மதுரையிலிருந்து சிவகங்கை சாலையில் 25 கி.மீ தூரத்தில் இருக்கிறது குன்றத்தூர். போன வருடம் (2016) போய் இருந்தோம். தொல்லியல் துறை பொறுப்பில் உள்ளது. குன்றத்தூர் உதயகிரீசுவரர் கோவில் அருகில் உள்ள மலைக்குகைகுள் இருக்கும் பைரவர் பற்றிக் கேள்விப்பட்டு தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் தரிசனம் செய்யலாம் என்று போனோம். அங்கு சமணப்படுக்கையும், பிராமிக் கல்வெட்டுக்கள், முருகன் கோவிலும் இருக்கிறது.
நாங்கள் போன போது நிறைய கூட்டம் வந்து இருந்தது , எல்லோரும் மதுரையிலிருந்து ஒரு குழுவாய் சேர்ந்து வந்து இருந்தார்கள்.
இக் கோவிலைப்பற்றி மேலும் விவரம் தெரிந்து கொள்ள டாக்டர் சுபாஷினி அவர்களின் காணொளியைப் பார்க்கலாம்.()
கிழக்குத் திசை நோக்கி இருக்கும் சிவன்- வாயிலில் துவாரபாலகர்கள்
நந்தி பிற்காலத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.. தூணில் தாமரைப் பூ விரிந்த நிலையில் இருக்கிறது.
இவர்தான் இந்த கோவில்களைப் பார்த்து கொள்கிறார், மேலே இருப்பவர்களைப் பற்றி கடைசிக்கோவில் போகும்போதுதான் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
சதுர வடிவ ஆவுடையாருடன் சிவலிங்கம்
இரண்டு கைகளுடன் நின்ற நிலையில் விநாயகர் சிலை -முற்றுபெறவில்லை
பக்கத்தில் இயற்கை சுனை நீர்
சமணக்குகை செல்லும் பாதை
உள்ளே சமணப்படுக்கை
மலைக் குகைக்குள்
கீழே குனிந்து போக வேண்டும்
சமணப்படுக்கைகளில் இப்போது சாமான்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கோபாலன் போல் என்னவர்
நாங்கள் அமர்ந்து இருக்கும் இடத்தில் ஆடுபுலி ஆட்டம், பாதங்கள் எல்லாம் வரையப்பட்டு இருக்கிறது.
மலைக்குகைகுள், பைரவர், முருகன், பெருமாள், சிவன் எல்லோரும் இருக்கிறார்கள்
இந்தக் கோவிலுக்கு வரும் பாதையில் அழகான மரக் குகை போன்ற தோற்றம் அளிக்கும் மரக்கூடாரம்.
வாழ்க வளமுடன்!