புதன், 15 ஜூலை, 2026

அமெரிக்காவின் சுதந்திர தின கொண்டாட்டம்



வழியெல்லாம் இது போன்ற  வாழ்த்துகளை வைத்து இருந்தார்கள்.


அமெரிக்காவின் சுதந்திர தினம் ஒவ்வொரு  ஆண்டும் ஜூலை 4 அன்று கொண்டாப்படுகிறது.

பிரிட்டனிடம் இருந்து 13 அமெரிக்கக் காலனிகள் சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் 1776 -ஆம் ஆண்டு ஜூலை  4 -ல் சுதந்திர பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த தேசிய விழா அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 250 வது வருடம் அதனால்  கூடுதல் சிறப்பு. அதைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகனால். விழாவில்  எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.


அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள "வில்லியம்ஸ் " நகரில் சுதந்திர தினம் மிகவும் பிரம்மாண்டமாக பாரம்பரிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் இங்கு குறைவாக இருக்கும் அதனால் மக்கள் இந்த ஊருக்கு  வந்து  சுதந்திர தின விழாவை கண்டு மகிழ்வார்கள்.

ஃப்ரீடம் ஃபெஸ்ட் அணிவகுப்பு  மாலை 6 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க "ரூட் 66"   சாலையில் இந்த அணிவகுப்பு நடக்கும். இதில் அலங்கார ஊர்திகள், தேசபக்தி முழக்கங்களுடன் வாகனங்கள் செல்லும்.


வெள்ளிக்கிழமையே இந்த ஓட்டலில் வந்து தங்கி விட்டோம்.



சனிக்கிழமை மாலை நடந்தது அணி வகுப்பு

ஓட்டல் அருகே அணிவகுப்பு வரும் இங்கிருந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். 4 மணியிலிருந்து கடைத்தெருவில்  காரை பார்க் செய்ய கூடாது என்று சொல்லி விட்டதால்   ஓட்டல் முன் பக்கம் அமர்ந்து  பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

மடக்கு நாற்காலிகளை முன் கூட்டியே போட்டு வைத்து விட்டோம்.சிறிது நேரம் கீழே அமர்ந்து இருந்தோம் அப்புறம் வெயில் அதிகமாக இருந்தது அதனால் ஓட்டல் பால்கனிக்கு போய் விட்டோம். நானும் மருமகளின் அம்மாவும்.


 ஓட்டல் பால்கனி அமைந்து இருக்கும் இடம் காலை உணவுதரும் கூடத்தை சேர்ந்தது. உள்ளே  உணவு அருந்திய பின் வெளியே  போட்டு இருக்கும், ஊஞ்சலில் அமர்ந்து ஆடலாம்,,மற்றும் மேஜை, நாற்காலியில் இருக்கிறது, அங்கு உணவை, காப்பி, டீ, குளிர்பானங்கள் எடுத்து கொண்டு வந்து அருந்தலாம் , தெருவை வேடிக்கைப்பார்க்கலாம்.

முதல் நாள் மகனும், பேரனும் அமர்ந்து , மருமகள், பேரன்  அமர்ந்து படம் எடுத்து கொண்டார்கள்.






எல்லோரும்  அமெரிக்க கொடி போல உடை,  அணிந்து வந்தார்கள்.

 நாங்கள் கையில் கொடி வைத்து கொள்ள வேண்டும், அமெரிக்க கொடி போல  ஸ்கார்ப்அணிந்து கொள்ள வேண்டும் என்பது மருமகளின்  ஆசை, அது போல அணிந்து கொண்டுகொடியை பிடித்து கொண்டோம்.  

பேரன் ஸ்கார்ப்பை தலையில் கட்டி இருக்கிறான்  250 வது சுதந்திர தினத்தை குறிக்கும் பனியன் அணிந்து இருக்கிறான்.

காலையில்  கடைத்தெருவில் கொடி, காத்தாடி எல்லாம் வாங்கினோம்

பால்கனியில் இருக்கும் பூத்தொட்டியில் நட்டு வைத்தோம் காற்றுக்கு நன்கு சுற்றியது.


அணி வகுப்பு ஆரம்பித்து விட்டது கைகளில் கொடிகளை ஏந்தி வந்தனர்

குழந்தைகள் தந்தையின் தோளிலும், தாயின் இடுப்பிலும் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.



கை குழந்தைகளையும் அழைத்து வந்து இருந்தனர். வண்ண பாசிமணி மாலைகளை குழந்தைகளுக்கு கொடுத்து போனார்கள் ஊர்வலத்தில் வந்தவர்கள்.



இந்த குழந்தை ஓட்டல் செடிகளுக்கு  தனக்கு அம்மா கொடுத்த குடி தண்ணீரை விட்டாள் . அவள் என் மனம் கவர்ந்தாள். நிறைய பாசி

மணி மாலைகள் அவளுக்கு கிடைத்தது.



வெயில் காலத்தில் குளிர்ச்சியாக இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்து கொண்டு போனார்கள். குழந்தைகள் பெரியவர்கள் உற்சாக கூக்குரல் இடுவதை கேளுங்கள். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நிறைய வண்டிகள் போனது.

அழகர் ஆற்றில் இறங்கும் போது தண்ணீர் பீய்ச்சி அடிப்பார்கள் உற்சாகமாக அது போல 




குழந்தைகளுக்கு மிட்டாய்களை வாரி இறைத்தும் சோப் குமிழிகளை பறக்க விட்டும் போனார்கள். சிறு பையன் கவரில் மிட்டாய்களை சேகரித்து கொண்டார்கள்.





விளையாட்டு  பொருட்களை வைத்து கண்காட்சி வண்டி


பலத்தை காட்டும் பெண்கள் கோடாலிகளை தூக்கி ஏறிந்தபடி போய் கொண்டு இருந்தார்கள்.










அணிவகுப்பை பார்க்க அமர்ந்து இருப்பவர்கள். 


நாலு மணி முதலே வெயிலை பொருட்படுத்தாமல் நாற்காலிகளை கொண்டு வந்து போட்டு இடம் பிடித்து இருந்தார்கள்.



முன்னால் போகிறவர்கள் இந்தக்கால உடையும், பின்னால் வருபவர்  அந்தக்கால உடையும் அணிந்து விழா காணவந்தார்கள்.



அந்தக்கால உடை அணிந்த 


சீமாட்டிகள்.



இந்த படமும் கீழே இருக்கும் இரண்டு படம் ஒன்றே மாலை நேர சூரியன் செய்யும் மாற்றம்.

பெரிய கேக் அதற்குள் சுதந்திர தேவி நின்று கொண்டு இருப்பது போல செய்து இருந்தார்கள்.கேக் மாதிரி  ஆசனத்தில் அமர்ந்து இருந்தார்கள் 

மாலை மயங்குகின்ற நேரம்  

பாடல்களை இசைத்து கொண்டு  உற்சாகமாக அமெரிக்காவை வாழ்த்தி கொண்டு  வந்தார்கள்.

இவர் ஓட்டும் போது சாகஸம் செய்தார் (முன் சக்கரத்தை தூக்கி கொண்டு) 


குழந்தைகள் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள்.



அவர்கள் வளர்ப்பு  செல்லங்களுடன்  வந்தார்கள். 
 

முதுகில் வாழ்த்து  தெரிவித்து வாசகம்


 இவர் சட்டையில் யூ.எஸ். ஏ   என்று எழுதி இருக்கிறது.






சின்ன காணொளிகள்தான் பார்க்கலாம்.


இரவு வாணவேடிக்கைப்பார்க்க போனோம். நகரின் வடக்கு பகுதியில் விமானநிலையம் செல்லும் பாதையில்  நடந்தது.

 பேரன் கூட படித்த பெண்ணின் பெற்றோர்கள் வைத்து இருக்கும் ஓட்டலில் காரை நிறுத்தி கொள்ளலாம் அங்கு இருந்து நன்றாக பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்து இருந்தாள்.

கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு அங்கு இருந்து நிம்மதியாக வாணவேடிக்கை ஆரம்பித்து முடியும் வரைப்பார்த்தோம்.
காணொளிகள் நிறைய எடுத்தேன். அனைத்தையும் பார்க்க உங்களுக்கு நேரம் இருக்காது அதனால்  இரண்டு மட்டும். 



















அடுத்த பதிவில்  பார்ப்போம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------


14 கருத்துகள்:

  1. வண்ணமயமான விழா. கலர் கலரான புகைப்படங்கள் கவர்கின்றன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //வண்ணமயமான விழா. ///

      வண்ணமயமான விழாதான்.

      //கலர் கலரான புகைப்படங்கள் கவர்கின்றன்//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இருநூற்றி ஐம்பதாவது ஆண்டு என்பது சிறப்பு தான் . அந்த நேரத்தில் நீங்கள் அங்கு இருந்து கொண்டாட்டத்தை ரசிக்க நேர்ந்ததும் சிறப்பு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இருநூற்றி ஐம்பதாவது ஆண்டு என்பது சிறப்பு தான் . அந்த நேரத்தில் நீங்கள் அங்கு இருந்து கொண்டாட்டத்தை ரசிக்க நேர்ந்ததும் சிறப்பு தான்.//

      ஆமாம், வாய்ப்பு கிடைத்தது.

      நீக்கு
  3. காணொளிகளிலும் கொண்டாட்டங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளிகளிலும் கொண்டாட்டங்களை ரசித்தேன்.//

      காணொளிகளை ரசித்துப்பார்த்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இருநூற்று ஐம்பதாவது சுதந்திர தினம் என்பதால் இவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறார்கள் போலும் இல்லை என்றாலும் ஓரளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்கும் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இருநூற்று ஐம்பதாவது சுதந்திர தினம் என்பதால் இவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறார்கள் போலும் இல்லை என்றாலும் ஓரளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்கும் தான்//

      ஆமாம், சுதந்திர தினம் என்றால் கொண்டாட்டம் இருக்கும் தான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. உறவினர் இல்லம் ஏகியிருக்கிறேன்! அதாவது கணினியை விட்டு விலகி இருக்கிறேன். மொபைலில் வருவது சற்றே சிரமமாக இருந்தாலும், கொஞ்சம் தாமதமானாலும் வந்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உறவினர் இல்லம் ஏகியிருக்கிறேன்! அதாவது கணினியை விட்டு விலகி இருக்கிறேன். மொபைலில் வருவது சற்றே சிரமமாக இருந்தாலும், கொஞ்சம் தாமதமானாலும் வந்து விடுவேன்.//

      ஆமாம், நீங்கள் தாமதமானாலும் வந்து விடுவீர்கள் தெரியும், நன்றி ஸ்ரீராம்.
      மொபைலில் பதில் கொடுப்பது கஷ்டம் தான்.


      கீதாவுக்கு கைவலி பிஸியோவில் இருக்கிறார்கள்.
      மற்ற நண்பர்கள் மெதுவாக என்றாலும் வந்து கருத்து போட்டு விடுவார்கள்.

      கொஞ்ச நாட்களாக டேஸ்போர்ட் காட்ட மாட்டேன் என்கிறது சரியாக
      நீங்கள், வெங்கட், துரை செல்வராஜ் எல்லாம் தினம் பதிவு போடுவதால் எல்லோரும் பார்க்க வந்து விடுவார்கள்.நான் அப்படி தினம் பதிவு போடுவது இல்லை. டேஸ்போர்ட் காட்டினால் தான் உண்டு.

      நீக்கு
  6. படங்கள், காணொளிகள்,விவரங்கள் என அனைத்தும் சிறப்பு. வர்ண ஜாலம் காட்டும் வானம் படங்கள் அழகு.

    கொண்டாட்டம் அனைத்தும் மனதை மகிழ்வித்தன.

    நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், வாழ்க வளமுடன்

      //படங்கள், காணொளிகள்,விவரங்கள் என அனைத்தும் சிறப்பு. வர்ண ஜாலம் காட்டும் வானம் படங்கள் அழகு.

      கொண்டாட்டம் அனைத்தும் மனதை மகிழ்வித்தன.

      நன்றிம்மா.//

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அமரிக்காவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது..

    படங்களே இவ்வளவு கவர்கின்றன. நீங்கள் அனைவரும் அங்கு நேரடியாக அதை கண்டு களித்திருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நீங்களும், உங்கள் சம்பந்தியும், கைகளில் அமேரிக்கா கொடியுடனும், கழுத்தில் கொடி ஸ்கார்ப் அணிந்து கொண்டு சேர்ந்தது எடுத்திருக்கும் படங்கள் நன்றாக உள்ளது.

    உங்கள் மகன், மருமகள், பேரன் அனைவரும் ஊஞ்சலில் அமர்ந்து எடுத்திருக்கும் படங்களும் நன்றாக உள்ளது.

    கொண்டாட்ங்களை காண வந்த அங்குள்ள மக்கள் அனைவரின் மகிழ்ச்சியையும் படமெடுத்து பதிந்திருப்பது சிறப்பு.

    இருநூற்று ஐம்பதாவது சுதந்திர திவிழா என்பதால், பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் போலும். எல்லாபடங்களும் கலர்புல்லாக கண்களை கவர்கிறது. நாங்களும் இங்கிருந்தபடியே உங்கள் தயவால் அமேரிக்கா சுதந்திர தின விழாவை கண்டு களித்தோம்.. மிக்க நன்றி சகோதரி.

    மாலை எடுத்த வாண வேடிக்கைப் படங்களும் நன்றாக உள்ளது. காணொளிகள் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தேன். ,

    நேற்று காலையில் என்னால் பதிவுக்கு வர இயலவில்லை. எங்கள் அண்ணா பேத்தி பெரியவளாகி இருப்பதாக சுபச் செய்தி, ஒன்று என் கைப்பேசிக்கு தி. லி யிலிருந்து வந்தது. அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். உடனே செல்ல முடியாதெனினும், பிறகு சமயம் கிடைக்கும் போது செல்ல வேண்டும். பிறகு வேலைகள், மாலை ஒரு இங்கிருக்கும் உறவு ஒருவரின் வருகை என நேரம் சரியாகப் போய் விட்டது. இன்று காலையில் மூன்று மணிக்கே முழிப்பு வந்து நேற்று விடுபட்ட நம் நட்புகளின் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.
    தங்கள் பதிவும் அமர்க்களமாக உள்ளது. படித்து, ஒவ்வொரு புகைப்படமாக பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமை. அமரிக்காவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது..

      படங்களே இவ்வளவு கவர்கின்றன. நீங்கள் அனைவரும் அங்கு நேரடியாக அதை கண்டு களித்திருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      நீங்களும், உங்கள் சம்பந்தியும், கைகளில் அமேரிக்கா கொடியுடனும், கழுத்தில் கொடி ஸ்கார்ப் அணிந்து கொண்டு சேர்ந்தது எடுத்திருக்கும் படங்கள் நன்றாக உள்ளது.

      உங்கள் மகன், மருமகள், பேரன் அனைவரும் ஊஞ்சலில் அமர்ந்து எடுத்திருக்கும் படங்களும் நன்றாக உள்ளது.

      கொண்டாட்ங்களை காண வந்த அங்குள்ள மக்கள் அனைவரின் மகிழ்ச்சியையும் படமெடுத்து பதிந்திருப்பது சிறப்பு.

      இருநூற்று ஐம்பதாவது சுதந்திர திவிழா என்பதால், பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் போலும். எல்லாபடங்களும் கலர்புல்லாக கண்களை கவர்கிறது. நாங்களும் இங்கிருந்தபடியே உங்கள் தயவால் அமேரிக்கா சுதந்திர தின விழாவை கண்டு களித்தோம்.. மிக்க நன்றி சகோதரி.

      மாலை எடுத்த வாண வேடிக்கைப் படங்களும் நன்றாக உள்ளது. காணொளிகள் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தேன். ,


      நன்றி கமலா.


      //நேற்று காலையில் என்னால் பதிவுக்கு வர இயலவில்லை. எங்கள் அண்ணா பேத்தி பெரியவளாகி இருப்பதாக சுபச் செய்தி, ஒன்று என் கைப்பேசிக்கு தி. லி யிலிருந்து வந்தது. அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். உடனே செல்ல முடியாதெனினும், பிறகு சமயம் கிடைக்கும் போது செல்ல வேண்டும். பிறகு வேலைகள், மாலை ஒரு இங்கிருக்கும் உறவு ஒருவரின் வருகை என நேரம் சரியாகப் போய் விட்டது...//

      அண்ணா பேத்தி பெரியவளாகி விட்டதற்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன். நேரம் கிடைக்கும் போது போய் வாழ்த்தி வாருங்கள்.
      உறவுகள் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவுகள் வந்து போய் இருப்பது மகிழ்ச்சியான தருணம், நம் பதிவுகள் எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம் கமலா.


      //இன்று காலையில் மூன்று மணிக்கே முழிப்பு வந்து நேற்று விடுபட்ட நம் நட்புகளின் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.
      தங்கள் பதிவும் அமர்க்களமாக உள்ளது. படித்து, ஒவ்வொரு புகைப்படமாக பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஓ சரி அதுதான் நினைத்தேன் சீக்கீரம் விழித்து விட்டீர்கள் என்று.
      படங்களை ரசித்துப்பார்த்து விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.





      நீக்கு