செவ்வாய், 1 மே, 2018

உழைப்பாளர் தினம்

இன்று உழைப்பாளர் தினம். (மே 1, 2018)
உழைப்பாளர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
Image may contain: 1 person, standing
மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் எவ்வளவு பேரின் உழைப்பு  இருக்கிறது ! அவர்களுக்கு வேலை வாய்ப்பு,  திருவிழாவின் போது நாலு காசு சம்பாதிக்க முடிகிறது என்று சொல்லும் எளிமையான மக்கள். விழாக்களை நம்பி வாழும் மக்கள். உழைத்துப் பிழைக்க நினைப்பவர்கள்.
திருவிழாவின்போது எடுத்த எளிய மக்களின் படங்களை  உழைப்பாளர் தினத்தில் பகிர்கிறேன்.
 சித்திரைத் திருவிழாவில் கூட்டத்தில் தங்கள் பொருட்களை மக்கள் வாங்க மாட்டார்களா என்று கண்ணில் ஏக்கத்துடன் குழந்தைகள் இருக்கும் இடத்தையே சுற்றிச் சுற்றி வரும் பலூன்காரர்கள்.பஞ்சுமிட்டாய்க்காரர், பருத்திப்பால் விற்பவர்கள் ஆகியோரை எடுத்த படங்கள் .
Image may contain: 2 people
எத்தனை விதமான பலூன்கள்!
Image may contain: 1 person

Image may contain: 1 person
Image may contain: 1 person
Image may contain: 4 people, people smiling
Image may contain: 1 person
Image may contain: 1 person
Image may contain: 1 person
படிக்கும் வயதில்  வியாபாரி ஆகி இருக்கும் சிறுவன் (விடுமுறை வியாபாரமாய் இருந்தால் நல்லது)
Image may contain: 5 people, people smiling, crowd
Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 1 person, food
Image may contain: people sitting, indoor and food
இந்தக் கூடைகள்  அழகர் திருவிழாச் சமயம் மக்கள் அதன் மேல் பட்டுத்துணி சுற்றி தலையில் அணியும் தொப்பி. இந்தச் சமயத்தில் மட்டும் தான் விற்கும்.மற்ற நாட்களில் அவர்களுக்கு வியாபாரம் இருக்காது. பட்டு சுற்றிய தலைபாகை படம் நான் எடுத்த படம் இருக்கிறது, கண்டு பிடிக்க முடியவில்லை அதனால் கூகுள் படம்.

படம் கூகுள் -  நன்றி.

இப்படித்தான் பட்டுத்துணி சுற்றி அணிந்து கொள்வார்கள்.இந்த சமயத்தில் விற்றால் தான் அவர்களுக்கு நாலு காசு கிடைக்கும்.

விசிறி விற்கும் வயதான பெண்மணி

சித்திரை மாதம் வெயில் காலம்.  திருவிழா கூட்டத்தில்  பழைய ஆட்கள் இந்த விசிறியின் பெருமை உணர்ந்தவர்கள் மட்டுமே வாங்குவார்கள். இந்த வயதான அம்மாவிற்ற விசிறிகள் விற்றதா அவ்வளவும் என்று தெரியவில்லை, விற்று இருக்கும் என்று நம்புவோம். உழைத்து வாழ விரும்பும் ஆத்மா அல்லவா?

இப்போது பிளாஸ்டிக் விசிறிகள் கடை விளம்பரத்திற்கு திருவிழா காலங்களில் இலவசமாய் கொடுக்கிறார்கள்.
 அட்டை விசிறி வந்தது அதுவும் இப்போது போச்சு.
திருவிழாக்கள் நடந்தால் இறைவன் மனம் குளிர்ந்து மழையைத் தருவார் என்கிறார்கள்.
அழகர் அணிந்து வரும் ஆடையை வைத்து கணிக்கப்படுகிறது நாட்டு வளம்.
இந்த முறை பச்சை ஆடை அணிந்து வந்து இருக்கிறார் அழகர் . பசுமைபெருகும் , பயிர் பச்சை செழிக்கும் என்கிறார்கள். 
அப்படி செழித்தால் விவசாயிகளின் நிலை உயரும். நாடு நலம் பெறும்.

அன்றும் விவசாயிகள் நிலை மோசம். இன்றும் விவசாயிகள் நிலை உயரவில்லை.
பாடல்:- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.


காடு மேடு திருத்தி கழனி ஆக்கியோர் அன்று.   
ஏரி,குளம் குட்டைகளை தூர்த்து வீடு ஆக்கியது இன்று.

எங்கும் போராட்டம், கூலிப் பிரச்சனை, தண்ணீர் இல்லாமல் பயிர் செய்யமுடியவில்லை என்ற பிரச்சனை, உழைத்த  உழைப்புக்குச் சரியான கூலி கொடுக்காமல் ஏமாற்றும் தொழில் கூடங்கள்.   சம்பளம் நிறைய கொடுக்க வேண்டுமே வருடம் ஆக ஆக  என்று அவனுக்குக் கொடுக்கும் சம்பளத்தைப் பகிர்ந்து இரண்டுபேருக்குக் கொடுத்துவிட்டு அவனை வீட்டுக்கு அனுப்பும்  உழைப்பைச் சுரண்டும் தொழில் அதிபர்கள் 

உழைத்தவன் வேர்வை அடங்கும் முன் அவன் கூலியைக் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதிக வேலை, கூலி குறைவு. ஒரே வேலை ஊதியம் மாறுபடுகிறது இருவருக்கும் என்று  போராட்டங்கள் நடக்கிறது; ஊதியம் சமமாய் இருக்க வேண்டும் என்று.
உழைப்பவர்கள் நலம் பெற வேண்டும். உழைப்பே தெய்வம்! உழைப்பே உயர்வு  ! என்று வாழ்வோர் நிலை உயர வேண்டும்.

                                                                      வாழ்க வளமுடன்.

21 கருத்துகள்:

 1. அருமையான படங்கள் சகோ
  உழைப்பாளர் தின வாழ்த்துகள்
  பட்டுக்கோட்டையாரின் வரிகளை பகிர்ந்த விதம் நன்று

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமையான தொகுப்பு கோமதிக்கா...திருவிழாவில் இந்த உழைப்பாளிகளின் வரும்படி ஏதேனும் ஒரு மாதத்திற்கேனும் ஓட்டினால் நலல்தே!!! பாவம்! இப்படியான திருவிழாக்காள் சீசன்களில் இவர்களின் வயிற்றுப்பாடு நிரம்பினால்தான் உண்டு.

  தோழர் ஜீவாவின் வரிகள் அருமை இல்லையா அக்கா! விவசாயி மனம் கலங்கினால் அங்குப்போராட்டாம்தான் என்பது எவ்வளவு சரி. இப்போது நடப்பதும் அதுதானே...இல்லையா .நான் அக்ரிகல்சுரல் எக்கனாமிக்ஸ் எனும் விருப்பப்பாடம் எடுத்துப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த பாடம். தொழிலும். விவசாயம் செய்ய வேண்டும் என்று. வாழ்க்கை எப்படி எல்லாமோ திசை திரும்பி...இப்போதும் அது நலிந்து வருவது கண்டு மிக மிக வருத்தம். எனது ஆர்வம் என் மாமா பெண்ணிற்கு நாங்கள் எல்லோரும் ஒரே கூரையின் கீழ் பாட்டியின் ஆட்சியில் ஒன்றாக திருமணம் ஆகும் வரை வளர்ந்தவர்கள் என்பதால் என் ஆர்வம் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு வாணியம்ப்பாடி அருகில் ஒரு கிராமத்தில் நிலங்களும் தோட்டமும் வீடும் இருக்கிறது. அவள் நான்கு நாட்களுக்கு முன் கூடக் கேட்டாள் நீ அங்கு போய் இருக்கியா உன் ஆர்வம் எனக்கு நன்றாகவே தெரியும் உனக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப் போகும்....என்று. எப்படி முடியும் இப்போது என்னால்?...வருத்தம் தெரிவித்தேன் வேறு என்ன சொல்ல.

  உழைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! அவர்கள் வாழ்வு இவ்வையத்தில் தழைத்திடவும் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. பட்டுக்கோட்டையாரின் வரிகளைப் பார்க்கும் போது அப்போதும் விவசாயம் அப்படித்தான் இப்போதும் உயரவில்லை என்றே தோன்றுகிறது இல்லையா..நீங்கள் சொல்லியிருப்பதும் அதுவே இல்லையா....மனம் வேதனை அடைகிறது. ஆம் நிலங்கள் அழிந்து தான் போகிறது. காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் நம் நாட்டின் அடிப்படை அழிகிறதே என்றும் தோன்றும்...விவசாயம் என்றில்லை கைத்தொழில்களும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 5. உழைப்பாளிகள் என்றும் வணங்கப்படவேண்டியவர்கள். அவர்கள் இல்லையேல் இந்தச் சமுதாயம் இயங்க முடியாது. படங்களும், பட்டுக்கோட்டையாரின் வரிகள் மற்றும் தோழர் ஜீவாவின் வரிகள் அதனிடையே உங்கள் கருத்துகள் என்று அனைத்தும் சிறப்பு!

  உழைப்பாளர்களை வாழ்த்துவோம் வணங்குவோம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 6. என்னதான் கூறினாலும் உழைப்பவர் உழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள் அவர்களின் உழைப்பில் மேன்மை அடைபவர்களும் இருப்பார்கள்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் ஒரு மாதம் மட்டுமே என்றாலும் நல்லதுதான்.
  உழைக்க அஞ்சாதவர்கள் அந்தந்த சீஸனுக்கு ஏற்ற மாதிரி தன் தொழில்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ்வார்கள். குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே!
  விவசாய பொருளாதரம் படிப்பு படித்தீர்களா? நானும் பொருளாதாரம் படித்தின் பி.ஏ பொருளாதாரம் படித்தேன் ஒருவருடம்.
  குடும்பத்தை விட்டு வானியம்பாடியில் எப்படி இருக்கிறது இல்லையா கீதா?

  ஜீவாவின் கட்டுரையில் என்று இருக்கும் அந்த பாடல், ஆனால் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பிலிருந்து எடுத்த பாடல் தான் இது.

  முன்பு ஒரு மே தின பதிவில் "செய்யும் தொழிலே தெய்வம் " என்ற பாடல், வியாபாரி பாடல்கள் பகிர்ந்து விட்டேன், அதனால் இப்போது விவசாயி பாடல். இப்போது விவசாயி போராடி கொண்டு இருக்கிறார்களே ! அதனால் சூழ்நிலைப் பாட்டாக இதை தேர்ந்து எடுத்தேன்.


  பதிலளிநீக்கு
 8. பட்டுக்கோட்டையாரின் வரிகளைப் பார்க்கும் போது அப்போதும் விவசாயம் அப்படித்தான் இப்போதும் உயரவில்லை என்றே தோன்றுகிறது இல்லையா//

  ஆமாம் கீதா, அன்றும் ,இன்றும் அவர்கள் நிலை மாறவில்லை.

  நாடு செழிச்சிட மாடா ஒழைச்சவன்
  நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்
  மீடாத மேனியும் ஓடா எளச்சவன்
  போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்
  அரைவயித்து கஞ்ச்சி குடிக்கிறான்- சிலநாள்
  அதுவும் கிடைக்காமத் துடிக்கிறான்

  மாடா உழைச்சவன் வீட்டினிலே- பசி
  வந்திட காரணம் என்ன மச்சான்?

  அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே
  சேர்ந்தனால் வந்த தொல்லையடி.
  இப்படி முன்பே பட்டுக்கோட்டையார் சொல்லிவிட்டார்.

  எத்தனையோ தலைவர்கள் விவாசாயத்திற்கு என்று குரல் கொடுத்தாலும்
  அவர்கள் நிலை உயரவில்லை.

  பூமிதான இயக்கத்தில் வினோபா பாவே இருப்பவர்களிடம் பெற்று நிலம் இல்லா விவசாயிகளுக்கு கொடுத்தார்.

  ஆனால் இப்போது விவசாயம் செய்யமுடியாமல் இருப்பவர்களின் நிலத்தை வாங்கி வீட்டுமனை போட்டு விற்கிறார்கள்.
  காலம் மாறுது. தொழில்கள் நசிந்து கொண்டுதான் இருக்கிறது.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.


  பதிலளிநீக்கு
 9. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

  //என்னதான் கூறினாலும் உழைப்பவர் உழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள் அவர்களின் உழைப்பில் மேன்மை அடைபவர்களும் இருப்பார்கள்//

  தன் உழைப்பால் மேன்மை அடைந்தோர் உண்டு.
  மற்றவர் உழைப்பில் மேன்மை அடைவோரும் உண்டு.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.

  //உழைப்பாளிகள் என்றும் வணங்கப்படவேண்டியவர்கள். அவர்கள் இல்லையேல் இந்தச் சமுதாயம் இயங்க முடியாது. படங்களும், பட்டுக்கோட்டையாரின் வரிகள் மற்றும் தோழர் ஜீவாவின் வரிகள் அதனிடையே உங்கள் கருத்துகள் என்று அனைத்தும் சிறப்பு!

  உழைப்பாளர்களை வாழ்த்துவோம் வணங்குவோம்.//

  உண்மைதான் துளசிதரன். உழைப்பாளிகள் என்றும் வணங்கப்பட வேண்டியவர்கள்தான்.
  நாம் எத்தனையோ பேர்களின் உழைப்பால் தான் வாழ்கிறோம்.
  அத்தனை பேருக்கும் நாம் வாழ்த்து சொல்ல வேண்டும்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. சுவாரஸ்யமான தொகுப்பு. தோழர் ஜீவாவின் வரிகளை ரசித்தேன். அந்தப் பாட்டியின் உழைப்பு நெகிழ்த்துகிறது. திருவிழாக் காட்சிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 12. மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள் கோமதி. இந்தத் தலைப்பாகைகளை நான் பார்த்ததில்லை.
  உழைப்புக்கு எத்தனை மதிப்பு கொடுத்து வந்தோம். இன்னும் விவசாயிகள் இல்லை என்றால் நாம் ஏது. இந்த விளைபொருட்கள் தமிழ் நாட்டின் பெருமை. இவைகளைப் பெரிய நகரங்களில் விற்க ஏற்பாடு செய்தால் எத்தனை அருமையாக இருக்கும்.
  //பட்ட துயர் இனி மாறும்
  ரொம்பக் கிட்ட நெருங்குது நேரம் // என்று பட்டுக் கோட்டையார் வார்த்தையை நம்புவோம் கோமதி.

  பதிலளிநீக்கு
 13. மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள் கோமதி. இந்தத் தலைப்பாகைகளை நான் பார்த்ததில்லை.
  உழைப்புக்கு எத்தனை மதிப்பு கொடுத்து வந்தோம். இன்னும் விவசாயிகள் இல்லை என்றால் நாம் ஏது. இந்த விளைபொருட்கள் தமிழ் நாட்டின் பெருமை. இவைகளைப் பெரிய நகரங்களில் விற்க ஏற்பாடு செய்தால் எத்தனை அருமையாக இருக்கும்.
  //பட்ட துயர் இனி மாறும்
  ரொம்பக் கிட்ட நெருங்குது நேரம் // என்று பட்டுக் கோட்டையார் வார்த்தையை நம்புவோம் கோமதி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  பாடல் பட்டுகோட்டையார் தான் . தோழர் ஜீவாவின் தொகுப்பில் கிடைத்தது என்று கீழே குறிப்பிட்டு இருக்கிறார்கள். கவிதைதொக்குப்பில் எந்த வருடன் பாடல் எழுதியது எப்போது எழுதியது எந்த பத்திரிக்கை, எந்த சினிமா என்று போட்டு இருக்கிறது.

  பாட்டியின் உழைப்பு நம்மை நெகிழத்தான் வைக்கும்.

  நேற்று ஒரு கடைக்கு போனோம், அங்கு ஒரு முதிய அம்மா வயது 80 இருக்கும் சாமாங்களை அடுக்கி கொண்டு இருந்தார்கள் இந்த வயதில் வேலைப் பார்க்கிறார்க்ளே என்று என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன் கடைபையன் அக்கா அவர்கள் ஓனரின் அம்மா கடைக்கு வந்தால் சும்மாவே இருக்க மாட்டார்கள் வேலை செய்து கொண்டே இருப்பார்கள் என்றான். அந்தக் காலத்து ஆட்கள் உழைக்க அஞ்சமாட்டார்கள்.
  அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் தன்நம்பிக்கையை.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
  தலைப்பாகை அழகர் வரும் போது இதை தலையில் அணிந்து கொண்டு தண்ணீர் பீச்சும் கருவியால் தண்ணீர் பீச்சி அடிப்பார்கள்.
  தலைப்பாகை ஜரிகை வைத்தும் கிடைக்கும் அதன் மேல் கிளி, மயில், மயில் தோகை என்று இன்னும் நிறைய அலங்காரம் செய்த தலைப்பாகைகள் கிடைக்கும்.

  //பட்ட துயர் இனி மாறும்
  ரொம்பக் கிட்ட நெருங்குது நேரம் // என்று பட்டுக் கோட்டையார் வார்த்தையை நம்புவோம் கோமதி.

  நம்புவோம் அக்கா.


  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. படங்கள் அனைத்தும் சிறப்பு - விசிறி விற்கும் பெண்மணி - மனதைத் தொட்டார் மூதாட்டி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
  விசிறி விற்கும் பெண்மணி படம் போன வருடம் திருவிழாவின் போது எடுத்தபடம்.
  தலைப்பாகை பையன் கூகுள் உதவி. குறிப்பிட மறந்து விட்டேன்,
  குறிப்பிட வேண்டும்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. அருமையான பாடல்கள்
  படங்கள்
  மே தின வாழ்த்துகள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரி

  உழைப்பவர்களின் நலம் குறித்து சிந்தித்து எழுதிய நல்ல பதிவு. சித்திரைத் திருவிழா படங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. கள்ளழகர் இந்த தடவை பச்சை பட்டுத்தி வந்தாரா? மிக்க மகிழ்ச்சி... மழை செழித்து பயிர்கள் பஞ்சமின்றி விளைவிக்க வேண்டிக் கொள்கிறேன்.

  தலைப்பாகை படங்கள் பட்டுத்துணி சுற்றிய படம் அனைத்தும் மிக அழகாக இருந்தது. விசிறி விற்கும் பெண்மணிக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமென தாங்கள் விரும்பியது மனதை தொட்டது. கைவிசிறியின் காற்றை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் ஜில்லென்று இருக்கிறது. என்றுமே உழைக்கும் தொழிலாளிகள் வளம் பெற வேண்டுமென பிரார்த்தித்து கொள்வோம். இரண்டு நாட்களாய் என்னால் இணைய உலா வர இயலவில்லை அதனால் தாமத வருகைக்கு வருந்துகிறேன். தங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள். விழாவை பகிர்ந்து கொணடமைக்கு மிகவும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோ கமலா ஹரிகரன், வாழ்க வளமுடன்.

  உழைப்பாளர் தினம் என்பாதால் உழைப்பாள்ர்கள் பற்றி எழுதினேன்.

  கள்ளழகர் இந்த தடவை பச்சை பட்டுத்தி வந்தார் மழை உண்டு, வளம் உண்டு என்கிறார்கள் நம்புவோம்.

  //கைவிசிறியின் காற்றை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் ஜில்லென்று இருக்கிறது.//

  வெயில் காலம் வந்தால் பனைஒலை விசிறி கலர் கலராக வாங்குவோம், வெட்டிவேர் விசிறி வாங்கி அதை தண்ணியில் நனைத்து விசிறினால் சில் காற்றும் மனமும் பரவும்.

  நிறைய பழைய விஷயங்க்களை இழந்தோம்.

  //இரண்டு நாட்களாய் என்னால் இணைய உலா வர இயலவில்லை அதனால் தாமத வருகைக்கு வருந்துகிறேன்//

  நேரம் கிடைக்கும் போது வாருங்கள் வருத்தம் வேண்டாம்.
  உங்கள் அனபான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.  ல்

  பதிலளிநீக்கு