புதன், 24 செப்டம்பர், 2025

எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நவராத்திரி விழா



எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடந்த நவராத்திரி விழா படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

என்னால் கோயில்களில் நடக்கும் நவராத்திரி விழாக்களுக்கு போக முடியவில்லை என்ற  நினைப்பே வரவில்லை.

 அம்மன் அருளால் எங்கள் வளாகத்திலேயே நவராத்திரி விழா ஆரம்பித்து விட்டது. 



இந்த வருடம் தான் கொலு வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்







வண்ணக் கோலம் போட்டவர்கள்   சிறு பெண்கள்

பெரியவர்கள் மாக்கோலம் போட்டார்கள்

முதல் நாள் பிள்ளையார் பாடல்  லலிதா சஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ,  மஹிஷாஸூரமர்த்தினி ஸ்தோரம் சொன்னோம் 

முதல் நாள் பிரசாதம், கேசரி பட்டாணி சுண்டல்





இரண்டாம் நாள்

"லலிதா சஹஸ்ர நாமாவளி" சொல்லி குங்குமம்,  மற்றும் மலர் அர்ச்சனை செய்யப்பட்டது.




தட்டை பயிறு சுண்டல்,  சர்க்கரை பொங்கல், , ரவா உருண்டை, தேங்காய் பூரணம் வைத்த சுசியம், புளியோதரை, வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு, வளையல் வைத்து  கொடுக்கப்பட்டது.

தினம் பிரசாதங்கள், மங்கலப்பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு   என்று வழங்கப்படுகிறது.

மதம் கடந்து கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை.  இஸ்லாமிய சகோதரி வெற்றிலைப்பாக்கு மஞ்சள் கொடுத்தார். அனைவருக்கும்.


அன்பர்கள் பொம்மை வாங்கி கொடுத்தார்கள், 
என்னால் கடைக்கு எல்லாம் போய் வாங்க முடியாது நீங்களே வாங்கி கொள்ளுங்கள் என்று பணம்  கொடுத்தேன் அவர்கள் 

பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர்  வாங்கி கொண்டார்கள்.  


பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணரை வழிபடும் போது இரு சக்திகளின்  ஆசீர்வாதமும் கிடைப்பதாக கருதப்படுகிறது

அந்தக்கால பாமா, ருக்மணி  சமேத கிருஷ்ணர் பொம்மை மிக அழகாய் இருக்கும். 




முதல் தினம் அம்மனின் அருளையும், பெண்ணின் பெருமையை பேசும் சகோதரி. 

தினம்  எங்கள் குடியிருப்பு வாட்ஸப் குழுவில்  புவனா சந்திர சேகரன் கதை , கட்டுரை எழுதுபவர், எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு அவர்  நாளும் நல்ல கருத்துக்களை நவராத்திரி சிந்தனைகளை பகிர்ந்து வருகிறார். அம்பிகையின் அவதாரங்களை பற்றியும் எழுதி அனுப்பினார்கள்.

 எங்கள் ப்ளாக்கில் செவ்வாய்க்கிழமை   கதை ஒன்று முன்பு பகிர்ந்து இருந்தார். 

இன்று மூன்றாம் நாள் :-
  நட்பு, பொறுமை,  மனிதநேயம்   மனதில் குடியேறும் போது  அரக்க குணங்கள்  தாமாக அழிந்து போகிறன. ஆன்மீகத்தில் மனதை செலுத்தும் போது பக்தி  தானகவே மனதில்  ஊறுகிறது. நல்ல குணங்களை ஆயுதங்களாக பயன் படுத்தும் போது நம்மிடம் உள்ள தீய குணங்கள்  அழிந்து போகின்றன என்கிறார்.



கலந்து கொண்ட அனைவரும்  


நாள் 1 - வெள்ளை (செப்டம்பர் 22, திங்கள்)
நாள் 2 - சிவப்பு (செப்டம்பர் 23, செவ்வாய்)
நாள் 3 - ராயல் ப்ளூ (செப்டம்பர் 24, புதன்)
நாள் 4 - மஞ்சள் (செப்டம்பர் 25, வியாழன்)
நாள் 5 - பச்சை (செப்டம்பர் 26, வெள்ளி)
நாள் 6 - கிரே (செப்டம்பர் 27, சனிக்கிழமை)
நாள் 7 - ஆரஞ்சு (செப்டம்பர் 28, ஞாயிறு)
நாள் 8 - மயில் பச்சை (செப்டம்பர் 29, திங்கள்)
நாள் 9 - இளஞ்சிவப்பு (செப்டம்பர் 30, செவ்வாய்).

முதல் நாள் வெள்ளை உடை அணிந்து சென்றோம்.
அடுத்த நாள் சிவப்பு அணிந்து சென்றோம்
இன்று ராயல் ப்ளூ.


 


ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளாம் மாரியம்மாள்
சித்திர கோபுரம் கட்டவே  பாடலுக்கும் , முருகன் பாடல் ஒன்றுக்கும், அடுத்து கடைசியாக பாரதி கும்மி பாடல் பாடி முடித்தார்கள்.

முருகன் பாடல் கோலாட்டம் சிறிய காணொளிதான் பார்க்கலாம்.

எல்லோரும்  வயது வித்தியாசம் இல்லாமல் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

நிறைவாக ஆரத்தி எடுக்கப்பட்டது.

இறை சிந்தனையுடன்  வளாக அன்பர்கள்    அனைவரும் கலந்து உரையாடவும் இந்த நவராத்திரி  விழா உதவுகிறது.
அப்படியே அவர் அவர்கள் வீட்டில் இருக்கும் நவராத்திரி பண்டிகைக்கு அழைத்தார்கள். நேர்றி ஒருவர் வீட்டுக்கு போனோம்.






நவராத்திரி கொலு பார்க்க வந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள். அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 

----------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:


  1. ​விரிவான ரிப்போர்ட். படங்களும் பொருத்தம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு