வெள்ளி, 11 மே, 2018

இயற்கை ஆர்வலர்கள் தந்த நல்ல செய்தி


Image may contain: one or more people

இன்று காலை தொலைக்காட்சியில் கேட்ட நல்ல செய்தியைப் பற்றி உங்களுடன்  .
காலை 9 மணி சன் செய்தியில்  இந்த செய்தியைச் சொன்னார்கள். சென்னையில்  இயற்கை ஆர்வலர்கள் வீட்டுக்கு இரண்டு மண்பானை வழங்கி பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க  சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவசரமாய் போட்டோ எடுத்தேன். எந்த ஏரியா என்று தெரியவில்லை.

பேசுபவருக்குப் பின் பக்கம் உள்ள போஸ்டரில்  உலகம் முழுவதும் காடுகள் வளர்த்து  மழை தந்து நம்மைக் காக்கும்  பறவைகளை நாம் காப்போம் என்று எழுதி இருக்கிறது.

ஒருவர் பேசுவதைக் கொஞ்சம் காட்டினார்கள். வார்தா புயலால் சென்னையில் மரங்கள் இல்லாமல் கடும் கோடையில் மழை இன்றி தண்ணீர் இன்றி  பறவைகள் தவிக்கிறது. அதனால் வீடுகளில் தோட்டங்களில்  இரண்டு மண் பானைகளில் நீர் நிரப்பி வையுங்கள் என்று பேசினார்.
Image may contain: coffee cup
மண்பானை குளர்ச்சியாக இருக்கும், பறவைகள் குடிக்க, குளிக்க வசதிதான்.

Image may contain: one or more people
தோட்டத்தில் வைக்கிறார் மண் பானைகளை.

ஒவ்வொரு கோடையிலும் பத்திரிக்கைச் செய்தியாக வரும். படித்து இருக்கிறோம்:-

கோடையில் வெப்பம்  கடந்த ஆண்டைவிட அதிகமாய் இருக்கிறது.

மக்களும், மற்ற உயிரினங்களும் கோடையில் மிக அவதிப்படுவதையும்  பறவைகள் நீர் தேடித் தவிப்பதையும் கண்டிப்பாய்ச் சொல்வார்கள்.
பறவைகள் தண்ணீர் கிடைக்காமல்  சென்ற ஆண்டு கூட்டம் கூட்டமாய் செத்து மடிவதைக் காட்டினார்கள்.

கோடையிலே நீர்தேடித் தவிக்கும் பறவைகள் 

என்று முன்பு நான் எழுதிய பதிவைப் படிக்க விருப்பம் இருந்தால் படிக்கலாம்.
ஒவ்வொரு கோடையிலும்  பதிவுகள் போட்டு இருக்கிறேன். பத்திரிக்கை, தொலைக்காட்சியில் வரும் புது ச்செய்திகளுடன். இந்த ஆண்டும் ஒன்று கிடைத்து விட்டது.No automatic alt text available.

நானும் எங்கள் வீட்டில் பால்கனியில் உணவும் தண்ணீரும் வைத்து இருக்கிறேன். மண் தொட்டியில் குடிக்க நீலநிற பிளாஸ்டிக் தொட்டி குளிக்க நீச்சல் குளம். (தற்போது மட்டும் தான்  இந்த பிளாஸ்டிக் தொட்டி இன்னொரு  பெரிய மண் தொட்டி வாங்க வேண்டும்.)  மண் தொட்டி புறா குளிக்க போத மாட்டேன் என்கிறது.

நல்ல செய்திகளை "எங்கள் பிளாக்" தளத்தில் சனிக்கிழமை பகிர்ந்து கொள்வார்கள். நான் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நல்ல செய்தியை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

எல்லோர் வீடுகளிலும் தண்ணீரும் உணவும் வைப்பீர்கள் பறவைகளுக்கு .
வைக்காதவர்கள் இனி வைக்கலாம் தானே.

வாழ்க வளமுடன்.

21 கருத்துகள்:

 1. பறவை விரும்பி உங்களுக்கு ஏற்றசெய்தி நானு ம்பார்த்தேன் ஆனால் எனக்குத்தான் ஏதும்தோன்றவில்லை

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  பறவை விரும்பி நல்லா இருக்கே!
  உங்கள் கருத்துக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 3. நல்ல செயல் இனி நானும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

  இறைவன் கணக்கில் இதுவும் புண்ணிய செயலே...

  பதிலளிநீக்கு
 4. அவசியம் பறவைகளுக்கு தண்ணீர் வைப்போம்
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்து மகிழ வைத்தது நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி ,நன்றி.

  பதிலளிநீக்கு
 7. கோமதிக்கா அழகான பதிவு...நீங்கள் வைத்திருப்பதும் சூப்பரா இருக்கு அக்கா...நானும் என் வீட்டில் கிச்சன் பால்கனியில் சுவற்றின் மீது வைத்திருக்கிறேன் ஆனால் க்ரில் இருபதால் பாவம் அவற்றிற்கு குடிக்க வசதி இல்லை எனவே தெருவை நோக்கி இருக்கும் பால்கனியில் வைத்திருக்கிறேன் இந்த இரண்டு பால்கனியும் ஓபன் பால்கனி...எனவே நிறைய வைச்சிருக்கேன்...தினமும் காகமும். புறா, வரும் சில சமயங்களில் குரங்குகள் வரும். வந்து குடித்துவிட்டுப் போகும்...இது கோடை என்றில்லை மத்த மாதங்களிலும் தொடர்கின்றன. சிட்டுக் குருவிகளும் வரும்....நல்ல செய்தி கோமதிக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் கீதா , வாழ்க வளமுடன்.
  நீங்களும் உணவும், தண்ணீரும் வைப்பது அறிந்து மகிழ்ச்சி.

  நானும் தினம் வைக்கிறேன். கோடையில் அதிகம் தண்ணீர் தேவை படும்.
  எப்போதும் வைக்காதவர்களும் கோடையில்
  தண்ணீர் வைக்க வேண்டும் பறவைகளுக்கு.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரி

  நல்ல செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளீர்கள்.
  பறவைகளுக்கும், பசி தாகம் என்ற ஒன்று உண்டல்லவா? அவைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த இடத்தையெல்லாம் நாம் அபகரித்துக் கொண்டோம். அதன் இருப்பிடமான மரங்களை வெட்டி, நாடு நகரத்தை விஸ்தாரமாக்கிக் கொண்டோம். மரங்கள் இல்லையேல் மழை இல்லை. நமக்கு ஏற்படும் குடிநீர் பஞ்சத்தை வாய் விட்டு சொல்லியும், புலம்பியும் ஆற்றிக் கொள்கிறோம். அவைகள் வாயில்லா ஜீவன்கள். அதன் நிலை உணர்ந்து அதற்கு இரையளித்து தாகசாந்தி செய்து செய்த பாவங்களை கொஞ்சமேனும் களைந்து கொள்வோம். நல்ல விழிப்புணர்வு பகிர்வு.பகிர்வுக்கு நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

  அருமையான கருத்தை சொன்னீர்கள்.
  நாம் மழை இல்லை, தண்ணீர் இல்லை என்று வாய் விட்டு புலம்பி கொள்கிறோம். என்பது உண்மை..


  பள்ளி பிள்ளைகள் பள்ளிகளில் , மற்றும் பக்கத்தில் உள்ள மரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கிறார்கள்.

  நீங்கள் சொல்வது போல் நம் வினைகள்களையவும் உதவும்.
  நன்றி உங்கள் கருத்துக்கு.
  பதிலளிநீக்கு
 11. மிக அருமையான முறை ஆரம்பித்திருக்கிறார்கள் மண்சட்டியில் தண்ணி.. ஆனா ஒன்று பூஸ் பப்பி இருக்கும் இடங்களில் கஸ்டமே இதெல்லாம்.

  உங்கள் வீட்டு முறையும் புறாவும் மிக அழகு.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
  பூனை, நாய்குட்டி இருக்கும் வீட்டில்
  கஷ்டம் தான். அங்கு பறவைகள் குறிக்கும் தொட்டி அழகாய் இருக்குமே !


  எங்கள் வீட்டு முறையை ரசித்த அதிராவிற்கு நன்றி.
  அதிராவிற்கு உடம்பு சரியில்லையா?
  வழக்கமான உற்சாக பின்னூட்டம் இல்லையே!

  பதிலளிநீக்கு
 13. மாடியில் தண்ணீர் வைப்பது ஓகே. கீழே நாலு கால் செல்லங்களுக்கு தண்ணீர் வைத்தால் அவை அதைக் காலால் இடறித் தள்ளி விட்டு விடுகின்றன!

  பதிலளிநீக்கு
 14. வெயிலில் பறவைகளும், நாய்களும் படும் கஷ்டம் பார்க்கக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவைகளின் கஷ்டங்களை யோசித்து இப்படி உதவிச் செய்யச் சொல்லிப் பிரச்சாரம் செய்பவர்களை பாராட்டவேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் காக்கைகள் அதில் சில அசைவப் பொருட்களைக் கொண்டுவந்து போட்டு விட்டு அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட, அந்தப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது சற்றே கடினமாக இருக்கிறது!!!!

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

  //மாடியில் தண்ணீர் வைப்பது ஓகே. கீழே நாலு கால் செல்லங்களுக்கு தண்ணீர் வைத்தால் அவை அதைக் காலால் இடறித் தள்ளி விட்டு விடுகின்றன!//

  நாலுகால் செல்லங்கள் தண்ணீர் பாத்திரத்தை இடறி விடாமல் இருக்க தான் முன்பு சில வீட்டு முன்னால் சிமெண்ட் தொட்டி கட்டி வைத்து இருப்பார்கள் . மாடு, ஆடு, நாய் எல்லாம் தண்ணீர் குடிக்கும், யானை வந்தால் கூட குடிக்கும்.

  நீங்கள் கொஞ்சம் கனமான சிமெண்ட் தொட்டி கிடைக்கிறது முடிந்தால் வாங்கி வையுங்கள் .

  //வெயிலில் பறவைகளும், நாய்களும் படும் கஷ்டம் பார்க்கக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவைகளின் கஷ்டங்களை யோசித்து இப்படி உதவிச் செய்யச் சொல்லிப் பிரச்சாரம் செய்பவர்களை பாராட்டவேண்டும்.//

  ஆம், உதவிச் செய்யச் சொல்லிப் பிராச்சாரம் செய்பவர்களை பாராட்ட வேண்டும்.


  //பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் காக்கைகள் அதில் சில அசைவப் பொருட்களைக் கொண்டுவந்து போட்டு விட்டு அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட, அந்தப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது சற்றே கடினமாக இருக்கிறது!!!!//

  முன்பு இருந்த வீட்டில் காக்கைகள் சில அசைவப் பொருட்களைக் கொண்டு வந்து போட்டு கழுவி சாப்பிடும் இங்கு அப்படி இன்னும் செய்யவில்லை.
  மண் தொட்டியை கழுவ நீண்ட பிரஷ் வைத்து இருக்கிறேன்.
  தினம் கழுவி புது தண்ணீர் வைத்து விடுவேன்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.  பதிலளிநீக்கு
 17. சிறப்பான செயல்... அனைவரும் பின்பற்ற வேண்டும்...

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. கோடைக்கு ஏற்ற இதமான பகிர்வு. பின்பற்ற முயற்சிப்போம்.

  பதிலளிநீக்கு
 20. பயனுள்ள செய்தியுடன் கூடிய பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு