திங்கள், 26 ஜூன், 2017

பாடிப் பறந்த பறவை ( புல் புல்)


காகங்கள்  விடாமல்  கரைந்து கொண்டு இருந்தன. என்ன என்று பால்கனி வழியாக எட்டிப்பார்த்தால் புல்புல் பறவை கீழே இறந்து கிடந்தது. 

அன்று காலையில் கூட பறந்து பறந்து தன் இணையுடன் குதூகலமாய் விளையாடிக் கொண்டு இருந்தது. எதிர்வீட்டு மாடிக்கு வருவதும், கேபிள் ஒயரில் அமர்வதும் எங்கள் வீட்டில் வைத்து இருக்கும் உணவைக் கொத்தி விட்டுச் செல்வதும்  என்று குதூகலமாய்ச் சுற்றிப்பறந்த புல்புல் பறவை தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து வருத்தமாய் இருந்தது.
                                                 பூச்சியை பிடித்து செல்கிறது.


மைனாக்கள் புல்புல் பறவையைக் கொத்திக் கொத்தி இழுத்துச் சென்றது. வளாகத்தைக் கூட்டும் பெண் அந்தப்  பறவையை ஓரமாய் ஒதுக்கி அதன் மேல் பழைய துணியைப் போட்டு மூடி வைத்தவுடன் காகம், மைனா எல்லாம் சிறிது நேரத்தில்  அந்த இடத்தை விட்டுச் சென்றன.

நேற்று வரை என்னை மகிழ்வித்த பறவை இன்று இல்லை என்று நினைக்கும் போது மனம் கனத்துப் போகிறது. ஏன் இப்படி ஆச்சு என்ற கேள்விகள் மனதில் . இணையைப் பிரிந்த மற்றொரு புல்புல் பறவையை இரண்டு நாளாகக்  காணோம்.

மாயவரத்தில் இருக்கும்போது புல்புல் பறவை நான் மொட்டைமாடியில் வைக்கும் உணவை எடுக்க வரும். அதிகாலை முதல் மாலை வரை அதனைப்பார்க்கலாம். பக்கத்து வீட்டு தென்னைமரத்தில் ஊஞ்சல்  ஆடும்.
கொடிக் கம்பியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும். எங்கள் குடியிருப்பில் மற்றொரு பக்கம் இருந்த மாடிப்படியின் அருகில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து குஞ்சுகளுக்கு உணவூட்டுவதை, காத்திருந்து காத்திருந்து என்று பதிவு போட்டு இருந்தேன் .அப்போது எல்லாம் சின்ன காமிரா. அதிக தூரம் ஜூம் செய்ய முடியாது.


அதிகாலையில் 
மதிய வேளையில்
மதியம் 
மதியம்
மாலை நேரம் தென்னை மர ஊஞ்சல்
மாலை நேரம் உல்லாசமாய் ஊஞ்சல் ஆடும்   புல்புல் 

வாழ்க வளமுடன்

42 கருத்துகள்:

 1. வணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.
  என்ன செய்வது பாவம் தான்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. சற்றுமுந்தான் சும்மா தளத்ட்க்ஹில் தேனம்மையின் க்லிக்ஸ் பார்த்தேன் இங்கு பறவை பற்றிய சோக கீதம்

  பதிலளிநீக்கு
 3. எதிரிகள் தாக்குதலா? நோயா? என்ன காரணமோ தெரியவில்லையே... வருத்தமாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. அடடா. என்ன காரணமாக இருக்குமோ, வருத்தம் அளிக்கிறது. இந்த வகை புல்புல் எப்போதும் இணையுடனேதான் வரும். அதற்கும் என்னாயிற்றோ?

  பதிலளிநீக்கு
 5. பாவம்க்கா :(
  வெயில் காலம் ஏதும் நோய் இருக்கும் ..நீங்க பறவைகளுக்கு உணவிடும்போது கொஞ்சம் கீரை மல்லி வெங்காய துண்டும் நறுக்கி போடுங்க மற்றவைக்கு டிசீஸ் தாக்காமலிருக்கும்

  பதிலளிநீக்கு
 6. கூட இருந்த நட்பு ஒன்றை இழந்து விட்ட சோகம்/

  பதிலளிநீக்கு
 7. மனம் மிக மிக வேதனையுறுகிறது
  உங்களைப்போலவே

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார் , வாழ்க வளமுடன்.
  இவ்வளவு நாள் மகிழ்ச்சியை அள்ளி தந்த பறவை விட்டு பிரிந்தது சோகம் தான்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  என்ன காரணம் என்று தெரியவில்லை.
  வருத்தமாய் இருக்கிறது காரணம் தெரியாமல்.

  பதிலளிநீக்கு
 10. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "பாடிப் பறந்த பறவை ( புல் புல்)":

  பறவைகளின் படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளன.

  அந்த ஒரேயொரு பறவையின் மறைவுச் செய்தி கேட்க, மனதை என்னவோ செய்கிறது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  மன்னிக்கவும் உங்கள் பதிவை படித்து விட்டு உடனே வெளியிட மற்ந்ததால்

  The comment doesn't exist or no longer exists. இப்படி வந்து விட்டது.
  என் சோகத்தை சொல்லி எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 11. KILLERGEE Devakottai has left a new comment on your post "பாடிப் பறந்த பறவை ( புல் புல்)":

  அழகாக ஜூம் செய்து எடுத்து இருக்கின்றீர்கள்
  மரணம் என்பது பறவைகளுக்கும் வருத்தத்தை கொடுக்கத்தான் செய்யும் நாம்தான் அதை உணர்ந்து பார்ப்பதில்லை.
  த.ம.1
  வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன். உடனே Publish செய்யாமல் விட்டு விட்டேன் அதனால் The comment doesn't exist or no longer exists. இப்படி வந்து விட்டது மன்னிக்கவும் ஜி.
  எல்லா உயிர்களுக்கும் மரணம் வருத்தத்தை கொடுக்கும் என்பது உண்மையே.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் எப்போதும் தன் இணையுடன் தான் வரும்.
  அதற்கும் என்னாயிற்றோ? தெரியவில்லை அதை பார்க்க முடியவில்லை.
  வெயில் தாங்கவில்லை போலும்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  கொஞ்ச நாட்களாய் காணவில்லையே ?
  வேலை விஷ்யமாய் வெளியூர் போய் விட்டீர்களா?

  புல் புல் மறைவு வருத்தம் தான்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
  //வெயில் காலம் ஏதும் நோய் இருக்கும் ..நீங்க பறவைகளுக்கு உணவிடும்போது கொஞ்சம் கீரை மல்லி வெங்காய துண்டும் நறுக்கி போடுங்க மற்றவைக்கு டிசீஸ் தாக்காமலிருக்கும்//

  நீங்கள் சொன்னது போல் செய்கிறேன்.
  வெயிலின் கொடுமை தாங்கவில்லை என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  மனம் வருத்தமாய் தான் இருக்கும் . என்ன செய்வது!

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
  //கூட இருந்த நட்பு ஒன்றை இழந்து விட்ட சோகம்//

  நீங்கள் சொன்னது போல் கூட இருந்த நட்பை இழந்த சோகம் தான்.

  பதிலளிநீக்கு
 17. Ramani S has left a new comment on your post "பாடிப் பறந்த பறவை ( புல் புல்)":

  மனம் மிக மிக வேதனையுறுகிறது
  உங்களைப்போலவே

  வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
  அலைபேசியில் பார்த்து விட்டு உங்க்கள் கருத்தை பதிந்தேன் பதிய வில்லை மன்னிக்கவும்.
  வெளியில் இருந்தேன். அதனால் இன்று தவறுகள் நடந்து விட்டது.
  என் வருத்தத்தை பகிர்ந்து எல்லோரையும் வருத்தப்பட வைத்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 18. நெருடலான பதிவு. செல்லப் பிராணிகள், செல்லப் பறவைகள் மறைவு மனதை அதிகம் நெருடத்தான் செய்யும். எனக்கும் இது மாதிரியான தொண்டையை அடைக்கும் துயர அனுபவங்கள் உண்டு. அந்த ‘புல் புல்’ பறவை, மின்சார கம்பிகளில் பட்டு இறந்து இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ , வாழ்க வளமுடன்.
  என் பணிகளுக்கு இடையே பறவைகளை பார்வையிடுவது என் பழக்கம்.
  அவை எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். மாயவரம், அப்புறம் மதுரையில் முன்பு இருந்த வீட்டில் பற்வைகள் வித விதமாய் நிறைய வரும். இங்கு. புல் புல். தவிட்டுக் குருவி, காக்கா, புறா குயில்,மைனா இவைத்தான் பார்க்கலாம். புல் புல் பறவை இரண்டு மட்டுமே எங்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றி திரியும். அவை இல்லை என்பது மனதுக்கு கவலை அளிக்கிறது.
  நீங்கள் சொல்வது போல் மின்சார கம்பிகளில் பட்டு இறந்து இருக்கலாம்.

  உங்கள் வீட்டிலும் நிறைய பூனைகள் இருந்தன முன்பு இல்லையா?  பதிலளிநீக்கு
 20. நம்மோடு தொடர்பு உடையவர், நாம் தினமும் பார்ப்பவர் என்றாலே ஒரு ஒட்டுதல் வந்துவிடுகிறது. அது மனிதனாகட்டும், விலங்கு பறவைகளாகட்டும், மரம் செடி கொடிகளாகட்டும். மனித மனமே அன்பினால் ஆனதுதான்.

  பதிலளிநீக்கு
 21. மனதிற்கு வருத்தமாகத் தான் இருக்கின்றது...

  மற்றொன்று எங்கே சென்றதென்றும் தெரியவில்லை..

  சிவநெறிச் செல்வராகிய தங்களுடன் ஒன்றியிருந்த
  அந்தப் பறவைகள் - தங்கள் கையால் உணவு உண்டன..
  ஓடியாடி மகிழ்ந்தன.. தங்களையும் மகிழ்வித்தன..

  காலச் சுழற்சியில் அவற்றின் கடமை முடிந்து விட்டது போல!..

  சிவ புண்ணியம் கொண்டு நற்கதியடையட்டும்..

  ஓம் நம சிவாய!..

  பதிலளிநீக்கு
 22. வணக்கம்

  படங்களை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.

  //நம்மோடு தொடர்பு உடையவர், நாம் தினமும் பார்ப்பவர் என்றாலே ஒரு ஒட்டுதல் வந்துவிடுகிறது. அது மனிதனாகட்டும், விலங்கு பறவைகளாகட்டும், மரம் செடி கொடிகளாகட்டும். மனித மனமே அன்பினால் ஆனதுதான்.//

  நீங்கள் சொல்வது உண்மைதான். மாயவரத்தில் ஆசை ஆசையாக அத்தனை தொட்டிகளில் செடிகள் வளர்த்தேன், அவை விட்டு வந்தது மனதுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. பல வருடம் பழகிய மக்களை பிரிந்து வந்ததும் வருத்தம் தான்.
  என்ன செய்வது! மனித மனம் நீங்கள் சொன்னது போல் அன்பால் பின்னப்பட்டு விட்டதே!

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

  //காலச் சுழற்சியில் அவற்றின் கடமை முடிந்து விட்டது போல!..

  சிவ புண்ணியம் கொண்டு நற்கதியடையட்டும்..

  ஓம் நம சிவாய!..//

  நீங்கள் சொன்னது சரிதான் அவர் அவர் கடமை முடிந்தவுடன் புறப்பட வேண்டியதுதான், ஆனால் பாழும் மனம் கேட்க மாட்டேன் என்கிறதே !

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
  கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. நீங்களும் ஒரு பறவைப்ப்ரியராக இருப்பது கண்டு சந்தோஷம்.

  ஆனால் புல்புலின் கதை இப்படியாகிவிட்டதே. பறவைகள், விலங்குகள் நிர்க்கதியாக இறந்துகிடப்பதைப்பார்க்கையில் மனதை என்னவோ செய்கிறது.

  அந்த புல்புல் உங்களின் அழகான photography-யில் அமரத்துவம் பெற்றுவிட்டது.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோ ஏகாந்தன், வாழ்க வளமுடன்.
  நீங்களும் பறவைப் பிரியரா?
  விலங்குகள், பறவைகள் தட்ப வெட்ப சூழ்நிலை சரியில்லாமல் இறந்து போகிறது.
  நிர்கதியாக இறந்து கிடப்பதைப் பார்த்தால் மனம் கலங்கும் என்பது உண்மை.
  அதன் படங்கள் அதன் நினைவை எப்போதும் தரும்.

  பதிலளிநீக்கு
 28. அழகான படங்களில் புல்புல்...

  ஆனால் இப்பொழுது இல்லை என எண்ணும் போதுதே மனம் வருந்துகிறது...பாவம்...

  பதிலளிநீக்கு
 29. ஏகாந்தன் Aekaanthan ! has left a new comment on your post "பாடிப் பறந்த பறவை ( புல் புல்)":

  நானும் ஒரு பறவை ப்ரியன்தான். சிறுவயதிலிருந்தே அதுகள்மேல் ஒரு கண் இருந்ததுண்டு! இப்போதும் அதே பழக்கம் தொடர்கிறது. காலையில் பறவைகளின் வினோத ஒலிகளில் விழிப்பதை விரும்புகிறவன். டெல்லியில் எங்கள் வீட்டுக்கருகே உள்ள குட்டிப் பார்க்கில் புறாக்கள், காகங்களோடு மைனாக்கள் அதிகம் பறந்து திரியும். கூடவே மரமேறி விளையாடும் அணில்கள். எப்போதாவது ஜோடிப்பச்சைக்கிளிகள் தெரிவதும் உண்டு.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் சகோ ஏகாந்தன், வாழ்க வளமுடன்.
  நீங்களும் பறவைப்ரியர் என்பதை கேட்க மகிழ்ச்சி.
  இங்கும் குயில் கூவி துயில் எழுப்பும் .
  காலையில் அவற்றின் உற்சாக கூக்குரல் மகிழ்ச்சியைத்தரும்.
  சேவல் கூவும். காகா என்று காகம் அழைக்கும். புறா அனத்தும்.
  அணில் கீறிச் கீறிச் என்று ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும்.
  இங்கும் கிளிகள் ஒலி கேட்கும். மைனா, தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி எல்லாம் வரும்.
  இந்த உலகம் இனிமையுடையது என்று சொல்லும் பறவைகள்.

  மீண்டும் வந்து அழகாய் உங்கள் கருத்தை ரசனையாக சொன்னதற்கு நன்றி.
  அலைபேசியில் உங்கள் பின்னூட்டத்தை படித்தேன், பதிவு செய்தேன் ஏனோ பதிவு செய்யவில்லை. எடுத்து ஒட்டி இருக்கிறேன், மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.


  //அழகான படங்களில் புல்புல்...

  ஆனால் இப்பொழுது இல்லை என எண்ணும் போதுதே மனம் வருந்துகிறது...பாவம்.//

  பறவைகள் வெயிலின் கொடுமையால் இறந்து கொண்டு இருக்கிறது எங்கும்

  என்ன செய்வது ? வாழ்ந்த காலத்தில் பிறரை மகிழ்ச்சிபடுத்தி போய் விட்டது.
  மழை நன்றாக பெய்து வலம் மீண்டும் வந்தால் இந்த பறவைகளின் ஒலி மீண்டும் கேட்கும்.
  நன்றி அனுராதாபிரேம்குமார்.
  பதிலளிநீக்கு
 32. அந்த புல் புல் பறவையின் ஒலி, காதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது :(

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.

  அந்த புல் புல் பறவையின் ஒலி, காதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது :(//

  நீங்கள் சொல்வது உண்மை புல் புல் பறவையின் ஒலி காதில் ரீங்கரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 34. புல் புல் பறவை படங்கள் காக்கை படம் எல்லாம் ரொம்ப அழகு கோமதிக்கா.

  என்றோ பார்க்கும் பறவை அல்லது ஓர் உயிர் இறப்பதையே மனம் ஏற்றுக் கொள்ள கஷ்டப்படும் போது தினமும் இப்படிப் பார்த்துப் பழகி நம்மோடு ஒரு ஒட்டுதலுடன்....அவை இறக்கும் போது மனம் படும் பாடு அடங்கக் கொஞ்சம் நேரம் ஆகும் தான்...

  படங்கள் மிக மிக அழகு!!! புல் புல்லிம் நாதம் நமக்குக் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்....உங்கள் ஏரியாவில் புல் புல் இருக்கிறதே அக்கா...அதுவே பெரிய விஷயம்தான்...

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
  மனதின் கஷ்டம் மறைய காலம் ஆகும் தான்.
  படங்கள் எனக்கு அந்த பறவையின் நினைவுகளை தந்து கொண்டு இருக்கும்.
  நான் போகும் இடம் எல்லாம் புல் புல் பறவையைப் பார்ப்பேன்.

  உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. பதிவைப் பார்த்து மனம் கனத்துப் போனது. அம்மா வீட்டில் இருக்கும்போது புல்புல் பறவை முல்லைப்பந்தலில் வருடந்தோறும் கூடுகட்டிக் குஞ்சு பொரிக்கும். ஒரு வருடம் கூடுகட்டி முட்டையிட்டது. ஆனால் அதற்குப் பின் என்னானதோ.. கூடும் முட்டைகளும் அப்படியே இருந்தன. தாய்ப்பறவையை அதன்பின் காணவே இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும்போதே மனம் பதைக்கிறது. கண்முன் என்றால் சொல்லவே வேண்டாம். படங்கள் அற்புதமாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொன்ன சேதியை கேட்டு மனம் கனத்து போனது.
  குஞ்சு பொரிக்கும் முன்பே தாய் பற்வை காணாமல் போனால் மிகவும் கஷ்டம்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 38. அட....பாவமே.

  படங்கள் அழகு.
  எங்கள் வீட்டிற்கும் ஜோடியாகவரும்.

  பதிலளிநீக்கு