அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
இந்த பதிவில் எங்கள் வீட்டு கண்ணன்கள் மற்றும் பாடல்கள் இடம் பெறுகிறது.
என் அண்ணன்பேத்தி
தங்கை பேத்தி
பெரிய தம்பி பேத்தி 6 மாத குழந்தை
இப்போது அவள் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடனம் வைலட் கலர் பாவாடை போட்டு முன் வரிசையில் ஆடுகிறாள்
சின்ன தம்பி பேத்தி மதுரை கோயிலில்
வரலட்சுமி விரத விழாவிற்கு அழைத்த வீட்டில் தசாவதார சிலைகள் வைத்து இருந்தார்கள் கீழ் தட்டில் கண்ணன் இருப்பது தெரிகிறதா?
சாய் பஜனைக்கு கூப்பிட்டவர்கள் வீட்டில் கண்ணன் சிலை தோட்டத்தில் இருந்தது.
டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே! "பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல்
இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.
டி.எம் .எஸ்பாடிய பாடலை புல்லாங்குழல் இசையில்
கண்ணன் ஜெயபிரகாஷ் அவர்கள் பாடி இருக்கிறார்கள்
இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.
ராமு படத்தில் சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய "கண்ணான் வந்தான் மாய கண்ணன் வந்தான்" இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி. மிகவும் அருமையான பாடல் வரிகள் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும்.
அதே பாடல் ரேவதி கிருஷ்ணா அவர்கள் வீணை இசையில் வாசித்து இருக்கிறார்கள் நன்றாக இருக்கும்.இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.
எனக்கு இரவு நேரம் தூக்கம் வரவில்லை என்றால் வீணை மற்றும் , புல்லாங்குழல் இசை கேட்பேன். ரேவதி கிருஷ்ணா வீணையில் வாசித்த "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" பாடல் மிகவும் பிடிக்கும். மனம் அப்படியே லேசாகி விடும்.
கேட்டு பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும். கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த பாடலை ஐஸ்வரியா , செளந்திரியா இனிமையாக பாடி இருக்கிறார்கள்
இந்த கன்னட பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.
பாடல் தமிழில்:-
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்
வேகமாய் வாராய் திருமுகத்தை காட்டுவாய் (கிருஷ்ணா)
கால்களில் கொலுசோடும் கைகளில் ரத்தின வளையோடும்
நீல வர்ணத்தில் இருப்பவனே நாட்டியம் ஆடியவாறே வாராய் (கிருஷ்ணா)
இடுப்பில் ஒட்டியாணமும் விரல்களில் மோதிரமும்
கழுத்தில் வைஜயந்தி மாலையும் அணிந்தவனே (கிருஷ்ணா)
பட்டு பீதாம்பரம் அணிந்து கையில் குழலோடு
உடலெங்கும் சந்தனத்தை அணிந்தவனே (கிருஷ்ணா)
உடலெங்கும் சந்தனத்தை அணிந்தவனே (கிருஷ்ணா)
தாய்க்கு வாயில் உலகத்தை காட்டிய
இந்த உலகத்தை காப்பாற்றுபவனே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)
இந்த உலகத்தை காப்பாற்றுபவனே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)
ராதையுடன் கண்ணன் ( சாய் கோயில்)
மதுரையில் போன ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி
கண்ணன் பெருமான் அனைவருக்கும் எல்லா நலன்களையும் அருள வேண்டும். மகிழ்ச்சியை , அமைதியை வழங்கட்டும்.
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------









கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். கிருஷ்ணன் வேடமிட்ட குழந்தைகள் கவர்கிறார்கள். என் அண்ணன் பேரன்தான் எங்கள் வீட்டு கிருஷ்ணன் கடந்த மூன்று வருடங்களாய். குடும்ப குழுமத்தில் அவன் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். கிருஷ்ணன் வேடமிட்ட குழந்தைகள் கவர்கிறார்கள். //
நன்றி
//என் அண்ணன் பேரன்தான் எங்கள் வீட்டு கிருஷ்ணன் கடந்த மூன்று வருடங்களாய். குடும்ப குழுமத்தில் அவன் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.//
அடுத்த வருடம் உங்கள் வீட்டு கண்ணன் வருவான். குடும்ப குழுவில்.
தசாவதார சிலைகள் வைத்திருக்கும் ஸ்டான்ட் வித்தியாசமாய் இருக்கிறது. தசத்துக்கும் மேலே இடங்கள் இருக்கின்றன அடுக்குவதற்கு!
பதிலளிநீக்கு//தசாவதார சிலைகள் வைத்திருக்கும் ஸ்டான்ட் வித்தியாசமாய் இருக்கிறது. தசத்துக்கும் மேலே இடங்கள் இருக்கின்றன அடுக்குவதற்கு!//
நீக்குஆமாம், பித்தளை, வெண்கல கலைப் பொருட்கள் அதில் இடம் பெற்று இருக்கிறது.
ஆமாம் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் பாடல் கண்கலங்க வைக்கும்.
பதிலளிநீக்குகருணை என்னும் கண்திறந்து பார்க்க வேண்டும்.
காவல் என்னும் கைநீட்டி காக்க வேண்டும்.
கனிமழலை குரல் கொடுத்து பாடவேண்டும்
கண்மறைந்த தாயும் அதை கேட்க வேண்டும்.
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் கொண்டு வருவாய் கண்ணா
வரிகள் மிகவும் ரசிப்பேன்.
//ஆமாம் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் பாடல் கண்கலங்க வைக்கும்.
நீக்குகருணை என்னும் கண்திறந்து பார்க்க வேண்டும்.
காவல் என்னும் கைநீட்டி காக்க வேண்டும்.
கனிமழலை குரல் கொடுத்து பாடவேண்டும்
கண்மறைந்த தாயும் அதை கேட்க வேண்டும்.
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் கொண்டு வருவாய் கண்ணா
வரிகள் மிகவும் ரசிப்பேன்.//
கனிமழலை குரல் கொடுத்து பாட வேண்டும் என்ற வரிகளை கேட்டவுடன் அப்போதே குழந்தை பேசிவிடுவான் அற்புதம் நடக்கும் என்று நினைப்பை உண்டாக்கும் பாடல் வரிகள். கண்ணதாசன் மிக அழகாய் பாடல் வரிகளை கதைக்கு ஏற்றார் போல எழுதி இருப்பார்.
கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலும் ரசனை. அதை ஹரிஹரன் கூட பாடி இருக்கிறார்!
பதிலளிநீக்கு//கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலும் ரசனை. அதை ஹரிஹரன் கூட பாடி இருக்கிறார்!//
நீக்குஆமாம். புல்லாங்குழல், வீணை இசையை கேட்டீர்களா?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
கண்ணன் வேடமிட்ட குழந்தைகளின் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//கண்ணன் வேடமிட்ட குழந்தைகளின் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன//
நன்றி.
பாடல்கள் கேட்டேன்.
பதிலளிநீக்குகண்ணன் வந்தான் பாடல்தான் மிகவும் பிடித்த பாடல்
//பாடல்கள் கேட்டேன்.
நீக்குகண்ணன் வந்தான் பாடல்தான் மிகவும் பிடித்த பாடல்//
ஆமாம், எல்லோருக்கும் பிடித்த பாடல்தான். பாடல்களை கேட்டது மகிழ்ச்சி.
அங்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தி போது ரேடியோவிலும், கேஸ்ட் போட்டு வீட்டிலும் கண்ணன் பாடல்களை கேட்டு மகிழ்வோம். மதுரா போய் விட்டு வாங்கி வந்த கண்ணன் பாடல்களை போட்டு கேட்போம். இப்போது யூடியூப்பில் கேட்டு மகிழ்கிறேன்.
கீதை படிக்கிறேன், பாடல்கள் கேட்கிறேன் எல்லாம் இறைவன் அருள்.
நீங்கள் கிருஷ்ண ஜெயந்தியின்போது அவலும், பாயசமும் வெண்ணெய் பழங்கள் மாத்திரம் வைத்து வழிபடுவீர்களா?
பதிலளிநீக்குசீடை முறுக்கு போன்ற பக்ஷணங்கள் செய்யும் வழக்கம் உண்டா?
//நீங்கள் கிருஷ்ண ஜெயந்தியின்போது அவலும், பாயசமும் வெண்ணெய் பழங்கள் மாத்திரம் வைத்து வழிபடுவீர்களா?
நீக்குசீடை முறுக்கு போன்ற பக்ஷணங்கள் செய்யும் வழக்கம் உண்டா?//
எங்கள் குடும்பத்தில் வழக்கம் உண்டு. சிலர் வடை, பாயாசம் மட்டும் வைப்பார்கள். அவல், தயிர், பால், வெண்ணைய் வைத்து வழிபடுவார்கள்.
நிறைய குழந்தைகள் எங்கள் வீட்டில் என் அப்பாவையும் சேர்த்து தான் சொல்கிறேன். எப்போதும் தேன்குழல், முறுக்கு, காராசேவ் , காரபூந்தி என்று அம்மா செய்து வைப்பார்கள். மாலை நேரபலகாரம் வெளியில் வாங்கு வது இல்லை அப்பா இருக்கும் வரை.
அப்படி இருக்கும் போது பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம் எல்லாம் செய்வார்கள். வெல்ல சீடை, உப்பு சீடை, தட்டை, முறுக்கு அப்பம் என்று அவல் இனிப்பு, காரம் எல்லாம் செய்வார்கள்.
வழி வழியாக செய்கிறோம். என் மருமகளும் நன்றாக செய்கிறாள்
பண்டிகை என்றாலே பண்டம் ஈகை தான், நிறைய செய்து அக்கம் பக்கம், உற்றார் , உறவினர்களுக்கு கொடுத்து விட குழந்தைகளும் இல்லை, முடியவும் இல்லை. அதனால் எளிமையாக வழிபாட்டை முடித்து கொள்கிறேன்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத்தமிழன்.
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா!.....
பதிலளிநீக்குபதிவு சிறப்பு...
நல்வாழ்த்துகள்...
வணக்கம், சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா!.....
பதிவு சிறப்பு...
நல்வாழ்த்துகள்...//
உங்கள் கருத்துக்கும் நல்வாழ்த்துகளுக்கும் நன்றி.
கிருஷ்ணராக குழந்தைகள் ஒவ்வொருவரும் மிக அழகு. தசாவதாரம், கெண்டி உட்பட அதே அளவிலான பொருட்கள் யாவும் ரசனையான சேகரிப்பு. ஆம், கீழ் தட்டில் கிருஷ்ணர் தெரிகிறார். பகிர்ந்த படங்களும் பாடல்களும் அருமை. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஒருவாறாக ப்ளாகரில் நேற்று ஏற்பட்டிருந்த கமெண்ட் இட முடியாத பிரச்சனை சரியாகி விட்டது:).
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//கிருஷ்ணராக குழந்தைகள் ஒவ்வொருவரும் மிக அழகு. தசாவதாரம், கெண்டி உட்பட அதே அளவிலான பொருட்கள் யாவும் ரசனையான சேகரிப்பு. ஆம், கீழ் தட்டில் கிருஷ்ணர் தெரிகிறார். பகிர்ந்த படங்களும் பாடல்களும் அருமை. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
ஒருவாறாக ப்ளாகரில் நேற்று ஏற்பட்டிருந்த கமெண்ட் இட முடியாத பிரச்சனை சரியாகி விட்டது:).//
ஆமாம், ஒருவாறாக ப்ளாகர் பிரச்சனை சரியாகி விட்டது நிம்மதி, மகிழ்ச்சி..
பதிவை ரசித்து படித்து வாழ்த்துகள் சொன்னதற்கும் , கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.