”மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய லீலை” என்று காலண்டரில் போட்டு இருந்தது. என் தங்கை ஒவ்வொரு வருடமும் அந்தத் திருவிழாவைப் பார்க்கவரும்படி அழைப்பாள். போனது இல்லை. இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த திருவிழாவின் பெயர் ’அஷ்டமி சப்பரம்’ என்கிறார்கள்.
மீனாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு வரும் வழிஎல்லாம் அரிசி இறைத்து வருகிறாள் அன்னை. அதைப் பெற்றுக் கொண்டு நம் அரிசிப் பானையில் போட்டு வைத்துக் கொண்டால் உணவுக்கு ப்பஞ்சம் இல்லையாம்.
இன்று வீடுகளில் கத்திரிக்காய், நெல்லிக்காய், பச்சை மொச்சை சேர்த்துக் கொள்ளவேண்டுமாம் சமையலில்.
இவ்வளவுதான் எனக்கு விவரம் தெரியும். மேலும் விவரங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
சுவாமி, அம்மன் வருவதைக் கட்டியம்கூற வரும் காளைமாட்டுடன் முரசுஅறைபவர்.
அடுத்து ஒட்டகம் (முகத்தைத் திருப்பிக் கொண்டது
பற்களைக் காட்டியது
அடுத்து ”பார்வதி” யானை
பள பள என்று மின்னும் முகபடாம்
அடுத்து, பிள்ளையார், முருகன் வர, பின்னால் சுவாமி, அம்மன் சப்பரம்
சுந்தேரசன், பிரியாவிடை
சுவாமி, அம்மன் சப்பரம் முக்கு திரும்பும் காட்சி.
வாழைப்பழம், அன்னாசிப்பழங்களைத் தோரணமாய்க் கட்டி இருந்தது. தெருமுனை திரும்புவதை பார்ப்பது நல்லதாம்.
சிவன் அடியார்கள் வாத்தியங்களை இசைத்துக் கொண்டு வந்தார்கள்.
மீனாட்சி அம்மன் தேர், தெருமுனை திரும்பும் காட்சி
திருவிழா என்றால் குழந்தைகளுக்குப் பலூன் இல்லையென்றால் எப்படி?
சவ்மிட்டாய்க்காரர் வழியில் வைத்துவிட்டுப் பிரசாதம் வாங்கப் போய் விட்டார்.
வழியெல்லாம் புளியோதரை, பொங்கல் பிரசாதங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்
எல்லோர் வீட்டு வாசலிலும் தேர்க் கோலங்கள்
வாழ்க வளமுடன்!
-----------------------------------