சனி, 1 ஆகஸ்ட், 2026

புத்தம் புது காலை பொன்னிறவேளை




புத்தம் புது காலை 


காலை 4,30  எழுந்தவுடன் காலைகடன்கள் முடித்து ,   உடற்பயிற்சி,  தியானம் நிறைவு செய்து தோட்டத்திற்கு போய் சூரியன் உதயம் ஆவதை பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம். அப்படியே சிறிது நடைபயிற்சியும்.   மகன் ஊரில் அவன் வீட்டுத்தோட்டத்தில் அதிகாலையில் சூரியோதயம் மற்றும் அதிகாலை பறவைகளின் ஒலியை கேட்பது  மிகவும் பிடித்த விஷயம். ஒவ்வொரு நாளும் சூரியன் உதயம்  ஆவதைப்பார்த்து வணங்கி அதை படம் எடுத்து வைத்து இருந்தேன். அவற்றில் சில படங்கள் இங்கு இடம் பெறுகிறது.



பொன்னிற வேளை



தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..


எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..


கைபேசியில் எடுத்த படங்கள். மரக்கிளையில் மணிபுறாக்கள் அமர்ந்து இருப்பது தெரிகிறதா?


நாம் சிறு வயதில் சூரியனை வரைய சொன்னால் மலைமுகட்டின் நடுவே சூரியன் வருவதை, வீட்டின் கூறை மேல் சூரியன் வருவது போல வரைவோம்.
அது போன்ற காட்சிகள் நாள்தோறும் இங்கு  கிடைக்கும். தென்னைமரமும் வீடும்  நிலவும், சூரியனும்  வரைவோம்  இங்கு தென்னை மரம் இல்லை குச்சி குச்சியான மரங்கள் தலை அசைத்து சூரியனை வரவேற்கும்.







கதிரவன்  உதிப்பதை வீடியோ எடுத்தேன் எவ்வளவு தூரம் நன்றாக வந்து இருக்கிறது என்று நீங்கள் தான் பார்த்து விட்டு சொல்ல வேண்டும். மணிப்புறா சத்தம் கொடுக்கிறது.


கதிர்கள்  ஒளி பரப்பி வருகிறது








ஒரு நாள் கருமேகம் மறைத்து கொண்டது சூரியனை,   கருமேகத்தை கலைத்து கொண்டு வெளி வர நேரம் ஆனது.


இந்த வாட்ஸ் அப்  செய்தி சொல்லுவது  உண்மைதானே!
ஆதிகாலத்தில் மனிதன் சூரியனைதானே வணங்கி வந்தான்


புறாக்களும் காலையில் சூரியவணக்கம் செய்கிறது கூரை மேல்  அமர்ந்து 



பேரனுடன் சேர்ந்து அமேசான் பிரைமில் பார்த்த படம். சூரியன் இல்லை என்றால் மக்கள் கதி என்ன வாகும்  என்பதையும்  உயிர்கள் சூரியன் இல்லையென்றால் படப்போகும் கஷ்டங்களையும் சொல்கிறது.

 சூரியன் செத்து கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். அதை  பிழைக்க வைக்க  ஆராய்ச்சியளர்கள் எடுக்கும்  நடவடிக்கைபற்றியும், ஒரு பள்ளியில் சயின்ஸ் வாத்தியார் எழுதிய கட்டுரைகளை படித்த ஆராய்ச்சியாளர்கள்   அவரை  சூரிய கிரகத்திற்கு அனுப்புவது என்று முடிவு செய்கிறார்கள்.  அவர் தனக்கு விண்வெளி பற்றி ஒன்று தெரியாது என்று  தப்பிக்க முயன்றாலும் முடியவில்லை, அவரை குண்டு கட்டாக தூக்கி வந்து விண்ணுக்கு அனுப்புகிறார்கள்.

 சூரிய கிரகத்தில்    அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் , அங்கு அவருக்கு கிடைத்த நட்பு சூரியனை     பிழைக்க வைத்தாரா  என்பதை எல்லாம்  அருமையாக சொல்லி இருக்கும் படம் முடிந்தால் படம் பார்த்து விட்டு விமர்சனம் செய்யலாம். நல்ல கற்பனை கதை. அன்பு தான் கதையின் அடி நாதம்.

கிரகங்களை ஆராய்ச்சி செய்ய அனுப்படும் விண்வெளி வீரர்களின் கஷ்ட நஷ்டங்கள் அவர்கள் வெற்றி பெற்றால் கிடைக்கும்  மன நிறைவு பற்றி எல்லாம் கதை சொல்கிறது.

நடிகர் விக்ரம் போல இருக்கிறார்  கதாநாயகர் .


அடுத்து வரப்போவது,  மழை, காற்று , முழு  நிலா:-


  முன்பு காமிராவில் எடுத்த சூரியன், நிலா பதிவுகளை அவற்றில் இலக்கியம் மற்றும் சினிமாவில் வரும் பாடல்களுடன் பதிவு செய்து இருப்பேன் . இந்த பதிவு  அப்படி எல்லாம் இல்லை. மனதில் இரண்டு பாடல் மட்டும் ஓடி கொண்டே இருந்தது. "புத்தம் புதுகாலை பொன்னிற வேளை" காலையும் நீயே மாலையும் நீயே , காற்றும் நீயே , மழையும் நீயே! மணல் புயல் வந்ததுஅந்த காணொளிகளும் பதிவு செய்து இருக்கிறேன்.  மழை வந்தது அதையும் பதிவு செய்து இருக்கிறேன்.

மழை

ஜூலை16  ஆம தேதி மண்புயல் வந்த போது மகன் மாடியிலிருந்து எடுத்த் காணொளிகள் சின்ன காணொளிகள்தான் .
பாலைவன பகுதியில்  காற்று மிக வேகமாக வீசும் போது  ஏற்படும் புழுதி புயல்.

.


                                                                    மணல் புயல்.






பெளர்ணமிக்கு முந்தின நாள் மாலை வானம் செய்த  வண்ண கோலம்


வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?



பெளர்ணமி அன்று

மாலை உதயம் ஆகும் வேளை  இரவு 7 மணி இருட்டவில்லை வெளிச்சமாக இருக்கிறது கோடை காலம் என்பதால்.
மெல்ல மெல்ல   நிலா வானில் வரும் போது எடுத்த படங்கள் அலைபேசியில் எடுத்த படம் தான்






இந்த படத்தில் மேகம் நிலவை நடுவில் இரண்டு கோடு போல மறைத்து இருக்கிறது.






இருட்டிய பின் பெளர்ணமி முழு நிலவு


நான் தோட்டத்தில் பார்த்த காட்சிகளை பதிவாக்கி விட்டேன். இங்கு இருக்கும் வரை  சூரியம் உதயம், பெளர்ணமி  நிலவு  மற்றும் வீட்டை சுற்றி இருக்கும் மலைகளை,    ரசிக்கலாம். 

இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி வைட்டமினை நடைபயிற்சி செய்து கொண்டு  கொஞ்சம் பெறலாம். 

இப்போது கோடை காலம் என்பதால் 5.30 முதல் 6.30 வரைதான் இளம் வெயில் அப்புறம்   வெயில் கடுமையாக இருக்கும்.மாலை 7மணிக்கு மேல் தான் தோட்டத்திற்கு தண்ணீர் விட பேரன் போகும் போது  போவேன்.


அங்கு ஊரில் அடுக்கு மாடி குடியிருப்பில் உச்சிவேளையில்  பால்கனியிலிருந்து சூரியனை பார்க்கலாம், சந்திரனை அதிகாலை வேளையில் பார்க்கலாம்.



இயற்கையை போற்றுவோம்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------------------------------

15 கருத்துகள்:

  1. சூரிய உதயக் காட்சிகள் யாவும் அருமை. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் அன்றைய தினத்தின் பரபரப்பும் ஆரம்பமாகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //சூரிய உதயக் காட்சிகள் யாவும் அருமை. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் அன்றைய தினத்தின் பரபரப்பும் ஆரம்பமாகிறது!//

      ஓய்வு பெற்ற பின்னும் பரபரப்பு இருக்கா ஸ்ரீராம். ?

      எனக்கும் காலை பொழுதில் எழுந்து கொள்ள காலதாமதம் ஆகி விட்டால் பரபரப்பு அடைந்து விடுவேன். வழக்கமாக எழுந்து கொள்ளும் நேரத்தில் எழுந்து வேலைகளை செய்தால் பர பரப்பு இருக்காது.

      நீக்கு
  2. நானும் பழைய வீட்டில் இருக்கும்போது இப்படி நிறைய படங்கள் எடுத்து வைத்திருந்தேன்.  எப்ப்பதாவது உபயோகித்துக் கொண்டிருக்கிறேன்.    ஒரு வெப்பநாளின் இனிய உதயம் என்று எழுதி இருக்கிறேன்.  மெல்ல ஒளிவீசத்தொடங்கி எல்லோரையும் சுட்டெரித்து விட்டு அந்தப் பாவம் தீர மாலை கடலில் சென்று குளிக்கிறது என்று எழுதி இருக்கிறேன்!!!   ஹிஹிஹி தற்பீத்தல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் பழைய வீட்டில் இருக்கும்போது இப்படி நிறைய படங்கள் எடுத்து வைத்திருந்தேன். எப்ப்பதாவது உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வெப்பநாளின் இனிய உதயம் என்று எழுதி இருக்கிறேன். மெல்ல ஒளிவீசத்தொடங்கி எல்லோரையும் சுட்டெரித்து விட்டு அந்தப் பாவம் தீர மாலை கடலில் சென்று குளிக்கிறது என்று எழுதி இருக்கிறேன்!!! ஹிஹிஹி தற்பீத்தல்!//

      இனிய உதய படங்களை , கவிதையை பதிவு செய்யுங்கள்.

      தற்பீத்தல் அவசியம் தான் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. காணொளி கண்டேன்.  கோடு போல ஒளி தெரியத்தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டே வந்து முழு உருவத்தைக் காட்டுகிறான் ஞாயிறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///காணொளி கண்டேன். கோடு போல ஒளி தெரியத்தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டே வந்து முழு உருவத்தைக் காட்டுகிறான் ஞாயிறு!//

      காணொளி கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வாட்ஸாப் செய்தி ரசிக்க வைத்தது.  காலை எழுந்து யோகா, நடைப்பயிற்சி முடித்து விடுகிறீர்கள் என்பது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாட்ஸாப் செய்தி ரசிக்க வைத்தது. //
      தோழி ஒருவர் அனுப்பியது நன்றாக இருந்தது அதுதான்பகிர்ந்தேன்.

      //காலை எழுந்து யோகா, நடைப்பயிற்சி முடித்து விடுகிறீர்கள் என்பது பாராட்டத்தக்கது.//

      கங்கா மருத்துவமனையில் சில பயிற்சிகள் சொல்லி கொடுத்தார்கள் அதை கண்டிப்பாய் செய்ய வேண்டும். நான் வழக்கமாய் செய்யும் பயிற்சிகள் அதிக வலி இல்லாமல் இருக்க வைக்கிறது.

      நடைபயிற்சி சிறிது நேரம் தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  5. அமேசானில் நீங்கள் பார்த்த படத்தை நானும் பார்க்க முயல்கிறேன்.  அடுத்த காணொளியில் மழையும் காற்றும் மனத்தைக் குளிர்விக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அமேசானில் நீங்கள் பார்த்த படத்தை நானும் பார்க்க முயல்கிறேன். அடுத்த காணொளியில் மழையும் காற்றும் மனத்தைக் குளிர்விக்கிறது.//

      படம் எனக்கும் , பேரனுக்கும் பிடித்தது, ரசித்துப்பார்த்தோம்.
      தனிமையில் விடபட்ட ஒருவனுக்கு பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதை அழகாய் சொல்லி இருப்பார்கள்.
      காணொளிகளை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. மண்புயல் காணொளியில் முதல் காணொளியைவிட இரண்டாவது காணொளியில் அதன் வீர்யம் தெரிகிறது.

    சூரியன் படங்கள் போக, நிலவின் படங்களையும் ரசித்தேன்.  வெம்மையிலிருந்து தண்மைக்கு மாறியாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மண்புயல் காணொளியில் முதல் காணொளியைவிட இரண்டாவது காணொளியில் அதன் வீர்யம் தெரிகிறது.//

      ஆமாம்,ஒவ்வொரு முறை இந்த மண்புயல் வரும் போது தோட்டத்தில் வைத்து இருக்கும் பொருட்கள் பறந்து போய் சேதம் அடைந்து விடும்.

      //சூரியன் படங்கள் போக, நிலவின் படங்களையும் ரசித்தேன். வெம்மையிலிருந்து தண்மைக்கு மாறியாச்சு!//

      ஆமாம்,வெம்மையும் வேண்டும், தண்மையும் வேண்டும் தானே?

      ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை சூரியோதய படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. தலைப்புக்கேற்ற படங்களை ரசித்தேன். நானும் இப்படி சூரிய உதயத்தின் படங்களை நிறைய எடுத்து வைத்துள்ளேன். இவையெல்லாம் இயற்கை நமக்கு கொடுக்கும் வரப்பிரசாதங்கள். .

    ஆம். சூரியனை தினமும் வழிபட்டால் கண்களுக்கு நல்லது. அதுவும் ஞாயறன்று ஆதித்திய ஹ்ருதயம் பாடி வணங்குவது மிக சிறப்பு. காலை சூரிய ஒளியில் உடலுக்கு தேவையான நிறைய விட்டமின்கள் உள்ளன.

    உங்கள் பழக்கப்படி மகன் வீட்டில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவதற்கு வாழ்த்துகள். இன்னும் மற்றைய படங்களையும் பெரிதாக்கிப் பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வணக்கம் சகோதரி

      பதிவு அருமை சூரியோதய படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. தலைப்புக்கேற்ற படங்களை ரசித்தேன்.//

      நன்றி கமலா

      //நானும் இப்படி சூரிய உதயத்தின் படங்களை நிறைய எடுத்து வைத்துள்ளேன். இவையெல்லாம் இயற்கை நமக்கு கொடுக்கும் வரப்பிரசாதங்கள். .//

      இயற்கையின் வரபிரசாதங்கள் தான். நீங்கள் எடுத்த படங்களை பதிவு செய்யுங்கள் ரசிக்கலாம்.

      //ஆம். சூரியனை தினமும் வழிபட்டால் கண்களுக்கு நல்லது. அதுவும் ஞாயறன்று ஆதித்திய ஹ்ருதயம் பாடி வணங்குவது மிக சிறப்பு. காலை சூரிய ஒளியில் உடலுக்கு தேவையான நிறைய விட்டமின்கள் உள்ளன.//

      என் அம்மா சூரிய துதி சொல்லி சூரியனை வணங்காமல் சாப்பிட மாட்டார்கள்.எங்களை எல்லாம் சூரியனுக்கு ஞாயிறு விரதம் இருக்க வைத்தார்கள். அந்த விரததை இடையில் விட்டதால்தானோய்ப்படி கால்வலியில் அவஸ்தை படுகிறேன் என்று நினைப்பேன்.

      ஊருக்கு போனபின் என் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

      //உங்கள் பழக்கப்படி மகன் வீட்டில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவதற்கு வாழ்த்துகள். இன்னும் மற்றைய படங்களையும் பெரிதாக்கிப் பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. பாருங்கள் நேரம் கிடைக்கும் போது மெதுவாக பாருங்கள்படத்தை

      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா ஹரிஹரன்.

      நீக்கு