Saturday, March 29, 2014

நட்சத்திர மரக்கோயில் - பகுதி- 1

நட்சத்திரமரக் கோயில்-பகுதி-1

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் திருக்கோயில்,பெருஞ்சேரி.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும்வழியில் வழுவூர்ப் பிரிவைக்கடந்து தொடர்ந்து சாவடி என்னும் இடத்தில் கிழக்கு நோக்கித் திரும்பவேண்டும். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது.

இக்கோயிலின் பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய மரம் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ,தங்களுக்குரிய மரத்தை மாலையில் விளக்கு வைத்து வழிபடுகிறார்கள். நன்மை பெறுகிறார்கள்.(பஞ்சாங்கங்களில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களின் பெயர்களைக் காண்லாம்.)
  
விநாயகர்
லிங்கோத்பவர்
முருகன்இத் திருக்கோயிலுக்கு 5/6/2009-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுவாமி சந்நிதி
அம்மன் சந்நிதி
பிரதோஷ வேளை


நந்திக்கு அபிஷேகம்

நந்தி தீபாராதனை
அறங்காவலர் திரு.பாஸ்கரன்
திரு.சாம்பசிவக்குருக்கள்
விருட்சத்துக்கு இட்ட  வேண்டுதல் விளக்கு
ஸ்வர்ண பைரவர்
மார்சு 22ம் தேதி  ”உலக காடுகள்  மற்றும் மரநாள் ”அன்று ”இயற்கையைப்போற்றுதும்” என்ற பதிவு போட்டு இருந்தேன்.
அப்போது அதில் மரங்களை வழிபடுவது பற்றியும் மரங்கள் கோவில் ஸ்தலவிருடசமாய் வணங்கப்படுவதையும் குறிப்பிட்டு இருந்தேன்.
பெருஞ்சேரி எனும் ஊரில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு கோவில் இருப்பதை கூறி இருந்தேன்.  அவரவர் நட்சத்திரங்களுக்கு வணங்க வேண்டிய மரங்களாவது வெட்டப்படாமல் இருக்கும் என்று எழுதி இருந்தேன்.
சகோதரர் துரை செல்வராஜூஅவர்கள் அந்த ஊரைப்பற்றி  விரைவில் பதிவிடுங்கள் என்று கேட்டு இருந்தார். இதோ பதிவிட்டுவிட்டேன்.

பெருஞ்சேரி என்னும் ஊரில் உள்ள நட்சத்திர கோவிலுக்குப் போனோம். அன்று பிரதோஷம். அதனால் மாலை ஐந்துமணிக்கே சென்றோம். சிறிய கோவில்தான். ஆனால் மரங்களால் சிறப்பு பெற்று இருக்கிறது. மாலை குருக்கள் வந்தபோது நாங்களும் இன்னும் இரண்டு பேர்கள்தான் இருந்தோம், அதனால் இன்னொரு கோவில் அவருக்கு இருக்கிறதாம். அந்த கோவில் பூஜையை முடித்துவிட்டு வருவதாய்ப் போய் விட்டார். இரண்டு மூன்று பெண்கள், அவர்களின் குழந்தைகள், இரண்டு வயதான ஆட்கள் இவ்வளவு பேர்தான் பிரதோஷ பூஜைக்கு இருந்தவர்கள்.

நாங்கள் பால், பன்னீர் அபிஷேகத்திற்கு கொண்டு போய் இருந்தோம். ஒரு பெண், பள்ளியில் ஆசிரியர்பணியில் இருப்பவர். பிரதோஷவிரதம் இருப்பவராம்.  அவர் ஸ்வாமிக்கு பொங்கல் பிரசாதம் எடுத்துவந்திருந்தார், மற்றொருவர் கொண்டைக்கடலை சுண்டல்(வெள்ளை) செய்து கொண்டு வந்திருந்தார். மற்றொரு பெண்,  வெல்லம் கலந்த அரிசியும் பஞ்சாமிர்த சாமான்களும் , கொண்டுவந்து  அதை தயார் செய்தார். குழந்தைகள் அபிஷேகசாமான்களை அதன்அதன் பாத்திரங்களில்  பிரித்துக் கொட்டி உதவிசெய்தார்கள். இடை இடையே குழந்தைகளுக்கே உள்ள விளையாட்டு  என்று கோவிலைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டு இருந்தார்கள். அங்கு கொட்டிக்கிடந்த மணலில் மகிழ்ச்சியாக விளையாடினார்கள். ஒரு  சிறுவன் பள்ளியில் நடக்கும் திருவருட்பா ஒப்பித்தல்  போட்டியில் கலந்துகொள்கிறானாம், அதைத் தன் அம்மாவிடம் ஒப்பித்தான். நன்றாகச் சொன்னான்.  வெற்றிபெற வாழ்த்தினோம் நாங்கள்.
1.அசுவினி
ராசி-மேஷம்
தெய்வீகமரம்- எட்டி
பிரார்த்தனை தெய்வம்-விசாலாட்சி,
சித்திரகுப்தன்

2. பரணி
ராசி-மேஷம்
மரம்- நெல்லி
தெய்வம்- வல்லபகணபதி,விஷ்ணு

3.கார்த்திகை
மேஷம்,ரிஷபம்
அத்திமரம்
சூரியன்,முருகன்4.ரோகிணிநாவல்மரம்
கண்ணன்

5.மிருகசீரிஷம்-
கருங்காலி
முருகன்
6.திருவாதிரை
செங்கருங்காலி
நடராஜர்,துர்க்கை
                                                          
7.புனர்பூசம்
மூங்கில்
ராமர்
                                                              மனித தெய்வங்கள்                                                          
8.பூசம்
அரசமரம்
பெருமாள்,லட்சுமி,சனீச்வரர்
9.ஆயில்யம்
புன்னை,
விஷ்ணு
10.மகம்
ஆலமரம்
விநாயகர்
நாங்கள் இருட்டுவதற்குள் நட்சத்திர மரங்களைப் படம்பிடித்துக் கொண்டு எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின்  நட்சத்திர மரங்களுக்கு  விளக்கு வைத்து வழிபட்டோம்.

சற்று நேரம்கழித்து சாம்பசிவக்குருக்கள் வந்தார், வயதாகி விட்டாலும் சுறு சுறுப்பாய் அனைவரிடமும் அன்பாய்ப் பேசிக் கொண்டே   நந்தி, அம்மன், சுவாமிக்கு விரைவாய் அபிஷேகம் செய்து பூஜைகளை நிறைவு செய்து அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினார்.

 ஆத்மார்த்தமாய் தங்கள் வீடுகளிலிருந்து பிரசாதங்கள் கொண்டுவந்து  பக்தியுடன்  அளித்து  சந்தோஷமாய் அங்கிருந்த அன்பர்களுக்கு கொடுத்து விரதங்களை முடித்தார்கள். 

அறங்காவலர் பாஸ்கர் அவர்களும் குருக்கள் வருமுன் அபிஷேகத்திற்கு நீர் எடுத்துவைத்து உதவிகள் செய்தார், சிவன் ராத்திரிக்கு வரும்படி எங்களை அழைத்தார். 

நடசத்திர மரங்கள் 10  பகிர்ந்து இருக்கிறேன், மீதி அடுத்த பதிவில் .
                                                            வாழ்க வளமுடன்.
                                                           -----------------------------

34 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் அருமை அம்மா... கோயிலின் தகவல்களுக்கும் நன்றி... திரு. துரை செல்வராஜூ ஐயா அவர்களுக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான பதிவு.

அழகான படங்கள் + விளக்கங்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

இப்படிக்கு,

மூங்கில் [புனர்பூசம் - இராமர்]

Ramani S said...

கோவிலைச் சுற்றிவந்த திருப்தி
நட்சத்திரத்திற்கான மரங்கள் குறித்த தகவல்கள்
அனைவருக்கும் பயனுள்ளது
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

கோவிலைச் சுற்றிவந்த திருப்தி
நட்சத்திரத்திற்கான மரங்கள் குறித்த தகவல்கள்
அனைவருக்கும் பயனுள்ளது
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 2

Ramani S said...

tha.ma 2

G.M Balasubramaniam said...


கோவிலில் நட்சத்திர மரங்களுக்கு வழிபாடு செய்வதைவிட அந்தந்த நட்சத்திரக் காரர்கள் அவர்களுக்கு உரித்தான ஒரு மரத்தை நடவேண்டும் என்று நம் முன்னோர் சொல்லிப் போயிருக்கலாம் மரங்களின் அருமை தெரிய வந்திருக்கும்.

துரை செல்வராஜூ said...

எளியேனின் விருப்பத்தையும் ஏற்று - பதிவில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி!.. உங்களுக்கு எனது அன்பின் வணக்கங்கள்..

நட்சத்திர மரங்களின் உண்மையான தாத்பர்யம் - ஐயா GMB அவர்கள் கூறுவது போல - அந்தந்த நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்கு உரிய ஒரு மரத்தை நட்டு பராமரிக்க வேண்டும் -என்பதே!..

வாழ்க நலம்!..

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். துரைசெல்வாராஜூ சார் அவர்கள் நட்சத்திரக் கோவில் விவரங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் என்றதால் சீக்கிரம் பதிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் அவருக்கு நன்றி .
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
ராமர் நட்சத்திரமா? நன்று நன்று.
மூங்கில் அதில் செய்த புல்லாங்குழல் வைத்து இருக்கும் கிருஷ்ணனின் பெயர், மற்றொரு அவதார புருஷனின் நட்சத்திரம்.

இரண்டுபேரும் சொல்லிசென்ற (வாழ்ந்து காட்டிய)நல்லவைகள எவ்வளவு!
நீங்களும் அனைவருக்கும் நல்லவைகளை சொல்லி வருகிறீர்கள் சார்.
நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரமணிசார், வாழ்கவளமுடன்.

உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் தமிழ்மணவாக்குக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

நக்ஷத்திரங்களுக்கு உரிய மரங்கள் குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன். இந்தக் கோயில் குறித்துக் கேட்டதில்லை. தகவல்களுக்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
முன்னோர்கள் (ஆதிகாலத்தில்) மரங்களை வழிபட்டு வந்தார்கள்.
அவர் அவர் நட்சத்திர மரங்களை நட்டு வணங்கலாம் ஆனால் நாம் இருக்கும் குடியிருப்புகளில் செய்ய முடியாது. அதனால் கோவில்களில் நட்டு வளர்த்து வழிப்பட்டும் அதை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளலாம். சில கோவில்களில் நந்தவனங்களை வங்கிகள் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

நீங்கள் விரும்பி கேட்டதால் உடனே பதியும் எண்ணம் வந்தது. அதற்கு நான் தான் உங்களுக்கு நன்றியும் வணக்கமும் சொல்ல வேண்டும்.

இறை நம்பிக்கையை வளர்க்கவும், , இயற்கையை பாதுகாக்கவும் நம் முன்னோர்கள் இப்படி மரம் நட்டு வளர்க்க சொல்லி இருக்கலாம்.

நீங்கள் சொல்வது போல் மரங்களை நட்டு பராமரித்தாலே போதும். ஒவ்வொரு கோவில்களில் நந்தவனம் கவனிக்க ஆள் இல்லாமல் இருக்கிறது. புது கோவில்களில் நந்தவனம் மிக அருமையாக இருக்கிறது.

அவர் அவர்கள் அவர்களால் முடிந்த அளவு மரத்தை வெட்டாமல் வளர்த்து பராமரித்தால் போதும் நாடு நலம் பெறும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களை ஒவ்வொரு ஊரிலும் நட்டு வைத்தால் நல்லது. இப்படியாவது மரங்கள் வளர்ந்தால் நல்லது...

சிறப்பான கோவில் பற்றிய தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றிம்மா. கூடவே படங்களும் இருப்பதால் சில மரங்களைப் பார்க்க முடிந்தது.

கீத மஞ்சரி said...

அழகான படங்களுடன் நட்சத்திர மரங்கள் பற்றிய பதிவுக்கு நன்றி மேடம். இறைவழியே இயற்கையைப் போற்றும் பாங்கு பிரமிக்கவைக்கிறது. மிக்க நன்றி தங்களுக்கு.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு ஊரிலும் இது போன்று நட்சத்திர மரங்களை நடு வளர்க்கலாம்.

மரங்களின் பேர் வருகிறமாதிரி போட்டோ எடுத்தால் மரங்களின் இலைகள் தெரிய மாட்டேன் என்கிறது.

நமக்கு தெரியாத மரங்களை பார்க்க இருக்கவே இருக்கு கூகுள்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

இயற்கையே இறை, இறையே இயற்கை என்று முன்னோர்கள் நினைத்து இருக்கிறார்கள்.

இரண்டையும் இணைத்து நமக்கு தந்து இருக்கிறார்கள்.

இயற்கை அன்னையை போற்றுவோம்.
கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரி .இன்று
தங்களின் அன்பான வாழ்த்து ஒன்றினைப் பெற்றிடவும் காத்திருக்கின்றேன்
முடிந்தால் வாருங்கள் .த ம .4

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளாடியாள், வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.என் அன்பான வாழ்த்தை தந்துவிட்டேன் சகோதரி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்குக்கும் நன்றி.

‘தளிர்’ சுரேஷ் said...

நட்சத்திரத்திற்கேற்ற விருட்சங்கள் உள்ள கோயிலை அழகுற படங்களுடன் பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

ராமலக்ஷ்மி said...

இங்கே ஒரு கோவிலில் நவக் கிரகங்களுக்கான மரங்களைப் பார்த்திருக்கிறேன். நட்சத்திரங்களுக்கு மரங்கள் குறித்து உங்கள் பதிவு மூலமே அறிய வருகிறேன். மீதப் படங்களுடன் பகிர்வு தொடரக் காத்திருக்கிறோம்.

GMB sir சொல்லியிருப்பது நல்ல ஆலோசனை!

இராஜராஜேஸ்வரி said...

ஆத்மார்த்தமாய் பக்தியுடன் சந்தோஷமாய் அளித்த நட்சத்திர மரங்கள் பற்றிய பகிர்வுகள் பயனுள்ளவை. பாராட்டுக்கள்..!

கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
வாசன் பஞ்சாங்கத்தில் நட்சத்திரங்களுக்கு உள்ள மரங்கள் பேர் இருக்கும். மீதி மரங்கள் பதிவை பதிவிட்டுவிட்டேன்.


GMB sir சொல்லியிருப்பது நல்ல ஆலோசனை!//
அது போல செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சில கல்யாணங்களில் தென்னைகன்று கொடுக்கிறார்கள்.
போத்தீஸ் ஜவுளிகடையில் (மதுரை)
துணி வாங்குபவர்களுக்கு மரகன்றுகள் கொடுக்கிரார்கள். என் அண்ணன் வீட்டில் சப்போட்டா அவர்கள் கொடுத்தது நன்கு வளர்ந்து வருகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமல்க்ஷ்மி.

கோமதி அரசு said...

வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

மனோ சாமிநாதன் said...

படங்களும் பதிவும் விளக்கங்களும் மிக அழகு!!

கோமதி அரசு said...

வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

வணக்கம்
அம்மா

நன்றாக எழுதியுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள் அம்மா எங்களின் நட்சத்திர மரங்களையும் அறியக்கிடைத்தது...

சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
நானும் தொடர்ந்து இணையம் வர முடியவில்லை.
இனி இடை இடையே தான் இணையம் வர முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.


நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

மாதேவி said...

நல்விளக்கத்துடன் நட்சத்திர மரங்கள் கண்டுகொண்டோம். வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

மிக அருமையான விரிவான பதிவு கோமதி மேம் !