வலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மாலைச்சூரியன்


கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்


//இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். //
ஆவணி மாதத்தில் சூரிய வழிபாடு செய்யப் போகலாம் இந்த கோயிலுக்கு.நான் எழுதிய பதிவைப் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

ஓவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு. ஆவணி மாதம் ஞாயிறுக்குச் சிறப்பு.
 எங்கள் பக்கம் (திருநெல்வேலி) ஒவ்வொரு  ஆவணி ஞாயிறு அன்றும் சூரியனுக்குப் பொங்கல் வைப்பார்கள். ஆவணி ஞாயிறு  அம்மன்களுக்கு கோயிலில்களில் விஷேச பூஜைகள் நடைபெறும்.

ஞாயிறு விரதம் இருந்தால் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம்,
ஆவணி ஞாயிறு விரதம் இருந்தால் மேலும் சிறப்பு என்பார்கள்.

ஆவணி 3 ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆவணி மாதம் 24 ஆம் தேதி வியாழன் வரை  மீனாட்சி கோயிலில் திருவிழா. ஒவ்வொரு நாளும் திருவிளையாடல் புராணத்தில்    உள்ள  (வரும் லீலைகள்)  முக்கியமான கதைகள் காட்சியாக  நடத்தபடும்.


முதல் நாள்   -   கரிக்குருவிக்கு  உபதேசம் செய்த லீலை

இரண்டாம் நாள்   -  நாரைக்கு முக்தி கொடுத்தது

மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை

நான்காம் நாள் -தருமிக்குப் பொற்கிழி கொடுத்த லீலை

ஐந்தாம் நாள் -கடும் வறுமையிலும் தவறாமல்  மகேஸ்வரபூஜை செய்த
சிவ அடியார் நல்லான்,தருமசீலா தம்பதியருக்கு உலவாக்கோட்டை அருளிய லீலை.

ஆறாம் நாள் - குருவுக்குத் துரோகம் புரிந்த சீடனின் அங்கங்களை  அவனுடன் வாள் போர்புரிந்து அவனின் அங்கங்களை வெட்டிய லீலை

ஏழாம் நாள் - வளையல் விற்ற லீலை
இந்த நாளில் சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும்.  இதையொட்டி மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும். மாலை பட்டாபிஷேகம்.

எட்டாம் நாள் - நரிகளைப் பரிகளாக்கிய லீலை
மாணிக்கவாசகருக்காக  நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்த லீலை.

ஒன்பதாம் நாள் - பிட்டுக்கு மண் சுமந்த லீலை.
மண்ணைப்படைத்தவர் மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை

பத்தாம் நாள் பாணபத்திரர் என்ற பக்தருக்கு அருளவும், கர்வம் கொண்ட பாகதவருக்குப் பாடம் புகட்டவும் இறைவன்  விறகு வெட்டியாக வந்து விறகு விற்ற லீலை.

பதினொன்றாம் நாள் - சட்டத்தேர்
ஈசன் அரசனாக வலம் வரும் நாள்

பன்னிரண்டாம் நாள் -  தீர்த்தவாரி
தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவு பெறும்.

நான் வளையல் விற்ற லீலை, பிட்டுக்கு மண்சுமந்த லீலை இரண்டும் பார்த்து இருக்கிறேன். போன வருடம்.

இனி, பதிவில் வந்த மாலைச்சூரியனைப் பற்றிப் பார்ப்போம்.

அதிகாலை சூரியன்  அழகு என்றால், மாலைச்சூரியன்  அதைவிட அழகு.
மலை வாயிலில் மறையும்  போது இன்னும் அழகு. கடற்கரையில் அஸ்தமனமாகும் போது அழகு .

காலை உதயத்தையும்,   மாலை அஸ்தமனத்தையும் பார்க்கக் கடற்கரையில் கூடும் கூட்டம்  உண்டு. பலரும் பார்த்து இருப்பீர்கள் தானே!


மனித வாழ்விற்கு  சூரிய ஒளியும் தேவை என்கிற  கவிதையை இன்று கே.பி. ஜனா சார் தன் முக நூலில் பகிர்ந்து இருந்தார்.  சூரியனைப்பற்றிய இந்த பதிவுக்கு  நன்றாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டேன் .

நன்றி: ஜனா சார்.


//சும்மா வாழ்வது மட்டும் போதாது. ..
சூரிய ஒளியும் சுதந்திரமும் 
சின்ன மலரொன்றும் வேண்டும் 
ஒரு மனிதனுக்கு.//

<>...
- Hans Christian Anderson
('Just living is not enough... one must have 
sunshine, freedom and a little flower.')

மெல்ல விடியும் பொழுது பதிவில் காலைச்சூரியன் காட்சி இருக்கிறது.



மெல்ல மெல்ல விடியும் வைகறைப்
 பொழுதில்    காலைச் சூரியன் இருக்கிறது
அதனால் இந்தப் பதிவில் மாலைச்சூரியன் மட்டும்.



Image may contain: sky, outdoor and nature
மாலைச் சூரியன் காட்சிகள்
தம்பிவீட்டு மொட்டை மாடியில் எடுத்த படங்கள்.


Image may contain: sky, twilight, outdoor and nature
மாலைச்சூரியன் உடலுக்கு  'டி விட்டமின் தரும்.  டி விட்டமினை எந்த மருந்து மாத்திரைகளும் தராது. மாலை நேரம் சூரிய ஓளியில், விளையாடுவது நல்லது.   மாலைச் சூரிய ஒளியில் நடப்பதும் நல்லது.
Image may contain: sky
மெல்ல மெல்ல கீழே இறங்கிக் கொண்டு இருக்கும் சூரியன்

No automatic alt text available.

Image may contain: sky, twilight, outdoor and nature
No automatic alt text available.
மாடியிலிருந்து மாலைச்சூரியன் மறையும் வரை எடுத்த படங்கள்.


மயிலாடுதுறையில் இருந்தபோது அந்த வீட்டு மொட்டை மாடியிலிருந்து மாலைச்சூரியனை எடுத்த படங்கள்.







வானமெங்கும் பரிதியின்  சோதி (பாரதி)

மாலைச் சூரியன் தென்னை மரத்திற்கு அலங்கார விளக்கு போட்டு இருக்கிறது.


தருக்களின்  மீதும் பரிதியின் சோதி (பாரதி)


மலைகள் மீதும் பரிதியின் சோதி (பாரதி)

மலைவாயில் போகும் மாலைச்சூரியன் (நார்த்தா மலை)

திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள்   மணிராஜ் என்ற வலைத்தளம் வைத்து  தெய்வீக பதிவுகளை எழுதிக் கொண்டு இருந்தார்கள்.

பண்டிகைகள்  ஒன்றையும் விடாமல் பதிவு செய்து விடுவார், பண்டிகைகள் வரும் போது அவர் நினைவு வந்து விடும்.

அவர்கள்  எழுதிய 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' பதிவை படித்துப் பாருங்கள்.  படித்து இருப்பீர்கள் இருந்தாலும் மீண்டும் படிக்கலாம் ஞாயிறின் சிறப்பை.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்  திருமதி .ரஞ்சனி நாராயணன் அவர்கள் பதிவில்  சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள்  மங்கலமாய் இயற்கையை. சூரியனை, மழையைப் பாடிப் பின் கதையைச் சொல்வதைச் சொல்கிறார்.

பின் சூரிய சக்தியை நம் நாட்டில் நல்ல முறையில் பயன்படுத்தி மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கலாம். மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க ஓரே தீர்வு  சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது தான்.

சோலார் பெனல்களை அமைப்பது எப்படி?
சோலார் சக்தியின் நிறைகள்:
சோலார் சக்தியின் குறைகள்:

என்று அனைத்தையும் பற்றி விரிவாக சொல்லி சூரியனை வாழ்த்தி நிறைவு செய்கிறார், படிக்க வில்லை என்றால், நேரம் இருந்தால் படிக்கலாம்.


நாங்கள் கைலாயம் போனபோது நிறைய இடங்களில் சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் இருந்ததையும், விடுதிகளில் விளக்குகள் இருந்ததையும் பார்த்தோம். மாலை ஆறுமணியிலிருந்து இரவு ஒரு மணிவரை அந்த விளக்குகள் எரியும். அப்புறம் நாம் கொண்டு போய் இருக்கும் டார்ச்சு தான் நமக்குத் துணை. 

அந்த இடத்தின் பெயர் தார்ச்சென் 
   



குளிர்ப் பிரதேசங்களில் குறைவான நேரம் தான் சூரிய ஓளி கிடைக்கும் அதை அவர்கள் முறையாகப் பயன்படுத்தும் போது வெப்ப நாட்டில் இருக்கும் நாம் அதிகம் பயன்படுத்தலாம்.

கற்கை நன்றே என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் 


சோலார் பவரும் என் அனுபவங்களும் - என்று நாலு பதிவுகளும் எழுதி இருக்கிறார்.



'கபீரின் கனிமொழிகள்' என்ற வலைத்தளத்தில் ஆன்மீகப் பதிவுகளும் எழுதுவார் அருமையாக.


இதில்  கபீர்தாஸ், சிவ வாக்கியர், பகவத்கீதை  இவற்றிலிருந்து
 சிலவற்றைப் பகிர்ந்து இருப்பார். நன்றாக இருக்கும். படித்துப் பாருங்களேன்.


நான் எடுத்த சூரியனின் படங்களுடன்  சூரியனைப் பற்றி அருமையாக  நிறைய பேர் எழுதிய பதிவுகளில்  நான் படித்த பதிவுகளையும்  இங்கு கொடுத்து இருக்கிறேன்.

                                              வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------