Wednesday, October 28, 2009

திருப்பம்(சர்வேசன் 500-’நச்’னு ஒரு கதை 2009 போட்டிக்கு)

சிவநேசனின் வீடு அன்று காலை முதலே ஒரே பரபரப்பாய் இருந்தது. அவர் மகனுக்குப் பெண் பார்க்கப் போகிறார்கள். அவர் , குறித்த நேரத்தில் நாம் பெண் வீட்டில் இருக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் கிளம்புங்கள் என்று தன் மனைவி மகன்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்! அவருக்கு இரண்டு மகன்கள். அவர் மனைவி பட்டுப் புடவையில் வைரநகைகள் மின்ன பூரணி என்ற பெயருக்கேற்றாற்போல் பூரண கலசம்போல்
வந்தார். தன் மனைவி பூரணியைப் பார்த்த சிவநேசன் ஒரு கணம் மெய்ம்மறந்து ரசித்துவிட்டு
குறும்பாய் இப்போது நாம் நம் மகனுக்குப் பெண் பார்க்கப் போகிறோம் என்று நினைவூட்டினார்.
பூரணியும் வெட்கத்தால் சிவந்து சரி சரி என்று சொல்லி, பூ, பழம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு காரில் ஏறினார்கள்.

காரில் போகும்போது தன் மகன்களைப் பெருமிதமாய்ப் பார்த்துக்கொண்டார் பூரணி.அழகு,
படிப்பு, நல்ல வேலை, நல்லகுணம் நிரம்பிய தன் மகனுக்கு நல்ல மனைவியாய் பார்க்கும் பெண் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

பெண்வீட்டை அடைந்தனர். பெண்வீட்டு வாசலில் அழகாய்ச் செம்மண் இட்டுக் கோலம் போட்டிருந்தார்கள் . வரவேற்பறையில் வெண்கல உருளியில் பலவித மலர்களால் அலங்கரித்திருந்தனர். பெண்வீட்டார் சிவநேசனின் குடும்பத்தாருக்கு நல்ல வரவேற்பளித்தார்கள். சிவநேசனின் மனதில் பெண்வீட்டைப் பற்றிய மதிப்பீடு உயர்ந்துகொண்டிருந்தது.

வீட்டின் உள்ளே மூக்கை உறுத்தாத ஊதுவத்தியின் நறுமணம். சிறு ஒலியில் காயத்திரி மந்திரம் பின்னணியில் ஒலிக்க, எல்லோரும் அமர, உறவின்ர்களின் அறிமுகப்படலம் நடந்தது. பிறகு இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலையைப் பற்றிப்
பேச்சு வந்தது.அப்போது அதில் கலந்துகொண்ட சேகரின் அணுகுமுறை, நேர்மறையான சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலிக்குப் பிடித்தது.

பெண்வீட்டில் உள்ள வயதில் மூத்தவர், பெண்ணைப் பார்த்துவிடலாம் எனப் பேச, பெண் அழைத்துவரப்பட்டாள்.பெண்ணைப் பார்த்தவுடனேயே அனைவருக்கும் பிடித்துவிட்டது. பெண்ணின் உயரம்,பெண் நடந்துவந்த விதம், புன்சிரிப்புடன் அனைவரையும் வணங்கிய பாங்கு எல்லாம் பிடித்திருந்தது. பூங்குழலியைத் தன் மகனுக்குத் திருமணம் செய்யப் பூரணி முடிவெடுத்துவிட்டார். தன் கணவனைத் தனியாக அழைத்துத் தன் மகனுக்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்டு, பிடித்திருந்தால் பெண்வீட்டாரிடம் முடிவு தெரிவித்துவிடுவோம் என்று கூறினார். சிவநேசன் தன் மகன்களிடம் கேட்டார்,பெண் எப்படி என்று.

கல்யாணப் பையன் சங்கர், பெண் பிடித்திருக்கிறது என்றான். தம்பி சேகரும் பெண் நன்றாக இருக்கிறார் என்று தன் கருத்தைச் சொன்னான். சிவநேசன் பெண்ணின் தந்தையிடம் எங்களுக்குப் பூரண சம்மதம்.எப்போது நிச்சயம் செய்வது என்று கேட்டார். பெண்ணின் கருத்தைக் கேட்க அப்பா உள்ளே போனார்.

வெளியில் வரும்போது தயங்கித் தயங்கிப் பெண்ணிற்கு சேகரைததான் பிடித்திருக்கிறதாம் என்று சொன்னார்.

24 comments:

ராமலக்ஷ்மி said...

//தயங்கி தயங்கி..//

பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் புடிக்கவில்லையாம்னு சொல்வார்னு பார்த்தால்...

அதையே வேறுவிதமா...

நல்ல திருப்பம் கோமதி அரசு:)!

வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!

☀நான் ஆதவன்☀ said...

அட! வித்தியாசமான திருப்பம் தான் :)

வெற்றிபெற வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

வெற்றி பெற வாழ்த்துகள் ! நல்லாருக்கு திருப்பம்! :-)

Anonymous said...

விருது பெற வாழ்த்துக்கள் கோமதிஅம்மா

ஆயில்யன் said...

கதையில திருப்பம் நல்லா இருக்கு!

கோமதி அரசு said...

திருப்பத்தை ரசித்த ராமலக்ஷ்மி,ஆதவன்,சந்தனமுல்லை,
சின்ன அம்மிணி,ஆயில்யனுக்கு நன்றி.

பிரபாகர் said...

மெலிதாய் திருப்பம், நன்றாக இருக்குங்க...

பிரபாகர்.

goma said...

arumaiyaana nach

கோபிநாத் said...

கலக்கல்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;))

\\வீட்டின் உள்ளே மூக்கை உறுத்தாத ஊதுவத்தியின் நறுமணம்.\\

ம்ம்..நன்றாக கவனம் எடுத்து எழுதியிருக்கிங்க ;)

R.Gopi said...

”அட”ன்னு சொல்ல வைக்கிற மாதிரி தான் இருக்கு முடிவு...

எல்லாரும் பொண்ணு/மாப்பிள்ளை என்று எதிர்பார்த்திருக்க, நீங்கள் மாப்பிள்ளை/பொண்ணு என்று முடித்திருந்தது வித்தியாசமாக இருக்கிறது...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

கோமதி அரசு said...

பிராபகர், முதல் வருகைக்கும்
பாராட்டுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

பாராட்டுக்கு நன்றி கோமா.

கோமதி அரசு said...

கோபிநாத்,
வெற்றி பெற வாழ்த்தியதற்கு நன்றி.

கோமதி அரசு said...

கோபி,
வெற்றி பெற வாழ்த்தியதறக்கு நன்றி.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நடுவிலேயே சேகரின் பேச்சு பிடித்திருக்கு என்பதை கூறி விட்டதால், முடிவு அவ்வளவு நச் என்று இல்லையோ என்று.......

ஓ.கே. ஓ.கே. கதை நல்லாவே இருக்கு அம்மா!

கோமதி அரசு said...

பெயர் சொல்ல விருப்பம்மில்லை,

பாராட்டுக்கு நன்றி,முதல் வருகைக்கும் நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் சிறுகதைக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

பாராட்டுக்கு நன்றி, முத்துலெட்சுமி.

சென்ஷி said...

நல்லா இருக்குதும்மா. உறுத்தாத திருப்பம்ங்கற வகையில சேருது. அதிகமா வர்ணனை சேர்க்காம அளவிலான வர்ணனைக் கோர்ப்புகளும் ஓக்கே.. வாழ்த்துக்கள்..


இன்னும் நிறைய்ய கதைகள் எழுதுங்க.. புதிய புதிய களம், பேசப்படாத மனித வாழ்க்கை, மனித சஞ்சலங்கள் அப்படிங்கறதை உள்ளடக்கிய நிறைய கதைகளை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கிறேன்..

மீண்டும் வாழ்த்துக்கள் அம்மா

கோமதி அரசு said...

சென்ஷி,
உங்கள் பாராட்டு எனக்கு உற்சாகத்தையும் எழுத வேண்டும்
என்ற ஆவலையும் தூண்டுகிறது.
நீங்க்ள் சொன்ன விஷயங்களை எழுத
முயல்கிறேன்.

நன்றி.

மணிகண்டன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் கோமதி.

கோமதி அரசு said...

நன்றி, மணிகண்டன்.

முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

இராஜராஜேஸ்வரி said...

எதிர்பாராத திருப்பம் !

கோமதி அரசு said...

வாங்க ராஜராஜேஸ்வரி, திருப்பததைபபடித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.