இன்று எங்கள் வீட்டுக்கு எண்ணங்கள் வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி . கீதா சாம்பசிவம் அவர்கள் துணைவருடன் வந்து இருந்தார்கள்.
கண்ணனுக்காக
சாப்பிடலாம் வாங்க
பேசும் பொற்சித்திரமே
என் பயணங்களில்
ஆன்மீக பயணம்
எண்ணங்கள்
என்று ஆறு வலைதளங்களில் சளைக்காமல் எழுதி அசத்துபவர்.
எல்லோரிடமும் அன்புடன் உரிமையுடன் பேசும் நேசமானவர்.
முகநூலிலும் அசத்தி வருகிறார்.
இன்று அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருவதாய் நேற்று சொன்னார்கள். நண்பர் ஸ்ரீராமிடம் போன் நம்பர் வீட்டு முகவரி வாங்கி வீட்டுக்கு வந்து விட்டார்கள். ஸ்ரீராமுக்குநன்றி.
இன்று காலை மீனாட்சி தரிசனம் முடித்து எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள். அவர்களை முதன் முதலில் பார்த்தாலும் வலைத்தளம் மூலம் பல ஆண்டுகள் பழகியதால் சந்திப்பு சரளமாய் இருந்தது.
அவர்கள் நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையிலும் எங்கள் வீட்டுக்கு வந்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. திரு, சாம்பசிவம் சாரும் எங்கள் சாரிடம் கல கல என்று நன்கு பேசினார்கள். எங்களை அவர்கள் வீட்டுக்கு வரும் படி அழைத்து சென்றார்கள்.
பதிவர்கள் சந்திப்பு அடிக்கடி நடந்து இருக்கிறது கீதா அவர்கள் வீட்டில். அவர்கள் வீட்டில் சந்திப்பு நடந்த நிகழ்வுகளை நணபர்கள் அவர் அவர் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதை எல்லோரும் படித்து இருப்பீர்கள்.
இன்று ஸர்வ ஏகாதசி. ராமநாமம் சொன்னால் நல்லது என்பார்கள். கீதா வீட்டுக்குள் வந்தவுடன் என்னிடம் ராமர் பட்டாபிஷேக படம் என்று சொல்லி கொடுத்தார்கள் , மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னிடம் அந்த படம் இல்லை. அவர்கள் வீட்டு பூஜை அறையில் ராமர் பட்டாபிஷேக படம் வைத்து இருப்பார்கள், ராமநவமி பதிவுகளில் பார்த்து இருக்கிறேன் பழமையான படம் மிக அழகாய் இருக்கும். நிறைய படங்களை மாட்ட இடம் இல்லை இந்த வீட்டில் சாமி படங்கள் எல்லாம் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. பூஜை செய்யும் போது மானசீகமாய் அவற்றிற்கு பூஜை செய்து கொள்வேன். அப்படியும் ராமர் வந்து விட்டார் வீட்டுக்கு என்றால் நல்லது தானே!
//நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்.//
- கம்பராமாயணம்..
இனி நடப்பது எல்லாம் நன்மைதான் என்று மனம் சொல்கிறது.

அவர்களின் பயணம் இனிதாக வேண்டும்.
வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------------------------