வெள்ளி, 4 செப்டம்பர், 2026

கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா !





அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.


இந்த பதிவில் எங்கள் வீட்டு கண்ணன்கள் மற்றும்  பாடல்கள் இடம் பெறுகிறது.

பேரன் கவின் சிறு வயதில்
 

என் அண்ணன்பேத்தி 

தங்கை பேத்தி



வரலட்சுமி  விரத விழாவிற்கு அழைத்த  வீட்டில் தசாவதார சிலைகள் வைத்து இருந்தார்கள்  கீழ் தட்டில் கண்ணன்  இருப்பது தெரிகிறதா?



சாய் பஜனைக்கு கூப்பிட்டவர்கள் வீட்டில் கண்ணன் சிலை தோட்டத்தில் இருந்தது.




டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே! "பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல்

இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.





டி.எம் .எஸ்பாடிய பாடலை புல்லாங்குழல் இசையில்
கண்ணன் ஜெயபிரகாஷ்   அவர்கள் பாடி இருக்கிறார்கள்

இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.





ராமு படத்தில் சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய  "கண்ணான் வந்தான் மாய கண்ணன் வந்தான்"   இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி. மிகவும் அருமையான பாடல் வரிகள்  கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும்.




அதே பாடல் ரேவதி கிருஷ்ணா அவர்கள்  வீணை இசையில் வாசித்து இருக்கிறார்கள் நன்றாக இருக்கும்.இந்த பாடலை  யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.

எனக்கு இரவு நேரம் தூக்கம் வரவில்லை என்றால் வீணை மற்றும்  , புல்லாங்குழல் இசை கேட்பேன்.  ரேவதி கிருஷ்ணா வீணையில்    வாசித்த "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" பாடல் மிகவும் பிடிக்கும். மனம் அப்படியே லேசாகி விடும்.

கேட்டு பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.  கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
 



இந்த பாடலை ஐஸ்வரியா , செளந்திரியா இனிமையாக   பாடி இருக்கிறார்கள்
இந்த கன்னட பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.


பாடல் தமிழில்:-

கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்
வேகமாய் வாராய் திருமுகத்தை காட்டுவாய் (கிருஷ்ணா)


கால்களில் கொலுசோடும் கைகளில் ரத்தின வளையோடும்
நீல வர்ணத்தில் இருப்பவனே நாட்டியம் ஆடியவாறே வாராய் (கிருஷ்ணா)

இடுப்பில் ஒட்டியாணமும் விரல்களில் மோதிரமும்
கழுத்தில் வைஜயந்தி மாலையும் அணிந்தவனே (கிருஷ்ணா)

பட்டு பீதாம்பரம் அணிந்து கையில் குழலோடு
உடலெங்கும் சந்தனத்தை அணிந்தவனே (கிருஷ்ணா)

தாய்க்கு வாயில் உலகத்தை காட்டிய
இந்த உலகத்தை காப்பாற்றுபவனே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)



ராதையுடன் கண்ணன் ( சாய் கோயில்)


மதுரையில் போன ஆண்டு  கிருஷ்ண ஜெயந்தி


கண்ணன் பெருமான் அனைவருக்கும்  எல்லா நலன்களையும் அருள வேண்டும். மகிழ்ச்சியை , அமைதியை  வழங்கட்டும். 
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------

8 கருத்துகள்:

  1. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். கிருஷ்ணன் வேடமிட்ட குழந்தைகள் கவர்கிறார்கள். என் அண்ணன் பேரன்தான் எங்கள் வீட்டு கிருஷ்ணன் கடந்த மூன்று வருடங்களாய். குடும்ப குழுமத்தில் அவன் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். கிருஷ்ணன் வேடமிட்ட குழந்தைகள் கவர்கிறார்கள். //

      நன்றி

      //என் அண்ணன் பேரன்தான் எங்கள் வீட்டு கிருஷ்ணன் கடந்த மூன்று வருடங்களாய். குடும்ப குழுமத்தில் அவன் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.//

      அடுத்த வருடம் உங்கள் வீட்டு கண்ணன் வருவான். குடும்ப குழுவில்.

      நீக்கு
  2. தசாவதார சிலைகள் வைத்திருக்கும் ஸ்டான்ட் வித்தியாசமாய் இருக்கிறது. தசத்துக்கும் மேலே இடங்கள் இருக்கின்றன அடுக்குவதற்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தசாவதார சிலைகள் வைத்திருக்கும் ஸ்டான்ட் வித்தியாசமாய் இருக்கிறது. தசத்துக்கும் மேலே இடங்கள் இருக்கின்றன அடுக்குவதற்கு!//

      ஆமாம், பித்தளை, வெண்கல கலைப் பொருட்கள் அதில் இடம் பெற்று இருக்கிறது.

      நீக்கு
  3. ஆமாம் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் பாடல் கண்கலங்க வைக்கும்.
    கருணை என்னும் கண்திறந்து பார்க்க வேண்டும்.
    காவல் என்னும் கைநீட்டி காக்க வேண்டும்.
    கனிமழலை குரல் கொடுத்து பாடவேண்டும்
    கண்மறைந்த தாயும் அதை கேட்க வேண்டும்.
    கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
    கருணையே அருள் கொண்டு வருவாய் கண்ணா
    வரிகள் மிகவும் ரசிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் பாடல் கண்கலங்க வைக்கும்.
      கருணை என்னும் கண்திறந்து பார்க்க வேண்டும்.
      காவல் என்னும் கைநீட்டி காக்க வேண்டும்.
      கனிமழலை குரல் கொடுத்து பாடவேண்டும்
      கண்மறைந்த தாயும் அதை கேட்க வேண்டும்.
      கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
      கருணையே அருள் கொண்டு வருவாய் கண்ணா
      வரிகள் மிகவும் ரசிப்பேன்.//

      கனிமழலை குரல் கொடுத்து பாட வேண்டும் என்ற வரிகளை கேட்டவுடன் அப்போதே குழந்தை பேசிவிடுவான் அற்புதம் நடக்கும் என்று நினைப்பை உண்டாக்கும் பாடல் வரிகள். கண்ணதாசன் மிக அழகாய் பாடல் வரிகளை கதைக்கு ஏற்றார் போல எழுதி இருப்பார்.

      நீக்கு
  4. கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலும் ரசனை. அதை ஹரிஹரன் கூட பாடி இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலும் ரசனை. அதை ஹரிஹரன் கூட பாடி இருக்கிறார்!//

      ஆமாம். புல்லாங்குழல், வீணை இசையை கேட்டீர்களா?

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு