உச்சிக்கிளையில் குருவி
(அரிசோனா) நீலவானமும் குருவியும்
மகன் ஊரில் பார்த்தக் குருவிகள்
எங்கே பார்வை?
நீண்ட சிந்தனை
தொலை நோக்கு பார்வை
உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20.
நான் போன இடங்களில் ,எங்கள் குடியிருப்பில் என்று எடுத்த படங்கள் பகிர்வு.
மகன் வீட்டு கூறை
பூவில் உள்ள புழு , பூச்சிகள் என் உணவு. (மகன் வீடு)
பூவுக்குள் பூச்சியை தேடும் குருவி
இந்த பூவின் மொட்டுகளையும் சாப்பிடும் குருவி.
கிராண்ட் கேன்யானில் தண்ணீர் தேடித் தவிக்கும் சிட்டுக்குருவிகள்.
குடி தண்ணீர் இருக்கும் குழாய்க்குக் கீழ் சிந்திக்
கிடக்கும் நீர்த் துளி தேடிப் பருகும் குருவிகள்.
அவைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்து இருக்கலாம்.
எங்கள் வீட்டில் எடுத்த காணொளி
குருவிகள் பேச்சை கேட்க விடாமல் பக்கத்து வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலிருந்து சத்தம் தொல்லை தருகிறது.
ஜன்னலில் உட்கார்ந்து இரண்டும் பேசிக் கொள்கிறது
குஞ்சுக்கு கொடுக்க சாதம்
மீண்டும் கூடு கட்டி விட்டது இனி கொஞ்ச நாட்கள் குஞ்சுகளின் சத்தம் மனதை நிறைத்து விடும்.
வாழ்க வளமுடன்.
----------------------------------
படங்கள் அத்தனையும் அழகு!! கோமதிக்கா....இன்று துரை அண்ணாவின் பதிவு பார்த்ததும் உங்களிடம் இருந்தும் வரும் என்று எதிர்பார்த்தேன்...
பதிலளிநீக்குமகன் இருக்கும் ஊரில் பார்த்த குருவிகள் அழகு...படங்களும்...இதோ அடுத்து பார்த்துவிட்டு வருகிறேன்...
கீதா
சிட்டுக்குருவிகள் மங்கலங்களை அழைத்து வருவதாக நம்பிக்கை...
பதிலளிநீக்குசிட்டுக்குருவிகள் தாழ்வாரத்தில் கூடுகட்டினால் சந்ததி தழைக்கும் என்பார்கள்..
அந்தக் கால வீடுகளில் நெல் குஞ்சங்கள் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள்...
நீங்கள் பார்த்திருக்கக் கூடும்...
ஆனால் இன்றைய நாட்களில் -
நீண்ட பெருமூச்சு தான் மிச்சம்...
சிட்டுக்குருவிகள் மட்டுமல்லாது
சிற்றுயிர்கள் எல்லாமும் தழைத்தோங்க
இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்...
அழகான படங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்...
க்ராண்ட் கென்யோன் குருவிகள் பாவம் இல்லையாஅ....அங்கு ட்ரையாக இருக்குமாமே...
பதிலளிநீக்குஆனால் தண்ணீர் இருந்தது போலவும் துளசி அக்கா பதிவில் பார்த்த நினைவு..
எலக்ட்ரிக் போர்ட் குருவிகள் மீண்டும் கூடு கட்டிவிட்டது போல......அருமையாய் இருக்கு அனைத்தும்...
எங்கள் மாமியார் வீட்டில் குருவிகள் புகுந்து கொள்ள என்று ஓட்டைகள் கூடு கட்ட என்று இருக்கிறதி. அது போல புதியதாய் கட்டிய என் உறவினர் வீட்டில் மொட்டை மாடியில் குருவிகள் வந்து உட்கார என்றும் வசிக்கவும் அழகாய் கூடுகள் அமைத்து...அதுவும் மொட்டை மாடி வரை படர்ந்திருக்கும் மாமரத்தின் அருகில் இருக்கும்...
கீதா
படங்கள் அத்தனையும் அழகு அக்கா....ரொம்ப ரொம்ப அழகு!!! குருவிகள் என்றாலே அழ்குதான் எதுதான் இயற்கையில் அழகில்லை!!!! எனக்குக் குருவியைப் பிடித்துத் தடவிக் கொடுக்க வேண்டும் என்று ஆசை வரும். புறாவைத் தொட்டிருக்கிறேன்...ஆந்தையை....ஆமை...காகம்...
பதிலளிநீக்குஅருமையான பதிவு கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசகோ துரைசெல்வராஜூ அவர்கள் பதிவு பார்த்தபின்
தான் புதிதாக போடும் எண்ணம் வந்தது .
பழைய பதிவை மீள் பதிவாய் போட்டு விடலாம்
என்று முதலில் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
மகன் ஊரில் எடுத்த படங்களை தேடி எடுத்து போட்டு இருக்கிறேன்.
இன்னும் இருக்கு தேடதான முடியவில்லை.
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அழகிய புகைப்படங்கள் வர்ணனைகளுடன் அருமை சகோ.
பதிலளிநீக்குகாணொளி கண்டேன்
எங்கள் வீட்டில் எடுத்த காணொளி
பதிலளிநீக்குகுருவிகள் பேச்சை கேட்க விடாமல் பக்கத்து வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலிருந்து சத்தம் தொல்லை தருகிறது.//
ஆமாம் அக்கா குருவிகளின் பேச்சைக் கேட்க முடியலை...பாவம்...அவை...அவற்றிற்கே பேச கஷ்டமாக இருந்திருக்கும்..ரொம்ப க்யூட்
கீதா
வனக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சிட்டுக்குருவிகள் மங்கலங்களை அழைத்து வருவதாக நம்பிக்கை...
சிட்டுக்குருவிகள் தாழ்வாரத்தில் கூடுகட்டினால் சந்ததி தழைக்கும் என்பார்கள்..//
தாழ்வாரம் ஏது இப்போது எதிர் சுவற்றில் கட்டி இருக்கிறது.
//அந்தக் கால வீடுகளில் நெல் குஞ்சங்கள் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள்...
நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.//
இப்போதும் வயல் உள்ள வீட்டில் அறுவடை முடிந்தவுடன் கட்டி தொங்கவிட்டு இருக்கிறார்கள்.
//சிட்டுக்குருவிகள் மட்டுமல்லாது
சிற்றுயிர்கள் எல்லாமும் தழைத்தோங்க
இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்...//
நிச்சயமாய் வேண்டிக் கொள்வோம்.கருணை கடல் அருள்புரிவார்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
கீதா,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//க்ராண்ட் கென்யோன் குருவிகள் பாவம் இல்லையாஅ....அங்கு ட்ரையாக இருக்குமாமே...
ஆனால் தண்ணீர் இருந்தது போலவும் துளசி அக்கா பதிவில் பார்த்த நினைவு//
தண்ணீர் கீழே மலைகளுக்கு அடியில் போகும்.
மேலே மரம் செடிகளும் ரம்மியமாய் இருக்கும். சுற்றுலாபயணிகளுக்கு வசதியாய் அமைத்து இருக்கும் குடிதண்ணீர் குழாய் இருக்கும் இடத்தில் தரையில் இருக்கும் தண்ணீரை குடிக்க தான் குருவிகள் வருகிறது.
மீண்டும் வந்து விட்டது. கூடை பழுது பார்த்து விட்டது.
புதிதாக வைக்கோல் கொண்டு வந்து வைத்து விட்டது.
மாமியார் வீட்டில் கூடு கட்டி இருக்கா?
//புதியதாய் கட்டிய என் உறவினர் வீட்டில் மொட்டை மாடியில் குருவிகள் வந்து உட்கார என்றும் வசிக்கவும் அழகாய் கூடுகள் அமைத்து...அதுவும் மொட்டை மாடி வரை படர்ந்திருக்கும் மாமரத்தின் அருகில் இருக்கும்//
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு செய்தியில் படித்தேன் ஒரு பள்ளியில் குழந்தைகளை குருவி கூடு செய்ய சொல்லி வாத்தியார் கேட்டுக் கொண்டதால் குழந்தைகள் மண் பானையில் வைக்கோல் பரப்பி கூடு அமைத்து இருக்கிறார்கள் அவைகள் முட்டை இடுவதை, குஞ்சுபெரிப்பதை எல்லாம் பார்த்து மாணவர்கள் மகிழ்கிறார்கள். பயமில்லாமல் வாத்தியார், மாணவர்களிடம் குருவிகள் கை, தோள்களில் அமர்ந்து கொள்கிறது.
அன்பு செய்தால் அவைகளும் அதற்கு கட்டுபடுகிறது.
//ஆமாம் அக்கா குருவிகளின் பேச்சைக் கேட்க முடியலை...பாவம்...அவை...அவற்றிற்கே பேச கஷ்டமாக இருந்திருக்கும்..ரொம்ப க்யூட்//
பதிலளிநீக்குஆமாம் கீதா, நீங்கள் சொல்வது உண்மை குருவிகளுக்கே கஷ்டமாய் தான் இருந்து இருக்கும்.
உங்கள் பின்னூட்டங்க்களுக்கு நன்றி.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாணொளி பார்த்தீர்களா மகிழ்ச்சி.
கருத்துக்கு நன்றி.
அனைத்தும் அழகு...
பதிலளிநீக்குஅழகான படங்கள்... மனதிற்கு மகிழ்ச்சி...
பதிலளிநீக்குஅழகிய படங்கள். தலைப்புச் செய்திகளுக்கு நடுவே சிட்டுக்குருவியின் பேச்சையும் கொஞ்சம் ஒட்டுக் கேட்க முடி ந்தது. அது என் (எங்கள்) பழைய நினைவொன்றைக் கிளறுகிறது!
பதிலளிநீக்குவீட்டுக் கொடுத்து
பதிலளிநீக்குவாழ முடியாத
சுயநல மனிதனால்
சிட்டுக்குருவிக்கும் ஆபத்து
தன்வாழ்வு, தன்னுலகம்
பதிலளிநீக்குஎன்றிருப்பவனுக்கு
அவ்வுலகில் வாழ
சிட்டுக்குருவியின் சேவையும்
உறுதுணை என்று
அறியாமல் இருக்கிறான்.
அருமையான புகைப்படங்கள். ரசனைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு1. தலைப்பு செய்திகளுக்கு நடுவே குருவிகளின் பேச்சையும் ஒட்டு கேட்டு விட்டீர்களா?
ஓ!ஸ்ரீராம், உங்கள் இருவரின் நினைவா? (காதல் வானில் சிறகடித்து பறந்த காலம் நினைவுக்கு வருதா?)
மகிழ்ச்சி.
2.வீட்டுக் கொடுத்து
வாழ முடியாத
சுயநல மனிதனால்
சிட்டுக்குருவிக்கும் ஆபத்து
வீடு கொடுக்கவில்லை என்கிறீர்களா ,
விட்டுக் கொடுக்க வில்லை என்கிறீர்களா ?
இப்போது விட்டு கொடுப்பது என்பது இல்லாமல் போய் விட்டதே!
தன்னல்ம் பேணும் நிலைதானே எங்கும் காணப்படுகிறது.
3. தன்வாழ்வு, தன்னுலகம்
என்றிருப்பவனுக்கு
அவ்வுலகில் வாழ
சிட்டுக்குருவியின் சேவையும்
உறுதுணை என்று
அறியாமல் இருக்கிறான்.//
சிட்டுக் குருவி உணவு உற்பத்திக்கு பெரும் உதவி செய்கிறது.
சிட்டுகுருவிகள், தேனிக்கள் எல்லாம் அயல்மகரந்த சேவைக்கு உதவும்
இவை குறைவதால் விவசாயம் பாதிக்கபடுகிறது.
மரம் செடிகளில் பூக்கள் இல்லையென்றால் குருவிகளுக்கு புழு, பூச்சிகள் உணவாய் கிடைக்காது.
பூச்சிகொல்லிகளை போட்டு விளைவிக்கும் போது குருவிகளுக்கு உணவு கிடைக்க மாட்டேன் என்கிறது.
மனிதன் சுயநலத்தால் குருவியின் சேவையை உணரவில்லை என்பது உணமை.
இயற்கை ஒன்றுடன் ஒன்றை இணைத்து இருக்கிறான் சங்கிலிகள் அறும் போது இயற்கை சுழற்சி கெட்டு விடுகிறது.
நல்ல கருத்துக்களை பகிர்ந்தற்கு நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் அனுபிரேம் குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
// உங்கள் இருவரின் நினைவா? (காதல் வானில் சிறகடித்து பறந்த காலம் நினைவுக்கு வருதா?)//
பதிலளிநீக்குமுன்னரே சொல்லி இருக்கிறேனோ? சரியாய்ச் சொன்னீர்கள்.
:))))))))))))
// வீடு கொடுக்கவில்லை என்கிறீர்களா ,
பதிலளிநீக்குவிட்டுக் கொடுக்க வில்லை என்கிறீர்களா ?//
விட்டுக் கொடுத்து
வாழ முடியாத
சுயநல மனிதனால்
சிட்டுக்குருவிக்கும் ஆபத்து
முன்னரே சொல்லி இருக்கிறேனோ? சரியாய்ச் சொன்னீர்கள்.//
பதிலளிநீக்குஸ்ரீராம் , நிறைய இடங்களில் (பதிவுகளில்)
உங்கள் செய்திகளை பகிர்ந்து இருக்கிறீர்கள்.
தல்லாகுளம் பெருமாள் கோவில், பேச்சியம்மன் படித்துறை எல்லாம்
சொன்னீர்கள் ,
பதிலளிநீக்கு//விட்டுக் கொடுத்து
வாழ முடியாத
சுயநல மனிதனால்
சிட்டுக்குருவிக்கும் ஆபத்து//
ஸ்ரீராம், மீண்டும் வந்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குசிட்டுக் குருவிகள் படங்களும் அதன் கீழ் விளக்கங்களும் மிகவும் அழகாக பொருத்தமாக இருந்தது.குருவிகள் மிகவும் அழகாய் இருக்கின்றன.ஓட்டின் மேல் குருவி தங்கள கேமராவுக்கு சமர்த்தாய் அழகாய் போஸ் கொடுத்துள்ளது.அவைகளுக்கு தண்ணீர் குடிக்க வழி செய்திருக்கலாம் என்றவிடத்தில் உங்கள் இளகிய மனம் புரிகிறது. பறவைகளின் அழகே ஒரு தனி அழகுதான். அவை அமர்ந்த இடத்தை விட்டு நகரும் வரை கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டேயிருக்கலாம்.
சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு பதிவு அருமை. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா குருவிகள் தினத்தில் குருவிகள் மிக அழகு...
பதிலளிநீக்குபூவிலே தேனைத்தானே தேடோணும்? இது வண்டைத் தேடுகிறதே?:) டவுட்டூஊஊஊ:)
வணக்கம் கமலா ஹரிகரன், வாழ்க வளமுடன். குருவிகளுக்கு தெரியாமல்தான் எடுக்க வேண்டும். தெரிந்தால் சிட்டாய் பறந்து விடும்.
பதிலளிநீக்குகொடைக்கானல், திருப்பதி போன்ற மலை பகுதியில் பறவைகள் விலங்குகளுக்கு தண்ணீர் வைத்து இருப்பார்கள். அதுபோல் எங்கள் வீட்டிலும் பறைவைகளுக்கு தண்ணீர் வைத்து இருக்கிறேன் . பறவைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தால் மனது மகிழும். உங்கள் அருமையான , அன்பான கருத்துக்கு நன்றி.
வணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுருவி தேன், தேனை நாடி வரும் பூச்சி
இவற்றை சாப்பிடும். கொசு முட்டை, கொசு
முதலியவற்றை சாப்பிடும். குருவி அதிகம் இருக்கும் இடத்தில் கொசு இருக்காது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான படங்கள் .அரிஸோனாவாகட்டும் நம்ம அம்மாபேட்டை அடைக்கலாங்குருவியாகட்டும் எல்லா குருவிகளும் அழகும் கள்ளமில்லா உள்ளமும் கொண்டவை .
பதிலளிநீக்குநான் தோட்டத்தில் தண்ணீரும் அவற்றுக்கு உணவும் வச்சிட்டு மறக்காம ஜெசி மல்டியை வீட்டுக்குள் அடைச்சிடுவேன் அவங்க சாப்பிட்டு போகும்வரை .
குழந்தைகள் நல்லா இருக்கட்டும் .அவங்களுக்கு இறைவன் அனுதினம் உணவு கிடைக்க அருள்புரியட்டும் ,
வணக்கம் ஏஞ்ச்சல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅழகான படங்கள் .அரிஸோனாவாகட்டும் நம்ம அம்மாபேட்டை அடைக்கலாங்குருவியாகட்டும் எல்லா குருவிகளும் அழகும் கள்ளமில்லா உள்ளமும் கொண்டவை .//
அழகாய் சொன்னீர்கள் ஏஞ்சல், எல்லா குருவிகளும் அழகுதான்.
உங்கள் ஜெஸி, மல்டி அவற்றை விரட்டி விளையாடும் இல்லையா?
குருவி வந்து உணவு உண்ணும் வரை இவை வெளியில் விட முடியாது தான்.
//குழந்தைகள் நல்லா இருக்கட்டும் .அவங்களுக்கு இறைவன் அனுதினம் உணவு கிடைக்க அருள்புரியட்டும் ,//
ஆமாம், அது தான் இப்போது வேண்ட வேண்டும்.
உணவும், தண்ணீரும் அதற்கு தினம் வைக்க வேண்டும் வெயில் காலம் வந்து விட்டதே!
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
உங்கள் படங்கள் யாவும், இன்னும் சிட்டுக்குருவி இனம் இருக்கின்றது என்பதை தெளிவு படுத்தின.
பதிலளிநீக்குவணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசிட்டு குருவி இனம் இருக்கிறது. அதற்கு வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள இடத்தில் ஆனந்தமாய் இருக்கிறது.
விவசாயத்தில் பூச்சி கொல்லி பயன்படுத்தாமல் இயற்கை உரம் போட்டால் குருவி இனம் உயிர் வாழும்.
உடல் நலமா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
பறவைகளைக் கவனிப்பது மனதுக்கு இதம். மீண்டும் அவை கூடமைத்திருப்பதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபறவைகளைப் பார்ப்பது மனதுக்கு இதம் தான்.
மீண்டும் குருவிகள் சத்தம் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
குருவிகள் மிகவும் அழகு
பதிலளிநீக்குவணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
சிட்டுக்குருவிகள் மற்றப் பறவைகளைப் போல் மரங்களின் கிளை, பொந்துகளில் கூடு கட்டாது. மனிதரின் வாழ்விடமே அதற்குப் பிடித்தமானது. ஆனால் இப்போதைய குடியிருப்புக்கள் சிட்டுக்குருவிகள் வாழத் தகுதியானதாக இல்லை. ஆனால் ஒரு சில கிராமங்களின் பழைய மாதிரி ஓட்டு வீடுகளில் பார்க்க முடிகிறது. இதற்கென வாழ்விடங்களை அமைத்தால் என்ன என்று தோன்றுகிறது. நல்ல பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசிட்டுக்குருவிகள் நம் பகுதியில் இருக்கிறது என்று
தகவல் சொன்னால் அவர்கள்வந்து குருவிகளுக்கு கூடு அமைத்து தருகிறார்கள்.
அவர்களைப் பற்றி பழைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
ஒரு பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர் சேர்ந்து குருவிகளுக்கு வாழ்விடங்க்களை அமைத்து கொடுத்து இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமை. குருவிகளின் இனிய ராகம் உங்கள் காதுகளில் ரீங்காரமிடட்டும். படங்களுடன் பதிவு சிறப்பு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு#084/2018/SigarambharathiLK
2018/03/29
கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO
https://newsigaram.blogspot.com/2018/03/KAVIK-KURAL-14-NANDRUM-THEEDHUM-NAKKE-SEIYUM.html
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்