குடும்ப உறவுகள் பற்றி நிறைய பேசி இருந்தார் உறவுகள் என்ற தன் பதிவில் திரு. ஜி.எம் .பாலசுப்பிரமணியம் சார். குடும்ப உறவுகளைப் பற்றி பெண்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி எங்களை அழைத்து இருக்கிறார்.
பேணுவது பெண். உறவுகளைக் காலம் காலமாய்ப் பேணி வருவது பெண் தான்.அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நடைமுறை வேறு, அறிவுரை சொல்வது வேறு என்று இல்லாமல் குடும்பத்தில் பெரியோர் நடந்து காட்டிய பாதையில் நடந்து வருகிறோம்.
என் அப்பா குடும்பம் பெரிய குடும்பம். அண்ணன் தம்பிகள் எட்டு பேர், அக்காள், தங்கை மூன்று பேர். என் பெற்றோர்கள் அவர்களுடன் நல்லுறவுடன் இருந்து வந்தார்கள். இன்றும் என் தாய் தந்தையர் மறைந்த பின்னும் அப்பாவழி சொந்தங்கள் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லது கெட்டதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் கலந்து கொள்கிறோம்.
என் அம்மா குடும்பம் நான்கு பேர் அதில் , பெரியம்மா, பெரியமாமா எல்லாம் சிறு வயதில் நாங்கள் பிறக்கும் முன்பே இறந்து விட்டார்கள். பெரியமாமாவின் குழந்தைகளை என் அம்மாவும், சின்ன மாமாவும் பார்த்துக் கொண்டார்கள். சின்ன மாமா இன்றும் எங்கள் குடும்பத்திற்கு உறவாய் இருக்கிறார்கள். அவர்கள் தன் அக்காளின் பேரக்குழந்தைகளின் கல்யாணத்திற்கும் திருவனந்தபுரத்திலிருந்து வந்து மகிழ்ச்சியாக கலந்து கொள்கிறார்கள். மாமாவின் மகள், மகள் வயிற்றுப் பிள்ளைகள் எல்லோரும் நட்புறவாய் இருக்கிறோம்.
முன்பு கடிதப் போக்குவரத்து , தொலைபேசி, இப்போது விஞ்ஞானம் தந்த அருட் கொடையால், ஸ்கைப், வாட்ஸப்பில் உறவுகள் இன்னும் பலப்படுகிறது. அப்பாவழி சொந்தங்களுக்கு ஒரு குரூப், அம்மாவழி சொந்தங்களுக்கு ஒரு குரூப் அமைத்துக் கொண்டு அவர்களிடம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம்.
எங்கள் பிள்ளைகளும் வெளி மாநிலத்திலும், வெளிநாட்டில் இருந்தாலும் அவர்களும் தங்கள் பெரியப்பா, சித்தப்பா, மாமா, சித்திகளுடனும், அவர்கள் குழந்தைகளுடனும் உறவாடி வருகிறார்கள். அவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு வந்து செல்கிறார்கள். அவர்களும் வாட்ஸப்பில் குரூப் அமைத்துப் பேசிவருகிறார்கள். அவர்கள் ஊர்களுக்கு வரும் போது முடிந்தவரை அனைவரது வீட்டுக்கும் சென்று நலம் விசாரிக்கிறார்கள். அவர்கள் வரும் போது நடக்கும் விழாக்களில் கலந்து கொள்கிறர்கள். இதற்கு மேல் அவர்களிடம் நாம் எதிர்பார்க்கக் கூடாது.
என் கணவரின் கூடப்பிறந்தவர்கள் எல்லோரும் ஆண்கள் தான், ஆனால் சின்னமாமனார் வீட்டுப் பெண்குழந்தைகள் (நாத்தனார்) அவர்களுடன் நல் உறவுடன் இருக்கிறோம். என் பிள்ளைகளும் சின்னதாத்தா வீட்டு பிள்ளைகள் சித்தப்பாக்கள், அத்தைகளுடன் அவர்கள் பிள்ளைகளுடன் உறவாடி மகிழ்கிறார்கள்.
என் உடன்பிறந்தவர்கள் அக்கா, அண்ணன், தம்பி, தங்கைகள் என்று பெரிய குடும்பம். அவர்களுடன் நல் உறவுடன் இருக்கிறோம்.
என் அம்மா சொல்வார்கள், முன் ஏர் போகும் பாதையில் பின் ஏர் போகும் என்று. நாம் எப்படியோ அப்படித்தான் நம் பிள்ளைகள் இருப்பார்கள்.
ஏர் பத்தி தெரியாதவர்களுக்கு இப்போது அடிக்கடி சொல்லும் வார்த்தை பெற்றோர்கள் ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று.
எங்கள் அப்பாவின் வீட்டில் எல்லோரும் அரசாங்க உத்தியோகம், காவல்துறை, சுங்கதுறை, வக்கீல்கள்,என்று. தாத்தாவும் காவல்துறையில்
உயர்பதவியிலிருந்து ஓய்வு பெற்று இறைவனடி சேர்ந்தார்கள். எல்லோரும் வேறு வேறு ஊர்களில் தான். சின்னப்பெரியப்பா மட்டும் சொந்தத் தொழில் என்பதால் பாட்டியுடன் இருந்தார்கள். பாட்டி சாகும் வரை மகிழ்ச்சியாக எல்லா மகன் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். என் சித்தப்பாவீட்டில் இருந்தபோது பாட்டி இறந்து போனார்கள்.
என் மாமனார் .மாமியாருக்கு ஐந்து மகன்கள் . எல்லோரும் வெவ்வேறு ஊரில் வேலை பார்க்கிறார்கள். நாள் கிழமைகளில் எல்லோரும் மாமியார் வீட்டில் கூடிப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழ்வோம். இப்போது மாமனார் தன் 105 ஆவது வயதில் இறந்து போனார்கள் அத்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அனைவரும் மாற்றி மாற்றிச் செய்து வருகிறோம்.
உறவுகள் பலப்பட முன்னோர் செய்த ஏற்பாடுகள்:-
ஒரு திருமணம் என்றால் மணப்பெண்ணின் சகோதரனுக்கு, மணமகனின் சகோதரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்கள் பக்க வழக்கத்தின்படி பெண்ணின் நாத்தனார்க்குச் சடங்குகளில் முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது, கல்யாணத்திற்கு முன் செய்யும் சடங்கிலும், திருமணத்திற்கு பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை கட்டி விடுவது , மூன்று முடிச்சில் ஒரு முடிச்சு போடுவது, அதன் பின் வரும் அனைத்து சடங்கிலும் அவள் பங்கு பெரிது.
சொந்தநாத்தனார் இல்லையென்றாலும், சின்னமாமனார் அல்லது பெரியமாமனாரின் பெண் அந்த சடங்குகளுக்கு வருவாள். மறுநாள் அவளுக்கு ’நாத்தனார் பலகாரம்’ என்று தனியாகக் கொடுக்கப்படும். ஒவ்வொரு சடங்கையும் அவள் செய்யும் போது அவளுக்கு ’நாத்தனார் சுருள்’ என்று பெண்வீட்டாரால் பணம் கொடுக்கப்படும்.
அது போல் பெண்ணின் சகோதரனுக்கு மாப்பிள்ளை அழைத்து வருவது, கல்யாணப் பந்தலில் பொரி இடுவது, மற்றும் இரவு நலுங்கு வைப்பது,மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவது என்ற சடங்குகள் உண்டு, அதற்கு மாப்பிள்ளை வீட்டில் துணிமணிகொடுத்து மோதிரம் போடுவார்கள். பெண்ணிற்கு உடன்பிறந்தவன் இல்லையென்றால், பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் உதவுவார்கள். இதற்கு குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் முடியும்.
அடுத்து, குழந்தைப் பேறு. இதில் முதல் உரிமை கணவனின் சகோதரிக்கு. குழந்தைக்கு அத்தை காப்பிடவேண்டும். அப்புறம் தான் மற்ற உறவுகள் நகை அணிவிப்பார்கள்.
அதற்கு அடுத்து மொட்டையடித்து காது குத்துதல் . அதற்குப் பெண்ணின் சகோதரனுக்கு முதல் உரிமை. அவனுடைய மடியில் அமர்த்தித்தான் மொட்டையடித்தல், காது குத்துதல். அவனுக்குத்தான் முதல்மரியாதை. அப்புறம் தான் மற்றவர்கள்.
பின். பெண்குழந்தை பூப்பு அடையும் போது, கணவனின் சகோதரி முதல் தண்ணீர் விடுவாள், சடங்கின் போது மாமன் தரும் புடவை, அல்லது சிற்றாடையைத் தான் முதலில் கட்டுவாள் . மாமன் சீர் முக்கியம். அத்தைமகள், அல்லது அத்தையை மாப்பிள்ளை மாதிரி பக்கத்தில் உட்கார்த்தி வைத்து சடங்குகள் செய்வார்கள்.
பெண் பிறப்பு முதல் இறப்பு வரை இரு வீட்டு உறவுகளும் வேண்டும். அதன் படி தான் சடங்குகளை அமைத்து ஒற்றுமையாக இருக்க வைத்திருக்கிறார்கள். தன் அக்காள், தங்கைகளுக்கு பொங்கல், தீபாவளி , கார்த்திகை என்றும் செய்ய வேண்டும். அவளின் மாமனார், மாமியார் தவறிப் போனால் அவர்களுக்குச் சாவு வீட்டிலும் சடங்குகள் இருக்கிறது. அவள் இறந்து போனாலும் பிறந்தவீட்டுக் கோடி போட்டபின் தான் மற்றவர்கள் போடலாம்.
இப்படிப் பிறப்பு முதல், இறப்பு வரை உறவுகளைப் பின்னிப் பிணைத்து வைத்தி ருக்கிறார்கள்.
நா. பார்த்தசாரதி அவர்கள் ”வலம்புரிச்சங்கு” என்ற கதையை எழுதியிருக்கிறார், அந்தக் கதையில் கடலில் மூழ்கி வலம்புரிச் சங்கு எடுப்பவர் ஆழமாக போகவேண்டும் .அதை எடுக்கப் போகும்
ஆளின் வயிற்றில் கயிறைக் கட்டி கயிறின் மறுமுனையை மேல் இருக்கும்
ஆளிடம் கொடுப்பார்களாம். அது யார் என்றால் சங்கு எடுக்கப்போயிருக்கும் ஆளின் மச்சினன் தான். தன் சகோதரியின் வாழ்வு அவன் கையில் தான் இருக்கிறது. சகோதரியின் வாழ்வை எண்ணி அவன் அதைப் பத்திரமாய் பிடித்துக்கொள்வான் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.
விதிவிலக்குகள் இருக்கலாம், குடும்பத்தில் பகைமை பாராட்டிக் கொண்டு அண்ணன், தம்பி வரப்பு தகராறு, மாமன், மச்சான் சொத்து பிரச்சினை என்று
சகோதர சகோதரிகளுக்கு இடையில் உறவு சுமுகம் இல்லாமல். அதை ஏன் நாம் பேச வேண்டும்? அது மாதிரியான செய்திகள் மகாபாரத, இராமாயண காலத்திலும் உண்டு. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் உறவுகளின் மேன்மையை புரிந்து கொள்வார்கள்.
இந்தக் காலத்தில் கூட்டுக் குடும்ப முறை சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் , ஒவ்வொரு நாட்டில் பணி நிமித்தமாய்
செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. நாள் கிழமைகளில் கூடிக் கொண்டு, நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு அன்பாய் உறவாடி இருந்தாலே போதும்.
முதியோர்கள் தனியாகத்தான் இருக்க வேண்டி உள்ளது. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். கூடவே தாய், தந்தையரை வைத்துக் கொள்பவர்களாக இருந்தாலும் இப்போது பெரும்பாலும் கணவன், மனைவி வேலைக்குப் போகிறார்கள். அவர்கள் தனியாக வீடுகளில் வயதான பெற்றோர்களை விட்டுப் போவதும் பாதுகாப்பற்றதாகும். அதற்கு அக்கம் பக்கத்தில் நல் உறவுடன் இருந்தால் பயமில்லை.இல்லையென்றால் அதுவும் பயம் தான்.
எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வசதியானவர், குழந்தைகள் உண்டு. ஆனால் மகளும், மருமகனும் வேலைக்குப் போகிறார்கள், பெரிய வீட்டில் தனியாக இருக்க முடியாது என்று முதியோர் இல்லத்தில் சகல வசதிகளுடன் இருக்கிறார்கள். அவர்களை ஏன் இப்படி தனியாக இருக்க வேண்டும் ? என்று கேட்டால், ”தனியாக இல்லையே! நிறைய பேருடன் பயமில்லாமல் இருக்கிறேன், விடுமுறை நாளில் மகள் வந்து அழைத்து போவாள், அங்கு
குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக் இருந்து விட்டு பிறகு இங்கு வந்து விடுவேன் என்கிறார்கள். சில நேரங்களில் இது போன்ற புரிதலும் அவசியம்.

கதம்பசரத்தில் கட்டப்படும் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு , தனித் தன்மை உண்டு. அது போல் குடும்பம் ஒரு கதம்பம், ஒவ்வொரு மனிதர்களும் குணநலனில் வித்தியாசப்படுவார்கள். அவரவர்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. அப்படி எல்லோரையும் அன்பு என்ற நாரால் கட்டிவைக்க முயலவேண்டும். எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு , விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை இருந்தால் குடும்ப உறவுகள் நலமாக இருக்கும்.
வாழ்க வளமுடன்.
--------------