ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

மீண்டும் மூவர் கோவில் (கொடும்பாளூர்)

போன ஆண்டு (2016) கடைசி மாதம் பதிவு எழுதியது , அதன் பின் இப்போது தான் எழுத நேரம் கிடைத்தது. டிசம்பர் மாதம்  மீண்டும் மூவர் கோவில் போகும் வாய்ப்பு கிடைத்தது.

 முன்பு  2015 ஆகஸ்டு மாதம் போனோம்  ஒரு வருடத்துக்குள்  நிறைய மாற்றங்கள். இந்த இடத்தின் வரலாறு சொன்ன பலகையைக் காணவில்லை, கிணற்றில் நீர் இல்லை. 


2015ல் எடுத்த படம்

2016ல் எடுத்த படம்

2015ல் எடுத்தபடம்


தண்ணீர் நிறைய இருந்தது அன்று 

இப்போது போனபோது ஒரு சொட்டுதண்ணீர்  இல்லை.

மூவர் கோவில் 


அப்போது பூக்கள் பூக்கவில்லை, இப்போது போனபோது பூக்கள் பூத்து இருந்தது.வண்ணத்துப் பூச்சிகள்  நிறைய சுற்றிக் கொண்டு இருந்தது  பூக்களை ,  நான் எடுக்கும் போது எல்லாம் பறந்து விட்டது. ஒன்று மட்டும் போனால் போகுது பாவம் என்று உட்கார்ந்து போஸ் கொடுத்தது.

கல்லில் பூத்த மலரில் வண்ணத்து பூச்சி, அதுவே பூ மாதிரி இருக்கிறது அல்லவா?

மகன் ஊரிலிருந்து வந்த போது  சில ஊர்களுக்குப் பயணம் செய்தோம் அதில்  மூவர் கோவிலும் உண்டு. மகன், மகள் அந்த கோவில் பார்க்கவில்லை என்பதால் அங்கு போனோம்.

 நான் முன்பே பார்த்து இருப்பதால்மூவர் கோவில் அழகை, அங்குள்ள கிணற்றின் அழகை எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன் ,. என் குழந்தைகளும், என் மருமகள், மருமகளின் அம்மா, எங்கள் பேரன் எல்லோரும் நன்றாக ரசித்துப் பார்த்தார்கள்.



பேரன் அங்குள்ள நந்தி மீது உட்கார்ந்து கொண்டு ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கியது போல் பெருமை கொண்டான்.




பக்கத்தில் உள்ள இடங்கழி நாயனார் கோவிலுக்கும் அழைத்து சென்றோம்,
முன்பு இடங்கழி நாயனார் கோவில் பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அங்குள்ள ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடினார்கள். அங்கு நடந்த கபடி போட்டியைக் கண்டு களித்தார்கள்.





புது மடிக் கணினி . (மகன் வாங்கி தந்தது) அதில்  என் எச் எம்  செயல்பட மாட்டேன் என்பதால் அழகி பயன்படுத்துகிறேன் . பழைய மடிக் கணினி விண்டோஸ் -7 
இப்போது விண்டோஸ்- 10 கற்றுக் கொண்டு எழுதி வருகிறேன் பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டும்.

வாழ்க வளமுடன்.!




18 கருத்துகள்:

  1. ஒப்பீட்டுப் பார்க்கும்படியாக
    இரண்டு படங்களையும் கொடுத்தது
    அருமையாக புரிந்து கொள்ளும்படியாக
    இருக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அருமை
    தொடருங்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. படங்களும் பதிவும் வழக்கம்போல் அருமை.

    //கல்லில் பூத்த மலரில் வண்ணத்து பூச்சி, அதுவே பூ மாதிரி இருக்கிறது அல்லவா?//

    இது மிகவும் பிடித்துள்ளது. சூப்பர் !

    பேரன் அசப்பில் (தங்கள் கணவர்) தன் தாத்தா ஜாடையாக இருப்பான் போலிருக்குது. கரெக்டா?

    பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  4. நானும் நினைத்தேன் நீண்ட நாட்களாக நீங்க எழுதவில்லையே என, என் கொம்பியூட்டரில் உங்கள் புளொக்கை ஓபின் பண்ணினால் ஏதோ வைரஸ் இருக்குதுபோல, கொமெண்ட் போட விடுகிதில்லை. இது மொபைலுக்கு ஓகே.

    படங்கள் பார்க்க ஆசையாக இருக்கு. பழமை என்றும் இனிமை. அதென்ன அந்தக் கிணறு அப்படி வத்திவிட்டதே....

    ஆலம் விழுதுகள் சூப்பர், இவை எல்லாம் நேரில் பார்க்க மனதுக்கு மிக இதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம், திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்தமைக்கு நன்றி.
    பேரன் சார் மாதிரி தெரிகிறதா உங்க்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    வெளிநாட்டில் இருப்பவர்கள் சிலர் அப்படித்தான் சொல்கிறார்கள்.
    எங்கும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. மழை பெய்தால் தான்
    இனி ஆறு, குளம், கிணறு எல்லாம் நீர் வரத்து அதிகரிக்கும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. காலங்கள் மாறும்காட்சிகள் மாறும் காலத்தின் முன்னே அதூவும் இதுவும் வேறல்ல

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    அருமையான பாடல் கருத்துக்கு ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  11. அமைதியான இடம். அழகான கோவில். படங்களுக்கு நன்றி. புது மடிக்கணினியிலிருந்து இனி அடிக்கடி பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    அமைதியான இடம்தான். எழுத நிறைய ஆசைதான்.
    மனம், உடல் ஒத்துழைக்க வேண்டும்.
    தினமலர் பட்டத்தில் உங்கள் புல் புல் பறவை பற்றிய செய்தி படித்தேன்
    வாழ்த்துக்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அழகிய படங்கள். கோவில் அழகாய் இருக்கிறது. அந்தக் கிணற்றில் மட்டுமா தண்ணீர் இல்லை? தமிழ்நாடு முழுக்க வறட்சியாக இருக்கிறது!

    என் கணினியும் படுத்தல்ஸ் ஆஃப் இந்தியா செய்து விட்டது!!! இப்போதுதான் தேறி வருகிறது.

    பதிலளிநீக்கு
  14. முதலிரண்டு படங்களையும் பார்த்து confuse ஆகிவிட்டேன். காளையார் ('நந்தியார்), கால் வலிக்கிறது என்று இடம் மாறி உட்கார்ந்துவிட்டாரே என்று (மேலிருந்து முதல் வரிசை, இரண்டு கோடியிலும்). அப்புறம்தான் நீங்கள் போட்டோ எடுத்த கோணம் 2015லும் 2016லும் வேறு வேறு என்று. படங்கள் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    எங்கும் தண்ணீர் தட்டுபாடு தான்.
    கணினி தேறி வருவது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. எல்லா படமும்..அந்த இடமும் ரொம்ப அழகா இருக்கு மா...

    பதிலளிநீக்கு