Saturday, September 17, 2016

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கெருடசேவை

செளராஷ்டிர மக்கள் கட்டிய அழகிய கோவில்   ஸ்ரீ பிரசன்ன வெங்டேச பெருமாள்  கோவில்

நான் அடிக்கடி போகும் காளகத்தீஸ்வரர் கோவிலில் (இந்த கோவிலும் இவர்களது கோவில் தான்) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்  சனிக்கிழமை காலையில் கருடசேவை நடக்கும் என்று   நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள்.  தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில்  இருக்கிறது இந்த கோவில். இந்த கோவிலை பார்த்தது இல்லை. அதனால்  இன்று காலை ஆட்டோக்காரரிடம் இந்த இடத்தையும்  கோவில் பேரையும் சொல்லி போக சொன்னால் நீங்கள் சொல்வது கூடல் நகர் பெருமாள் என்று சாதித்தார், இல்லை செளராஷ்டிர மக்களுக்கு சொந்தமான தனிக் கோவில் என்றவுடன் தேடிக் கொண்டுபோய் விட்டார்.   

மிகவும் அழகிய கோவில். இரண்டு பக்கமும் குடியிருப்புகள், நெருக்கடியான இடம் ஆனால் கோவில் உள்ளே நல்ல விஸ்தாரமாய் நிறைய மூர்த்திகளை கொண்டு இருக்கிறது.
‘உள்ளே போனவுடன் பிள்ளையார்  வெள்ளிக்கவசம் சார்த்தி அழகாய் இருந்தார்.  பெரிய அனுமன் முத்தங்கி சார்த்தி வெகு அழகாய்க் காட்சி தந்தார். 

கடந்து உள்ளே போனால் பன்னிரு ஆழ்வார்கள் வெள்ளிக் கவசத்தில் அழகாய், அதற்கு அடுத்து  செளராஷ்டிர மக்கள் குருவாய் ஏற்றுக் கொண்டுள்ள நடனகோபால சுவாமிகள். அவருக்கும் வெள்ளி கவசம்.

நடுவில் மூலவர் ஸ்ரீ பிரசன்ன வெங்டேசபெருமாள், முத்தங்கியால் அலங்கரிக்கப்பட்டு வெகு அழகாய் காட்சி தந்தார். ஆரத்தி, தீர்த்தம், சடாரி, துளசி பிரசாதம் பெற்றுக் கொண்டு கண்குளிர , மனம் குளிர பார்த்துக் கொண்டோம், நகரு, வாங்க வாங்க என்ற ஓலி இல்லாமல் பெருமாளை நின்று நிதானமாய் வணங்க முடிந்தது தான் ஆச்சரியம்.

அலமேலு தாயாரும்  முத்தங்கி அணிந்து, தாமரை மலர் சூடி அழகாய் காட்சி தந்தார். ஆரத்தியும், குங்கும பிரசாதமும் கிடைத்தது.

அடுத்து  ஹயக்கிரீவர், பூவராகப்பெருமாள், யோகநரசிம்ம  பெருமாள், ராமர்.   பள்ளி கொண்ட பெருமாள் (சிறிய மூர்த்தியாக) அனைவரும்  வெள்ளி  , தங்கம் ஆகிய கவசங்கள்  சார்த்தப்பட்டு அழகாய் இருந்தார்கள்.

தனிச் தன்னதியில் ஆண்டாள்  முத்தங்கி சார்த்தி,  மூலவரும் உற்சவரும் ஒரே சன்னதியில் வெகு அழகாய் இருந்தனர்.

 சிலபடிகள் கீழே இறங்கி வந்தால்  பசுமாடுகள்,  அகத்திகீரை விற்கிறார்கள் பசு மாட்டுக்குக் கொடுக்க. 

வெளியே போகும் வாசல் பக்கம் பளிங்கு ராதா கிருஷ்ணர் அழகாய்.

அழகிய கோவில்  தள்ளு, முள்ளு இல்லாமல் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் செய்தது இதுவே முதல் முறை.

கருடசேவையும் கிடைத்தது. கோவிந்தன் அருள்தான்.

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை வணங்கி விட்டுப் பக்கத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவில் போய் வணங்கி விட்டு வெளியே வந்தோம்.அப்போது வீதியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் உலா வந்து கொண்டு இருந்தார்.  முரசு முன்னே சென்று விட்டது. சிறுவர்கள் கோவிந்தன் புகழ் பாடிக் கொண்டு போனார்கள்.   

கோபுரவாசலில் ஒருபுறம் சக்கரத்தாழ்வார் மறுபுறம் கருப்பண்ணசாமி
உள்ளே போனவுடன் கருடன்மேல் பெருமாள் காட்சி தந்தார்

வாசலில்  பெருமாள் வீதிவலம் வருவதை முரசு அறைந்து சொல்லிப்போக தயாராக இருக்கும் முரசு
இதோ கிளம்பிவிட்டார் !
துளசி  பிரசாதம் தர, குட்டிக் கண்ணன் 
தருகிறார் துளசி, சின்னக் கண்ணன்
பத்து மணிக்கே வெயில் கொளுத்துகிறது

புரட்டாசி மாதம் ஒவ்வொரு கனிக்கிழமையும் கெருட சேவை நடக்கும் என்றார்கள். இந்த முறை ஐந்து சனிக்கிழமை வருகிறது.
கோவிலின் பக்கத்தில் இருப்பவர்களுக்கு  நல்ல தரிசனம் கிடைக்கும்.
                                                          வாழ்க வளமுடன்.

23 comments:

காமாட்சி said...

ஜெனிவாவில் இருந்து கொண்டு பிரஸன்ன வெங்கடேசப் பெருமாளைத் தரிசிக்கக் கொடுத்தது,அதுவும் புரட்டாசிச் சனிக்கிழமையில். எந்தமாதிரி தரிசனம். நேராகப் பார்ப்பதுபோல ஒரு பரவசம். படங்களுடன். நன்றி. அன்புடன்

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்கவளமுடன்
உங்கள்அன்பான கருத்து மனதுக்கு சந்தோஷம் கொடுத்தது. நன்றிம்மா.

Dr B Jambulingam said...

பெருமாளைக் கண்டதில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

'நெல்லைத் தமிழன் said...

வார ஆரம்பத்தில் பெருமாள் தரிசனம் கிடைத்தது. நன்றி

கோமதி அரசு said...

துரை செல்வராஜூ has left a new comment on your post "ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கெருடசேவை":

புரட்டாசி முதல் வாரத்தில் இனிய தரிசனம்..

தஞ்சை மகர்நோன்புச் சாவடியிலும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் கொண்டுள்ளார்..

நேரம் கிடைக்கும் போது தரிசனம் செய்ய வேண்டுகின்றேன்..

வாழ்க நலம்..

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லை தமிழன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்து காலதாமதம் ஆகி விட்டது என்று
பப்ளிஸ் செய்ய இயலவில்லை. எடுத்து ஒட்டி இருக்கிறேன், மன்னிக்கவும்.

தஞ்சை மகர்நோன்புச் சாவடியிலும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் கொண்டுள்ளாரா?
மகிழ்ச்சி.
கண்டிப்பாய் நேரம் கிடைக்கும் போது தரிசனம் செய்கிறேன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

Ramani S said...

தங்கள் தயவால்
கருட சேவையுடன் கோவிலையும்
தரிசித்தோம்
வாழ்த்துக்களுடன்...

G.M Balasubramaniam said...

எனக்கே உரித்தான சந்தேகம் கருட சேவையா கெருட சேவையா

ராமலக்ஷ்மி said...

அருமையான தரிசனம். கருட வாகனம் மிக அழகாக உள்ளது.

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
கருட சேவை என்றும், கெருட சேவை என்றும் சொல்வார்கள்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கெருடசேவை என்று சொல்வார்கள். நோட்டிஸ் வழங்கியதில் கெருடசேவை என்று போட்டு இருந்தது போட்டேன் சார்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
கருடன் மிக அழகானது எங்கும் இதை போல்
காணமுடியாது என்று அவர்கள் வழங்கிய நோட்டிஸிலில்
போட்டு இருந்தார்கள்.

உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

ஜீவி said...

நேரி9ல் பார்ப்பது போல படங்கள் இருந்ததில் எல்லோருக்கும் சந்தோஷம்.

எனக்கும் தான். உங்கள் கைங்கரியத்திற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. உங்கள் தயவால் எங்களுக்கும் கெருட சேவை பார்க்க ஒரு வாய்ப்பு. நன்றிம்மா.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Ranjani Narayanan said...

நானும் வீட்டில் இருந்தபடியே கருடசேவை சேவித்தாயிற்று, உங்கள் புண்ணியத்தில். அழகிய கருடன், அழகிய பெருமாள். குட்டிக் கண்ணன் மிக மிக அழகு. புரட்டாசி ஒவ்வொரு சனிக்கிழமையும் கருடசேவை என்றால் என்ன ஒரு கொடுப்பினை!நிறைய படங்களுடன் நிறைவான பதிவு, கோமதி.

கோமதி அரசு said...

வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
குட்டிக் கண்ணன் மிக சுறு சுறுப்பாய் மலர்ச்சியாய் வந்தார்.
என்க்குதான் வெயிலில் குழந்தை வாடி விடுமே ! என்று இருந்தது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Saratha J said...

அருமையான தரிசனம். நேரில் பார்ப்பது போல் இருந்தது.

Thulasidharan V Thillaiakathu said...

புகப்படங்களுடன் தகவல்கள் அருமை!!

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.