வியாழன், 1 அக்டோபர், 2009

இன்பச் சுற்றுலாவா? துன்பச் சுற்றுலாவா?

எவ்வளவு ஆசையுடன் எவ்வளவு குதுகலத்துடன் தேக்கடிக்கு
சென்று இருப்பார்கள்,தன் குடும்பத்துடன் ,தன் உறவினர்,
நண்பர்களுடன். ஆனால் படகு கவிழ்ந்ததால் உயிர் இழப்பு
ஏற்பட்டு இன்பச்சுற்றுலா துன்பச்சுற்றுலாவாய் ஆனது மிகவும்
வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

// படகில் பயணத்தின் போது பின் பற்ற வேண்டிய விதி முறை
குறித்து அறிவிப்பு செய்வது வழக்கம். இந்த அறிவிப்பு
ஒவ்வொரு முறையும் செய்யப்படுவதில்லை என்று
படிக்கும் போது மிகவும் அதிர்ச்சியாகவும்,வேதனையாகவும்
உள்ளது.அறிவிப்பில் பயணத்தின் போது ஒரிடத்தில் இருந்து
வேறு இடத்திற்கு செல்லக் கூடாது, கூச்சலிடக் கூடாது,
எழுந்து நிற்ககூடாது, என்று தெரிவிக்கப்படும். இந்த
அறிவிப்பு முறையாக செய்யப்படவில்லை, இரண்டு
ஒட்டுனர்கள் மட்டுமே படகில் இருந்துள்ளனர் சுற்றுலா
பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த கூடுதல்
பணியாளர்கள் ஒருவரை நியமித்துத்திருந்தால் பயணிகள்
ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஒட்டு மொத்தமாக
சென்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது இந்த கோர விபத்தை
தவிர்த்து இருக்கலாம்.//(தினமலர் செய்தி)

படகு உயரம் அதிகமாகி அகலம் குறைவாக இருந்ததும்
விபத்திற்கு காரணம் என கூற்படுகிறது. இப்படிஎத்தனை
எத்தனை ஒட்டைகள் இந்த படகு கவிழக் காரணம்.

உயிர் தப்பியவர்கள், தன்னுடன் வந்த உறவினர், உயிர்
பிழைத்து இருக்க பிராத்தனை செய்வது நெஞ்சை
உருக்குவதாய் உள்ளது.

இடி, மின்னல், மழை என்று இயற்கை வேறு சோதனை
செய்கிறது.சேறு சகதியில் சிக்கி உள்ளவர்ளை மீட்க
சிரமப்படுகிறார்கள். சகோதரியை பிரிந்த தம்பி ,
மகளை பிரிந்த தந்தை என சோகம் கேட்க, பார்க்க
கஷ்டமாய் உள்ளது.

படகில் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருந்தும்,
படகு கவிழந்ததால் அதை பயன்படுத்த முடியவில்லை.

விலங்குகள் நீர் அருந்துவதைப் பார்க்க ஒரு இடத்தில்
குவிந்த்தால் இந்த விபத்து.

விபத்தில் உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய
பிராத்திப்போம். இனியும் இந்த மாதிரி உயிர் இழப்புகள்
ஏற்படாதிருக்க பிராத்திப்போம்.

அரசாங்கமும், சுற்றுலா துறையும் விதிமுறைகள் ஒழுங்காய்
கடைபிடிக்கப் படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

17 கருத்துகள்:

  1. மனதைப் பிசையும் நிகழ்வு.

    //சுற்றுலா
    பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த கூடுதல்
    பணியாளர்கள் ஒருவரை நியமித்துத்திருந்தால்//

    இது மிக அவசியம். நிச்சயமாய் விபந்து தவிர்க்கப் பட்டிருந்திருக்கும். படகில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு ஒட்டுமொத்தமாய் செல்வது கூடவே கூடாது. விலங்குகளைக் கண்ட மகிழ்சியில் பயணிகள் அந்நேரம் தங்களையே மறந்து விட்டிருந்திருக்கிறார்கள்:(!

    //அரசாங்கமும், சுற்றுலா துறையும் விதிமுறைகள் ஒழுங்காய்
    கடைபிடிக்கப் படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.//

    வழிமொழிகிறேன்.

    //விபத்தில் உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய
    பிராத்திப்போம். இனியும் இந்த மாதிரி உயிர் இழப்புகள்
    ஏற்படாதிருக்க பிராத்திப்போம்.//

    பிரார்த்தனையில் இணைகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை முறை இது போன்ற சம்பவங்கள் நடந்தாலும் பாடம் கற்றுக்கொள்ளாத,செயல்பட இயலாத அரசுகளும்,விதிமுறைகள் மீறும் பணியாளர்களும் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மக்களும்,அதனால் இது போன்ற சம்பவங்கள் தொடர்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமே..!

    பதிலளிநீக்கு
  3. விப‌த்தில் இறந்தோரின் குடும்ப‌த்தார்க்கு என் க‌ண்ணீர் அஞ்ச‌லி...

    ச‌ரியான‌ ச‌ம‌ய‌த்தில் ப‌திவிட்ட‌ உங்க‌ளுக்கு என் ந‌ன்றி...

    இனியாவது இது போன்றதொரு துயரமான சம்பவம் நிகழாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்...

    நன்றி கோமதி மேடம்...

    பதிலளிநீக்கு
  4. பிராத்தனையில் கலந்து கொண்ட ராமலக்ஷ்மி,ஆயில்யன்,கோபி மூவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. காலன் எங்கே காத்திருக்கிறான் என்பதைக் கண்டு கொள்வதென்பது கடினமான விஷயமாக்கப் பட்டதே ,அவன் தன் பணியை செவ்வனே ஆற்றத்தான் என்பது மட்டும் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. :((

    //விபத்தில் உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய
    பிராத்திப்போம். இனியும் இந்த மாதிரி உயிர் இழப்புகள்
    ஏற்படாதிருக்க பிராத்திப்போம்.//

    எனது பிரார்த்தனைகளும்!

    //அரசாங்கமும், சுற்றுலா துறையும் விதிமுறைகள் ஒழுங்காய்
    கடைபிடிக்கப் படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.//

    முற்றிலும் உண்மை!!

    பதிலளிநீக்கு
  7. ஆம் கோமா, காலன் தன் பணியை
    செவ்வனே ஆற்றத்தான் செய்கிறான்.

    பிறப்பு இறப்பு நடுவே பூவுலக வாழ்வு இதை
    மறப்பு நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.

    நிலையாமையை நினைவிற் கொள்ள வேண்டியது உள்ளது.இந்த மாதிரி தருணங்களால்.

    பதிலளிநீக்கு
  8. பிராத்தனையில் கலந்து கொண்டதற்கு
    நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  9. அன்பு கோமதி,

    நினைத்து நினைத்து வருத்தப் பட்டேன்.
    இத்தனை உயிர்களின் பலிக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்.
    வந்தவரைக்கும் லாபம். அவ்வளவுதான்,.
    நன்றிம்ம பகிர்ந்து கொண்டதற்கு

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொரு நிகழ்வின் போதும் நம்மால் நம் ஆற்றாமையை மட்டுமே வெளிப்படுத்தி நம் சோகத்தை இறக்கிக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் கடந்து சென்ற சோகத்திலிருந்து பாடம் ஏதும் கற்றுக் கொண்டு அரசாங்கம் மேலும் சட்டத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்கிறதா என்றால் அப்படியாக இல்லை.

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஞாபகம் இருக்கிறதா? அது போன்ற குழந்தைகள் நெரிசலான வகுப்பறைகள் எந்தளவிற்கு பாதுகாப்பு வசதியுடன் இன்றளவில் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    ம்ம்ம் கொடுமை...

    பதிலளிநீக்கு
  11. :((

    //விபத்தில் உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய
    பிராத்திப்போம். இனியும் இந்த மாதிரி உயிர் இழப்புகள்
    ஏற்படாதிருக்க பிராத்திப்போம்.//

    எனது பிரார்த்தனைகளும்!

    பதிலளிநீக்கு
  12. //வந்தவரைக்கும் லாபம் அவ்வளவு தான்//

    சிலரின் பேராசையால் எத்தனை உயிர்
    இழப்பு,அதிக கூட்டம் ஒரு இடத்தில்
    குவிந்தால் என்ன நேரும் என்ற விழிப்புணர்வு இல்லாத மக்கள்.

    இப்படி பட்ட சோகங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இறைவன் கருணை புரியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. ஆம் தெகா, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

    நம்மால் நம் ஆற்றாமையை மட்டுமே
    வெளிப்படுத்த முடிகிறது.

    அரசாங்கம் அந்த நேரம் அனுதாபம் தெரிவித்து,இழப்பு ஏற்பட்டதற்கு நிதி உதவி என்று முடித்துக் கொள்கிறது.
    //கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஞாபகம் இருக்கிறதா?//

    பிஞ்சு குழந்தைகளை மறக்கமுடியுமா?
    தலை வாரி பூச்சூடி பாடசாலைக்கு
    அனுப்பிய குழந்தைகளின் பெற்றோர்
    துயரத்தை தான் மறக்கமுடியுமா?

    நிறைய பள்ளிகள் அடிப்படை வசதிகள்
    இல்லாமல் தான் இருக்கிறது.

    அரசாங்கம் நல்ல முறையில் செயல்
    பட எல்லாம் வல்ல இறைவன் அருள்
    புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  14. பிராத்தனையில் கலந்து கொண்டதற்கு
    நன்றி சென்ஷி.

    பதிலளிநீக்கு
  15. விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்த அதிகாரி இன்று அரசாங்கத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பது:

    *75 மட்டுமே ஏற்ற வேண்டிய படகில் கூடுதலாக 12 பேர் ஏற்றியது. கீழ் தளத்தில் 50 மேலே 25. ஆனால் ப்ளாஸ்டிக் சேர்கள் போட்டு அதிகம் பேரை மேல் தளத்தில் அனுமதித்திருந்திருக்கிறார்கள்.
    [லிஃப்ட் ஆனாலும் போட் ஆனாலும் காரணமில்லாமலா இத்தனை நபர் மட்டுமே ஏறவேண்டுமென விதிமுறை வைத்துள்ளார்கள்? எதை எப்போது மக்கள் உணர்வார்களோ?]


    * சென்று கொண்டிருந்த வேகத்தைக் குறைக்காமலே ட்ரைவர் வளைவில் வலப்பக்கமாகத் திருப்பியதில் படகு கவிழ்ந்திருக்கிறது.

    -------------------------

    உயிர் தப்பித்த பெங்களூர் பயணிகளின் பேட்டி இங்கே:
    http://timesofindia.indiatimes.com/news/city/bangalore/No-more-boat-rides-for-us/articleshow/5085037.cms

    பயணிகள் ஒழுங்குடனே அமர்ந்திருந்ததாகவும், போட்டின் மோட்டார் மேலும் தங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இத்தகைய கவனக்குறைவுகளை அரசாங்கம் இனியாவது தவிர்க்க வேண்டும் என்பதே நம் ஆதங்கம், பிரார்த்தனை.

    பதிலளிநீக்கு
  16. //12 பேர் அதிகமாக ஏற்றியது,
    சென்று கொண்டிருந்த வேகத்தைக்
    குறைக்காமலே டிரைவர் வளைவில்
    வலபக்கமாகத் திருப்பியதில் படகு
    கவிழ்ந்திருக்கிறது.//

    மோட்டார் மேல்சந்தேகப்பட்டுபயணிகள்
    சொல்லியும் கவனிக்காத டிரைவர்
    தண்டிக்கபட வேண்டியவர்.

    வேகத்தை குறைக்காமல் பொறுப்பற்ற
    அலட்சிய தன்மையுடன் வேறு நடந்து கொண்டு இருந்திருக்கிறார்.

    //இத்தகைய கவனக்குறைவுகளை அரசாங்கம் இனியாவது தவிர்க்க வேண்டும் என்பதே நம் பிராத்தனை.//

    ஆம் ராமலக்ஷ்மி.

    மேலும் கூடுதல் பத்திரிக்கை செய்திகள் கொடுத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு