கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.
நான்கு சக்கரம், இரண்டு சக்கர வாகனங்களை இங்கு நிறுத்தி விட்டு எல்லோரும் சேர்ந்து நடந்தோம்.
//முத்துப்பட்டி பெயரே ரொம்ப அழகாக இருக்கு. பெருமாள்மலை போகும் நடைபாதை நல்ல அழகாகவும் ஆசையாகவும் இருக்கு, ஆனா இது குரூப் ஆகத்தானே போகமுடியும்.. தனிக்குடும்பமாக போகப் பயமென நினைக்கிறேன்.//
அதிராவின் பின்னூட்டம் முத்துப்பட்டி முதல் பகுதிக்கு.
ஆமாம் அதிரா , குரூப்பாகத்தான் போக முடியும். தனிக்குடும்பாக போவது கஷ்டம் தான்.
இரு புறமும் முள்காடு - நடுவில் பாதை - -இடை இடையே வீடுகள்.
கிராமத்து அழகிய வீடுகள் - பார்ப்போம், வாருங்கள்!
நாய், ஆடு இவற்றுடன் வீட்டின் வெளியே பசுமை நடை மக்களைப் பார்க்கும் இல்லத்து அரசி.
//அங்கும் மக்கள் இருக்கிறார்களோ... தண்ணிக்கு கஸ்டமாக இருக்குமே..//
அதிராவின் கேள்வி
என் பதில்:-
அங்கும் மக்கள் இருக்கிறார்கள். ஆடு, மாடு, கோழிகள், நாய்கள் வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்தும் மக்கள் இருக்கிறார்கள். தண்ணீர் வசதியை
அரசாங்கம் அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.
கரையான், ஓலைக் கூறையை அரித்து இருக்க, இல்லத்தில் ஆள் இருக்கா என்று தெரியவில்லை . ஆனால் ஆடு ஓய்வு கொள்கிறது வாசலில்
இப்போது எல்லோர் வீடுகளிலும் மின் சாதனங்கள் இருப்பதால் ஆட்டுக்கல் வெளியில் உருண்டு கிடக்கிறது, அம்மி திண்ணையில் ஓய்வு எடுக்குது. டிஷ் ஆன்டெனா போட்டு இருக்கிறார்கள்.
இரட்டைத் திண்ணை, கழிவறை, குளியல் அறை வசதி எல்லாம் இந்த வீட்டில் இருக்கிறது.
அழகான கூறை வீடு - மண் , சாணம் மெழுகிய தரை - அடுப்பு எரிக்க முள் சுள்ளி, அம்மி வெளியே
வீட்டில் மேல் கூறை உரச் சாக்கு போல் இருக்கிறது. காற்றில் பறந்து விடாமல் இருக்கக் கயிறால் கட்டி வைத்து இருக்கிறார்கள்.
தூரத்திலிருந்து படம் எடுத்தேன், அவர்கள் அனுமதியுடன் ,
வீட்டையும் அவர்கள் வெளியில் சமையல் செய்வதையும் படம் எடுத்தேன் , அவர்கள் பூரி செய்து கொண்டு இருந்தார்கள்,
அன்புடன்," சாப்பிட வாங்க "என்று எங்களைக் கூப்பிட்டார்கள்..
அந்த கிராமத்தில் இவர்கள் வீடுதான் கொஞ்சம் பெரிது , டெரேஸ் பில்டிங்
கிட்டிப்புள் விளையாடிக்
கொண்டு இருந்த சிறுவன் அவனை படம் பிடிக்கச் சொன்னான்
ஆங்காங்கே தண்ணீர் குட்டைகள், அதில் கல்லைப் போட்டு தண்ணீர் வட்டமிடும் அழகை ரசிக்கும் சிறுவன். எங்கள்பயணக்குழுவில் உடன் வந்த சிறுவன்.
இயற்கையாக அமைந்த நீர்த் தேக்கத்தின் கரையில் அமர்ந்து பேசுவது இனிமைதான். (அலைபேசியில் எடுத்தபடம்)
பாறைகளுக்கு நடுவில் நீர்த் தேக்கம்.
தண்ணீர் வசதி இருக்கிறது.
பழுது அடைந்த வீட்டிலும் கல் திண்ணை.
பன்றிகளும் உண்டு
ஆடு மேய்ப்பவர்கள் நாங்கள் வீடு திரும்புவதை வேடிக்கை பார்க்கிறார்கள்.
கிராமத்துத் தெய்வம் (ஊதுவத்தி பொருத்தி வைத்து இருக்கிறார்கள்)
தெய்வத்தின் பாதமே சரணம் என்று இருக்கும் ஆடுகள். தாயின் மடியைக் குழந்தைகள் அசுத்தம் செய்தால் தாய்க்குக் கோபம் வராது தானே!
கிராமத்துக் குல தெய்வம் போல ! பொங்கல் வைத்து வழிபட்டு இருக்கிறார்கள்.
இந்த கிராமத்து வீடுகளில் ஆடு, கோழி, வான்கோழி, நாய் வளர்க்கிறார்கள், மாடு யாரும் வைத்துக் கொள்ளவில்லை.
குட்டி நாய்க்கு அந்த செருப்பிடம் கோபமா? பயமா? ( குட்டி நாய்கள் செருப்பைக் கடித்துத் தூக்கிக் கொண்டு போய் எங்காவது போட்டு விடும்)
சமத்தாய் என் பின்னாலேயே வாருங்கள்!.
எல்லோர் வீடுகளிலும் இரவு கோழியை அடைக்கும் கூடு உண்டு.
திண்ணை இல்லா வீடே கிடையாது.
திண்ணை கட்டவில்லையென்றாலும் செங்கலை வைத்து அதன் மேல் கற்பலகையை வைத்து திண்ணை தயார் செய்து இருந்தார்கள் சில வீடுகளில்.
அந்தக் காலத்தில் மட்டும் அல்ல இப்போதும் திண்ணை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பு திண்ணையில் உட்கார்ந்து ஊர்க் கதைகள் பேசி மகிழ்வார்கள். ஊருக்குள் யார் வந்தாலும் தெரிந்து விடும் எந்த வீட்டுக்கு போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று திண்ணையில் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்களிடம் சொல்லாமல் கடந்து போய்விட முடியாது.
இப்போதும் வீட்டு வாசலிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
பக்கத்தில் கடைகண்ணி கிடையாது வெகு தூரம் வந்து தான் பொருட்கள் வாங்க வேண்டும். கோவில்கள் பக்கத்தில் இல்லை , இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கு அருகில் அமைத்துள்ள தெய்வங்களை வணங்கி திருப்தி அடைகிறார்கள்.
எவ்வளவு வசதிகள் இருந்த போதும் மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும் சிலருக்கு (என்னையும் சேர்த்து தான்) இங்கு உள்ளவர்கள் குறைந்த வசதியிலும் மன மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்த்தால் நாம் எவ்வளவு வசதிகளுடன் மனக்குறையுடன் வாழ்கிறோம் என்று வெட்கம் ஏற்படுகிறது.
"மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்." என்ற பாடல் நினைவுக்கு வருது.
முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் தொடர்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.
வாழ்க வளமுடன்!