திங்கள், 12 பிப்ரவரி, 2018

ஹாலிவுட் பூங்கா

லாஸ் ஏஞ்சல்ஸ் போகும் போது வழியில்    ஹாலிவுட்  என்று மலையின் மீது  அடையாளப்படுத்தி இருக்கும் இடத்திற்கும் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவிற்கும் 06/11/2017ல்போய் வந்தோம். 

ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது.


    மேலும் ஹாலிவுட் செய்திகள் படிக்கலாம்.



வார இறுதி நாளில் இது போன்ற இடங்களுக்கு நல்ல கூட்டம் வருகிறது . குடும்பத்தினருடனும் , தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் (நாய்கள்)
வருகிறார்கள்.
நாய்களுடன் விளையாடிக் களிக்கிறார்கள்.   நாய் செய்யும் அசுத்தங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும் அன்பு வேண்டுகோளையும் அறிவிப்பு பலகையாக வைத்து இருக்கிறார்கள்.
தூரத்திலிருந்து  மலை அழகு 
வீடுகள் அழகாய் இருந்தன மலையடிவாரத்தில்



பார்க்கில்  அமெரிக்க நச்சுபாம்பு இருப்பதாய் 
 எச்சரிக்கை  போட்டு இருந்தார்கள்
தாத்தாவும் பேரனும்  குழாய் போனில் பேசி மகிழ்கிறார்கள்
எங்கே இருக்கே?

மலைகளை அடுக்கி வைத்தது போல் படி

குட்டிப் பிள்ளைகள் சறுக்கி விளையாடுவது 
நான் குட்டி பிள்ளை இல்லையே !
மரம் ஊஞ்சலைக் காவடி சுமந்து கொண்டு இருக்கிறது

சறுக்கு விளையாட நிழல்தரும் குடைக்குக் கீழ்
நானும் விளையாட வருகிறேன்
நம் ஊர் பாண்டி போல் இருக்கு
பழைய டயரை வைத்தும் அழகு படுத்தி இருக்கிறார்கள்.

சதுரங்கக் காய்கள் கொண்டு வந்து விளையாடலாம்
அமர்ந்து விளையாட வசதியாக ஆசனங்கள்


காளான் போல ஆசனங்கள்
பயண அனுபவங்கள் தொடரும்.
வாழ்க வளமுடன்.
=======================

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

மலிபு கடற்கரை


பசிபிக் பெருங்கடல்
2017 நவம்பர் மாதம் மகன் இங்கு அழைத்து சென்றான். பள்ளியில்  படிக்கும்போது புவியியல் பாடத்தில் பசிபிக் பெருங்கடல் என்று  உலக ப்படத்தில்  குறித்ததை நேரில் பார்த்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதுவும் பேரனுடன் கடலில் விளையாடியது அதைவிட மகிழ்ச்சி. அவனின் மகிழ்ச்சி கண்டு எங்கள் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது.

அமெரிக்காவில் உள்ள இந்தக் கடற்கரையின்  பெயர் "மலிபு". பார்க்க அழகான கடற்கரை.

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில்  "பாரடைஸ் கோவ்" என்ற  தனியாருக்குச் சொந்தமான ஓட்டல் உள்ளது.  அங்கிருந்து  கடலைப்  பார்க்கப்போவதற்கு
ஒரு ஆளுக்கு 36 டாலர் கொடுக்க வேண்டும். 
கடற்கரையின்  பெயர்  மலிபு
நம்மை வரவேற்கும் சீகல் பறவையும்  அழகான  பாரடஸ்  கோவ் 

கடலைப் பார்க்க அழைக்கும் அறிவிப்புப் பலகையும். 
கீழே தெரியும் மரப்பாலத்திலிருந்து கடலின் அழகைப் பார்க்கலாம் 
அங்கு உள்ள அறிவிப்பு பலகை.

கடற்கரையில்  மணலில் பேரன் விளையாடுவதைப் பார்வையிடும் தாத்தா

கடல் என்றாலே களிப்பு தானே!
சில் சில் என்று இருக்கு  ! வா வா ஆச்சி
கடல் அழகை ரசிப்பதா இந்தப் பறவைகள் செய்யும்  செயல்களைப் பார்ப்பதா ?என்ற நினைவுகள் எழும்,  இருட்டுவதற்குள் கடலைப் பார்வையிட வேண்டும்.

நீண்ட அழகிய கடற்கரையில்  நடந்து போவதே சுகானுபவம்.

நம் ஊர் மீனவர்கள் இந்தப் பறவையை" நீர்க் காகம் "என்கிறார்கள்.. விமான விபத்துகள் அடிக்கடி  இந்தப் பறவைகளால் ஆகுமாம்.
கடலில் மிதந்து கொண்டே மீன்களைச் சாப்பிடுவதுடன்  நாம் சாப்பிடும் உணவையும்   விரும்பிச் சாப்பிடுகிறது.

மீன் கிடைத்து விட்டதோ!

எங்கே ! இத்தனை வேகத்துடன் கத்திக் கொண்டு ஓட்டம்?

ஓ ! பிஸ்கட் தருகிறார்கள்  ஒரு அம்மா . அதுதான் இத்தனை ஓட்டம், குதூகலம்.
திடீரென்று பாய்ச்சல் கடலில்
என்ன கிடைக்கும் என்ற பார்வை

கொக்கு போல் ஒற்றைக் காலில்
உனக்கும் என் பேர்தான்  எங்க நாட்டில்    என்று கூறிவிட்டு  ராஜநடை நடக்கிறதோ காகம்.

மாலையில் காக்கைகளும் நிறைய வர ஆரம்பித்தன  காக்கை உள்ள படங்கள் நிறைய இருக்கிறது. எங்கள் பிளாக் போல ஞாயிறு படங்கள் பகிரலாம் 
கடல் அழகை பார்க்கக் குடையின் கீழே
ஆசனங்கள் போட்டு இருக்கிறார்கள் ஓட்டல்காரார்கள்.   குடையின் மேல் அமர்ந்து நம்மைப் பார்க்கும் சீகல் பறவை.

ஒட்டல் உள்ளே ஆர்டர் செய்துவிட்டு வெளியில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்றால் சீகல் பறவைகள் தொந்திரவால் உள்ளேயே  சாப்பிட்டோம்.
அசைவப் பிரியர்களுக்குத் தான் அங்கு நிறைய உணவுகள். (கடல் உணவுகள்.)
எங்கள் எல்லோருக்கும்  ஜூஸ்,  ,ஃப்ரெஞ்ச் ஃப்ரை தான்

ஓட்டலின் பின் புறம்



ஓட்டலின் முன்புறம்

வானமும் கடலும் அழகிய தோற்றம்
மரப்பாலத்திலிருந்து எடுத்த படம்.
நீண்டு போய்க் கொண்டே இருக்கிறது கடல்
பயமே இல்லை  எனக்கு

வித்தியாசமான சீகல் வகை
மாலைச் சூரியன்  எதிர் கட்டிடங்களை  மஞ்சளாக்கியது
மஞ்சள் வெயில் மாலை

பேரன்," அலையே ! சற்று நேரம் நில் !ஆச்சியைத் தாத்தா போட்டோ எடுக்கிறார்கள் "என்று சொல்கிறான்.

முதல் படத்தில் தெரியும் கப்பல் தான் ஜூம் செய்து எடுத்தேன் மரப் பாலத்திலிருந்துபாய் மரக் கப்பலை

பழமையான மணி 1818 ல் செய்யபட்டது. ஓட்டலின் முன்புறம் இருந்தது.

மணியில் நாதம் ஒலிக்க நாக்கு இல்லை.


இது சொர்க்கத்துக்கு 
அழைத்து செல்லும் அற்புத மணியாம்

மனதில் வேண்டிக் கொண்டு  இந்த மணியைத் தடவி கொடுத்தால்  நினைத்தது நடக்குமாம். சொர்க்கம் கிடைக்குமாம். வேண்டுதல் நிறைவேறினால் சொர்க்கம் தானே!  


எல்லோர் வாழ்விலும் கவலைகள் ஒழிந்து ஆனந்த அலை பரவட்டும்  என்று வேண்டி வந்தேன்.
                                                       வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------