புதன், 21 டிசம்பர், 2016

அன்னை படியளந்தாள் !”மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய லீலை” என்று காலண்டரில் போட்டு இருந்தது. என் தங்கை ஒவ்வொரு வருடமும்  அந்தத் திருவிழாவைப் பார்க்கவரும்படி அழைப்பாள். போனது இல்லை. இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த திருவிழாவின் பெயர் ’அஷ்டமி சப்பரம்’ என்கிறார்கள்.

மீனாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு வரும் வழிஎல்லாம் அரிசி இறைத்து வருகிறாள் அன்னை.  அதைப் பெற்றுக் கொண்டு நம் அரிசிப் பானையில் போட்டு வைத்துக் கொண்டால் உணவுக்கு ப்பஞ்சம் இல்லையாம்.

இன்று வீடுகளில் கத்திரிக்காய், நெல்லிக்காய், பச்சை மொச்சை சேர்த்துக் கொள்ளவேண்டுமாம் சமையலில்.
இவ்வளவுதான் எனக்கு விவரம் தெரியும். மேலும் விவரங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். 


சுவாமி, அம்மன் வருவதைக் கட்டியம்கூற வரும் காளைமாட்டுடன் முரசுஅறைபவர்.
அடுத்து ஒட்டகம் (முகத்தைத் திருப்பிக் கொண்டது
பற்களைக் காட்டியது 

அடுத்து ”பார்வதி” யானை
பள பள என்று மின்னும் முகபடாம்
அடுத்து, பிள்ளையார், முருகன் வர, பின்னால் சுவாமி, அம்மன் சப்பரம்

சுந்தேரசன், பிரியாவிடை
சுவாமி, அம்மன் சப்பரம் முக்கு திரும்பும் காட்சி. 
வாழைப்பழம், அன்னாசிப்பழங்களைத் தோரணமாய்க் கட்டி இருந்தது. தெருமுனை திரும்புவதை பார்ப்பது நல்லதாம்.

சிவன் அடியார்கள் வாத்தியங்களை இசைத்துக் கொண்டு  வந்தார்கள்.


மீனாட்சி அம்மன் தேர், தெருமுனை திரும்பும் காட்சி

திருவிழா என்றால் குழந்தைகளுக்குப் பலூன் இல்லையென்றால் எப்படி?
சவ்மிட்டாய்க்காரர் வழியில் வைத்துவிட்டுப் பிரசாதம் வாங்கப் போய் விட்டார். 
வழியெல்லாம் புளியோதரை, பொங்கல் பிரசாதங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்
எல்லோர் வீட்டு வாசலிலும் தேர்க் கோலங்கள்


உலகமக்கள் எல்லோரும், சகல ஜீவராசிகளும் அன்னையின் அருளில் நலமோடு வாழ வேண்டும்,
                                                               வாழ்க வளமுடன்!
                                                              -----------------------------------

29 கருத்துகள்:

 1. வழக்கம்போல அழகழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

  காளை மாடு, ஒட்டகம், யானை, சப்பரங்கள், ஸ்வாமி, அம்பாள் என அனைத்தையும் மகிழ்ச்சியோடு கண்டு களிக்க முடிந்தது.

  வியாபாரிகளின் சுறுசுறுப்பும், குழந்தைகளுக்கான பலூனும், மக்களின் கூட்டம் கூட்டமாக ஆர்வமும் படத்தில் நன்கு உணர முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. புகைப்படங்கள் உற்சவத்தை நேரில் பார்த்த அனுபவத்தை தருகின்றன.

  பதிலளிநீக்கு
 3. இனிய திருவிழாவின் நேர்முகத் தொகுப்பு அருமை!..

  அன்னையின் அருளால் அனைவரும் நலமுடன் வாழட்டும்!..

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் வை . கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  திருவிழாவை மகிழ்ச்சியுடன் கண்டு களித்து உற்சாகமான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
  உங்கள் தொடர் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொன்னது போல் அன்னையின் அருளால் அனைவரும்
  நலமாய் வாழவேண்டும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பக்திக் கண்ணோட்டம்
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 8. அழகான அருமையான விவரிப்பு அம்மா... நன்றி...

  பதிலளிநீக்கு
 9. நேரில் பார்த்த உணர்வு. அவ்வளவு வருடங்கள் மதுரையில் இருந்திருந்தும் இதெல்லாம் பார்த்தது இல்லை. எந்தத் தெருவில் வைத்து படங்கள் எடுத்தீர்கள் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. படியருந்திய லீலையில் பங்குகொண்டேன். மனம் நிறைவு பெற்றேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பூம்பூம் மாடு, ஒட்டகம், யானை, தேர் உலா, கோலங்கள்... எங்களை அங்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  நாங்கள் அஷ்டமி சப்பரம் பார்த்த இடத்தின் பெயர் நாயக்கமார் புதுத்தெரு ஆரம்பமாகும் இடம். நானும் இப்போதுதான் பார்த்தேன் அஷ்டமி சப்பரம்.
  காமிரா கொண்டு போகவில்லை அலைபேசியில் எடுத்தேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. அன்னையின் அருள் என்று இருக்கட்டும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. அருமையான படங்கள்! தகவல்கள். மதுரை மீனாட்சி அம்மனுக்குத் தினமுமே திருவிழாதான் போல!!!

  பதிலளிநீக்கு
 20. அஷ்டமி சப்பரத்தைப் பல்லாண்டுகள் கழித்து உங்கள் மூலம் காணக் கிடைத்தது. சப்பரம் பார்த்துட்டு வந்த கையோடு வீட்டில் கத்திரிக்காய் எண்ணெய்க்கறியோடு நெல்லிக்காய்ப் பச்சடியும் சேர்த்துச் சாப்பிட்ட நினைவுகள் அலை மோதின.

  இந்த ஜவ்வு மிட்டாய் இன்னமும் புழக்கத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சி. இதில் ரோஸ் கலரில் இருக்கும் ஜவ்வு மிட்டாயைச் சாப்பிட்டால் வாயெல்லாம் சிவந்துடும்னு என்னோட பெரியப்பா இன்னொரு பழுப்பு நிற ஜவ்வு மிட்டாயை வாங்கிக் கொடுப்பார். ஏனென்றால் இதை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டது தெரிந்தால் அப்பாவுக்குக் கோபம் வரும். சமயங்களில் அடியும் கிடைக்கும்! :)))) பள்ளிக்கூட வாசல்களில் சுக்கு மிட்டாய் விற்பார்கள். ஆனால் இந்தத் திருவிழா சுவாமி புறப்பாடு என்றால் இந்த ஜவ்வு மிட்டாய் தான். காடா விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு வருவார்கள். :)

  பதிலளிநீக்கு
 21. மேலாவணி மூல வீதியிலேயே குடி இருந்த காரணத்தால் ஆவணி மூல உற்சவ சுவாமி புறப்பாட்டை வீட்டு வாசலிலேயே பார்க்க நேர்ந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 22. முன்னெல்லாம் சின்னக்கடைத் தெரு வியாபாரிகள் பழங்கள், லட்டுகள் போன்றவற்றை மாடியிலிருந்து தூக்கிப் போட்டு விநியோகம் செய்வார்கள். பணம் படைத்தவர்கள் சில்லறைகளையும் போட்டிருக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
 23. அன்பு மாதேவி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் துள்சிதரன், கீதா வாழ்கவளமுடன்.
  தினமும் விழாதான் மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா தான்.
  உங்க்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  உங்கள் மகள் ஊரில் இப்போது இருக்கிறீர்களா?
  பேத்தி துர்கா நலமா? பேத்தி அப்பு நலமா?
  அஷ்டமி சப்பரம் பார்த்துவிட்டு வரும் போது கத்திரிக்காய், நெல்லிக்காய் வாங்கி வந்தோம். தங்கை சொன்னாள் வாங்க வேண்டும் என்று.

  உங்கள் சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

  ஒவ்வொரு வீட்டு முன்பும் ஏதோ கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் இடிபடாமல் ஓரமாய் நின்று தரிசனம் செய்து விட்டு வந்து விட்டோம்.

  உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. புகைப்படங்கள் ஸூப்பர் சகோ
  த.ம.+ 1

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு