வெள்ளி, 21 மார்ச், 2014

இயற்கையைப் போற்றுதும்!

இன்று :”உலக காடுகள் மற்றும் மரநாள்.”.  

 அந்தக் காலத்தில்  காடுகள் அதிகமாய் இருந்தன. இப்போது மக்கள் பெருக்கத்தின் காரணமாய் காடுகள் குறைந்து வருகிறது. மக்கள் வசிக்க வீடுகள் தேவை. அதற்கு காட்டை அழித்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறான். 

மரங்களை வெட்டிக்கொண்டே போனால் மழை எப்படி வரும்? மழை வேண்டும் என்றால் மரம் வேண்டும். ”மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!” என்று சிலப்பதிகாரத்தில் வரும். அந்த மாமழை எப்படி வரும் ?மரங்கள் நிறைய இருந்தால் தான் மாமழை வரும்.

நமக்கு எப்போதும் இயற்கையை ரசிக்கப் பிடிக்கும். விடுமுறை கிடைத்தால் இயற்கை சார்ந்த இடங்களுக்கு சென்று வருவோம். ஆறு ,கடல், அருவி,  என்று பார்ப்பதில் ஆனந்தம். அது மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சியை அள்ளி த்தரும். 
புஷ்கில் பால்ஸ்(Bushkill Falls)
The Niagara of pennsyluvania -19 வளைவுகள் உள்ள மரப்படி- அருவி வரை பக்கத்தில் போய்ப் பார்க்கலாம்.
                                                    
                                அருவியைபபார்க்க நுழைவு கட்டணம் உண்டு.  

வைத்தியர் சில நோய்களுக்கு சிறிதுகாலம் இயற்கை சூழ்ந்த இடத்தில் ஓய்வு எடுத்தாலே போதும், புத்துணர்வு கிடைக்கும் என்று சொல்லுவார். அதற்கு நம் மக்கள் ஊட்டி, கொடைக்கானலென்று ஓய்வு எடுத்து வருவார்கள்.

ஆனால் இயற்கை  வனங்களில் இலவசமாய் நமக்கு கிடைப்பது,அங்கு உள்ள மூலிகை மரங்களில் மோதி வரும் காற்று. அது  நம் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும்.  அங்கு உள்ள சுனைநீரில் குளித்தால் உடலுக்கு ஆரோக்கியம். குற்றால அருவியில் குளித்தால்  உடல்வலி போவதுடன் நன்கு பசிக்கும்.  கொண்டு போன உணவு நொடியில் காலியாகிவிடும். அங்கு கிடைக்கும் பழங்களில் சுவை அதிகம். 

காடுகளில், மரங்களின் ஊடே தெரியும் சூரியஒளி, சந்திர ஒளி மனதை மயக்கும்.  நம் நாட்டில் அப்படிப் பட்ட இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள் நிறைய இருக்கிறது .

ஆதி காலத்தில் மனிதன் மரங்களை வழிபட்டான்.  இப்போதும் மதுரையில் ஒரு வகுப்பைச்சார்ந்த மக்கள் தன் வீட்டுக்கு முன் மரத்தை வளர்த்து அதற்கு அதிகாலையில் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அது அவர்கள் நித்தியகடன்.  கோவில்களில் ஸ்தலவிருட்சமாய்  மரம் இருக்கும். அதற்கு வழிபாடு உண்டு. ஆற்று ஓரத்தில் ஒரு அரசமரம் அதன் அருகில் 
பிள்ளையாரை வைத்து  சுற்றி வந்து வணங்க வைத்தார்கள். எதற்கு? அரச மரக்காற்று உடலுக்கு நல்லது என்றுதான். 

குலதெய்வங்கள் பெரும்பாலும் வனங்களில் ஏரி ஓரம்  இயற்கை சூழ்ந்த இடத்தில் இருக்கும். அப்போது வருடத்திற்கு ஒருமுறையாவது போய் மக்கள் பொங்கல்வைத்து  வணங்கி வருவார்கள், தங்கள் குடும்பத்தினர்களுடன் . அங்கு உள்ள மரங்களின் சல சலப்பு, ஏரியிலிருந்து வரும் சில் என்ற காற்று, அங்கு சுற்றிலும் இருக்கும் வயல்களில் உள்ள நறுமணம் எல்லாம் ஒருவகையான இன்பத்தைத் தரும்.

மயிலாடுதுறை அருகில் பெருஞ்சேரி என்ற இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அதில் 27 நட்சத்திரங்களுக்கும்  மரம் வைத்து இருக்கிறார்கள் .கோவில் வளாகத்தைச் சுற்றி. அந்த அந்த நட்சத்திரக்காரர்கள் வந்துஅந்த மரத்தின் முன் விளக்கேற்றி பின் கோவிலில் உள்ள இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். இதுவும் ஒரு நன்மைதான் .மக்கள்  தன் நட்சத்திரம் உள்ள மரத்தையாவது வெட்டாமல் இருப்பார்களே! அந்த கோவில் பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

ஆனால் இங்கு பகிர்ந்து உள்ள இயற்கைக்காட்சிப்படங்கள் அமெரிக்காவில் நாங்கள் போய் இருந்தபோது எடுத்தவை.  அங்குள்ளவர்கள் சனி ஞாயிறு விடுமுறைகளில் கண்டிப்பாய் இது போன்ற இடங்களுக்கு சென்று தங்கள் வேலைப் பளுவை மறந்து களித்து இருப்பார்கள் . அங்கு வாழும் என் மகனும் எங்களை விடுமுறைகளில் அழைத்து சென்றபோது   அருவி, ஏரியில் எடுத்த இயற்கை   காட்சிகள் இங்கு உங்கள் பார்வைக்கு.
 வனத்தில் அந்தக் காட்சியை எடுத்தாயா உன் காமிராவில் ?
வனத்தில் ஒளிரும் நிலா

படகுத்துறையில்  சூரிய ஒளி
ஆறு
இலை உதிர்காலத்தில்  இலைகள் நிறமாறி  பலவண்ணங்களில் தோற்றம் 
இலைகளை உதிர்க்கும் போதும் கண்களுக்கு விருந்து அளிக்கும் மரங்கள். 
இயற்கை வளம் சூழந்த மாட்டுப் பண்ணை
                        பழுதடைந்த மரத்தை தாங்கும் அழகிய மரத்தூண்கள்.

                                      மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
                                                 
                                                          வாழ்க வளமுடன்!
                                                                        ----------

28 கருத்துகள்:

 1. கோவில்களில் ஸ்தல விருட்சம். அதற்கு வழிபாடு உண்டு.
  பெருஞ்சேரி - கோவில் பற்றிய விவரங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..

  மரம் வளர்ப்போம்.. வளம் பெறுவோம்!..

  பதிலளிநீக்கு
 2. சில படங்கள் திறக்க நேரமாவது எனக்கு மட்டும்தானா?

  மனிதன் வனங்களை மட்டுமா அழிக்கிறான்? மணல் திருடி ஆற்றையும் அழிக்கிறான். இயற்கையோடு விளையாடுகிறான். இயல்பை மீறும் இயற்கை என்ன செய்யும் என்பதை அறியாதவனா மனிதன்!

  பதிலளிநீக்கு
 3. வீட்டிற்கு வீடு மரம் வளர்த்தால் போதும். செய்கிறோமா நாம்? உங்கள் பதிவு, மற்றும் படங்கள் எல்லாமே விழிப்புணர்வு தறும் வகையில் உள்ளது.
  வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமையான படங்களுடன் கூடிய அசத்தலான விழிப்புணர்வுப் பகிர்வு. பாராட்டுக்கள். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான படங்களுடன் அனைவரும் அறிந்து உணர வேண்டிய கருத்துகளுடன் பகிர்வு வெகு சிறப்பு... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

  பதிலளிநீக்கு
 6. அருமையான படங்கள்.....

  இயற்கை தந்த வரங்களை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டே இருக்கிறோம்....

  மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.... சரியாச் சொன்னீங்க!

  பதிலளிநீக்கு
 7. அழகான படங்களுடன் அருமையான விழிப்புணர்வு பகிர்வு.. இந்தியாவின் இதயம் விவசாயம்தான்... அந்த தொழிலும் அழிந்து கொண்டுதான் வருகிறது. மரங்களையும் வெட்டி வருகின்றனர். இந்த நிலை என்றுதான் மாறுமோ.. விரைவில் பசுமை புரட்சி வர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  பெருஞ்சேரி கோயில் விபரங்கள் அடுத்த பதிவில் சொல்கிறேன் சார்.
  உங்கள் வரவுக்கும்,கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த அருமையான பதிவு! படங்கள் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது சரிதான்.

  //இயல்பை மீறும் இயற்கை என்ன செய்யும் என்பதை அறியாதவனா மனிதன்!//

  இயற்கைக்கு மாறக மனிதன் செயல்படும் போது இயற்கை சரியான தண்டனை தரத்தான் செய்கிறது.

  ஏதாவது ஒரு படத்தின் மீது கிளிக் செய்தால் வரிசையாக எல்லா படத்தையும் வரிசையாக பார்க்கலாம்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது போல் வீட்டுக்கு வீடு மரம் வளர்த்தால் போதும்.உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழக வளமுடன்.

  உங்கள் பாராட்டுக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
  நீண்ட நாட்களாக உங்களைப் பார்க்க முடியவில்லையே!

  நீங்கள் சொல்வது போல் பசுமைபுரட்சி வரும் நிலையில் தான் இருக்கிறது .இப்போது விளைநிலங்கள் விற்பனை ஆகிறது. ஆற்றுபடுகைகள் மண அள்ளி ஆற்றை தூர்த்துவிட்டார்கள்.

  மக்கள் விழித்துக் கொண்டால் அவர்களின் குழந்தைகள் நாளை வளமாய் வாழ வழி செய்தவர்கள் ஆவார்கள்.

  பாதைஓரத்தில் இருந்த மரங்களை வெட்டியவர்கள்மறுபடி மரம் வைத்து வளர்த்தால் நல்லது.

  விவாசாயம் செய்யமுடியாமல் வீட்டுமனையாக விளை நிலத்தை விற்பவர்கள் மனம் மாறி விவாசயம் செய்தால் நாடு நலம் பெறும்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. "இயற்கையைப் போற்றுதும்!" பகிர்வு வெகு சிறப்பு.

  படங்கள் மனதை கவர்ந்து நிற்கின்றன. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. மனம் மகிழவைக்கும் எழிலான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் இராஜராஜேஸ்வரி. வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அருமை . இயற்கையோடு இணைந்த வாழ்வே நலம் பயக்கும், மனிதனோ தன் சுய நலத்திற்காக இயற்கையை அழிக்கும் சில்களில் ஈடுபடுகிறான்,
  படங்களும் கருத்தும் சிறப்பு

  பதிலளிநீக்கு
 21. அருமையான கருத்துகளுடன் படங்களுடன் வெளிவந்திருக்கும் அருமையான பதிவு கோமதி. மனத்தில் உலவும் எண்ணங்களைப் பதிவில் பதியும் சாதுர்யம் எளிதில் கைவராது.அது உங்களுக்கு இறைவன் கொடுத்தவர,. மிகமிக நன்றி வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.

  நீங்கள் சொல்வது போல் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தால் நாடு நலம் பெறும்.
  சுயநலம் மறைந்து பொதுநலம் சிந்திக்க வாழ்த்துவோம் அனைவரையும்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. அன்பு வல்லி அக்கா, வணக்கம், வாழ்க வளமுடன்.

  உங்களின் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா.இதற்கு முந்திய பதிவை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. இயற்கையைப் போற்றி நிற்கும் தங்கள் பகிர்வில் பகிரப்பட்ட
  படங்கள் யாவும் அருமை வாழ்த்துக்கள் தோழி .த .ம .5

  பதிலளிநீக்கு
 25. எழில் கொஞ்சும் இடம். அருமையான படங்கள். விழிப்புணர்வு தரும் பகிர்வு. நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 26. சுவாரஸ்யமான தொடர் பதிவு ஆரம்பம்...

  அழைப்பவர் : சகோதரி தென்றல் சசிகலா அவர்கள்

  விவரங்களுக்கு : இணைப்பு வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)

  பதிலளிநீக்கு
 27. இயற்கையைப் போற்றும் அருமையான பதிவு. படத்தில் உயர்ந்த மரங்களுக்கு முன்னால் நீங்கள் இருவருமா? :))))

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.

  உயர்ந்த மரங்களுக்கு முன்னால் நிற்பது நாங்கள் தான்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு