Sunday, March 30, 2014

நட்சத்திர மரக்கோயில் பகுதி - 2

நட்சத்திர மரக்கோயில் என்ற முதல் பதிவின் தொடர்ச்சி. இந்த பதிவு.

வசந்தகாலம் என்பது மிகவும் ரம்மியமாய் பூத்து செழித்து விளங்கும் காலம். மனம்  எங்கும் பசுமையை கண்டு மகிழ்ச்சி அடையும்.  நம் இருதயமாகிய பூந்தோட்டம்   இறைவனை நினைத்து செய்யும் தியானத்தால் நிகழும் அற்புதத்தை  சொல்கிறார் சங்கரர்:-

இருதயமாகிய பூந்தோட்டம்.

//சிவத்தியானம் என்னும் வஸந்த ருதுவின் சேர்க்கையால் இருதயமாகிற 
பூந்தோட்டத்தில் பாபமாகிற பழுத்த இலைகள் உதிர்ந்துபோகின்றன . 
பக்தியாகிற கொடியின் சமூகங்கள்  அழகாகப் பிரகாசிக்கின்றன. 
புண்ணியமெனும் துளிர்கள் தோன்றுகின்றன. நற்குணங்கள் எனும் 
அரும்புகளும் ஜபமந்திரங்களாகிற  புஷ்பங்களும் நன்மையாகிற வாசனையும் ஞான ஆனந்தமாகிற அமுதமெனும் தேனின் பெருக்கும் 
ஞானானுபவமாகிற பழத்தின் உயர்வும் பிரகாசிக்கின்றன.//
                                                                                                        --சிவானந்த லஹரீ.
இப்படி சிவத்தியானம் வஸந்தருதுவைப்போல இன்பமளிக்கிறது என்கிறார் 
ஆதிசங்கரர்.


கந்தபுராணத்தில் சூரபத்மன் மாமரமாய் மாறி மாயங்கள் செய்தான், 
கந்தனுடன் போர் புரியும் போது. இதைக் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் 
சொல்லும் போது ஒரு பாட்டில், ’முருகனின் வேல் இருகூறாய் பிளக்க 
மாவை(மாமரம்) போல நாம் இல்லையே என மற்ற மரங்கள் ஏங்கின’ என்று சொல்கிறார்.

அந்தப் பாடல் :

அத்தியின் அரசு பேர ஆலமும் தரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுந்
தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர்  ஒருதனி மாவாய் நின்றான்.
---கந்தபுராணம்.

இந்திரன் சூரபத்பனுக்குப் பயந்து சீர்காழியில் மூங்கில் மரக்காட்டில் 
மூங்கிலோடு மூங்கிலாக வசித்து வந்தார் என்றும்,

முருகப்பெருமான்  வள்ளியிடம் காதல் மொழி பேசிக் 
கொண்டு இருக்க, அப்போது வள்ளியின் தந்தை வர முருகன்
வேங்கைமரமாய் உருமாறினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது.

திருவிளையாடல் புராணத்தில் மாணிக்கவாசகருக்கு குருந்தமரத்தின் 
அடியில் சிவபெருமான் உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது.

திருவிளையாடல் புராணத்தில் திருமணத்திற்கு சாட்சியாக வன்னிமரம் 
இருந்து இருக்கிறது. திருஞானசம்பந்தரின் சொற்படி ஒரு வணிகர் வன்னிமரம், கிணறு, இலிங்கம் ஆகியவற்றைச் சாட்சியாக வைத்து தன் அம்மான் மகளை மணம்புரிந்து சென்றார்.  அந்த பெண்ணுக்கு இடர் வந்த போது சோமசுந்தரப் பெருமானது திருவருளால் மீண்டும் அவை வந்து சாட்சியாகத் தோன்றின.  

பட்டினத்தாருக்காகத் திருவிடைமருதூரில் மருதமரத்திற்கு கீழ் குழந்தையாக வந்தார். (குழந்தைக்கு பெயர் மருதவாணர்)

ஒளவைக்கு நாவல் மரத்தில் முருகன் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து 
சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா? என்று கேட்டார்.

அத்தி மரத்தில் வரதராஜ பெருமாள்  - காஞ்சிபுரத்தில்

கோழிகுத்தியில் உள்ள வானமுட்டி பெருமாள் -அத்திமரத்தில் வந்தவர். 
இங்கு பெருமாளின் காலின் அடியில் வேர்கள் இருப்பதாய் சொல்கிறார்கள்.

புராணங்களில், வரலாறுகளில் மரம் நிறைய இடம் பெற்று இருக்கிறது.
வரலாறு பாடத்தில் சாலையில் இருமருங்கும் அசோகர்  மரம் நட்டதை 
படித்துக் கொண்டு இருக்கிறோம். 

நமக்கு சந்திரனை காட்டி சோறு ஊட்டும் அன்னை நிலவில் மரம்- 
அதனடியில் பாட்டி வடை சுட்ட கதையின் காட்சி இருப்பதைச் சொல்லி 
இருக்கிறார்கள்.

துர்வாசர் சாபத்தால் கடல் அடியில் சென்ற - கேட்பதை எல்லாம் தரும் 
கற்பகவிருட்சம்-  பாற்கடலை கடையும்போது வந்த கதை நமக்கு தெரியும்.
விண்ணுலகத்தில் உள்ள ஐந்து மரங்கள் சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், 
பாரிசாதம், கற்பகம் என்பன.

இப்படி மரங்களின் பெருமையைக் காலம் காலமாக புராணங்களில் உணர்த்தி வந்துள்ளனர்,அதை உணர்ந்து நாம் மரங்களை வெட்டாமல் 
வளர்த்து வளம் பெறுவோம்!

11.பூரம்
தெய்வீக மரம்-பலாசம்
பிரார்த்தனை தெய்வம்-அம்பிகை
12.உத்திரம்
ஆத்தி
சிவன்,சக்தி
13.ஹஸ்தம்
அத்தி
சந்திரன்

14. சித்திரை
வில்வம்
முருகன்,வள்ளி,தெய்வயானை
15.சுவாதி
மருது
சரஸ்வதி
16.விசாகம்
விளா
பைரவர்
சாஸ்தா

அனுஷம்
மகிழமரம்
சனீஸ்வரன்,
அனுமான்
கேட்டை
பராய்
குபேரலட்சுமி


19.மூலம்

மா
விநாயகர்
                                                                                           20பூராடம்
                                                                                               வஞ்சி
                                                                                            அம்பிகை

21.உத்திராடம்
பலா
சிவன்,சக்தி
22.திருவோணம்
எருக்கு
பார்வதி
23.அவிட்டம்
வன்னி
ராஜ அலங்கார முருகன்
24 சதயம்
கடம்பு
துர்க்கை
25.பூரட்டாதி
தேவா
தெக்ஷ்ணாமூர்த்தி
உத்திரட்டாதிக்குரிய படம் சரியாக அமையாததால் அப்படம் இடம் பெறவில்லை.
                                                                   26.உத்திரட்டாதி
                                                                                                 மலைவேம்பு
                                                                                          விநாயகர்,பெருமாள்
27. ரேவதி
இலுப்பை
திருமால்

அவரவர் நட்சத்திர மரங்களை நட்டு வணங்கலாம். முடிந்தவர்கள் அதுபோல் செய்யலாம். ஆனால் நாம் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செய்ய முடியாது. அதனால் கோவில்களில் நட்டு வளர்த்து வழிபட்டும் அதை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளலாம். சில கோவில்களில் நந்தவனங்களை வங்கிகள் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

இறை நம்பிக்கையை வளர்க்கவும்,  இயற்கையை பாதுகாக்கவும் நம் முன்னோர்கள் இப்படி மரம் நட்டு வளர்க்க சொல்லி இருக்கலாம்.

நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும் தொண்டு  முடிந்த அளவு மரத்தை வெட்டாமல் வளர்த்து பராமரித்தால் போதும் நாடு நலம் பெறும்.

இந்த கோவில் அறங்காவலர்  திரு பாஸ்கரன் அவர்களின் போன் நம்பர்--- 
9715352496 .
கோவில் சாம்பசிவக் குருக்களின் நம்பர் -  9443392 176.

உங்களை அவ்வூர் வரும்படி அழைக்கிறது!


                                              வாழ்க வளமுடன்!
-----------------------------------------

39 comments:

Seshadri e.s. said...

மரங்களைப் பற்றிய விரிவான தகவல்கள் அருமை! பகிர்விற்கு நன்றி!

துரை செல்வராஜூ said...

மரங்களின் பெருமையைக் காலம் காலமாக நம் முன்னோர்கள் புராணங்களின் வாயிலாக உணர்த்தி வந்துள்ளனர்.
அதனை உணர்ந்து - மரங்களைப் பாதுகாத்து வளர்த்து வளம் பெறுவோம்! நலம் பெறுவோம்!..
இனிய பதிவு.. வாழ்க நலம்!..

திண்டுக்கல் தனபாலன் said...

மரங்களைப் பற்றிய சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்து நக்ஷத்திரக்காரர்களுக்கும் பயனளிக்கும் தகவல்கள். மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

விரிவான தகவல்கள்.

கேட்டை நக்ஷத்திரத்திற்குரிய பராய் மரம் தான் திருப்பராய்த்துறையில் தலவிருக்ஷம்......

இராஜராஜேஸ்வரி said...

இறை நம்பிக்கையை வளர்க்கவும், இயற்கையை பாதுகாக்கவும் நம் முன்னோர்கள் இப்படி மரம் நட்டு வளர்க்க சொல்லி இருக்கலாம்.

சிறப்பன தகவல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

அம்பாளடியாள் வலைத்தளம் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி .

கோமதி அரசு said...

வணக்கம் சேஷாத்திரி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்து அருமை.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல்தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

மரங்களைப் பற்றிய அருமையான தகவல்கள் நன்றி சகோதரியாரே

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் தகவலுக்கு நன்றி.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளடியாள் வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக மிக அருமையான பதிவு கோமதி அம்மா. மயிலாடுதுறைக்கு அருகில் இப்படி ஒரு திருக்கோயில் உள்ளது என்பதை தங்களது பதிவின் மூலமாகவே அறிகிறேன். கண்டிப்பாக அடுத்த முறை மயிலாடுதுறை
வரும்போது இக்கோயிலுக்கு உங்கள் புண்ணியத்தில் நாங்கள் சென்று வருகிறோம். இயற்கையை தெய்வமாக வழிபடும் நமது பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது திருக்கோயில்களில் மட்டும்தான் என நினைக்கிறேன். தங்களது நல்ல பதிவிற்கு மிக்க நன்றி அம்மா.

‘தளிர்’ சுரேஷ் said...

மரங்கள் குறித்த அருமையான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.

அடுத்த முறை மயிலாடுதுறை வரும் போது சென்று வாருங்கள்.
நீங்கள் சொல்வது போல் இயற்கையை , பஞ்சபூதங்களை நாம் வணங்கி வருகிறோம் நம் கோவில்களில்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், மிக நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

உங்கள் தொடர்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

படங்களுக்கு விரிவான தகவல்களுக்கும் நன்றி கோமதிம்மா.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

அப்பாதுரை said...

சும்மா மரமாட்டம் நிக்காதேனு இனி என்னை யாராவது சொல்லட்டும்..

கோமதி அரசு said...

வணக்கம் அப்பாதுரை சார்,வாழ்க வளமுடன்.
வெகு நாட்கள் ஆச்சே உங்களை பதிவுகளில் பார்த்து!

,மரமானலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் ’என்று ஒரு பாடல் உண்டு.

மரம் நின்று எவ்வளவு பேருக்கு நிழல் தருகிறது.
அதன் இலை, தழை, குச்சி அனைத்தும் பயனுள்ளது.
இனி யாரும் மரமாட்டம் நிக்கதே என்று சொல்லாமல் மரம் போல் எல்லோருக்கும் பயனாக இரு என்று சொல்வார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

மரம் பற்றிய தரமான பதிவு.
பலர் பயனடைவார். .
இனிய வாழ்த்து.
வேதா.இலங்காதிலகம்.

கோமதி அரசு said...

வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Anonymous said...

வந்தேன், புதிதாகத் தெரியவில்லை.
எனது பதிவைப் பதித்துச் செல்கிறேன்.
http://kovaikkavi.wordpress.com/2014/04/04/4-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-4/
வேதா. இலங்காதிலகம்.

Geetha Sambasivam said...

ஒரு முறை இந்தக் கோயிலுக்குப் போகணும். அருமையான பதிவு. அனைத்து நக்ஷத்திரக் காரர்களுக்கும் பலன் அளிக்கும் செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

மரங்களின் சிறப்பு, அவற்றைப்பற்றிய பாடல்கள் என்று ஒரு அருமையான பதிவு!

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!..

கோமதி அரசு said...

வணக்கம் வேதா இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.
சில கடமைகளால் புதிய பதிவுகள் எழுத முடியவில்லை.
புதிய பதிவு வந்து இருக்கா என்று பார்க்க வந்தமைக்கு நன்றி.
உங்கள் பதிவை படிக்கிறேன்.
வரவுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சார், உங்கள் அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

வணக்கம்
அம்மா.

தங்களின் பதிவின் வழி அறியமுடியாத தகவல்.பல அறிந்தேன். வாழ்த்துக்கள் அம்மா..

சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Geetha Sambasivam said...

ரொம்ப நாளாக் காணோமேனு நேத்துக்கூட நினைச்சேன். உடல்நலமாய் இருப்பது குறித்து மகிழ்ச்சி. மெதுவாக் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு வாங்க.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
காணோமே என்று தேடியதற்கு நன்றி.
உடல் நலமாய் இருக்கிறேன்.
உங்கள் தொடர் கதையை படிக்க வேண்டும்.
ஊரில் கல்யாணம், பின் அத்தையை பார்த்துக் கொள்ளும் கடமை என்று ஓடுகிறது நேரம் இணையத்துடன் இணைய முடியாமல்.

மாதேவி said...

நல்ல பகிர்வு. பலதும் அறிந்துகொண்டோம்.

கோமதி அரசு said...

வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.