வரவழைத்தனர்.
பாதுகாப்பான எங்கள் கண் பார்வையில் பேரனின் சாகச போஸ்

குளிர் காற்று நம்மைப் பயமுறுத்துகிறது, அதை மீறி ,படம் எடுப்பவர் சொல்படி சிரிப்பு
பள்ளத்தாக்கிலிருந்து நடந்து செல்ல ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

கிராண்ட் கேன்யானில் தண்ணீர் தேடித் தவிக்கும் சிட்டுக்குருவிகள்.
குடி தண்ணீர் இருக்கும் குழாய்க்குக் கீழ் சிந்திக்கிடக்கும் நீர்த் துளி தேடிப் பருகும் குருவிகள்.
கொடைக்கானலில்  ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகளை மலையில் வைத்து இருப்பார்கள் பறவைகள் நீர் பருக. அது போல்  அவைகளுக்குத் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து இருக்கலாம்.

கிராண்ட் கேன்யானில் தங்கி இருந்த விடுதி அருகில் இருந்த மரத்தில் காலை நேரம் பள பள என்று மின்னிய காக்கா- பைன் மரத்தில்

அதன் சத்தமும் கொஞ்சம் வித்தியாசம்.
நல்ல உடல் வாகு.

கிராண்ட் கேன்யானில் பார்த்த காகம்.
இங்கும் காகம் இருக்கிறது, ஆனால் அண்டங்காக்கை மட்டும் தான் இருக்கிறது.. அதன் உடல் இரட்டைவால் குருவியின் உடல் போல் நல்ல கருமையாய்ப் பட்டுப்
காக்கை மேல் விருப்பம் இல்லை இங்கு இருப்பவர்களுக்கு. அதற்கு உணவளித்து அதை பழக்கப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அது அந்நியப் பறவையாம், மற்ற பறவைகளுக்கும் , உயிரினங்களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறதாம்.
இங்கு அரியவகை பறவைகளும், விலங்குகளும் இருக்கிறதாம்.
மகன்  வீட்டில் (அரிசோனாவில்) வைக்கும் உணவுக்குப் பல பறவைகள் வந்து இருக்கிறது, காகம் மட்டும் நான் அங்கு இருக்கும் வரை  வரவில்லை.
மகன் ஊரிலும் அண்டங்காக்கைகள் தான் இருக்கிறது.
மகன் ஊரிலும் அண்டங்காக்கைகள் தான் இருக்கிறது.
இன்னும் இருக்கிறது சில இடங்கள் கிராண்ட் கேன்யானில் அவை அடுத்த பதிவில்.
                                                                       வாழ்க வளமுடன்.
--------------
அட்டகாசமான படங்கள் சகோ எடுத்த விதமும் அழகு.
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்.
தொடர்ந்து வரட்டும் அடுத்த படங்களும்...
நேரில் பார்த்த உணர்வு
பதிலளிநீக்குவணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்களை ரசித்து எடுத்த விதமும் அழகு என்று சொன்னது மகிழ்ச்சி.
நன்றி.
வணக்கம் ராஜி , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநலமா? அழகான படங்கள் அதற்கேற்ற அருமையான விமர்சனங்கள். ஒவ்வொரு படங்களும் மிக தெளிவாக அழகாக எடுத்துள்ளீர்கள். மலைகளும், ஓடும் ஆறும் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.
பயமின்றி மலை மேல் நிற்பவர்களைக் கண்டால் நமக்குத்தான் உதறலாய் உள்ளது. பாதுகாப்புடன் தங்கள் பேரன் செய்யும் சாகசம் அருமை...அவருக்கு என் வாழ்த்துக்கள்.
காக்கை படங்கள் காக்கையை பற்றி சொல்லியது மற்றும் அனைத்தையும் ரசித்தேன். இன்னமும் தாங்கள் எடுத்த படங்களை அடுத்த பதிவில் காண ஆவலாய் உள்ளேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
தங்கள் உடல் நலம் எவ்வாறு உள்ளது?
என் பதிவிலும் காக்கைதான்.. நேரம் கிடைக்கும் போது வர வேண்டுகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநலம் என்று தான் சொல்ல வேண்டும் கமலா. இப்போது வலி கொஞ்சம் குறைந்து இருக்கிறது. மூட்டு வலி உடற்பயிற்சிகள் செய்து இப்போது தேவலை.
கனமான இரண்டு சொட்டர்களை போட்டுக் கொண்டு பறக்கும் ஸ்கார்பின் மேல் கவனம் வைத்துக் கொண்டு படம் எடுப்பது கொஞ்சம் கடினமாய் இருந்தது.
உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்த பதிவு கிராண்ட் கேன்யானில் வேறு பகுதி அமெரிக்க பழகுடியினர் இருந்த இடம்.
வெகு அழகான இடம்.
காக்கை பதிவா? வருகிறேன்.
உங்கள் உடல் நலமும் சரியாகி வரும் என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகிய இடங்களின் அழகிய படங்கள். அந்த இடங்கள் பழமையைப் பறைசாற்றுகின்றன. ஒரு வரலாற்றுப படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன படங்கள். பேரனின் சாகசத்துக்கு ஒரு ஜே! கம்பித்தடுப்பு இல்லாத அந்த உயரமான இடத்திலிருந்து எட்டிப்பார்ப்பவர்கள் முதுகுத்தண்டில் ஒரு 'ஜில்'லை உண்டாக்குகிறார்கள்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅழகிய இடம் , முதன் நாள் மாலை, மறுநாள் காலையும் பார்த்தோம்.
நீங்கள் சொல்வது போல ஆற்றின் வரலாறுதான்.
பேரனை ரசித்து அவனுக்கு ஜே சொன்னதற்கு நன்றி.
உயரமான இடத்திலிருந்து எட்டிப்பார்ப்பவர்கள் பயத்தை உண்டாக்கி அவர்களுக்கு என்னை இறைவனிடம் வேண்ட வைத்தார்கள். (பத்திரமாய் இருக்கவேண்டினேன்)
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகழான படங்கள்... அரிய விவரங்கள்... நிறைய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது....
பதிலளிநீக்குஇயற்கை ஆர்வலராக பறவைகளைப் படம் எடுக்கும் அழகே அழகு...
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ ம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபதிவையும் படங்களையும், ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
அற்புதமான படங்களுடன் விளக்கம் தந்தது நேரடியாகப் பார்க்கிற உணர்வைத் தருகிறது பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையான படங்கள். எல்லாம் நம்ம ஊர்க் கோயில்களையும் கயிலையையும் நினைவூட்டின. காக்கைகளை நான் ஹூஸ்டனில் பார்த்தது இல்லை. சிட்டுக்குருவிகளும் பார்க்கவில்லை. மற்றப் பறவைகள் வரும். அணில்கள் எல்லாம் பெரிதாக இருக்கும்.
பதிலளிநீக்குமிக அருமையான படங்கள். மறக்க முடியாத இடம்
பதிலளிநீக்குக்ராண்ட் கான்யான். உங்கள் இருவரையும் அழகாக நிற்க வைத்துப் படம் எடுத்திருக்கிறார் மகன்.
நாங்கள் ஜூலையில் சென்றோம். வெய்யில் கொளுத்தியது.
நீங்கள் சென்ற போது குளிரா.
பேரனின் சந்தோஷம் தொற்றிக் கொள்ளும் வகையில் இருக்கிறது,.
நானும் இந்த விளிம்பு நிலை மனிதர்களைப் பார்த்து நடுங்கிப் போனேன்.
அதென்ன தைரியமோ தெரியவில்லை.
காகங்கள் நம்மூர் போலச் சேர்ந்து வாழுவதில்லை.
ஒவ்வொன்றும் ஒரு விதம் தான். நல்ல பதிவு கோமதி. வாழ்க வளமுடன்.
அற்புத காட்சிகள்..
பதிலளிநீக்குசிலிர்க்க வைக்கின்றன...எவ்வொலோ பெரிய பெரிய மலைகள்...
வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//எல்லாம் நம்ம ஊர்க் கோயில்களையும் கயிலையையும் நினைவூட்டின. //
ஆமாம், கீதா. கயிலைமலை நிறைய இடங்களில் காட்சி அளித்தது.
இமயமலை போல், பொதிகை மலை போல் நமக்கு மட்டும் அல்ல அவர்களுக்கும் அப்படி காட்சி அளித்ததால் தான் சிவன் மலை, விஷ்ணு பாதம் என்றெல்லாம் பேர் கொடுத்து இருக்கிறார்கள்.
//காக்கைகளை நான் ஹூஸ்டனில் பார்த்தது இல்லை. சிட்டுக்குருவிகளும் பார்க்கவில்லை. மற்றப் பறவைகள் வரும். அணில்கள் எல்லாம் பெரிதாக இருக்கும்.//
ஆமாம் , அணில்கள் பெரிதாக இருக்கும் அமெரிக்காவில்.
அரிசோனாவில் நம் ஊர் அணில்களைப் பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமறக்க முடியாத இடம் தான்.
//உங்கள் இருவரையும் அழகாக நிற்க வைத்துப் படம் எடுத்திருக்கிறார் மகன்.//
எங்களை படம் எடுத்தவர் அந்த ஊர் பெண். வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார் என் பக்கம் என் கணவரை நான் படம் எடுத்தேன் அதை பார்த்த அந்த பெண் இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கள் உங்களை நான் படம் எடுக்கிறேன் என்று அன்புடன் எடுத்துக் கொடுத்து சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் இல்லையென்றால் இன்னொருமுறை எடுக்கிறேன் என்று அன்புடன் கேட்டார். இதுவே நன்றாக இருக்கிறது என்றவுடன் மகிழ்ச்சி அவர்களுக்கு. மகன் வேறு பக்கம் பார்த்து கொண்டு இருந்தான்.
நாங்கள் நவம்பர் மாதம் பார்த்தோம் அதனால் நல்ல குளிர்.
பேரனின் சந்தோஷம் நம்மையும் தொற்றிக் கொண்டது உண்மை.
நம்மை போன்றவர்களுக்கு விளிம்பில் நிற்பவர்களை பார்த்தால் பயம் தான்.
கயிலையில் காகம் இது போல்தான் நல்ல குண்டாய் இருக்கும். இடத்திற்கு ஏற்றார் போல் இறைவன் படைக்கிறான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
படங்கள் எல்லாம் மிக அருமையா வந்திருக்கின்றன. உங்கள் விளக்கமும் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குலண்டனிலும் அண்டங்காக்கைகள் மிக குண்டாக பள பளவென்று இருக்கும்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஊருக்கு போய் விட்டு வந்து விட்டீர்களா?
இன்று தான் நினைத்தேன் தளத்திற்கு நெல்லைத் தமிழன் வரவில்லையே ! என்று வந்து விட்டீர்கள் மகிழ்ச்சி.
லண்டனிலும் அண்டங்காக்கைகள் பள பள குண்டா? குளிர் தாங்க அதன் உடல் அமைப்பு இருக்கும் போல்.
குளிர் பிரதேஷ ஆடுக்கு ரோமங்கள் மெத்தை போல இருக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
///நிறைய இடங்கள் கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.
பதிலளிநீக்குசிவன் கோயில், விஷ்ணு பாதம், என்றெல்லாம் பெயர் கொடுத்து இருக்கிறார்கள்.///
ஹா ஹா ஹா இது உண்மைதான் கோமதி அக்கா.. எங்கு போனாலும் நம்மவர்கள் பெயர் சூட்டுவதில் வல்லவர்கள்..
மிக அழகிய பாறைத்தொடர்கள்.. அங்கு விழிம்பில் மக்கள் போய் நிற்கிறார்களே.. பார்க்கவே தலை சுத்துது.
பதிலளிநீக்குஆங்ங்ங்ங் கோமதி அக்காவுக்கும் மாமாவுக்கும் குளிருது...
ஓ அங்கும் காகம் இருக்கு நம்மிடத்திலும் இருக்கு. பைன் மரம் அழகு.. அழகிய சுற்றுலா.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//ஹா ஹா ஹா இது உண்மைதான் கோமதி அக்கா.. எங்கு போனாலும் நம்மவர்கள் பெயர் சூட்டுவதில் வல்லவர்கள்..//
அவர்கள் தரும் கையேட்டில் பார்க்க வேண்டிய இடங்களில் சிவன்மலை, விஷ்ணு பாதம் என்று போட்டு இருக்கிறது.
நம்மவர்கள் சொல்லவில்லை.
//பார்க்கவே தலை சுத்துது.//
மலைஓரத்தில் இருப்பவர்களைப் பார்த்து தலைசுத்தல் என்றால் கீழே பாதாளத்திற்கு சிலர் இறங்கி போய் கொண்டு இருந்தார்கள், அவர்களைப் பார்த்தும் தலை சுற்றியது எங்களுக்கு.
//ஆங்ங்ங்ங் கோமதி அக்காவுக்கும் மாமாவுக்கும் குளிருது...//
வெட்டவெளி மரங்கள் அதிகம் நவம்பர் மாதம் குளிருக்கு கேட்கவேண்டுமா!
வயதானல் குளிர் அதிகமாய் தெரியும் தானே!
உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.
இயற்கை அழகோடு
பதிலளிநீக்குஅருமையான படங்கள்
பயனுள்ள தகவல்
சகோதரி கோமதி படங்கள் அத்தனையும் மிக மிக அழகு! உங்கள் வர்ணனைகளும் மிகச் சிறப்பு. எனக்கும் கைலாயம் போன்றே தெரிந்தது. பறவைகள் படமும் அழகாக இருக்கிறது. நதியும் தான்.
பதிலளிநீக்குதுளசிதரன்
கோமதிக்கா படங்கள் அட்டகாசம்!! கைலாயமேதான். ஏன் அமெரிக்காவில் கைலாயம் இருக்கக் கூடாதா என்ன ? இல்லையா அக்கா? என்ன அழகு!! உங்கள் படமும் ரொம்ப அழகா இருக்கு அக்கா.
பதிலளிநீக்குமரங்கள் இல்லை என்றாலும் கொள்ளை அழகுதான். இயற்கை அழகுதான் இல்லையா கோமதிக்கா...பாவம் பறவைகள். நீர் தேடி அலைவது வேதனை. ஆமாம் அங்கு காக்கைகள் எலலமே நல்ல புசு புசு நு அண்டங்க் காக்கைகள் மட்டுமே. மணிக்காக்கைகள் கிடையாது...பார்கக்வே ரொம்ப ஹெல்தியாக இருக்கும்.
காக்கை அங்கு வெளியூரிலிருந்து வந்தவை என்றுதான் சொல்கிறார்கள்.
அக்கா நீங்கள் அவர்களுக்குக் காக்கை கதை சொல்லியிருக்கலாமோ!! ஹா ஹா ஹா
கீதா
அக்கா அந்த கொலராடோ ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் போகுதே அது நடக்க முடியுமா? ரொம்ப அழகா இருக்கு..
பதிலளிநீக்குகீதா
பேரன் சூப்பர் போஸ்!!! இளம் கன்று பயமறியாது!!
பதிலளிநீக்குஉங்கள்க் இருஅரையும் எடுத்தவர் அந்த ஊர் பெண் என்பதை வல்லிம்மாவுக்கு நீங்கள் கொடுத்டிருக்கும் கருத்தில் அறிந்தேன்...பரவாயில்லைஏ அவர்களும் நன்றாகப் பழகுகிரார்களே...
கீதா
வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் எங்க்கும் அணடங்காக்கைகள் தான் அங்க்கு இருக்கிறது.
காக்கை கதை சொல்லி இருக்கிறேன் பதிவில் அதை சொல்லி இருக்கலாம் அவர்களுக்கு.
//அக்கா அந்த கொலராடோ ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் போகுதே அது நடக்க முடியுமா? ரொம்ப அழகா இருக்கு..//
தெரியவில்லை போவார்கள் போலும் அதனால் தானே பாலம் இருக்கு.
அங்கு தனியாக படம் எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு உதவ காத்து இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.