Tuesday, August 4, 2015

இடங்கழி நாயனார் கோவில்

                      

                    
நாங்கள் சென்றவாரம் சனிக்கிழமை கொடும்பாளூரிலே உள்ள இடங்கழிநாயனார் கோவில் சென்று இருந்தோம். நல்ல அமைதியான  இடம், மரங்கள் சூழ்ந்து  பறவைகளின் பலதர்ப்பட்டஓசை நிறைந்த இடமாய் இருந்தது.

ஆடு மேய்க்கும் ஒரு அம்மா, நந்தியெம்பெருமானை சுற்றி வணங்கி கொண்டு இருந்த ஒருவர், விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள், மற்றும்  நாங்கள் இருவர்  மட்டுமே அந்த வளாகத்தில்.

இடங்கழிநாயனார் வரலாறு:-

கொடும்பாளூரிலே வேளிர் குலத்தில் பிறந்த மன்னர்  இடங்கழியார். அவர் ஆட்சியில் சைவம் தழைத்தோங்கியது.திருக்கோவில்களில் பூஜை சிறப்பாக நடந்தது.

அவ் ஊரில் ஒரு சிவனடியார்  இருந்தார் அவர் நாள்தோறும் அடியார்களுக்கு மாகேசுரபூஜை(அமுதுபடைத்தல்)செய்வதை நித்திய கடனாய் செய்து வந்தார்.  அப்படி செய்து வரும் போது அவருக்குப்  பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு அச்செயலைத் தொடரமுடியவில்லை அன்று இரவே   இடங்கழியாருடைய மாளிகைக்குச் சென்று , நெற்குதிரில் இருந்த நெல்லை எடுத்து வந்தார். அப்போது காவலர்கள் அவரைக் கைது செய்து மன்னர் இடங்கழியார் முன் நிறுத்தினர், ஏன் திருடினீர் ? என்று  அரசர்  சிவனடியாரைப் பார்த்து கேட்ட போது, அடியார்களுக்கு  நாள் தோறும் அமுதுசெய்வித்து வந்தேன். பணத்தட்டுப்பாட்டால்  செய்யமுடியவில்லை ,  அந்த செயல் தடை படக்கூடாது என்று திருடினேன் என்றார் சிவனடியார்  , இதைக் கேட்டவுடன் மனமிரங்கி  நெற்களஞ்சியத்தை திறந்து அனைத்தையும் எடுத்து கொள்ளச் சொன்னார், மன்னர். பொருள் உதவிகளும் செய்தார்.  நீண்டகாலம் நல்லாட்சி செய்து சிவனடி சேர்ந்தார் அரசர். இடங்கழிநாயனார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.


                      
எங்கு நிதி பெற்று கோவில் கட்டப்பட்டது என்ற விபரம்


இடங்கழிநாயனார் பற்றிய பெரியபுராண பாடல்கள் அடங்கிய கல்வெட்டுக்கள்.


நல்ல உயரம் நந்தி, சுற்றி வரும் பக்தரை விட உயரம் தானே!
நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்அன்னதான மண்டபமாய் இருந்திருக்கலாம்,  இப்போது உபயோகத்தில் இல்லை போலும் இந்த வீட்டைச்சுற்றி புதர்மண்டி கிடந்தது.

இடங்கழி நாயனார் கோவிலின் பக்கம் இந்த  சத்திரம் போன்ற வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். 


அங்கு மண்டி போய் இருந்த  புதர்ச்செடி ,கொடிகளை விலக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் நல்ல வெயில் ஒவ்வொருவர் கையிலும், கம்பு, செங்கல் இருந்தது. என்ன தேடுகிறீர்கள் ? புதர்களுக்கு இடையில் என்று கேட்டால் அடித்த ஓணானை என்று பெருமையாக காட்டுகிறார்கள்.அய்யோ ! பாவம் அடிக்கலாமா? என்றால் இது கெட்டது அடிக்கலாம் என்கிறார்கள் வீட்டில் திட்ட மாட்டார்களா? என்று கேட்டால் அவர்கள் வேலைக்கு போய் இருக்கிறார்கள் வீட்டில் யாரும் இல்லை, அவர்களுக்கு தெரியாது ஆன்ட்டி என்றார்கள். சனிக்கிழமை என்பதால் இவர்களுக்கு விடுமுறை.

இளங்கன்று பயம் தெரியாது என்பதை உறுதி படுத்துவது போல்  இருந்ததுஅவர்கள் செயல்.ஏரிக்கரை, புதர்கள் ஆலமரத்தின் விழுதுகளில் ஆட்டம், என்று இருந்தது.

நம் குழந்தைகளை வெயிலில் போகாதே, அங்கே, போகாதே, இங்கே போகாதே என்று வளர்க்கிறோம், இவர்கள் வெயிலோடு விளையாடி, மகிழ்ச்சியாக ஆரோக்கியமாய் இருக்கிறார்கள்.

ஆன்ட்டி வருகிறீர்களா? அங்கு ஒரு குகை இருக்கு, பெருமாள் கோவில் இருக்கிறது என்றார்கள் என் கண்வர் வேண்டாம் இன்னொரு முறை பார்ப்போம், நேரம் ஆகி விட்டது என்றார்கள்.

அந்தக் காலத்தில் ஓணானை அடித்தால் காசு கிடைக்கும் என்பார்கள் நம்ப மாட்டேன்.
நாங்கள் காரில் ஏறும் போது இந்த சிறுவர்கள் காசு கொடுங்க ஆன்டி ஏதாவது வாங்கி
 சாப்பிடுகிறோம் என்று கேட்டார்கள் நாங்கள் கொடுத்தோம் அந்தக் காலத்தில் சொன்னது போல் ஓணானை அடித்த்வுடன் காசு கிடைத்து விட்டதோ என்று நினைப்பு வராமல் இல்லை.

இவர்கள் பெரியவர்கள் ஆனதும் தங்கள் நண்பர்களுடன் சிறுவயதில் ஆடி களித்த நாட்களை சொல்லி மகிழவார்கள். அவர்களை ஒற்றுமையாய் இணை பிரியாமல் இருக்க வாழ்த்தி வந்தோம்.

                                                       வாழ்க வளமுடன்!


23 comments:

துரை செல்வராஜூ said...

அழகான படங்கள்..

நாங்களும் உங்களுடன் தரிசனம் செய்தோம்..

எத்தனை பேருக்கு பசியாற்றிய மண்டபமோ.. அதன் நிலை கண்டு மனம் கசிகின்றது..

பசங்க கையில் சிக்கிய ஓணானைக் கண்டு பாவமாக இருக்கின்றது.. அதற்கு மட்டும் ஏனோ இப்படி ஒரு தலையெழுத்து..

ஓணான்களுக்கும் நல்ல காலம் பிறக்கட்டும்..

வாழ்க நலம்..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொடும்பாளூர் என்றதும் பொன்னியின் செல்வன் ஞாபகம் வந்துவிட்டது விளக்கங்களுடன் திருக்கோவில் அறிமுகம் அருமை.

ஸ்ரீராம். said...

விவரங்கள் சொல்லும் படங்களுடன் அழகிய பதிவு. அந்த ஆலமரம் சூப்ப்ப்பர்!

எழுத்துகள் ஒரு மாதிரி இருக்கிறதே.. ஏன்?

16 வயதினிலே படத்தில் ஓணானை அடிக்கும் சிறுவர்களுடன் சப்பாணி சுப்பிரமணி பேசும் வசனங்கள் நினைவுக்கு வந்தன!

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
கொடும்பாளூர் இளவரசி வானதியை மறக்க முடியுமா?
கொடும்பாளூரில் நிறைய கோவில்கள் அழகான கலை வேலைபாடுகளுடன் இருக்கிறது. நாங்கள் பார்த்த மூவர் கோவில் அடுத்து வரும் வாருங்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
ஆலமரத்தின் விழுதுகள் அழகாய் கத்தரித்து விட்டது போல் இல்லை!
எழுத்து மிகவும் குட்டியாக வந்தது, அதனால் நார்மல் என்று போட்டேன் அது இப்படி ஆகி விட்டது அடுத்த பதிவில் சரி செய்து விடுகிறேன்.

கமல் பேசும் வசனம் நினைவில் இல்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

இளமதி said...

வணக்கம் அக்கா!

அழகிய படங்களுடன் சிறந்த தரிசனம்!.

ஆலமரம் மனதைக் கவர்ந்தது!

இயற்கை அழகுடன் சேர்ந்த அருமையான காட்சிகள் மனதிற்கு
இதமாக இருக்கின்றன.
பையன்கள் ஓணான் அடிப்பது கொடுமை!.:(
வாழ்த்துக்கள் அக்கா!

கோமதி அரசு said...

வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
கொடும்பாளூர் இயற்கை எழில் சூழ்ந்த இடம் தான்.
பையன்கள் ஓணானை அடிப்பது எனக்கும் வருத்தம்தான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Dr B Jambulingam said...

நல்ல தரிசனம். அழகான, அருமையான படங்கள். நிகழ்விடத்திற்குக் கொண்டு சென்றுவிட்டீர்கள் பதிவு மூலமாக. நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்கள்... ஆலமரத்தின் விழுதுகள் அசர வைக்கிறது...

எங்களுக்கும் தரிசனம்... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.....

கொடும்பாளூர் - படிக்கும் போதே எனக்கும் பொன்னியின் செல்வன் தான் நினைவுக்கு வந்தது....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா..

KILLERGEE Devakottai said...

புகைப்படங்கள் அனைத்தும் அழகு

கீத மஞ்சரி said...

அமைதி தவழும் இடத்தில் அமைந்திருக்கும் கோயில் அழகும் அங்கே துள்ளி விளையாடிய சிறுவர் குழாமும், படங்களும் பல தகவல்களுமாக அனைத்தும் மனத்துக்கு இதம் தரும் பதிவு. நன்றி கோமதி மேடம்.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. பிரமாண்ட நந்தி அழகு.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
பொன்னியின் செல்வனை யாராலும் மறக்கமுடியாது. என் மாமியார் அவர்கள் இங்கு வந்து இருந்த போது ஒருமாதத்தில் பொன்னியின் செல்வன் முழுவதும் மீண்டும் படித்தார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
உங்கள் இதம்தரும் பின்னூட்டத்திற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
அந்த நந்தி பக்கத்தில் மூவர் கோவில் என்ற பழமையான கோவில் இருக்கிறது
அங்கு உள்ள நந்தியோ என்று நினைக்கிறேன்.
அங்கு இதே அளவு நந்தி இருக்கிறது. ’
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

மனோ சாமிநாதன் said...

கொடும்பாளூர் என்றதுமே கல்கியின் வானதியும் அகிலனின் இளங்கோவும்தான் நினைவுக்கு வந்தார்கள்.

சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் அழகு! புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

கோமதி அரசு said...

வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கே. பி. ஜனா... said...

அருமையான பதிவு..