செவ்வாய், 20 டிசம்பர், 2011

திருக்கயிலை யாத்திரை- பகுதி 2

திருக்கயிலாய யாத்திரைத் தொடர் - 2

கயிலை மலையானே போற்றி போற்றி!
----------------------------------------
03.09.2011 அன்று காலை உணவுக்குப் பின் எங்களில் சிலர் எவரெஸ்ட் சிகரம் முதலிய காட்சிகளை விமானம் மூலம் காணச் சென்றார்கள். நாங்கள் சிலர் செல்லவில்லை. போய் வந்தவர்கள் இயற்கைக் காட்சி மிகவும் நன்றாக இருந்ததாய்ச் சொன்னார்கள்.

காலை 10 மணிக்கு மேல் ஒரு தனிப்பேருந்தில் ஏறி, காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில், புத்தநீல்கந்த் கோயில், குஹேஸ்வரி அம்மன் கோயில், உத்திராட்சம், சாளக்கிரமம் விற்கும் கடைகள் ஆகிய இடங்களுக்குப் போனோம்.

பசுபதிநாத் கோயில் போனபோது முதலில் உத்திராட்ச கடையில் நம் உடமைகளை கொடுத்து விட்டு பின் கோயிலுக்கு போகலாம் என்று எங்களை அழைத்து சென்ற ’மது’ சொன்னார். (பெல்ட் அணிந்து கோவிலுக்கு போகக்கூடாது என்று அதையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.தோல் பொருட்களுக்கு அனுமதி இல்லை கோயிலில்) கடையில் நம்மை பிரமாதமாய் வரவேற்று டீ கொடுத்து உபசரித்து கடையில் உள்ள பொருட்களை வாங்க நிறைய பேசினார்கள். ஆனால் நாங்கள் முதலில் பசுபதி நாதரை பார்த்தபின் தான் எல்லாம் என்றவுடன் அவர்கள் கடையிலிருந்து அழகான சிறு வயது உள்ள பெண்ணைக் கூடவே கோயிலுக்கு எங்களுடன் அனுப்பினார்கள், தரிசனம் முடிந்தவுடன் கையோடு கூட்டிவர. நல்ல சுறு சுறுப்பான பெண். கோயிலின் உள்ளே போட்டோ எடுக்கக் கூடாது, அதனால் வெளிப் புறம் தான் எடுத்தோம்.

பசுபதி நாதரை உள்ளே பார்க்கப் போவதற்கு முன்பு அங்கு உள்ள குருஜிகள் நம்மை பிடித்துக் கொள்கிறார்கள். உத்திராட்சம் ஹோமத்தில் வைத்து பூஜை செய்தது, ரூபாய் 100 க்கு வாங்க சொல்கிறார்கள். இதை அணிந்து கொண்டு சாமியைப் பார்த்தால் நல்லது என்கிறார்கள். ஒரு சிலர் வாங்கினார்கள். வரிசையாக நின்று 15 நிமிடங்களுக்கு பின் பசுபதி நாதரைப் பார்த்தோம். அங்கு காசு கொடுத்தால் தான் பிரசாதம்.இல்லையென்றால் நம் நெற்றியில் ஒரு குங்குமத்தை வைத்து ’போங்க போங்க’ என்கிறார்கள். நிறைய பணம் கொடுப்பவர்களுக்கு சாமிக்கு அணிவித்த உத்திராட்சம் கிடைக்கும்.(பெரிய உத்திராட்ச மணிகள் கொண்டது வெளியே அது 20 ரூபாய்)பசுபதிநாதருக்குப் போட்ட ருத்ராட்ச மாலையை 100 ரூபாய் கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம். பெண் காவலர்கள், கோயில் பணியாளர்கள் நம்மை நகர்ந்து கொண்டே இருங்கள் என வழி நடத்துகிறார்கள்.

கருவறை பெரிய அளவில் சதுரமாய் இருக்கிறது. கருவறையில் உள்ள நான்கு முகம் உடைய சிவலிங்கப்பெருமானை நான்கு வாசல்களின் வழியாகவும் பார்க்கலாம். கருவறையை நிமிர்ந்து பார்த்துக் கொண்டு தங்க கவசம் அணிந்த நந்தி மிகப் பெரிதாய் உள்ளது. நான்கு வாயில்களின் கதவுகளிலும் சுவர்களிலும் வெள்ளி தகடுகள் பதிக்கப் பட்டுள்ளன. அழகிய உலோகச் சிற்பங்கள் உள்ளன.

பசுபதி கோயில் அருகில் பாகுமதி ஆறு ஓடிக் கொண்டு இருக்கிறது. நிறைய படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அந்த இடத்திற்கு ’ஆரியா காட்’ என்று பெயர். இங்கு இறந்தவர்களை எரிப்பார்களாம்.கோயிலில் புறாக்கள் நிறைய உள்ளன. குரங்குகளும் நிறைய உள்ளன. வெளி வாயிலில் பெண் தபசிகள் இருக்கும் மடம் இருக்கிறது.கோயில் தரிசனம் முடிந்தவுடன் உத்திராட்சக்கடைப் பெண்ணுடன் கடைக்குப் போய் எங்கள் பொருட்களை பெற்றுக் கொண்டோம். அந்த கடையில் ஒருமுக உத்திராட்சத்திலிருந்து 14 முக உத்திராட்சம் வரை இருக்கிறது. இரண்டு முகம் இணைந்த உத்திராட்சத்தை ’கெளரி சங்கர்’ ,’சிவ பார்வதி உத்திராட்சம்’ என்கிறார்கள். நீண்ட மூக்கு உள்ள உத்திராட்சத்தை ’கணேஷ் உத்திராட்சம்’ என்கிறார்கள். எங்களுடன் வந்தவர்கள் சிலர் சாளக்கிரமங்கள், ஒருமுக, சிவகெளரி உத்திராட்சங்கள் வாங்கினார்கள். லட்சுமி நாராயண, சங்கு சக்கர, சந்தானகோபால், சுதர்ஸன , வாசுதேவ், நரசிம்ம என்ற பெயர்களுடன் சாளக்கிரமங்கள் உள்ளன.

பின் குஹேஸ்வரி கோயில் போனோம். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.(பார்வதி தேவியின் உடல் பாகம் விழுந்த இடம்) பிரதாப் மல்லா என்ற ராஜா 17ம் நூற்றாண்டில் கட்டிய கோயில். இங்கும் குரங்குகள் நிறைய உள்ளன. அங்கு பழங்கள் குங்குமம் எல்லாம் வைத்து அபிஷேகம் செய்து கொண்டு இருந்தார்கள்.

இந்த கோயிலின் அருகிலும் ஆறு ஓடுகிறது. கோயில் வாசலின் இருபுறமும் கண்கள் ஒவியமாக வரைந்து இருக்கிறார்கள். கோயில் உள்ளே ஜன்னல்கள் அழகாய் உள்ளன. புகைப் படம் எடுக்கக் கூடாது என்கிறார்கள்.

கோயிலில் நேபாள கல்யாணம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் பார்த்தோம்.
அங்கு கோயிலுக்கு வெளியே நிறைய கலைப் பொருட்கள் விற்றார்கள். பேரம் பேசத் தெரிய வேண்டும்.விலை இரண்டு மடங்காய் சொல்கிறார்கள். பாதி விலைக்குக் கேட்டு வாங்கி தந்தார்கள், உடன் வந்தவர்கள்.
அடுத்து புத்தநீல்கந்த் என்ற கோவிலுக்கு போய் இருந்தோம்.அங்கே போக காத்மாண்டுவிலிருந்து ஒருமணி நேரம் ஆகிறது. 9 கிலோ மீட்டர் தூரம் தான்.சிவபுரி மலை அடிவாரத்தில் இக்கோயில் உள்ளது. அங்கு 11 தலை உடைய பாம்புப் படுக்கையில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் தாங்கிய நான்கு கரங்களுடன் அழகாய் நீரில் படுத்து இருக்கிறார் புத்தநீல்கந்த். ஜலசயனநாராயணன் என்றும் இவரைக்கூறுகிறார்கள் பெரிய மலைப்பாம்பு பின்னிப் பின்னி வளைந்தது போல் உள்ளது. கருவறை கிடையாது.ஒரு குளத்தின் நடுவில் திருவுருவம் மட்டும் உள்ளது. வெயில் படாமல் இருக்க அலங்காரப் பந்தல் போட்டு இருக்கிறார்கள்.நேரே போட்டோ எடுக்க அனுமதி இல்லை. வெளிப் பக்க மதில் ஓரத்திலிருந்து எடுத்தோம்.

அங்கு உருத்திராட்ச மரம் இருக்கிறது. அதன் பக்கத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. அங்கு வித விதமாய் தனி உத்திராட்சங்கள் விற்கிறார்கள்; ஒரு முகம், சிவகெளரி என்றெல்லாம் கூறி அதன் நன்மைகளையும் கூறி நிறைய பேர் விற்பதற்காக நம்மை சுற்றிக் கொள்வார்கள். நம் இந்தியப்பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். அங்கு வெளியே கோயில் சம்பந்தமான பொருட்களை விற்கும் கடைகளும் இருக்கின்றன.

அன்று மாலை காத்மாண்டு கடைவீதிக்குச் சென்று கயிலை பயணத்திற்குத் தேவையான சில விட்டுப் போன சாமான்களை வாங்கிக் கொண்டோம். வேள்விக்கு வேண்டிய நெய் பாட்டில் வாங்கி கொண்டோம். இரவு உணவு அருந்தி கயிலை நாதரை நினைத்து கூட்டுப் பிரார்த்தனை முடித்து உறங்கினோம்.

மறுநாள் கோத்தாரி என்ற இடத்தை அடைந்து ,நட்பு பாலத்தை கடந்து சீனப் பகுதிக்குச் சென்று கயிலை நோக்கிப் பயணமானோம்.அதைப்பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.

30 கருத்துகள்:

 1. பதிவும் படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.

  உங்களால், நாங்கள் இன்று காட்மண்ட் வரை போகாமலேயே ஸ்ரீ பசுபதிநாதரை தரிஸனம் செய்கிறோம். நன்றி.

  vgk

  பதிலளிநீக்கு
 2. சுவாமி தரிசனம் தங்களால் கிடைக்கப் பெற்றோம்.

  படங்களும் நல்லா இருக்கும்மா.

  அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. //ஒருமுக உத்திராட்சத்திலிருந்து 14 முக உத்திராட்சம்//

  உருத்திராட்சம் என்பது அந்த மரத்தின் விதைகளா? எப்படி இதனை விதவிதமாய்ச் செய்கிறார்கள்?

  சாளக்கிரமங்கள் என்றால் என்ன?

  பதிலளிநீக்கு
 4. தங்கள் மூலம் நானும் பசுபதிநாதரை தரிசனம் செய்தேன்.... அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு. நல்ல படங்கள்.
  வாழ்த்துகள் அம்மா.

  பதிலளிநீக்கு
 6. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.போக தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 7. //ஒருமுக உத்திராட்சத்திலிருந்து 14 முக உத்திராட்சம்//

  உருத்திராட்சம் என்பது அந்த மரத்தின் விதைகளா? எப்படி இதனை விதவிதமாய்ச் செய்கிறார்கள்?

  சாளக்கிரமங்கள் என்றால் என்ன?

  ஹூஸைனம்மாவிற்கு பதில்..

  சாளக்கிரமம்

  சாளக்கிரமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ரேகைகளை உடைய ஒரு வகை கல் ஆகும்.அந்த ரேகைகள் சக்கரம்,சங்கு வடிவில் இருந்தால் சிறப்பாகும்.இந்த சாளக்கிரமங்கள் பச்சை,கருப்பு,நீல நிறம் என்று இருக்கும்.வைஷ்ணவர்கள் இதை வீடுகளில் பூஜை அறையில் வைத்து பூஜிப்பார்கள்.திருமாலே பூஜை அறையில் இருப்பதாய் ஐதீகம். கோயில்களிலும் சாளக்கிரமங்கள் இருக்கும்.
  சாளக்கிரமத்தில் பொதுவாய் ஒரு துளை இருக்கும்.வெள்ளி,தங்கத்தில் இந்த கல்களை கோர்த்து கடவுளுக்கு அணிவிப்பார்கள்.வஜ்ரகீடம் என்ற ஒரு வகை புழு இந்த கற்களில் வசித்திருக்கும் என்றும் சொல்கிறார்கள்.கண்டகி நதியில் குளிக்கும் போது அதிர்ஷ்டம் இருந்தால் நமக்கும் இந்த கல்கள் கிடைக்குமாம்.

  உருத்திராட்சம்

  பெண்களுக்கு மாங்கல்யம் போல சிவன் வழிபடுபவர்களுக்கு இந்த உருத்திராட்சம் முக்கியமாகும்.உருத்திராட்ச மரத்தின்(Elaeocarpus Ganitras Roxb) பழங்களின் கொட்டைகள் தான் உருத்திராடசம்.இந்த கொட்டைகளில் மேலிருந்து கீழாக அழுத்தமான கோடுகள் இருக்கின்றன.எத்தனை கோடுகள் உள்ளனவோ அதை பொறுத்து அத்தனை முகங்கள் இருப்பதாக கொள்ளப்படுகின்றன.
  இதை அணிவதால் இரத்த அழுத்தம் மன அழுத்தம் கட்டுக்குள் இருப்பதாக நம்பிக்கை.

  பதிலளிநீக்கு
 8. வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,

  உங்கள் முதல் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க ஆதி, நீங்கள் தொடர்ந்து வந்து படிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
  அடுத்த பகுதி நாளை.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஆதி, நீங்கள் தொடர்ந்து வந்து படிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
  அடுத்த பகுதி நாளை.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க ஆதி, நீங்கள் தொடர்ந்து வந்து படிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
  அடுத்த பகுதி நாளை.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க ஹீஸைனம்மா, உங்கள் கேள்விக்கு அமுதா கிருஷ்ணா பதில் சொல்லி இருக்கிறார்கள். நான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன் அவர்கள் சொல்லி விட்டார்கள்.

  உத்திராட்சம் தானாய் வளர்கிறது அதை அப்படியே அதில் உள்ள துளைவழியாக தங்கம், வெள்ளி, சிவப்பு கயரில் கட்டி போட்டு கொள்கிறார்கள்.

  சாளக்கிரமங்களை இறைவனாக நினைத்து வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.

  உங்கள் வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க ஹீஸைனம்மா, உங்கள் கேள்விக்கு அமுதா கிருஷ்ணா பதில் சொல்லி இருக்கிறார்கள். நான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன் அவர்கள் சொல்லி விட்டார்கள்.

  உத்திராட்சம் தானாய் வளர்கிறது அதை அப்படியே அதில் உள்ள துளைவழியாக தங்கம், வெள்ளி, சிவப்பு கயரில் கட்டி போட்டு கொள்கிறார்கள்.

  சாளக்கிரமங்களை இறைவனாக நினைத்து வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.

  உங்கள் வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க சரவணன் , உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க ரத்னவேல் சார், உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க வெங்கட் நாகராஜ், உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க வெங்கட் நாகராஜ், உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க அமுதா கிருஷ்ணா, நீங்கள் கண்டிப்பாய் போய்வாருங்கள்.

  ஹீஸைனம்மாவின் கேள்விக்கு நீங்கள் கொடுத்த பதிலுக்கு ரொம்ப நன்றி.

  சரியாக சொன்னீர்கள் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 19. அழகான படங்கள் அருமையான விளக்கங்கள் தொடருங்கள் தொடர்கிறோம் அருமையான யாத்திரை சகோ

  பதிலளிநீக்கு
 20. உங்கள் பிரயாணத்தில் கலந்து கொண்டதில் பல இடங்கள், தலங்களை தர்சித்தோம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. அருமையான பகிர்வு. விரிவாகச் சொல்லியுள்ளீர்கள். திருப்பதி கோவில் போலதான் அவசரப்படுத்துவார்கள் போலிருக்கிறது.

  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 22. படிக்க சுவாரஸ்யமாகவும் பக்தி உணர்வு தோன்றும்படியாகவும் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 23. M.R வாங்க, நீங்கள் தொடர்வது மிகவும் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க மாதேவி, தரிசனம் செய்தீர்களா?
  மகிழ்ச்சி. இன்னும் ஒரு பதிவுக்கு பின் கயிலை நாதரை தரிசனம் செய்யலாம்.

  தொடர்ந்து வாருங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க ராமலக்ஷ்மி, திருப்பதியில் மணி கணக்கில் நிற்க வேண்டும் . ஒருமுறைக்கு மேல் தரிசிக்க முடியாது, இங்கு அப்படி இல்லை. கொஞ்சம் நேரம் நிற்க வேண்டி உள்ளது, மறு முறையும் வரிசையில் நின்றுப் பார்க்கலாம்.நான்கு புறங்களிலும் பசுபதி நாதர் தெரிவதால் வேறு வாயில் வழியாகப் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 26. வாங்க கே.பி ஜனா, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. //அன்று மாலை காத்மாண்டு கடைவீதிக்குச் சென்று கயிலை பயணத்திற்குத் தேவையான சில விட்டுப் போன சாமான்களை வாங்கிக் கொண்டோம். வேள்விக்கு வேண்டிய நெய் பாட்டில் வாங்கி கொண்டோம். இரவு உணவு அருந்தி கயிலை நாதரை நினைத்து கூட்டுப் பிரார்த்தனை முடித்து உறங்கினோம்.//

  ஏதோ நாமும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே கூடப் பயணிப்பது போன்ற உணர்வுடன் சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டு வந்தது, இந்த இடம் வந்தவுடன்,
  லட்சிய தாகம் போல் எதற்காகப் புறப்பட்டோமோ அதை நினைவுறுத்தி அதற்காகப் பிரார்த்திக்கும் மனநிலையை மனத்தில் உருவாக்கியது.

  பின்னூட்டத்தில், சாளக்கிராமத்திற்கும், உத்திராட்சங்களுக்கும் அமுதா கிருஷ்ணா கொடுத்திருந்த விளக்கம், அருமை. அது அவை பற்றிய அத்தனை தகவல்களையும் உள்ளடக்கி சுருக்கமாக இருந்தது தான் அதன் சிறப்பு.

  அடுத்த பகுதிக்கு காத்திருக்கிருக்கும் உணர்வு தன்னாலே ஏற்பட்டு விட்டது. தொடருங்கள்; தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
 28. சாளக்ராமத்திற்கும் உருத்ராட்சத்திர்கும் உள்ள வித்யாசம் தெரிந்து கொள்ள முடிந்தது பயணக்கட்டுரை நல்லா சொல்கிரீர்கள். பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிரது. கூடவே கண்ணுக்கினிய படங்களும் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 29. ''...அங்கு காசு கொடுத்தால் தான் பிரசாதம்.இல்லையென்றால் நம் நெற்றியில் ஒரு குங்குமத்தை வைத்து ’போங்க போங்க’ என்கிறார்கள்....''
  ''...அந்த இடத்திற்கு ’ஆரியா காட்’ என்று பெயர். இங்கு இறந்தவர்களை எரிப்பார்களாம்...''இது விகடன் கதைகளில் அல்லது பயணக் கட்டுரையில் வாசித்துள்ளேன்.குஹேஸ்வரி கோயில் அழகாக உள்ளது.பாம்புப் படுக்கை - சகோதரி அமுதா கிருஷ்ணனின் விளக்கமும் அருமை. மிக மகிழ்வாக உள்ளது. இதை வாசித்தது. சகோதரிக்கும் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkvai.wordpress.com

  பதிலளிநீக்கு