மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடக்கிறது. இறைவன் நடத்திய 64 திருவிளையாடல் நிகழ்ச்சியாக நடத்திக் காட்டப்படும். போன வருடம் வளையல் திருவிழா, புட்டுக்கு மண்சுமந்த திருவிழா பார்த்தோம்.
64 திருவிளையாடல்களில் 32 வது திருவிளையாடல்.
தாருகாவனத்து முனிவர்கள் மனைவியர் சாபம் நீங்க வளையல் விற்கும் வணிகராய் வந்து அவர்களுக்கு வளையல் அணிவித்து அவர்கள் சாபம் நீக்கி பலரும் காணும்படி விண்ணில் மறைந்தார்.
இன்று சோமசுந்தரக் கடவுள் வளையல் விற்ற திருநாள்.
நாங்கள் மீனாட்சி அம்மன் கோவில் போன போது வளையல் எல்லாம் அணிந்து சோமசுந்தரப்பெருமான் வளையல் விற்கப் போக ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.
மீனாட்சி அம்மன் கையில் வளையல் சரம்.
சுவாமி கையில் வளையல் சரம். ”வளையல் வாங்குவீர், வளையல் வாங்குவீர் “
சுவாமி பல்லாக்கு எல்லாம் வல்ல சித்தர் சன்னதி அருகிலிருந்ததால் சரியாக படம் எடுக்க முடியவில்லை மூங்கில் கம்பு கட்டி இருந்தார்கள் அருகில் போக முடியாமல் இருக்க.
தங்கவளை, வைரவளை விற்க வந்து இருக்கிறார்.
பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கும், நாங்கள் போன போது இவர்கள் மட்டும் இருந்தார்கள், முருகன், சண்டேஸ்வரர் எல்லாம் இனிமேல்தான் வருவார்கள்.
முரசு முதுகில் - இறைவன் வருவதைக் கட்டியம் கூற
வளையல் வணிகர் வந்தார்(இது போனவருஷப்படம்)
இறைவன் வளையல் வணிகராக வருவதால் குடை உபசாரம்(போனவருஷப்படம்)
கோவிலுக்குள்ளே பெரிய சந்தனக்கல்லில் சந்தனம் அரைத்துக் கொண்டு இருந்தார்கள், நான் எட்டிப் பார்த்தவுடன் சந்தனம் அரைக்கிறீர்களா ? நாளை இறைவனுக்கு தேவைபடும் சந்தனம் என்றார்கள். சந்தோஷமாய் நானும் , என் கணவரும் அரைத்தோம்.
அரைக்க போகும் முன் அவர்கள் சொன்னது நம் கையை துடைத்து விட வேண்டும் கையில் ஒட்டி இருந்தால், நெற்றியில் அணிந்துவிட கூடாது,முகர்ந்து பார்த்து விட கூடாது என்பதுதான். பெரிய சந்தனகட்டை என்பதால் அரைக்கும் போது நம் கையில் படவில்லை.
போன வருடம் இன்மையில் நன்மை தருவார் கோவிலில் எடுத்த படம் இந்த படம்..
இந்த கோவில் வாசலில் வளையல் விற்றதை போன வருடம் பார்த்தோம். பக்தர்கள் டப்பா டப்பாவாய் வளையல் கோவிலில் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அங்கு இருக்கும் மக்களுக்கு.
இம்மையில் நன்மைதருவார் கோவிலில் உள்ளே மூலவர் இருக்கும் இடத்தில் உள்ளே போகும் அன்பர்கள் எல்லோருக்கும் குருக்கள் இரண்டு வளையல் கொடுத்தார்.
வாழ்கவளமுடன்.
அருமையான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....
பதிலளிநீக்குதகவலும் படங்களும் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குமதுரையில் இல்லாத குறையைத்
பதிலளிநீக்குதங்கள் பதிவு நிவர்த்தி செய்தது
படங்களுடன் பகிரிந்தவிதம்
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
படித்தேன். பெரிய சந்தனக்கல் இப்போதான் பார்க்கிறேன். கோவில் ஊழியத்துக்கு சந்தர்ப்பமா? கொடுத்துவைத்தவர்.
பதிலளிநீக்குஅருமையான காட்சிகளுடன் கூடிய புகைப்படங்கள். இதை எல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது. பகிர்விற்கு மிக்க நன்றிம்மா...
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைதமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎத்தனைமுறையே கோவிலுக்கு போய் இருக்கிறோம். இப்போதுதான் கிடைத்தது இந்த வாய்ப்பு. குருஞானசம்பந்தர் விபூதி வைத்து இருக்கும் இடத்திற்கு பக்கம் இருக்கிறது சந்தனக்கல். (அம்மன் சன்னதி கொடிமரம் பக்கம்.)
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
படங்கள் மதுரையில் என்னை இருத்தின. இன்மையிலா, இம்மையிலா?
பதிலளிநீக்குஇறைவனின் செயலைப் பகிர்ந்து எங்களுக்கு மன நிறைவு தந்துவிட்டீர்கள். நாமும் பெருமானுடன் செல்வது போலவே இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்கள் மதுரைதான்.
மதுரையில் உள்ள இம்மையில் நன்மைதருவார் கோவில்.
தவறுதலாக இம்மைக்கு பதில் இன்மை என்று பிழையாகி விட்டது குறிபிட்டமைக்கு நன்றி.
காலை 11 மணிக்கு இம்மையில் நன்மைதருவார் கோவிலுக்கு தங்கபல்லக்கு வாகனத்தில் வந்து சிவபூஜை முடித்து மாலை நாலுமணிக்கு மீனாட்சி கோவிலுக்கு போய்விடுவார்கள் என்று தினமலரில் போட்டு இருந்தார்கள். போனமுறை பார்த்து இருக்கிறேன்.
நன்றி உங்கள் கருத்துக்கு.
வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோயில் காட்சிகளைக் கண்முன் நிறுத்தி விட்டீர்கள்..
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி.. வாழ்க நலம்..
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
முன்பொரு முறை வளையல் விற்கும் வியாபாரி ஒருவர் பற்றி உங்கள் பதிவில்படித்த நினைவு வந்தது
பதிலளிநீக்குகோபுர தரிசனம் அற்புதம்.
பதிலளிநீக்குமற்ற புகைப்படக் காட்சிகளும் துல்லியம்.
அங்கு சிலப்பதிகார உரை எழுதுவதற்கு இங்கு தரிசித்ததை ஒரு மாற்றாக உணர்ந்தேன்.
நன்றி, கோமதிம்மா.
வணக்கம், பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவலைத்தளத்தில் இப்போது தான் பகிர்கிறேன் சார் வளையல் விற்கும் வியாபாரி பற்றி. முகநூலில் போன வருடம் போட்டு இருந்தேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஜீவிசார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் சிலப்பதிகார உரை எழுத்து வேலை நன்கு அமைய மீனாட்சி அருள்வாள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
/வளையல் திருவிழா, புட்டுக்கு மண்சுமந்த திருவிழா/ இவற்றைப் பற்றி இப்போதுதான் அறிய வருகிறேன். படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிருவிளையாடல் 64 அதில் முக்கியமானது
வளையல் விற்றது, நரியை பரி ஆக்கினது, விறகு விற்றல்,
மண்சுமந்தல், தருமிக்கு பொற்கிழி அளித்தல்
இவை முக்கியமானது.
அடுத்தவருடம் வந்து விடுங்கள் .
ஆவணி மூல திருவிழாவிற்கு.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.